Pages

Tuesday, September 27, 2011

நபிகள் நாயகம்தான் இறுதி நபியா? – காதியாணிகளின் கேள்வி


அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



கேள்வி எழுப்பியது காதியாணிகள்
எழுப்பியவர் Sabar ( jafarla@yahoo.co.in )

கேள்வி
ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?

பதில்
காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டு விபரீதமான கேள்விகள் அடங்கி யுள்ளன. உங்கள் கருத்துப்படி இதோ அந்த 2 விபரீதங்கள்
1)      ஈஸா நபி வானில் உயர்த்தப்படவி்ல்லை!
2)      ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்துவிட்டார்!

விபரீதம் 1 (ஈஸா நபி வானில் உயர்த்தப் படவி்ல்லை) என்பதற்கான பதில்
ஈஸா நபி வானில் உயர்த்தப்பட்டார் என்று அருள்மறை குர்ஆனில் வல்லமைமிக்கவனும், ஞானமிக்க இறைவனாகிய எங்கள் இறைவன் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்!

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:158)

ஈஸா நபி வானில் உயர்த்தப்படவில்லை என்று நீங்கள் வாதிடுவதை ஏன் இங்கு விபரீதம் என்கிறோம் என்றால் இந்த அறிவிப்பை வெளியிடுபவன் அல்லாஹ்தான்! அதற்கு மேற்கண்ட 4-158 வசனம் சாட்சியாக உள்ளது. இதை காதியாணிகளாகிய  நீங்கள் மறுக்கிறீர்கள் இப்படி மறுப்பதனால் அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் தன்மைகளாகிய வல்லமை மிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்பதனை தாங்கள் நிராகரிக்கிறீர்கள். இதுதான் அந்த விபரீதம்.

அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த வல்லமை இல்லை என்று கூறவருகிறீர்களா?

அல்லாஹ் தன்னை ஞானமிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த ஞானம் இல்லை என்று கூறவருகிறீர்களா?

அல்லாஹ்வுக்கு வல்லமையும் உண்டு, ஞானமும் உண்டு எனவேதான் தனது இரண்டு வல்லமைகளை சுட்டிக்காட்டி மனிதனால் சாதிக்க முடியாத இந்த காரியத்தை தான் சாதித்தாக கூறுகிறான். (அல்லாஹு அக்பர்)


விபரீதம் 2 (ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்து விட்டார்) என்பதற்கான பதில்

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை மேலும் இயற்கையாக இன்னும் மரணிக் கவுமில்லை என்று அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்! இதோ அந்த வசனம்


இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின்குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில்சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது;நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? அல்லது அவர் இயற்கையாக மரண மடைந்தார் என்றால் அதற்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது? காட்டவும்! இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று நீங்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு இதுபற்றிய எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக நீங்கள் மூடர்கள்தான் அதற்கான ஆதாரம் இதோ

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறினால் யுதர்களை பின்பற்றிவிடுவீர்கள்,

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறினால் கிருத்தவர்களை பின்பற்றிவிடுவீர்கள்

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி இயற்கையாகவே மரணித்து விட்டார் என்று கூறினால் அல்லாஹ்வை விட ஞானமிக்க வராகிவிடுவீர்கள்.
மேற்கண்ட இந்த மூன்றில் எந்த தத்துவத்தை பின்பற்ற போகிறீர்கள். அறிந்துக்கொள்க மேற்கண்ட 3 தத்துவத்தில் எந்த ஒன்றை பின்பற்றினாலும் அல்லாஹ்வின் லானத் (சாபத்திற்கு) ஆளாகிவிடுவீர்கள் என்று எச்சரிக்கிறோம்!

கேள்வி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மூமின் ஒரு முறைதான் படு குழியில் விழுவான் என்று கூறினார்கள். ஏற்கனவே இரண்டு பெரிய சமுதாயங்கள் இறைத்தூதர்களின் இரண்டாவது வருகையை எதிபார்த்து படுகுழியில் விழுந்து கிடக்கிறார்கள் அதைப் பார்த்திருந்தும் அதே தவறை இந்த மூட முல்லாக்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களை நாம் எப்படி மூமின் என்று சொல்ல முடியும்.

பதில்
ஒருவன் மூமின் என்பதற்கு அடிப்படை அடையாளம் அவன் படைத்த ரப்புல் ஆலமீனையும், இறுதித்தூதரான நபிகள் நாயகத்தையும் நம்புவதாகும். இந்த அடையாளம் நம்மிடம் உள்ளது ஏனெனில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்திக் கொண்டதாக அருள்மறையில் கூறுகிறான் அதை நாம் நம்புகிறோம் அதே நேரத்தில் இறுதி நபியாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈஸா நபி வானிலிருந்து இறங்கி வந்து தஜ்ஜால் என்ற கொடியவனை அழிப்பார் என்று கூறினார் அதையும் நாம் நம்புகிறோம். இந்த செய்தியின் மூலம் அல்லாஹ்வும் உண்மை கூறுகிறான் அவனது இறுதித்தூதரும் உண்மையை கூறுகிறார் இதனை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்! ஈஸா நபி வருவார் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா? இதோ
கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டுவருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்தநீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

