அப்துன் நாஸிர், கடையநல்லூர்
عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால்அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (469)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்டஉங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவைதண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி) நூல் : முஸ்லிம் (471)
عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِي التُّرَابِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவதுதடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்''
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) நூல் : முஸ்லிம் (473)
மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையைநமக்கு கற்றுத் தருகின்றார்கள்.
அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால்
· அந்த நீரைக் கொட்டி விட வேண்டும்.
· அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும்.
· முதல் தடவை கழுவும் போதே அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோமண்ணினால் கழுக வேண்டும்.
இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒருமதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத்திகழ்கிறது.
நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப்பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன்கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனைசரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம்மெய்ப்பிக்கின்றது.
நாயின் உமிழ் நீர்
நபி (ஸல்) நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய்வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்குஅபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன.இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.
நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம்அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.
அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லதுநாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போதுநம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள்செல்கிறது.
இதன் மூலம் ஏற்படும் நோய்க்கு ரேபிஸ் நோய் என்று பெயர்.
இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்குஎண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்டஇடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது.இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது.அப்படிப்பட்ட காரணிகளாவன.
காயம் பட்ட இடம் • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு • வைரஸின் நோய்உண்டாக்கும் தீவிரத் தன்மை • பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலைமூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக்கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்தகாலத்தில் பெருக்கம் அடையும்.
இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதிமனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி,நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறிஇறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப்போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது.முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச்சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவதுபருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்கமுடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக்கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச்செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தைஏற்படுத்துகிறது.
இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர்தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்தராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில்இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.
ஒரு மனிதனை நாய்கள் கடிக்கும் போதும் இந்த ரேபிஸ் கிருமிகள் உடலிற்குள் செல்வதால்இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்
. இந்த பயங்கரமான நோய்களிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைநம்முடைய வீடுகளில் நாய்களை வளர்க்காமல் இருப்பதும் நாய் வாய் வைத்த எந்த ஒருபொருளையும் சாப்பிடாமல் இருப்பதும் தான்.. இதோ அன்றே நபியவர்கள் கூறியிருப்பதைப்பாருங்கள்;
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.அதற்கு அவர்கள் ''வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம்.(அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதைநீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவேவைத்துக்கொண்டுள்ளது'' என்று கூறினார்கள். நான், ''எனது நாயை வேட்டையாடஅனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது) அதனுடன் மற்றொரு நாயையும்காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்றுஎனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)'' என்று கேட்டேன். நபி (ஸல்)அவர்கள், நீ சாப்பிடாதே. ''நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ்(அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ்கூறி அனப்பவில்லை'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் : புகாரி (175)
நாய்களுக்குப் பயிற்சி அளித்து வேட்டையாட அனுப்பினால் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை தன்னுடைய பற்கள் நன்றாகப் பதியுமாறு கடிக்காது. இதன்காரணமாக நாயின் உமிழ் நீரிலுள்ள நோய் கிருமிகள் வேட்டையாடப்பட்ட பிராணியின்உடலிற்குள் செல்வதற்கு சாத்தியமில்லை.
அதே நேரத்தில் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை சாப்பிட்டிருந்தால் அதை நாம்சாப்பிடக்கூடாது என நபியவர்கள் தடை விதிக்கிறார்கள்.
மேலும் பயிற்சி அளித்த நாயுடன் வேறொரு நாய் இருந்து எது வேட்டையாடியது என்றசந்தேகம் ஏற்பட்டால் கூட நபியவர்கள் அதனை சாப்பிடக் கூடாது என்று நமக்குகட்டளையிடுகிறார்கள்.
பிஸ்மில்லாஹ் கூறவில்லை என்ற காரணத்தை நபியவர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞானஅடிப்படையில் அதில் மேலும் பல நன்மைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
மனித குலத்தின் நன்மைக்காக நபியவர்கள் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தடைசெய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும்(உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ளவீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்)வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி (3225)
பாது காப்பிற்காவும் , வேட்டைக்காகவுமே தவிர நாய்களை விற்பதையும் ,வாங்குவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின்கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூரியை)யும்தடைசெய்தார்கள்; வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்!மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபீ ஜுஹைஃபா (ரலி) நூல் : புகாரி (2086)
பாத்திரங்களை மண்ணால் ஏன் சுத்தம் செய்யவேண்டும்.?
நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம்செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மைதரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.
நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும்நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்தஅளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடியமூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.
பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம்செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால்மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பலமுறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.
கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும்மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்துவிடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்தகிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.
நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒருசெய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும்விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில்எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாகஇந்த வார்த்தைகள் முஹம்மத் அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல.
உண்மையான ஏக இறைவனிடமிருந்து பெற்று அறிவித்த வார்த்தைகள் தான்.உண்மையில் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம்.
திருக்குர்ஆன், மற்றும் திருநபி வழி நடப்பதில்தான் உண்மையான வெற்றியிருக்கிறதுஎன்பதை உணர்ந்து வாழ்வோமாக.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்