Pages

Tuesday, September 27, 2011

இரண்டாம் ஜமாஅத்






(இந்த ஆய்வுக் கட்டுரை 23.11.2009 அன்று ஆன்லைன் பிஜே யில் வெளியிடப்பட்டதாகும் )
இரண்டாம் ஜமாஅத்
ஹதீஸ்களில் இல்லாத கருத்தைஹதீஸ்களில் உள்ளது போல்காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகைகட்டுரையில் இதைஅம்பலப்படுத்தியுள்ளோம்.)இலங்கை நவ்பர் என்பார் ஒருஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத்நடத்துவது கூடாது என்றும் வாதிட்டுவருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லைஎன்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்.
இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஏற்கனவே ஆய்வு செய்து வைத்திருந்தார்அதைதேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.
மார்க்கத்தில் எந்த ஒரு விஷயம் குறித்து ஆய்வு செய்வதாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸில்என்ன கூறப்பட்டுள்ளதோ அதில் இருந்து சட்டங்களை எடுக்க வேண்டும்நாம் என்னநினைக்கிறோமோ அதற்கேற்ப சட்டங்களை வளைக்கக் கூடாதுஇலங்கை நவ்பர்என்பவரிடம் இந்தத் தன்மையைக் காண முடியவில்லை.
இவர் வாதமே ரொம்ப டேஞ்சராக ஆரம்பிக்கிறது.
உதாரனமாக இஷா தொழுகையை ஒருவர் ஐம்பத்தியேழாவது ஜமாஅத்தாக தொழமுடியுமாஎனக் கேட்டால் இரண்டாவது ஜமாத்தை அனுமதிப்பவர் ஆம் எனக் கண்டிப்பாகக்கூறியே ஆக வேண்டும்இல்லை எனக் கூறினால் ஐம்பத்தியேழாவது ஜமாஅத் கூடாதுஎன்பதற்கு என்ன ஆதாரமோ அவைகள் தான் ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாதுஎன்பதற்கான ஆதாரங்களாகும்;ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு எவைகள்ஆதாரங்களோ அவைகள் தான் ஐம்பத்திஐந்தாவது ஜமாஅத் கூடாது என்பதற்கானஆதாரங்களாகும்.இவ்வாறே குறைந்து கொண்டே வந்து ஒரு ஜமாஅத்தா அல்லது அதற்குமேற்பட்டதா என்ற சரியான கேள்வி பிறக்கும்.
எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிப்பவர் உன்மையில் மறைமுகமாக எத்தனைஜமாஅத் வேண்டுமெண்றாலும் தொழுது கொள்ளலாம் என்ற இஸ்லாம் வலியுறுத்தும் ஒரேஜமாஅத் தொழுகை எனும் கோட்பாட்டை தகர்த்தெறியும் அனுமதியையே வழங்குகிறார்என்பதுதான் யதார்த்தமாகும்.
ஹதீஸ்களின் அடிப்படையில் வாதத்தை எடுத்து வைக்கும் முன் இரண்டாம் ஜமாஅத்என்பது எவ்வளவு பாரதூரமானது என்ற கருத்தை மேற்கண்டவாறு விதைக்கிறார்ஐம்பத்திஏழு தடவை ஜமாஅத் நடத்தலாமா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டால் ஆய்வுசெய்யும் திறன் இல்லாத பொது மக்கள் அது தவறு என்று நினைத்து விடுவார்கள்அதாவதுஹதீஸின் துணையுடன் கருத்தை நிறுவுவதை விட மனோ இச்சையின் அடிப்படையில்கருத்தை நிறுவ அடித்தளம் போடுகிறார்.
ஒரு ஜமாஅத் முடிந்த பின் இன்னொரு ஜமாஅத் நடத்த அனுமதி இருந்தால் ஐம்பத்தி ஏழுஎன்ன ஐயாயிரம் ஜமாஅத் நடத்துவதும் சரியானது என்று தான் அறிவுடையோர் முடிவுசெய்ய வேண்டும்ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தும் நிலைக்கு ஹதீஸில் அனுமதிஇருந்தாலும் என் மன இச்சை அதை ஏற்றுக் கொள்ளாது என்பதைச் சொல்லாமல்சொல்கிறார்.
