Pages

Saturday, April 16, 2011

ஜமாஅதே இஸ்லாமி ஓட்டுக்காக சத்தியத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பு


ஜமாஅதே இஸ்லாமி : ஓட்டுக்காக சத்தியத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பு  
ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும்.

ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும்.

இஸ்லாமிய அரசை நிறுவுவது தான் இஸ்லாத்தின் இலட்சியம் என்ற கொள்கையின் மீது ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை முற்றிலும் தவறாகும்.

நாம் சத்திய இஸ்லாத்தைச் சொல்ல வேண்டும். அதன் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பெரும்பான்மை பெற்றால் அப்போது இஸ்லாமிய அரசு உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றால் அதில் நமக்கு மறுப்பு இல்லை.
ஆனால் ஆட்சியை உருவாக்குவது தான் இஸ்லாத்தின் ஒரே கொள்கை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

‘நான் இஸ்லாமிய அரசை உருவாக்கப் போகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்ததில்லை. மேலும் மறுமையை முன்னிறுத்தி இஸ்லாத்தின் பால் அழைத்தால் தான் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள். இஸ்லாமிய் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரகடணம் செய்து விட்டு அழைத்தால் ஆட்சி அமைப்பது தான் இவர்களின் திட்டமா? நம்மை ஆள்வதற்குத் தான் இஸ்லாத்துக்கு அழைக்கிறார்களா என்று கருதி அனேகமானோர் இஸ்லாத்துக்கு வருவதற்கு இது தடையாகி விடும் என்ற சாதாரண விஷயம் கூட இவர்களுக்குப் புரியவில்லை.

மேலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அபத்தமான கொள்கையைக் கையில் எடுத்ததால் எந்தப் பிரச்சனையை அதிகமான மக்கள் ஏற்க மாட்டார்களோ அந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.
சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக் கூடாது; சின்ன விஷயங்களைப் பேசக் கூடாது. அப்போது மக்கள் (பாவங்கள் செய்வதில்) ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தை வைத்தனர்.
இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறும் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி அமையும் போது எந்த அடிப்படையில் ஆட்சி அமைப்பார்கள்? மத்ஹபு அடிப்படையிலா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலா? பரேலவிக் கொள்கை அடிப்படையிலா? இவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று ஆட்சி அமைக்கும் போது எந்த முறையில் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று கூறுவார்களானால் அந்த வினாடியே சுக்கு நூறாகச் சிதறிப் போய் விடுவார்கள்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் ஆட்சி என்று அவர்கள் கூறினால் மதஹப் தரீக்கா வாதிகள் உடனே கைகழுவி விடுவார்கள். வணக்க வழிபாடுகளையே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக் கொள்ளாதவர்கள் எப்படி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆட்சி செய்வார்கள் என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.
நடக்காத ஒன்றைக் கூறி மக்களை மதி மயக்கத்தில் நாளை மறு நாள் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து விடும் என்ற போதையில் வைத்திருப்பது தான் இவர்களின் திட்டம் என்பது தெரிகிறது.

அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது.

குர்ஆனையும் நபிவழியையும் கடைப்பிடிக்குமாறு நாம் கூறி வருகிறோம். ஆனால் இவர்கள் பல இடங்களில் இந்த விஷயத்தில் வளைந்து கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் நபிமொழிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

குர்ஆன் ஹதீஸ் கூறும் நல்ல விஷயங்களை எடுத்துரைப்பது இவர்களின் நோக்கமல்ல. மக்களிடம் உள்ள எந்தப் பாவங்களை குர்ஆனும் ஹதீஸ்களும் கண்டிக்கின்றனவோ அந்த பாவங்களைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். அவற்றின் அபாயங்களை விளக்கி மக்களை எச்சரிக்க மாட்டார்கள். ஆனால் நம்மைப் போல் எச்சரிப்பவர்களை விமர்சனம் செய்யச் சளைக்க மாட்டார்கள்.

உதாரணமாக தர்ஹா வழிபாடுகள்> பித்அத்கள்> மத்ஹப்> அனாச்சாரங்கள் ஆகியவை தவறு என்று தெரிந்தும் இவற்றைப் பற்றி மக்களிடம் பேச மாட்டார்கள். மத்ஹப்களில் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று இவர்களுடைய அமைப்பின் நிறுவனர் மௌதூதி தனது மாலை அமர்வுகளில் என்ற வெளியீட்டிலும்> இது தான் இஸ்லாம் இரண்டாம் பாகத்திலும் எடுத்துக் காட்டியுள்ளார்.

