M.T.M.Farzan
சத்திய இஸ்லாத்தின் தூய்மையை சீர்கெடுத்து, வழிகேட்டுக் கருத்துக்களை சமுதாய மன்றத்தில் விதைத்து, முஸ்லிம்களின் ஈமானுக்கு ஆப்பு வைக்கும் வழிகேட்டு இயக்கங்கள், பல நாடுகளிலும் இஸ்லாமிய வரலாறு நெடுகிளும் வோர்பிடித்தே வந்துள்ளன. எமது இலங்கை மண்ணிலும் இத்தகைய கொள்கை முரண் இயக்கங்களின் இயங்கு வேகம் அண்மைக் காலமாய் கச்சிதமான நிகழ்ச்சி நிரல்கள் ஊடாக, வீரியமாய் வியாபித்த வண்ணம் உள்ளதை களப்பணி புரியும் அழைப்பாளர்கள் அறியாதிருக்க முடியாது.
'எல்லாம் இறைவன்” எனும் சிந்தனைக்குள் சிறைப்பட்ட 'தரீகதுல் முப்லிஹீன்” எனும் அமைப்பு, 'நபித்துவத்தின் வருகை முற்றுப்பெறவில்லை. மிர்ஸா குலாம் அஹமத் என்பவனும் நபியே!” என்று வாதிடும் 'காதியானிகள்” என்ற பிரிவு, 'கல்கியும் நானே! எதிர்பார்க்கப்படும் மஹ்தியும் நானே!” எனும் கொள்கையுடைய 'மஹ்தி ஃபௌண்டேஷன்” எனும் அமைப்பு, 'இறைவனை நெருங்குவதற்கு இறைநேசர்கள் துணை அவசியம்” என்று கூறி தர்ஹாக்களை வழிபடும் 'தரீகாக்கள்”, 'கலீபாவுக்குத் தகுதிவாய்ந்தவர் அலி (ரலி) அவர்களே! இதைத் தட்டிப்பறித்த மூன்று கலீபாக்களும், அஹ்லுல் பைத்தை சாராத நபித்தோழர்கள் அனைவரும் காபிர்கள்” எனும் விஷக்கருத்தை விதைக்கும் 'ஷீயாக்கள்” மற்றும் இவர்களின் கருத்தை வழிமொழிந்து நடைமுறைப்படுத்தும் 'போராக்கள், இஷாஅதுல் இஸ்லாம், தஃவதே இஸ்லாமி” உள்ளிட்ட உப பிரிவுகள் போன்றன இலங்கையில் செயற்பட்டு வரும் வழிகேட்டை வளர்க்கும் ஷைத்தானின் கட்சியினராவர்.
இவ்வனைத்து வழிகேட்டுப் பிரிவினர்களினதும் மூல ஊற்றாய் இருப்பது 'ஷீயா” எனும் கும்பலே! இறுதி நபித்துவத்தில் ஐயப்பாட்டை தோற்றுவித்து, ஒட்டு மொத்த நபித்தோழர்களை காபிராக்கி, புனிதக் குர்ஆனில் கையாடல் புரிந்து, இறை விசுவாசிகளின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு விபச்சாரப் பட்டம் சுட்டி, கப்ரு வணக்கத்தை அறிமுகப்படுத்தி, சுன்னிகளை தெரு நாய்களாக சித்தரிக்கும் படு மோசமான கொள்கைகள் குடிகொண்ட வழிகேட்டின் மொத்த வார்ப்பே 'ஷீயா” என்றால் மிகையாக மாட்டாது.