ஒரு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவர் மற்றொரு ஜமாஅத் தொழுகை நடக்கும்பள்ளிக்குச் சென்றால் அதிலும் பங்கெடுக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் அனுமதிஉள்ளதுஇந்த அனுமதியிலும் மேற்கண்ட கேள்வியைக் கேட்க முடியும்ஐம்பத்தி ஏழாவதுபள்ளிக்குச் சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீஸில் உள்ளதை மறுப்பார்களாஇந்தஐம்பத்தி ஏழு மேட்டரை நூற்றுக் கணக்கான சட்டங்களில் கேட்க முடியும்.
ஹதீஸில் அந்த அனுமதி பெறப்பட்டால் அதில் எந்தப் பாரதூரமும் இல்லைமனோஇச்சையை மார்க்கமாக்குவதற்கே இவர்கள் புறப்பட்டுள்ளனர் என்பது இந்த வாதத்தில்இருந்து தெரிகிறது.
இனி இது குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம்.
204 حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ رواه الترمدي
204 حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ رواه الترمدي
நபி (ஸல்அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார்அப்போதுநபி (ஸல்அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்இவருக்கு லாபம்அளிக்கக்கூடியவர் யார்என்று கேட்டனர்ஒரு மனிதர் முன்வந்தார்அவருடன் வந்த மனிதர்சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலிநூல் திர்மிதி (204) அபூதாவூத் 487
மேற்கண்ட ஹதீஸில் ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாக தொழுகை நடத்தி முடிந்தபிறகு மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவானஆதராமாகும்.
இந்தத் தெளிவான ஆதாரத்துக்கு கட்டுப்படுவதற்கு பதிலாக பயங்கரமான தத்துவங்களைக்கூறி ஹதீஸை அர்த்தமற்றதாக்குகிறார்.
தத்துவம் 1
1.நாம் முன்னர் குறிப்பிட்ட காரணங்களுக்காக(தூக்கம்,மறதி,வாடைவீசும் உணவு)ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோஅல்லது மூண்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும்இடம் பெரவில்லை.
என்னே தத்துவம் பாருங்கள்ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதைப் பார்த்துக் கொண்டே எந்தஹதீஸும் இடம் பெறவில்லை என்று கூறுகிறார்அப்படியானால இது ஹதீஸ் இல்லையா?அடிக்கடி இரண்டாம் ஜமாஅத்தோ மூன்றாம் ஜமாஅத்தோ நடந்ததாக வந்தால் தான் ஏற்றுக்கொள்வாராம்இவருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லைஒரு விஷயத்தை எப்படிப்புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லை.
அடிக்கடி நிகழும் வணக்க முறைகள் பற்றி ஒரே ஒரு ஹதீஸ் மட்டுமே ஒரே ஒருவரால்மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதைப் பரவலாகக் காண்கிறோம்அடிக்கடி நடந்ததாகஹதீஸில் இல்லை என்று கூறி அவற்றை எல்லாம் மறுப்பாரா?
தத்துவம் 2
2.குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இண்று நடைமுறை உள்ளது போல்மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல்தனியாகவே தொழஆரம்பிக்கிறார்.
அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளதுஅவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார்என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறதுநபிகள் நாயகம்(ஸல்அவர்கள் அதைத் தடுத்து ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவர் கண்களுக்குத்தெரியவில்லை.
இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் ஸலஃபி வகையறாக்களை விட மார்க்கத்துக்குஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.
தத்துவம் 3
3.நபியவர்களின் அனுமதி ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர்அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தைதவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடாத்தும் ஜமாஅத்தை அல்ல.
குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத்தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.
ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும்அவருடன் சேர்ந்து தொழலாம்ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது என்று நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும்அப்படி நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் கூறவில்லைபள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின்தொழுதவர்கள் மட்டுமே தான் இருந்தது தற்செயலானது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பயன்படுத்திய வாசகம்தான்யார் இவருக்கு தர்மம் செய்வது என்பது தான் அந்த வாசகம்அதாவது தனியாக ஒருவர்தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும்ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு27 நன்மைகள் கிடைக்கும்தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார்.அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது.தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் அக்கரை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.
இந்த இடத்தில் இவர்களின் பாஷையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.
தாமதமாக ஒருவர் வரும் போது ஏற்கனவே தொழுத ஒருவர் அவருடன் சேர்ந்து தொழஅனுமதி உண்டு என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார்ஏற்கனவே ஜமாஅத் தொழுதவர்கள்பள்ளிவாசலில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராக 57 பேர் வருகிறார்கள்இப்போது 57ஜமாஅத் பிரச்சனை வருமே இது பரவாயில்லையாஎதைப் பாரதூரமான காரணம் என்றுசித்தரித்தார்களோ அதையே அவர்களும் சொல்லும் நிலைக்கு அவர்களை அல்லாஹ்தள்ளிவிட்டான்.