சாதாரண அறிவு படைத்தவனுக்கே மத்ஹப் என்பது அபத்தம் என்பது விளங்குகிறது. ஆனால், இவர்கள் அப்பட்டமாக மத்ஹபை ஆதரிக்கின்றனர்.
சுருங்கச் சொல்வதென்றால் மக்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அதுவே இவர்களின் கொள்கை. மக்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவர்களும் வெறுப்பார்கள். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இவர்களும் விரும்புவார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பதை விட> அற்பா;களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்வதற்காக அபத்தங்களை கூட அங்கீகாpப்பா;.

மார்க்கத்தை நிலைநாட்டுங்கள் என்று கூறும் திருக்குர்ஆன் வசனத்தைக் சொல்லி மக்களை மாநாட்டிற்கு அழைப்பார்கள். ஆனால் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களில் இவர்களே முன்னோடியாகத் திகழ்வார்கள்.

இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வருவதற்காக இறைத் தூதர்கள் அனுப்பப்படவில்லை. இது இறைவனின் நோக்கமும் அல்ல. ஏகத்துவக் கொள்கையைப் போதிப்பதற்காகவும் அல்லாஹ் கூறிய அடிப்படையில் மக்களை வாழ வைப்பதற்காகவுமே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ(36)16
“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
அல்குர்ஆன் (16 : 36)

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்ததே அவனுக்குக் கட்டுப்பட்டு அவன் கூறியவாறு வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51
ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன் (51 : 56)

இவ்வாறு இஸ்லாத்தை> ஏகத்துவக் கொள்கையை உறுதியாகப் பிரச்சாரம் செய்யும் போது> அது அதிகமான மக்களை ஈர்த்து பெரும்பான்மையாக மாறினால்> அப்போது ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்லாமிய ஆட்சி அமையாது.

நபிமார்களீல் மிகச் சிலர் தான் உலகில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். பல நபிமார்கள் உலகில் வெற்றி பெறவில்லை. ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என்ற கணக்கில் கூட நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. சில நபிமார்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். எனவே இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது இஸ்லாத்தின் கொள்கையாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை.

இந்த நச்சுக்கருத்து காரிஜிய்யாகளினதும்> ஷீயாக்களினதும் கொள்கையாக இருந்தது. அதனால் முஸ்லிம்களே முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நச்சுக் கருத்து தலை எடுக்காததால் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் தம்மைத் தாமே வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்படவில்லை.

செத்துப் போன இந்தக் கொள்கையை இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகா; ஹஸனுல் பன்னாவும்>  மவ்தூதியும் மறு உயிர் கொடுத்த பிறகு தான் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதாகச் சொல்லிக் கொண்டு முஸ்லிம்களே முஸ்லிம்களைக் கொலை செய்யும் முஸீபத் மீண்டும் தலை எடுத்தது.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் சொல்வது சரியான கருத்து என்றே வைத்துக் கொள்வோம். ஆட்சி அமையும் வரை இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா? ஆட்சி தான் இலட்சியம் என்று ஆன பின் அதற்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக வளைந்து கொடுப்பது மட்டுமே இவர்களின் ஒரே கொள்கையாகிப் போனது.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத போதும் நமது சக்திக்கு உட்பட்ட எத்தனையோ விஷயங்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் அல்லாஹ்வை வணங்க முடியும் என்ற நிலை தற்போது இல்லை.

தன் சக்திக்கு உட்பட்டு அல்லாஹ்வை முறைப்படி வணங்குவதற்கு வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தினர் பயன்படுத்துவதில்லை.
பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களை உண்மை முஸ்லிம்களாக மாற்ற முயற்சிப்பதில்லை. நபிகளாh; தொழுத தொழுகையை இவா;களிடம் காண முடியாது. நபிவழித் திருமணமும் இவா;களுக்கு வெகு தூரம். ஸூன்னா விரோதச் செயல்கள் இவா;களுக்கு பொருட்டே இல்லை. சமூக ஒற்றுமைக்காக இணைவைப்பு எனும் மா பாதகத்தை கூட அங்கீகாpக்கும் அரை குறைகளே இவா;கள்.

இந்நிலையில்  இஸ்லாமிய ஆட்சியை இவர்கள் கொண்டு வரப் போகிறார்களாம்.
இப்படிப்பட்ட கொள்கையற்ற கூட்டத்தால் உருவாக்கப்படும் இஸ்லாமிய ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படும் அனைத்தையும் வளைந்து கொடுக்காமல் வீரியமாக யார் பிரச்சாரம் செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்களோ அவர்களாலேயே உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும்.

وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِي الصَّالِحُونَ(105)21
ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்” என்று எழுதியிருந்தோம்.
அல்குர்ஆன் (21 : 105)

ஏகத்துவக் கொள்கை உள்ளவர்களால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم  فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمْ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ  مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمْ الْفَاسِقُونَ(55)24
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும் அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும் அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் (24 : 55)

நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வீரியத்துடன் மக்களுக்குப் போதனை செய்தார்கள். குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு வாழும் உண்ணதமிக்க சமுதாயத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். தானாக இஸ்லாமிய ஆட்சி அமைந்தது. 

நபி (ஸல்) அவர்கள் சென்ற அதே வழியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த பாதையில் வீரியத்துடன் முழு முயற்சியையும் செலுத்தி பாடுபடும் போது இறைவன் நாடினால் இஸ்லாமிய ஆட்சி அமையும்.
இந்த வழியை விட்டுவிட்டு> ஸூன்னாக்களுக்கு புதை குழி வெட்டி இணைவைப்புக்கு ஜால்ரா போட்டு> இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என்று வெறுமனே கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தால் கண்டிப்பாக இஸ்லாமிய ஆட்சி அமையாது. சமுதாயம் சீரழிந்து நாசமாகி விடும். இந்த தவறான பாதையிலே ஜமாஅத்தே இஸ்லாமீ பயணித்துக்கொண்டிருக்கின்றது.
நன்றி: அழைப்பு இதழ்

அபாண்டங்களா? அடுக்கடுக்கான ஆதாரங்களா?



விமர்சனக் கேள்வி.

ஜனவரி அழைப்பு இதழில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையை இலக்கு வைக்கும் ஷீயாக்கள்’ என்ற ஆக்கம் பொய்களையும் அபாண்டங்களையும் அடிப்படையாக வைத்து காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு கட்டுரையாகவே அமைந்திருந்தது. சில பித்அத்துகளில் மட்டும் முரண்படும் ஷீயாக்களை காபிர்கள் போன்று சித்தரித்துஇஸ்லாமியப் பணியில் மும்முரமாக செயற்படும் நளீமிக்களை ஷீஆக்களோடு தொடர்பு படுத்தி,இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி,இக்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கத்தினரை ஷீஆவாதிகள் போன்று சித்தரித்து அவதூறுகளை அள்ளிவீசியிருக்கும் உங்கள் எழுத்து கண்டிக்கத்தக்கது.மனதில் தோன்றியதையெல்லாம் வாந்தியெடுக்காமல் தன் எழுத்துக்கான சான்றுகளுடன் இதன் பிறகாவது எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

முஹம்மது ஹலீம் - மாவனல்லை.


பதில்.

நமது ஜனவரி இதழில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையை இலக்கு வைக்கும் ஷீஆக்கள்’ என்ற ஆக்கம் தொடர்பான உங்கள் மன உளைச்சலின் வெளிப்பாடே மேற்குறித்த விமர்சனம். ஓன்றை எழுதும் போது அது குறித்த சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை அறிந்த உங்களுக்கு ,ஒன்றை விமர்சிக்கும் போதும் அது குறித்த அறிவை தான் பெற்றிருப்பது அவசியம் என்பதை வாசகர் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஈரானின்அமெரிக்க - இஸ்ரேல் எதிர்ப்புணர்வுசர்வதேச ஒற்றுமை குறித்த அஹ்மது நஜாதின் கருத்துக்கள்இஸ்லாமிய கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் எழுத்தோவியங்கள்வறிய முஸ்லிம் நாடுகளுக்கான உதவிகள்,ஈரானின் அணு ஆயுத பலம் போன்ற சில புறத்தோற்றங்களை மட்டும் காணும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஈரான் ஓர் இஸ்லாமிய தேசம் என்றும்அதன் ஆட்சியாளர்களும் ஆன்மீகத் தலைவர்களும் மிகப் பெரும் இஸ்லாமிய வாதிகள்அங்கு ஆட்சிபீடத்தில் இருக்கும் ஷீயாயிஸம் இஸ்லாத்தின் ஒரு பகுதி தான் என்றும் கருதுகின்றனர்.