இவர்கள் தங்கள் நச்சுக் கருத்துக்களை லாவகமாய் சமூகமயப்படுத்தும் செயற்திட்டங்களை நாசுக்காக நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஷீயாயிஸத்தை ஏற்றுமதி செய்யும் ஈரான், இலங்கை ஈரான் தூதரகத்தின் அனுசரணையுடன் இலங்கை மண்ணில் தங்கள் கொள்கையினை பரப்பும் பணியில் பம்பரமாய் செயற்படுகின்றனர். ஈரானுடனான இலங்கை அரசின் நல்லுறவை மூலதனமாய்க் கொண்டே இக்காய் நகர்த்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக ஷீயாயிஸம் எனும் விஷம் 'கல்வி மற்றும் சிந்தனை மாற்றம்” எனும் யுக்தியை கையாண்டே இலங்கைக்குள் பரப்பப்பட்டு வருகின்றது. இலங்கை ஈரான் தூதரகத்தின் ஊடாக வெளியிடப்படும் தூது எனும் சஞ்சிகை, இஸ்லாமிய கலாசார மையத்தினால் ஓட்ட மாவடியில் இருந்து வெளியிடப்படும் அஹ்லுல் பைத் மாதாந்த சஞ்சிகை, இஷாஅது அஹ்லிஸ்ஸூன்னா பேரவையினால் வெளியிடப்படும் வெற்றி எனும் சஞ்சிகை, வெலிகமை மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் கருத்துக் களம் நூல் வெளியீடு மற்றும் வாழ்வும் பண்பாடும் எனும் வானொலி நிகழ்ச்சி, மீராஒடையில் அமைந்துள்ள மன்பஉல் ஹூதா அரபுக்கல்லூரி, மானிக்கம் பிடியில் நிறுவப்பட்டுள்ள ஸகிய்யா மகளிர் அரபுக் கல்லூரி போன்ற சிந்தனா ரீதியில் பாரிய விளைவுகளை சமூகத்தளங்களில் தோற்றுவிக்கும் திட்டங்களின் ஊடாக பல்லாயிரம் மக்களின் சிந்தனைகளை ஷீயாயிஸப் படுத்தும் பணி படுவேகமாய் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவையனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல், ஒரு சமூகத்தை வழிநடாத்துபவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஆலிம்களை ஷீயா வலையில் சிக்க வைக்கும் சதி தற்போது தீட்டப்பட்டு வருகிறது. கடந்த 2011-12-09 ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் ஆலமுல் இஸ்லாம் பகுதியில் 'ஒற்றுமை உணர்வை இழந்தமையே உலக முஸ்லிம்களின் பின்னடைவு” எனும் தலைப்பில் மவ்லவி ஏ.சி அஹ்மத் பழில் (காஸிமி) அவர்களால் வரையப்பட்ட ஆக்கம் இவ்வுண்மையை தெளிவாகச் சொல்கிறது.ஈரானில் நிறுவப்பட்டுள்ள அல் ஜாமிஅத்துல் முஸ்தபா அல் ஆலமிய்யா சர்வதேச பல்கலைக்கழகம் இலங்கை மத்ரஸாக்களில் கல்வி கற்று வெளியேறிய ஆலிம்களில் சிலரை தேர்ந்தெடுத்து, முதற் கட்டமாக ஒரு மாத கால வதிவிட பயிற்சி நெறிக்காக ஈரானுக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேற்படி ஆக்கத்தை எழுதியவரும் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக ஹூஜ்ஜதுல் இஸ்லாம் அஸ்ஸெய்யித் ஹமீத் றிழா ஹகீகி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி முஸ்தபா பல்கலைக்கழகம் உலகில் நிறுவப்பட்ட முதலாவது ஷீயா பிரயோக பல்கலைக்கழகம் என்று அதன் பணிப்பாளர் ஹூஜ்ஜதுல் இஸ்லாம் அத்தரான் வெளியிட்ட அறிக்கை, ஷீயா இணைய தளங்களில் ஒன்றான www.iqna.ir இல் இடம்பெற்றுள்ளது. அத்தோடு எதிர்காலங்களில் இப்பல்கலைக் கழகத்திற்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நடைமுறை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
எது எப்படியிருப்பினும், இலங்கையில் ஷீயா சிந்தனையின் அடிப்படையில் ஓர் சமூக கட்டமைப்பு நிறுவப்படுவதற்கான புர்வாங்க ஏற்பாடுகள் ஆலிம்களின், அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் இனிதே அரங்கேறி வருகிறது. எனவே, கிட்டிய கால இடைவெளிக்குள் நபிகளாரை குறைகண்டு, ஸஹாபாக்களை காபிராக்கும் ஓர் பரம்பரை பரவலாக துளிர்விடும் என்பதே நிகழ்காலம் எமக்கு சொல்லும் செய்தி.
