| ||||||||
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர். ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர். எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும். _ |
Tuesday, September 27, 2011
Labels:
அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்