உண்மையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை நாம் புறத்தோற்றங்களையும்வெளிப்பகட்டையும் வைத்து சரிகாணக்கூடாது. அதன் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸ_ன்னா எனும் உரைகற்களின் மூலம் உரசிப்பார்த்தே ஓர் இயக்கத்தை சரிகாணுதல் வேண்டும். ஷீயாக்கள் என்போர் யார்அவர்களின் கொள்கைகள் என்னஎன்பதை நன்கு அறிந்த எந்தவொரு முஸ்லிமும் அவர்களை ஆதரிக்க மாட்டான். அப்படித்தான் ஆதரித்திருந்தாளும் தன் நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொள்வான். வினா தொடுத்த வாசகர் ஷீயாக்களின் கொள்கைகளை புரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் குறித்த மிகவும் சுறுக்கமான அறிமுகத்தை இங்கே தருவது பொருத்தமென்று கருதுகிறோம்.

ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளில் சில:

கிலாபத் பற்றிய கோட்பாடு:

ஒவ்வொரு நபிக்கும் ஒரு வாரிசும் பிரதிநிதியும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் வாரிசும் பிரதிநிதியும் அலியாவார்.

 நபிக்குப் பின் ஆட்சி அலிக்கே சொந்தம். அபூபக்கர்உமர்உஸ்மான் ஆகியோர் அதனை பறித்துக் கொண்டனர். இவர்கள் மீது அல்லாஹ்,மலக்குமார்கள்அனைத்து மக்களினதும் சாபம் உண்டாவதாக.  (நூல்: அல் காபிபாகம்: 08, பக்கம்: 245)

நபித்துவம் பற்றிய கோட்பாடு:

முஹம்மது (ஸல்) அவர்களைவிட அலியே நபித்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர்: சிறந்தவர்.

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்.(நூல்: அல் புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன். பாகம்: 04, பக்கம்: 226)

அல் குர்ஆன் பற்றிய கோட்பாடு:

நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் கொண்டு வந்த குர்ஆன் 17 000 வசனங்களை உடையதாகும். (நூல்: அல் காபிபாகம்: 02,பக்கம்: 463)

இறக்கப்பட்டது போல் முழுக்குர்ஆனையும் தான் ஒன்று சேர்த்ததாக எவன் வாதிடுவானோ அவன் பொய்யனாவான்.(நூல்: அல்காபிபாகம்: 01, பக்கம்:228)

அல் ஹதீஸ் பற்றிய நிலைப்பாடு:

 அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி என்பவரால் எழுதப்பட்ட உஸ_லுல் காபி’ என்ற நூலை மட்டுமே ஆதார நூலாக கொள்வர். புகாரிமுஸ்லிம் உட்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களையும் ஏற்க மறுப்பர்

ஸஹாபாக்கள் பற்றிய நிலைப்பாடு.

மிக்தார் இப்னுல் அஸ்வத்அபூதர் அல்கிபாரிஸல்மானுல் பாரிஸி ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.(நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபிபாகம்: 08, பக்கம்: 245

அல் காயிம் வந்து ஆயிஷாவை திரும்ப எழுப்பி அவர்களை சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.(நூல்: தப்ஸீர் ஸாபிபாகம்: 02, பக்கம்: 108)

12 இமாம்கள் பற்றிய கோட்பாடு:

12 இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது எமது கொள்கையாகும். ஏனெனில் 12 இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷ_க்கு அடியில் இருந்தார்கள்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.(ஆசிரியர்;: இமாம் குமைனிநூல்: விலாயதே பகீஹ் தர் குஸ_ஸே ஹ_கூமதே இஸ்லாமிதஹ்ரான் வெளியீடு. பக்கம்:58)

முத்ஆ எனும் விபச்சாரத் திருமணம் பற்றிய கோட்பாடு:
  
 கூலி கொடுத்து வாடகைப் பெண்ணுடன் எவராவது ஒரு முறை உடலுறவு கொண்டால் நரகத்தை விட்டும் 13 பங்கு உரிமை சீட்டைப் பெற்றுக் கொண்டார். இரு முறை உறவு கொண்டால் மும்மடங்கு நரக வேதனை உரிமை சீட்டை பெற்றுக் கொண்டார். மூன்று முறை உறவு கொண்டால் பூரணமாக நரகை விட்டும அவன் விடுதலை பெறுகின்றான். (நூல்: அஷ்ஷீயா வ அஹ்லுல் பைத்பக்கம்: 218)

தர்ஹாக்கள் பற்றிய கோட்பாடு:

_ஸைன் (ரலி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட 100ஹஜ்ஜூகளுக்கும்ஏற்றுக் கொள்ளப்பட்ட 100 உம்ராவுக்கும் சமமானதாகும். (நூல்: அல் இர்ஷாத்பக்கம்: 252)

யார் ஹ_ஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் இர்ஷாத்பக்கம்: 252)

ன்னிகள் பற்றிய கோட்பாடு:

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும்,கற்கள்மணல்கள்மரங்கள்முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாளும் அவை பதியப்படுவதில்லை என்று 8வது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டார். (நூல்: உயூனு அக்பாரிர் ரிழாபாகம்: 02, பக்கம்: 236)

இவை ஷீயாக்களின் சீர்கெட்ட சிந்தனைகளிலிருந்து சில நச்சுத் துளிகள் மட்டுமே. இப்போது கூறுங்கள்: அல்லாஹ்வின் பண்பை அலிக்கு வழங்கியவர்கள்அலியை அல்லாஹ்வாக்கியவர்கள்நபிகள் நாயகத்தை குறை கண்டவர்கள்அல்குர்ஆனை நம்ப மறுத்தவர்கள்ஹதீஸ்களை புறக்கணித்தவர்கள்சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர்உமர்,உஸ்மான் (ரழி) ஆகியோரை காபிர்கள் என்று கூறியவர்கள்இறை விசுவாசிகளின் அன்னையரும் அண்ணலாரின் அருமை மனைவியருமான ஆயிஷாஹப்ஸா (ரழி) போன்றோரை வேசிகள் என்று முழங்கியவர்கள்,தங்கள் இமாம்களை நபியை விடமலக்கை விட உயர்வாகக் கருதுபவர்கள்ஒட்டுமொத்த ஸஹாபா சமூகத்தையும் காபிர்கள் என்பவர்கள்நபிகளார் இடிக்கச் சொன்ன கப்ருகளை(தர்ஹாக்களை) வழிபடும் இடமாக எடுத்துக் கொண்டவர்கள்அடுத்தவன் மனைவியை பங்கு வைத்துக் கொள்ளும் விபச்சாரக் கலவியை சுவனச் செயலாக பிரகடணப்படுத்திய காமுகர்கள்  எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்

இவ்வளவு ஈனத்தனமான கொள்கைகளை கொண்டவர்களை எந்த அடிப்படையில் நேர்வழியில் சேர்க்க முடியும்இவர்களை எப்படி ஓர் உண்மை முஸ்லிம் அங்கீகரிக்க முடியும்அவர்களோடு எப்படி நேசம் கொள்ள முடியும்இக்கேடுகெட்ட கொள்கை அரசோட்சும் இராச்சியத்தை எப்படி இஸ்லாமிய குடியரசாக நாமம் சூட்ட முடியும்இத்தகைய வழிகேடர்களை எப்படி எமது மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மேடையேற்ற முடியும்??

இவ்வளவு வழிகேடான ஒரு கொள்கையை ஒருவன் அல்லது ஓர் இயக்கம் ஆதரித்தால்அவர்களுக்கு சார்பாக தம் எழுத்துக்களையும் நாவன்மையையும் பயன் படுத்தினால் அவன் அல்லது அவ்வியக்கம் நேர்வழியில் உள்ளதாவழிகேட்டில் உள்ளதா?

இன்று இலங்கையில் செயற்பட்டு வரும்இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் (DA, MFCD) போன்ற இயக்கத்தினர் இவ்வழிகெட்ட ஷீயாயிஸத்தை ஆதரிப்பதை பார்க்கிறோம். ஷீயாயிஸத்தை தம் இயக்கப் பெயர்களின் ஊடாக வாந்தியெடுப்பதை பார்க்கிறோம். ஈரானில் ஆயத்துல்லா கொமைனியினால் தோற்றுவிக்கப்பட்ட ஷீயா புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்து,வழிகேடன் கொமைனியை இஸ்லாத்தை காக்க வந்த ஈமானிய புருஷராக உருவகப்படுத்தி இலங்கை நாட்டுக்குள் முதன் முதலாக ஷீயாயிஸத்தை விதைத்து வேரூன்றச் செய்து ஈமானுக்கு வேட்டு வைத்த பெருமைஇலங்கையில் கிலாபத் கனவில் சஞ்சரிக்கும் ஜமாஅதே இஸ்லாமிக்கே உரியது. ஈரானின் ஷீயா புரட்சியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக ஈரான் மக்கள் புரட்சி’ என்ற நூல் காலம் சென்ற  S.M.மன்சூர் அவர்களால் 1979ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே ஷீயாயிஸத்தை அறிமுகப்படுத்திய முதல் நூல்.
                                               

ஷீயாக்கள் குறித்த ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் கூட அவர்களை ஆதரிப்பதாகவே உள்ளது. ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வான்கள் பெரிதாக போற்றும் நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர் என்று சிலாகிக்கப்படும் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து வெளியிட்ட பேட்டியை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் 2008 ஒக்டோபர் இதழ் ஷீஆக்கள் பற்றி யூசுப் அல் கர்ளாவி என்ன சொல்கிறார்?’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தது.கர்ளாவியின் கருத்தை தமது இதழில் வெளியிட்டதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் இது தான் என்பதை மீண்டும் ஒரு முறை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