காதியானிகள் விடயத்தில் களத்தில் இறங்கிய ஜம்இய்யதுல் உலமா ஷீயாக்கள் விடயத்தில் கருத்துச் சொல்லாது மௌனியாக இருப்பது நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்யவே வழிவகுக்கும். அரசியல், அதிகார பின்புலங்களுக்கு அஞ்சி அசத்திய வாதிகளின் முகத்திரையை ஜம்மிய்யதுல் உலமா கிழித்தெறியாவிட்டால் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் எமது சாயம் வெளுத்து விடும் என்பதை மனதில் இருத்தி செயற்பட வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் களப்பணி புரியும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் இது விடயத்தில் தங்கள் பார்வையை கூர்மைப் படுத்தி, தக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாளை உங்கள் மடியில் வளர்ந்தப் பிள்ளையும் ஒரு ஷீயா சிந்தனைவாதியாய் வார்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்!
My Wall Post from Facebook::: (Part 1)
ReplyDeleteபத்ர்களம் blogspot இன் "இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்!''என்ற கட்டுரையும்,அது குறித்து நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடும், மேலும் குறித்த தளத்தின் ஆக்கியோன்
அஸீஸ் நிசாருதீன் குறித்த சில உண்மைகளும்.
சகோதரர்களே,வெறுமனே நளீமியை குறை சொல்லிவிட்டார்கள்,யூசுப் அல் கர்ளாவியை விமர்சிக்கின்றார்கள் எனபதற்காக குறித்த தளத்தை, கட்டுரையை நம்பிவிட முன்னர்,
அவ்வாறு சொல்பவர்களை நம்ப முயல முன்னர்,அவ்வாறு சொல்லும் இணைய தளங்களை லிங்க் கொடுக்க, Share பண்ண முன்னர்,குறித்த நபர்கள் குறித்தும்,அவர்களின் நோக்கம் குறித்தும், அவர்களுக்கு பிச்சை போடும் எஜமானர்கள் குறித்தும்
தெரிந்து கொள்வது நல்லது.
இங்கே குறிப்பிடப் பட்டிருக்கும் பத்ர்களம் என்ற இணையத் தளத்தை (blogspot ) நடத்தும் அசீஸ் நிசாருத்தீன் என்பவன் நளீமியாவில் படித்த,
ஜமாத்தே இஸ்லாமியுடன் இணைந்திருந்த ஒருவன். எனினும் தற்பொழுது அற்ப பணத்துக்கு அடிமையாகி,ஷீயாயிச ,ஈரானிய கொள்கைகளை
இந்நாட்டில் புகுத்துவதில் ஈடு பட்டிருக்கும் ஒரு கீழ்த்தரமான நபராவான். இதற்காக, மறைமுகமாகவும், நேரடியாகவும் தனது தளத்தையும்,மேலும் தனது ஆக்கங்களுக்கு
இடம் கொடுக்கும் தளங்களையும் பயன்படுத்துகின்றான்.
குர் ஆன்,ஹதீஸ், தூய இஸ்லாம் என்றாலே இவனுக்கு கிலி பிடித்துவிடும்,கூடவே விசரும் தலைக்கேறி விடும்.
குர் ஆன், ஹதீஸ் படி நடக்க முயல்பவர்களை,அவற்றை பிரச்சாரம் செய்கின்றவர்களை குறை சொல்வதும்,அவர்களை அமெரிக்காவின் CIA கையாட்கள் என குற்றம் சாட்டுவதும், அதன் மூலம் தனது ஈரானிய ஷீயா எஜமானர்களை குளிர்வித்து தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதும் இவனது வாடிக்கை.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதில் இவனுக்கு அலாதியான தனி திறமையே உள்ளது. இவனது குருட்டு ஆய்வுக்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
அதில் ஒன்றுதான், கடந்த வருடம் TNTJ இலங்கை கிளை சிங்களத்திலும்,தமிழிலும் வெளியிட்ட ''பகிரங்க
பிரச்சார மேடை - அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை'' என்ற சுவரொட்டி தொடர்பான இவனது குருட்டு ஆய்வு.
அதில் இவன் சொல்வது என்னவென்றால், இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டதால், இனி ஆயுதம் விற்க முடியாது என்று கவலைப்பட்ட
அமெரிக்க உளவுத்துறை,சவூதி அரசின் மூலம் TNTJ கு பணத்தை கொடுத்து, மேற்படி சுவரொட்டியை ஒட்டவைத்து அதன் மூலம் இலங்கையில் மீண்டுமொரு (மதக்) கலவரத்தை - போராட்டத்தை உருவாக்கி ஆயுதம் விற்க தயாராகின்றது என்பதாகும். குருட்டு ஆய்வுக்கு இந்த ஷீயா அடிவருடி இட்ட மொக்குத் தலைப்பு ''இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!'' என்பதாகும்.