தத்துவம் 4
4.குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்துகொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறதுஅனால் இண்றைய முதல்ஜமாஅத்திற்குப் பின் நடாத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார் யாருக்கு தர்மம் செய்கிறார்என்பதைக் கூற முடியுமாமுடியவே முடியாது.
மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது.
தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா?அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக்கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும்ஏற்கனவே தொழாதவருடன்சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்து விடும்இது தான் இங்கேகவனிக்க வேண்டும்.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்தஅவசியமும் இல்லைஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது.ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவவேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான்அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.
தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான்தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள்கட்டளையிடுகிறார்கள்இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத்தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர்பெறுகின்றார்இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள்.
தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப்பெற்றுக் கொள்வார்கள்யாரும்யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை.
தர்மம் என்றாலே அதன் பொருள் என்னதேவைப்படும் போது கொடுப்பது தான்ஒன்றுக்குமேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலேஅவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது.
தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான்.எனவே ஜமாஅத்தாக தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்டஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில்மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவதுதவறானதாகும்.
தத்துவம் 5
5.எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அணுமதித்த காரனங்களுக்காஜமாஅத்தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்டயார் அழ்கிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்)சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்குஅல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன்தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்.என்ற ஹதீஸின் படி தனியாகதொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார்அல்லது ஏற்கனவே முதல்ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம்செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தை தவறவிடுபவர்கள் சேர்ந்துஇரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூண்றாம் ஜமாஅத்தும் அதைத்தவறவிடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற.. இதற்கெல்லாம் ஆதாரம் இந்தஹதீஸில் எங்கே இருக்கிறது!!
மறுபடியும் 57 ஜமாஅத்துக்கு தாவுகிறார்இவர் கூறுகிற வாதத்தின்படியும் 57 ஜமாஅத்வருமே அதற்கு இது ஆதாரமாகுமா?
ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் ஒருவர் வந்தால் ஜமாஅத் முடிந்துவிட்டாலும் ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்ற ஹதீஸை இங்கேஎடுத்துக் காட்டுகிறார்.
முதலில் இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும்அது சரியானது என்று வைத்துக்கொண்டாலும் குழப்பம் இல்லைதாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர்கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும்யாராவதுகிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும்என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும்.
தத்துவம் 6
6.எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ்எம்அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் நபி(ஸல்அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன்நபி (ஸல்அவர்கள் அனுமதித்த,ஆர்வமூட்டிய காரியத்தை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லைஎன்பதல்ல இங்குகவனத்திற் கொள்ளப்படவேண்டியதுமாறாக நபியவர்களின் வரையறைகளுடனானசுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும்அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.
இதுவும் அபத்தமான வாதமேவரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை.வரையரை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார்அது தான்இவரது தடுமாற்றத்துக்குக் காரணம்இவர் வரையரை செய்தது தவறானது என்பதை முன்னர்விளக்கி விட்டோம்தாமதமாக வந்த ஒரு முஸ்லிம் ஜமாஅத்தின் நன்மையை இழக்கக்கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவு படுத்தி இருக்கும்போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.
தத்துவம் 7
7.இதற்கு ஒரு நல்ல உதாரனமாகமறைவான ஜனாஸாத் தொழுகையை குறிப்பிடலாம்.எப்படி நபி (ஸல்அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறானநஜ்ஜாஷி அவர்களுக்குதொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக்கொள்ளாமல் அது அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம் என்றோ அல்லது குறித்தபிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும்என்றோ தழிழ்நாடு தௌஹீத்ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த் ஹதீசையும்குறித்த பிரத்யேகநிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல்ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவதுஎன்ற முறையில் மாத்திரம் என சரியாகவிளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற க்ருத்துக்கே இடமில்லை.
நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்துகொள்ளவில்லைஒருவருக்குத் ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத்தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம்ஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார்அவருக்கு தொழுகைநடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் காரணத்தைச் சொல்லிவிட்டதால் அது பொதுவானது தான்.
அது போல் ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவவேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர்கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.
தத்துவம் 8
8.குறித்த வரையறைகளை கவனத்திற் கொள்ளத்தேவையில்லை எனக் கருதுவோர்இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸைவைத்து அனுமதியளிக்க முன்வருவார்கலா என சிந்தித்தாலே இரண்டாம் ஜமாத்திற்குஅணுமதி என்ற க்ருத்து எவ்வளவு தவறானதுபார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ளபோதுமானதாகும்.
ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லைஇவர் மனோ இச்சைப்படி தவறாகவிளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார்நாங்கள் எங்கள்விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம்ஜும்மாவுக்கும் பெரு நாள்தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம்கூறுகிறோம்.
ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகை நன்மையைஅடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கரையுடனும்அவர்களின்அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம்பெருநாள்தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காகஅவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம்ஜும்மாவும்அப்படியேஇன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமதுமர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப் பேர் தான் தொழ முடியும்மீதிப் பேர் வெளியேதான் நிற்க வேண்டும் .தொழுது முடிந்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல்நின்றவர்கள் மற்றொரு ஜும்மா நடத்துகிறோம்இடம கிடைக்காவிட்டால் உங்களுக்குஜும்மா இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம்பொருந்தும்எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.
மதஹபுவாதிகளின் அறியாமை
இது தவிர இரண்டாம் ஜமாஅத் தொழுகையை மத்ஹப்வாதிகளும் தடுத்து வருகின்றனர்.அவர்களுக்காகவும் சில விஷயங்களைத் தெளிவு படுத்துகிறோம்.
உபை பின் கஅப் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் நபியவர்கள் எங்களுக்குசுபுஹை தொழவைத்தார்கள்பிறகு இன்னார் வந்துள்ளாராஎனக் கேட்டார்கள்.நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்இன்னார் வந்துள்ளாராஎன்றுவேறொருவரைக் கேட்டார்கள்நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்பிறகுநபியவர்கள் (சுபுஹ்இஷா ஆகியஇந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்குமிகவும் பாரமான தொழுகைகளாகும்இந்த இரண்டில் உள்ள (நன்மைகளைஅவர்கள்அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறைநெருக்கத்தைப் பெருவதில்முதல் வரிசையாகிறது மலக்கு மார்களின் வரிசை(இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதைப்போன்றதாகும்நீங்கள் அதன் சிறப்புகளைஅறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள்ஒருவர் மற்றொருவரோடுசேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதைவிட மிக பரிசுத்தமானதாகும்ஒருவர்இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விடமிகபரிசுத்தமானதாகும். (தொழுகையாளிகளின்எண்ணிக்கை அதிகரிப்பதுதான்உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் (467)
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்தொழுவது உங்களில் ஒருவர்தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்தொழுவது தனியாகத்தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிநூல் : முஸ்லிம் (1151)
மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதின் சிறப்புகளை நமக்கு படம்பிடித்துக் காட்டுகின்றனமேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத் தான் தொழவேண்டும் எனபதை வலியுறுத்துகின்றனபள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தைமட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
கொஞ்சம் அறிவுப் பூர்வாமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்குவருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான்தனியாகத்தொழுவதென்றால் வீடுகளிலோகடைகளிலோ தொழுது கொள்ளலாம்ஏனென்றால் பூமிமுழுவதும் தொழுமிடமாகும்பள்ளிவாசல் கட்டப்படுவதின் நோக்கமே அங்கு தொழப்படும்தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான்இதன்காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழுமடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன்தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலிநூல் : புகாரி (647)
பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழவதுச் தான் என்கின்றகாரணத்தினால் தான் நபியவர்கள் வீட்டில்கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத்தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்எனவே நபியவர்கள்என்ன நோக்கத்திற்காக பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோஅந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் தான் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளியில்தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து தங்கள் முதுகளில்பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள் .
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன்தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.எனக் கூறியுள்ளார்கள்.நபியவர்கள் கூறிய வார்த்தையை நன்றாகக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்கடை,அல்லது வீட்டை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்தது என்கிறார்கள்எந்த இடத்தில்ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் எனக்கூறவில்லைஏனென்றால் ஜமாஅத்தாகத் தொழுவதுஎன்றாலே அது பள்ளிவாசல் தான் என்பதை அனைவரும் அறிந்திருந்த காரணத்தினாலேயேநபியவர்கள் பள்ளிவாசல் என்று கூறவில்லைபள்ளிவாசல் என்றாலே அங்குவரக்கூடியவர்கள் ஃபர்லான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத்தான்சுன்னத்தான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டியதில்லைஎனவே தான்நபியவர்கள் சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது எனக்கூறியுள்ளார்கள்.
சஹாபாக்களின் நடவடிக்கைகளும் ஆதாரமாகும் என்று மத்ஹப்வாதிகள் கூறுவதால்அவர்களுக்காகப் பின் வரும் தகவல்கலையும் மேலதிகமாக முன் வைக்கிறோம்.