இப்பேட்டியில் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து கூறும் போது கடும் போக்காளர்கள் கூறுவது போன்று நான் அவர்களை (ஷீஆக்களை) நிராகரிப்பாளர்கள் என்று கூற மாட்டேன்.அவர்கள் முஸ்லிம்கள்.எனினும், (அஹ்லுஸ்ஸ_ன்னாவின் கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளை உடைய) பித்அத்வாதிகள்’… ‘இவர்கள் பகிரங்க குப்ரில் இருப்பதாகவோ,இஸ்லாத்துக்கு வெளியில் சென்றுவிட்டதாகவோ நாம் கூறுவதில்லை.
அலியை கடவுளாக்கிஅல்லாஹ்வை இழிவு படுத்தி,நபிகளாரை மறுத்து,புனிதக் குர்ஆனை குறைகண்டுஹதீஸ்களை நிராகரித்துஸஹாபாக்களை காபிராக்கிவிபச்சாரத்தை ஹலாலாக்கிய வழிகேட்டுக் கும்பலை முஸ்லிம் என்பதாமுஷ்ரிக் என்பதாஅவர்கள் செய்தது பித்அத்தாஷிர்க்காகர்ளாவி மற்றும் ஜமாஅதே இஸ்லாமியினரின் பார்வையில் ஷீயாக்களும் முஸ்லிம்கள் என்றால் உங்கள் கிலாபத் ஆட்சியில் அலி தான் நபியா?உங்கள் சமூக உருவாக்கத்தில் விபச்சாரம் ஹலாலாஉங்கள் சாம்ராஜ்ஜியத்தில் தர்ஹாக்களுக்கு என்றும் அங்குரார்ப்பண விழாவா?ஈமானை பறிக்கும் இத்துணை வழிகேடுகளும் உங்கள் பார்வையில் சில்லறை என்றால் எதுதான் உங்கள் ஆட்சியில் பெரியது?

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மட்டுமன்றி இந்திய ஜமாஅதே இஸ்லாமியும் ஷீயாக்களின் விசிரிகள் தான் என்பதற்கு இந்திய வெளியீடான சமரசம் 1 – 15 மார்ச் - 1999ம் அன்று பிரசுரிக்கப்பட்ட பின்வரும் புகைப்படம் தக்க சான்றாகும். ஜமாஅதே இஸ்லாமியின் மாநாட்டில் ஷீயாக்களோடு கைகுழுக்கும் இந்திய ஜமாஅதே இஸ்லாமி தலைவர் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைவர்கள் ஒன்றாக நிற்பதையும்அவர்களுக்கிடையிலான உறவுப் பாலத்தையும் இப்படம் சித்தரித்துக் காட்டுகின்றது.
                                                          

இதுபோகநளீமிக்கள் என்போர் ஏதோ இஸ்லாமியப் பணியில் கரைகண்டவர்கள் என்றும் அவர்களுக்கும் ஷீயாக்களுக்கும் தொடர்பில்லை என்றும் விமர்சித்திருந்தீர்கள். இலங்கையில் ஷீயாக்களின் வளர்ச்சியில் நளீமீக்களுக்கு பாரிய பங்கு உண்டு என்பதற்கு பின்வரும் புகைப்படங்கள் சான்றாகும். தஃவா களத்தில் பிரகாசிக்கும் பல நளீமீக்களும் வேறு சில குர்ஆன் ஸ_ன்னா போர்வையில் செயற்படும் பிரசாரகர்களும் ஷீயாக்களின் வெளியீடுகளுக்கு அணிந்துரை வழங்கிஅவற்றின் விற்பனைக்கு துணைபோவதனையும்ஷீயாயிஸத்தின் வளர்ச்சிக்கு பசலையாக மாறுவதனையும் இப்புகைப்படங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன:






நூல்: இஸ்லாமிய உலகும் சவால்களும்
ஆசிரியர்: S.H.மவ்லானா 
வெளியீடு: மிலேனியம் கல்வி ஸ்தாபனம்
அணிந்துரை: அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி MA ஆசிரியர் மீள்பார்வை பத்திரிகை)







நூல்: பாலியலும் பருவ வயதும்
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்(நளீமி,பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நழீமிய்யா கலாபீடம்)





