Tuesday, July 19, 2011
வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்
ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
கிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.
இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )
கப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
முஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
முடிவுரை
வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்!
நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?
தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!
தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!
பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!
தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்
குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.
மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!
பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.
முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!
தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?
மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!
ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்
நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!
தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?
முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.
தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!
தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி
1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!
தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்
இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!
இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?
இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன
1. முதல் கலிமா
அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்
2. ஐவேளை தொழுகை
உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!
3. இலம் மற்றும் ஜிக்ரு
அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது
4. இக்ரமே முஸ்லிம் –
தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது
5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –
மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!
6. தாபிர்-ஏ- வக்த்
குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்
புதிய தத்துவம் எண் 7
மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது “வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.
சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!
அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!
தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்
இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு)என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!
அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!
தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்
தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.
தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது
வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!
வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!
சர்வதேச தப்லிக் கூட்டம்
முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA-World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.
இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும். கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.
தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?
அரசியல் தலைவர்கள்
- பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
- பரூக் லெஹரி,
- நவாஸ் ஷெரீப்,
- முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
- பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்
கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்
- ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
- ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
- இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
- முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
- சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
- சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
- மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
- ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
- பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
- குல்ஜார் ஆலம்
- ஆலம்ஜேப் முஜாஹித்
- தலைசிறந்த எழுத்தாளரான டாக்டர் நாதிர் அலிகான்
(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).
தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?
மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!
அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?
எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)
அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.(குர்ஆன் 2:86)
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)
நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?
அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)
தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)
இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)
ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)
நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)
அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)
ஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாகஇருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக்கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமானவர்கள் (23-103)
சிந்திக்க சில தேன் துளிகள்
- இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?
- இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?
- இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?
- இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?
- இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது உண்டா?
- இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?
நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)
அழகிய அழைப்பு
தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.
குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!
குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையைஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)
அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!
குறிப்பு
இந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்!
தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல் அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா? ஏன் இந்த இருதலைப்பட்சம்!
ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்!
Subscribe to:
Posts (Atom)