TNTJ எந்த வெளிநாட்டு பணத்தையும் பெற்றுக் கொள்ளாத அமைப்பு என்பது அப்துல்லாஹ் ஜமாலிக்கே நன்றாகத் தெரியும், அப்படியிருக்க,
ஷீயா காரன் போடும் பிச்சைக்காக சமூகத்தை வழிகெடுக்கும் அஸீஸ் நிசாருத்தீன் என்ற ஈரான் அடிவருடிக்கு இது தெரியாமல் போனது அப்படி?
இவன் தெரிந்தே சமூகத்தை வழி கெடுப்பவனல்லவா.
காபிர்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி, அல்லாஹ்வை பற்றி சொல்வது தவறு என ஒற்றைக் காலில் நிற்கின்றான்,ஏன் இந்த வெறி என்றால்,
TNTJ குர்ஆன்,ஹதீஸ் பேசும் அமைப்பு என்பதால். (நான் TNTJ / SLTJ சார்ந்தவன் இல்லை என்பதனை கவனத்தில் கொள்க)
குறித்த குருட்டு ஆய்வுக் கட்டுரையைக் காட்டி ஷீயா நாடான ஈரானின் தூதுவராலய காலாச்சாரப் பிரிவின் மூலம் நல்ல தொகையை கறந்திருப்பான்.
Part 02:::
ReplyDeleteஇவன் நயவஞ்சகத்தொடு எழுதியிருந்த "அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியை தேடும் அறிஞர் கர்ளாவி'' என்ற ஆக்கத்தை பல சகோதரர்கள் இவனது சுய ரூபம் தெரியாமல்,இவனது குரூர உள் நோக்கத்தை அறியாமல் தமது Facebook பக்கங்களில் பகிர்ந்திருந்தார்கள்.
இவ்வாறான செயல்பாடுகள் முற்றாக தவிர்க்கப் பட வேண்டும்.
(நமக்கும் ஜமாத்தே இஸ்லாமி/இஹ்வான் சகோதர்களுக்கும் இடையில் உள்ள
கருத்து வேறுபாடு மற்றும் யூசுப் அல் கர்ளாவி குறித்த விமர்சனப் பார்வை என்பவற்றை நம் மத்தியிலேயே வைத்துக் கொள்வோம்)
இவனது சகாக்களான சிலரும் இது போன்ற இழி பணிகளில்,தத்தமது தகுதிக்கு ஏற்ப ஈடுபட்டு ஈரானிய அந்நிய செலாவனியை இந்நாட்டுக்கு ஈட்டித் தருகின்றனர்,(சரியாகச் சொன்னால் ஈரான் போடும் எலும்புத் துண்டுக்காக இலங்கை முஸ்லிம் சமூகத்தை சீரழிக்க/ வழிகெடுக்க முயல்கின்றனர்.)
மேலும் ஈரானிய இலவச சுற்றுலாவும் செல்கின்றனர்.
இவன் குறித்தும், இவனது தளம் குறித்தும் எச்சரிக்கையாக இருப்போம், அதேபோல் எனது நண்பர் பட்டியலில் இல்லாத சகோதரர்களுக்கும் இந்த செய்தியை எத்தி வைப்போம்.
இனொரு சந்தர்ப்பத்தில் இவரது சகாக்கள் பற்றியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள்
எனபது பற்றியும் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
.கடைசியாக, இந்த துரோகி,இழி மதியோன் அஸீஸ் நிசாருத்தீனின் ''இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்!'' என்ற ஆக்கம் yarlmuslim என்றொரு தளத்திலும் வெளிடப் பட்டிருந்தது. அதற்கான் லிங்க் கீழே தரப்படுகின்றது.
இவனை பற்றி மேலும் அறிந்துகொள்ள, குறித்த லிங்க் இல் உள்ள கமெண்ட்ஸ் ஐ பார்க்கவும்.
http://yarlmuslim.blogspot.com/2011/12/blog-post_6726.html
Imran Mohamed
இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்! ~ யாழ். முஸ்லிம்
yarlmuslim.blogspot.com