நூல்: மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?’
ஆசிரியர்:  அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: DR.மரீனா தாஹா ரிபாய்
MBBS(Cey), ஸ்தாபகர்: அல்முஸ்லிமாத் மாதர் அமைப்பு.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஓர் உண்மையை புலப்படுத்துகின்றன: இலங்கையில் ஷீயாக்களை திட்டமிட்டு வளர்க்கும் பணியில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று தம்மை பெருமை பாராட்டிக் கொள்ளும் ஜமாஅதே இஸ்லாமி,இஹ்வான்கள் போன்ற ஜமாஅத்துக்கள் பின்புலத்தில் இருப்பதோடு,நளீமிக்களும் ஷீயா வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதுவும் வெள்ளிடை மலை. 

நாம் இவர்களை அம்பலப்படுத்துவது காழ்ப்புணர்ச்சியில் அல்ல,சமுதாயத்தை இவர்களின் சதிகளில் இருந்து காப்பதற்காகவே என்ற உண்மையை வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.

 (குறிப்பு - இவா்களைப் பற்றிய இன்னும் பல தகவல்கள் நம்மிடம் உள்ளன தேவைப்படும் போது வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.)

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் அரபுப் பணம்!


அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் அரபுப் பணம்!









ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: கஅப் இப்னு இயால்- நூல்: திர்மிதி – 2258

இஸ்லாத்தின் ஏகத்துவ எழுச்சி நாதம் இலங்கை நாட்டில் எதிரொலிக்கத் துவங்கி சுமார் 6 தசாப்தங்கள் கடந்து விட்டன. நாம் கடந்து வந்த பாதையின் ரணச் சுவடுகளை ஒரு கணம் சற்று நிதானித்து நின்று பின்னோக்கிப் பாருங்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் இறைமறுப்பிலும் இணைவைப்பிலும் இமாலயச் சிகரத்தின் விளிம்பில் கைகோர்த்து இணைந்திருந்த காலம் அது. கற்களை நட்டி முக்திபெற முனைந்த மூடச் சமூகத்துடன் இணைந்து, கப்ருகளை கட்டி மோட்சம் பெற முனைந்தனர் எம் முன்னோர். வல்லோன் அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் வாழ்வாதாரப் பிச்சை வேண்ட கடமைப்பட்டவர்கள் வலீ என்றும் மகான் என்றும் மரணித்து மண்ணோடு உக்கிப்போன, இறை உத்தரவாதமற்ற ஊதாரிகளிடம் மடிப்பிச்சை ஏந்த ஆரம்பித்தார்கள். ஜோசியம் என்றும் சூனியம் என்றும் உளரிக்கொண்டு தலைப்பாகைக்குள்ளும் தாடிக்குள்ளும் மறைந்திருந்து மார்க்கத்தை விற்று வயிறு வளர்த்த பெயர் தாங்கி முஸ்லிம் பூசாரிகளிடம் தம் பகுத்தறிவை அடகு வைத்து சுயமரியாதை இழந்தனர்.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் வஹியின் வெளிச்சத்தில் எடுத்துரைக்க வேண்டிய உலமாக்கள், வழிகேட்டுக்கு பாதை காட்டும் களங்கரை விளக்குகளாக விஷ்பரூபம் எடுத்திருந்தனர். வணக்கம், வழிபாடு, திருமணம், கருமாதி, பிள்ளைப்பேறு, வாணிபம், சமூக உறவுகள், பண்பாடு, பழக்கவழக்கம் என்று அத்துனை துறைகளும் தூய இஸ்லாத்தை விட்டும் தூர விலகியிருந்த காலமது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இம்மியளவும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற அளவுக்கு வழிகேட்டுச் சிந்தனைகள் கோலோட்சிய தருணத்தில் தான்:தூய இஸ்லாத்தின் உண்மைச் செய்திகளை வஹியின் வழியில் மக்களுக்கு எடுத்துரைக்கும் கொள்கை கோமான்கள் உதயமாகத் தொடங்கினர். ஏகத்துவ தந்தை இப்ராஹிம் நபியின் சரிதத்தில் ஆர்ப்பரித்து எழுந்த அதே அசத்தியக் குரல்கள் இக்கொள்கை கோமான்களின் ஏகத்துவ போராட்ட வாழ்விலும் எதிரொலிக்கத் துவங்கியது.

