சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்’ என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத். இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.
கடந்த ஜீலை 16 தேதி முஸ்லிம் இளைஞர் அமைப்பை சேர்ந்த ரதுல் அகமது, அப்துல் சித்தீகி சேக் அகிய இருவரும் கொக்ராஜ்கர் பகுதியில் அடையாளம் காணப்படாத இருவரால் அடிக்கப்பட்டனர், மருநாள் மாலை போடோ லிபரேசன் டைகர் அமைப்பபை சார்ந்த நால்வர் கொல்ராஜ்கர் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜாய்பூர் கிராமத்தை துவம்சம் செய்தனர்.
இது தான் அஸ்ஸாம் கலவரத்தின் ஆரம்பமாக அமைந்தது.
அஸ்ஸாம் கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைச் செய்யப்பட்டவர்களை விட அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இனக் கலவரத்தின் பின்னணியில் இருந்து தூண்டிவிட்ட, "போடோ" சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்துள்ளனர். பிரதீப் பிரம்மா என்ற அந்த எம்.எல்.ஏ., போடோலேண்ட் மக்கள் முன்னணி என்ற பிராந்தியக் கட்சியின் தலைவராக உள்ளார். மாநிலத்தை ஆளும் காங்கிரஸின் கூட்டணியிலும் அவரது கட்சி இடம் பெற்றுள்ளது.
அஸ்ஸாமில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் 2,66,700 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முகாம்களில் முஸ்லிம்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதிகளால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின்
அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.
கொக்ராஜர் ரிலீஃப் முகாமில் மட்டும் 17 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். நோயாளிகளும், காயமடைந்தவர்களும், கர்ப்பிணிகளும், வயோதிகர்களும், ஆண்களும், குழந்தைகளும், பெண்களும் கலந்து தங்கியிருப்பதால் பல முகாம்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு கீழான நூற்றுக்கணக்கான குழந்தைகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடிக்கும் நீர் கூட சுத்தமானதாக இல்லை.