கேள்வி
மிஹ்ராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் சந்தித்தார்கள் இரண்டாவது வானத்தில் இசா (அலை) அவர்களுடன் யோவான் (யஹ்யா) நபி பார்த்தார்கள். அங்கு யாருடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்கள் ஆன்மீக ரீதியாக உயிருடன் இருந்தார்கள். அனால் இந்த மூட முல்லாக்கள் இசா நபி மட்டும் வானத்தில் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

பதில்
அட அடி முட்டாள் காதியாணிகளே அல்லாஹ் விதித்த இந்த சோதனையில் சிக்கிவிட்டீர்களே, விரைவில் சுதாரித்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை என்பது உங்களுக்கு புரியவில்லையா? மிஹ்ராஜை நம்புவதுதான் அந்த சோதனை!

  • நபிகளார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றதும் உண்மை
  • அங்கு இறந்த நபிமார்களை கண்டதும் உண்மை
  • அங்கு உயிருடன் உள்ள ஈஸா நபியை கண்டதும் உண்மை

அறிந்துக்கொள்க மிஹ்ராஜ் எனும் பயணம் இந்த புமியில் நடைபெறவில்லை மாறாக விண்ணுலகத்தில் நடைபெற்றது புமியில்தான் மரணித்தால் சடலம் இருக்கும் விண்ணுலகத்தில் யாருடை சடலமாவது இருக்குமா? விண்ணுலகம் என்ன உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கப்ருஸ்தானா? சடலம் இருக்க!அல்லாஹ் நாடினால் இறந்தவரை உயிர்ப்பிப்பான், உயிருள்ள ஈஸா நபியை தன்னிடம் வாழவழிவகையும் செய்வான்!
உங்கள் முட்டாள்தனத்தி்ற்கு இதோ மற்றுமொரு ஆதாரம் முன்வைக்கிறேன் கீழு உள்ளதை படியுங்கள்

எத்தனையோ நபிமார்கள் மரணித்தார்கள் அவர்களை நபிகள் நாயகம் மிஹ்ராஜில் சந்தித்தார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் அதுபோலத்தான் ஈஸா நபியும் மரணித்த நிலையில் அங்கு இருந்திருப்பார் அவரை நபிகளார் சந்தித்திருப்பார்கள் என்று கூற வருகிறீரா? அட காதியாணிகள் எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள், உயிருன் ஈஸா நபியும் இருந்திருக்கிறார் என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும் போது பார்த்துள்ளார்கள் இதை மறுப்பீர்களா? புரியவில்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தில் விண்ணுலகில் உயிருடன் சென்று திரும்பியுள்ளார் எனும்போது ஈஸா நபியினால் ஏன் அந்த விண்ணுலகில் உயிருடன் வாழ இயலாது?

கேள்வி
நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறுகிறீர்களே இது கிறிஸ்தவ நடை முறை இல்லையா?
பதில்
இத்தகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கியாம நாள் வரை உலகில் உள்ள அனைத்து காஃபிர்களும் கூட கூறுவார்கள் ஆனால் காதியாணிகளாகிய நீங்கள் கூறமாட்டீர்கள் போலும்! காஃபிர்களுக்கு உள்ள அடிப்படை அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கூறும் அருள்மறை வசனம் (அல்லாஹ்வின் வார்த்தைகள்)

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாகஇருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்,நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்குர்ஆன்33:40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி முத்திரை என்று அல்லாஹ் கூறுகிறான் இதன் மூலம் யாரும் அவருக்குப் பின் நபியாக வரமாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது! இதோ இறுதி நபியின் இறுதிப்பேருரையின் கட்டளை

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத் தூதரும்) இல்லை.உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளை தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான (மார்க்க வரி) ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின்இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காக படைத்துள்ள கவனத்தில் நுழைவீர்கள்.…………………. (நூல்: முஸ்லிம்,திர்மிதி, அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)


காதியாணிகளே முத்திரை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாருடைய உள்ளங்களில் இறைநிராகரிப்புக்கான முத்திரை குத்தப்பட்டுவி்ட்டதோ அவர்களுக்கு இறுதி முத்திரை யைப் பற்றி எங்கே தெரியப்போகிறது! இதோ இதை அறிந்துக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும்முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.(அல்குர்ஆன் 2:7)

காதியாணிகளுக்கு எச்சரிக்கை
உண்மையை உணர மறுக்கும் காதியாணிகளே நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் கூறும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வாரும்!
இன்னும், (முஹம்மது (ஸல்) (என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும்கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2:23)
இது இயலாத காரியம் நீங்கள் பொய்யர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். உங்களுடைய குருட்டுத்தனமாக வாதம் எப்படி இருக்கிறதென்றால் இதோ இந்த அருள்மறை வசனத்தைத்தான் நினைவுட்டுகிறது!

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்?அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால்,எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக்கூறினார்கள். (14:10)

யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 19:75)

குறிப்பு
காதியாணிகளே அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் காபிர்களாக மரணித்து விடாதீர்கள்!
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்