Pages

Thursday, March 21, 2013



கை கொடுத்த முஸ்லிம் தேசங்களும், காலை வாரிய புத்த நாடுகளும்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

இதேவேளை ஜேர்மன் அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று பிற்பகல் விவாதம் ஆரம்பமாகி நடைபெற்றதோடு இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஜெனீவாவில், கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு நாளை 22 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.
அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக, எதிராக மற்றும் வாக்களிக்காத நாடுகளின் விபரம்
 
இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2ஆவது தீர்மானத்தை கொண்டுவந்தது.

இந்த 2ஆவது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12ஆம் திகதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தில் இடம்பெற்ற கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. குறிப்பாக போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்று காலை 10 மணிக்கு அதாவது இலங்கை நேரம் படி பிற்பகல் 2.35 மணிக்கு அமெரிக்க தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது தீர்மானத்தின் மீது பல நாட்டின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதில் இந்திய பிரதிநிதி இலங்கைக்கு ஆதரவான வகையில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார். மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது.

அந்தவகையில் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. விவாதத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்ததோடு 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.


எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

கை கொடுத்த முஸ்லிம் தேசங்களும், காலை வாரிய புத்த நாடுகளும்
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட மேற்படி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் 6 நாடுகள் முஸ்லிம் தேசங்களாகும். இவை பின்வருமாறு

  1. பாகிஸ்தான்
  2. சவுதி அரேபியா
  3. கடார்
  4. குவைட்
  5. இந்தோனேஷியா
  6. மாலைதீவு
இதே சமயம் ஜப்பான் உள்ளிட்ட புத்த தேசமும், புத்தரின் புர்வீக இடமான இந்தியாவும் இலங்கையை நண்பனாய் நடித்து ஏமாற்றி விட்டனர்.

செய்நன்றி மறந்த பொ(ய்)து பலசேனாவும் அதன் கூட்டணிகளும்

வரலாறு நெடுகிளும் உலக வரைபடத்திலுள்ள அனைத்து முஸ்லிம் தேசங்களும் இலங்கையுடன் சினேக புர்வ உறவினை தொடர்ந்தே வந்துள்ளன. ஆதிக்க வெறிபிடித்து அழைந்து திரியும் அமெரிக்க, இஸ்ரேலிய அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் தாண்டி இது கால வரை தனது உதவியினையும் ஆதரவினையும் இலங்கைக்கு அவசியப்படும் அனைத்து தருணங்களிலும் இனிதே நிறைவேற்றியே வந்துள்ளன. அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக என்று பல்பரிணாமங்களில் அரபு நாட்டு உதவிக்கரங்கள் இலங்கை மண்ணை வந்தடைந்துள்ளன.

விடுதலைப் புலிகளை நிர்மூலம் செய்வதற்கு இராணுவ உதவிகளை வழங்கும் போது முஸ்லிம் தேசங்கள் இனவாதிகளுக்கு இன்பமளித்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டு பசித்த வயிறுடன் நட்டாற்றில் நிலைதடுமாறி நிற்னபோது முஸ்லிம் நாடுகள் உவந்தளித்த உதவிகள் உச்சிகுளிர வைத்தன. ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை உறுதியாய் எதிர்த்து நின்று இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும் போது முஸ்லிம் தேசங்கள் முன்மாதிரிமிகு நாடுகளாய் விளங்கின.

ஆனால், இவ்வளவு உதவிகளுக்குப் பின்பும் ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல் பழையதை மறந்தது மட்டுமன்றி, உதவியவனின் கையை பிடித்து அவன் முதுகிலேயே ஓங்கிக் குத்தும் நயவஞ்சகத்தனத்தினை பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் இந்நாட்டில் அண்மைக்காலமாய் அரங்கேற்றி வருகின்றன.

எந்த முஸ்லிம் தேசங்களை “வஹ்ஹாபிகள்! ஸலபிகள்! அடிப்படைவாதிகள்! இலங்கையில் தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள்! காட்டுமிராண்டி சட்டங்களை நிலைநாட்ட துடிப்பவர்கள்! இலங்கையை இஸ்லாமிய நாடாய் மாற்ற முனைபவர்கள் என்றெல்லாம் விமர்சித்து, இனவாத தீயை மூட்ட முனைந்தார்களோ, அந்த நாடுகள் தான் கடைசி வரைக்கும் களத்தில் நின்று இலங்கைக்காய் வாக்களித்துள்ளன. எந்த நாடுகள் எல்லாம் புத்தரின் சிந்தனைகளால் வாழுகின்றனவோ அவை நட்டாற்றில் விட்டு ஓடிவிட்டன.

பொது பல சேனாவும், அதன் பிக்குமார்களும் இனியாவது யதார்த்தத்தை புரிந்து நடப்பார்களா? அல்லது பழைய குருடி கதவ திறடி என்ற விதத்தில் தரிகெட்டு நடப்பார்களா?


பொது பல சேனாவுக்கு எதிராக நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடல் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள்.

தினகரன் பத்திரிகையில்
விடிவெள்ளி பத்திரிகையில்
மவ்பிம பத்திரிகையில்




  1. ht


விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...

சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......

இலங்கை காத்தான்குடி படுகொலை


இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்



[மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]

விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?


விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1
 


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2