َجَاءَ أَنَسُ بْنُ مَالِكٍ إِلَى مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى جَمَاعَةً (بخاري)
அனஸ் (ரலிஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டதுஉடனேபாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
புகாரி பாகம் 1 பக்கம் 505
الأوسط لابن المنذر - (ج 6 / ص 318)
2028 - وحدثنا موسى ، قال : ثنا أبو بكر ، قال : ثنا إسحاق الأزرق ، عن عبد الملك بن أبي سليمان ، عن سلمة بن كهيل ، أن ابن مسعود ، دخل المسجد وقد صلوا فجمع بعلقمة ، والأسود ، ومسروق
تحفة الأحوذي - (ج 2 / ص 8)
وهو قول بن مسعود رضي الله عنه قال بن أبي شيبة في مصنفه حدثنا إسحاق الأزرق عن عبد الملك بن أبي سليمان عن سلمة بن كهيل أن بن مسعود دخل المسجد وقد صلوا فجمع بعلقمة ومسروق والأسود وإسناده صحيح
இப்னு மஸ்வூத் (ரலிஅவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள்அவர்கள் தொழுதுமுடித்திருந்தார்கள்எனவே அல்கமாஅஸ்வத்மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத்தொழுகை நடத்தினார்கள்
அறிவிப்பவர் : ஸலமா இப்னு குகைல் நூல்அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர்
பாகம் : 6பக்கம் : 318)
وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ مِنْ التَّابِعِينَ قَالُوا لَا بَأْسَ أَنْ يُصَلِّيَ الْقَوْمُ جَمَاعَةً فِي مَسْجِدٍ قَدْ صَلَّى فِيهِ جَمَاعَةٌ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ (الترمدي)
நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும்இதுவேஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில்தவறில்லை என்று கூறுகின்றனர்இமாம் அஹ்மத்இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறேகூறுகின்றனர். (திர்மிதி)
وَقَالَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ لَا بَأْسَ بِتَكْرَارِ الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ وَاحِدٍ لِأَنَّ جَمِيعَ النَّاسِ فِي الْمَسْجِدِ سَوَاءٌ وَإِنَّمَا لِإِقَامَةِ الصَّلَاةِ بِالْجَمَاعَةِ وَهُوَ قِيَاسُ الْمَسَاجِدِ عَلَى قَوَارِعِ الطُّرُقِ فَإِنَّهُ لَا بَأْسَ بِتَكْرَارِ الْجَمَاعَةِ فِيهَا المبسوط - (ج 1 / ص 399)
இமாம் ஷாஃபி (ரஹ்அவர்கள் கூறுகிறார்கள் ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத்தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும இல்லைஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்துமக்களுமே சமமானவர்கள்தான். (பள்ளிவாசல் என்பதேஜமாஅத்தாக தொழுகையைநிறைவேற்றுவதற்காகத்தான்இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரியசட்டமுமாகும்அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை
ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத் பாகம் :1 பக்கம் : 39
إلَّا فِي رِوَايَةٍ عَنْ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى قَالَ إنْ وَقَفَ ثَلَاثَةٌ أَوْ أَرْبَعَةٌ مِمَّنْ فَاتَتْهُمْ الْجَمَاعَةُ فِي زَاوِيَةٍ غَيْرِ الْمَوْضِعِ الْمَعْهُودِ لِلْإِمَامِ فَصَلَّوْا بِأَذَانٍ فَلَا بَأْسَ بِهِ وَهُوَ حَسَنٌ لِمَا رُوِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ فَدَخَلَ أَعْرَابِيٌّ وَقَامَ يُصَلِّي فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أَحَدٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا يَقُومُ فَيُصَلِّي مَعَهُ فَقَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَصَلَّى مَعَهُ . المبسوط - (ج 1 / ص 399)
இமாம் அபூ யூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது இமாமிற்கென்றுவரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்றுபேர்களோஅல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லி தொழுதால் எந்தத் தவறுமில்லை இதுஅழகானதாகும்ஏனெனில் நபி (ஸல்அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறதுஒருகிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்றபோது நபி (ஸல்அவரகள் உங்களில்ஒருவர் இவருக்கு தர்மம் செய்யமாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்எழுந்து இவரோடுதொழட்டும் என்று கூறினார்கள்அபூ பக்ர் (ரலிஅவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள்.
ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத் பாகம் : 1 பக்கம் : 399)
مَطْلَبٌ فِي تَكْرَارِ الْجَمَاعَةِ وَالِاقْتِدَاءِ بِالْمُخَالِفِ .
قَوْلُهُ : أَيْ إقَامَةِ إمَامِ مَذْهَبِهِ ) قَالَ الشَّارِحُ فِي هَامِشِ الْخَزَائِنِ : نَصَّ عَلَى هَذَا مَوْلَانَا مُنْلَا عَلِيٌّ شَيْخُ الْقُرَّاءِ بِالْمَسْجِدِ الْحَرَامِ فِي شَرْحِهِ عَلَى لُبَابِ الْمَنَاسِكِ ا هـ وَهُوَ مَبْنِيٌّ عَلَى أَنَّهُ لَا يُكْرَهُ تَكْرَارُ الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ وَاحِدٍ ، وَسَيُذْكَرُ فِي الْأَذَانِ ، وَكَذَا فِي بَابِ الْإِمَامَةِ مَا يُخَالِفُهُ . (رد المحتار - (ج 3 / ص 166)
ஹாமிஸல் ஹஸாயின் என்ற நூலில் ஷாரிஹ் அவர்கள் கூறியுள்ளதாவது மீண்டும்மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது தொடர்பாக குர்ராக்களின் ஆசிரியராகியமௌலானா முன்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்இவருடைய கருத்தாகிறதுஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதின்மீது அமைக்கப்பட்டதாகும்
ஆதாரம் : ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 166)
(مسألة) * (ولا تكره اعادة الجماعة في غير المساجد الثلاثة) معنى اعادة الجماعة انه إذا صلى امام الحي وحضر جماعة أخرى استحب لهم أن يصلوا جماعة وهذا قول ابن مسعود وعطاء والحسن والنخعي واسحق. ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)
மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது ஒரு பகுதியின் இமாம்தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள்ஜமாஅத்தாக தொழுவது விரும்பத் தக்கதாகும்இதுதான் இப்னு மஸ்வூத்(ரலிஅதாவு,ஹஸன்மற்றும இப்ராஹிம் நகயீஇஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்
ஆதாரம் : ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா பாகம் : 2 பக்கம் : 7)
மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின்ஹதீஸ்களைத்தான் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்இதோ அஷ்ஷரஹல் கபீர் என்றநூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்
وقال مالك والثوري والليث وابو حنيفة والشافعي لا تعاد الجماعة في مسجد له امام راتب في غير ممر الناس ومن فاتته الجماعة صلى منفردا لئلا يفضي إلى اختلاف القلوب والعداوة والتهاون في الصلاة مع الامام، ولانه مسجد له امام راتب فكره فيه اعادة الجماعة كالمسجد الحرام ولنا عموم عليه السلام صلاة الجماعة تفضل على صلاة الفذ بخمس وعشرين درجة وروى أبو سعيد قال جاء رجل - وقد صلى رسول الله صلى الله عليه وسلم - فقال أيكم يتجر على هذا؟ فقام رجل فصلى معه قال الترمذي هذا حديث حسن ورواه الاثرم وفيه فقال ألا رجل يتصدق على هذا فيصلي معه؟ وروى باسناده عن أبي امامة عن النبي صلى الله عليه وسلم مثله وزاد فلما صليا قال وهذان جماعة ولانه قادر على الجماعة فاستحب له كالمسجد الذي في ممر الناس وما قاسوا عليه ممنوع ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)
ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்குநம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதைவிட ஜமாஅத்தாகத் தொழுவதுஇருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவானகட்டளையாகும்மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள்தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார்உங்களில் யாராவது ஒருவர் இவரோடுதொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாராஎன்று நபியவர்கள் கூறினார்கள் என்றஹதீஸம் நமக்குரிய ஆதாரமாகும்இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூஉமாமா (ரலிஅவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளனஅவர்கள் இருவரும் தொழுது முடித்தபோது நபியவர்கள் இந்த இருவரும்ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள.
ஆதாரம் : அஷ்ஷரஹல் கபீர் பாகம் : 2 பக்கம் : 7
பள்ளியில் தாமதமாக வருவதை தடைசெய்யும் மத்ஹபு வாதிகள் மத்ஹபையேபின்பற்றாதவர்கள்இன்னும் சொல்லப் போனால் இவர்கள் நபிவழிக்கு மட்டும்மல்லமத்ஹபிற்கும் எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.
எனவே மத்ஹப்வாதிகள் மத்ஹபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவர்கள்இரண்டாம் ஜமாஅத் நடத்த தடை செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்