பணம், பதவி, பட்டம், அதிகாரம் என்ற அத்துனை ஆயுதங்களையும் கோர்வை செய்து அசத்திய வாதிகள் கொள்கை வாதிகளை எதிர்க்க முற்பட்டனர். ஓரிறைவனை வணங்கு என்று ஓங்கியுரைத்த குரல்வளைகள் ஒரேயடியாக நசுக்கப்பட்டன. அடியும் உதையும் எல்லை கடந்தன. வசைமொழியும் வீண் பழியும் வந்து குவிந்தன. ஸ_ன்னாவை நிலை நாட்ட நீட்டப்பட்ட சுட்டு விரல்கள் தஷஹ்ஹ_தில் வைத்தே நெட்டி முறிக்கப்பட்டன. பின்பற்ற வேண்டியது குர்ஆன் ஸ_ன்னாவை மட்டும் தான் என்று மக்களை தட்டியெழுப்ப முனைந்தவர்கள் குண்டர்களால் எட்டி உதைக்கப்பட்டனர். சமூகத்தை விட்டும் தட்டிக் கழிக்கப்பட்டனர். அல்லாஹ்வை துதிக்கும் இறையில்லங்களில் கொள்கை வாதிக்கு கதவடைப்பு. மார்க்கம் பேசும் ஜம்மியதுல் உலமாவில் மத்ஹபை எதிர்த்ததற்காய் தடையுத்தரவு. தர்ஹாவை தரைமட்டமாக்கு என்ற தூதர் மொழியை எடுத்துச் சொன்னதற்காய் மையவாடிகளில் உறுப்புரிமை ரத்து.

இப்படி, இந்தக் குர்ஆன் ஸ_ன்னா என்ற ஏகத்துவ கொள்கையின் எழுச்சிக்காய் எதையெல்லாம் இழக்க முடியுமோ அனைத்தையும் இழந்தனர். தியாகத்தினதும் அர்ப்பணிப்பினதும் அறுவடை தான் இன்று நானும் நீங்களும் ஏந்தியிருக்கும் ஏகத்துவ தீபம். அன்று அசத்தியத்தின் அராஜகத்துக்கு மத்தியிலும் கொள்கையில் குழையாது, வழிகேட்டோடு வளைந்து போகாது எடுப்பாக நின்று பிரச்சாரம் செய்த உத்வேகத்தை இன்று காண முடிகிறதா? பள்ளிகளின்றி, பாடசாலைகளின்றி, வீட்டுத் திண்ணையிலும், முற்ற வெளியிலும் கொள்கை பேசிய போது இருந்த கொள்கை பிடிப்பை ஏன் இன்றைய நமது தாஈக்களிடம் காண முடியவில்லை? ஸ_ன்னா என்றால் அதை உயிரிலும் உயர்வாய் மதித்தவர்களின் வாரிசுகள் இன்று கொள்கையற்ற கோமாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி, கொள்கையில் சமரசம் செய்யும் இயக்கவாதிகளின் மேடையில் சிறப்பு அதிதியாய் ஏறி, சறுக்கல் பாதையில் பயணிப்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? நபி வழியில் தொழுவதற்கு மஸ்ஜிதுகளில் தடைவிதிக்கப்பட்ட அன்றைய எகத்துவ வாதிகளின் இன்றைய பரம்பரை, ஸ_ன்னாக்களை கிள்ளுக் கீரையாய் கருதும் கபோதிகளுக்கும், பித்அத் வாதிகளுக்கும் மஸ்ஜித் கட்டி இறையில்லங்களை தாரைவார்த்து எப்படி பாழ்படுத்த முடியும்?

இத்துனை வினாக்களுக்கும், எம் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்குமான ஒரே பதில்: எம்மிடம் அளவு கடந்து வந்து குவிந்த பணம்! பணம்!! பணம்!!! ஆம், அல்லாஹ்வின் தூதர் எதனை இந்த உம்மத்துக்கான சோதனை என்று முன்னறிவிப்புச் செய்தார்களோ அது எம் விடயத்தில் நிறைவேறியிருப்பதை பார்க்கிறோம். வெளிநாட்டு அரசுகளினதும், நிறுவனங்களினதும் ஊடாக இலங்கை வாழ் ஏகத்துவ வாதிகளுக்கு திறந்துவிடப்பட்ட செல்வ வாயில் எம் சொந்த தியாகங்களை விட்டும் எம்மை திசைமாற்றச் செய்தது. கஷ்டங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும்  மனோவலிமையை இழக்கச் செய்து சொகுசாக வாழும் இழி உணர்வை எம் மனங்களில் விதைக்கலானது. பணத்தின் மூலம் பதவிகள் வந்து குவிந்தன. கிடைத்த பதவியை காப்பதற்காய் கொள்கையை கூட தாரைவார்க்க எம் தாஈக்கள் தயங்கவில்லை. மிம்பர் மேடையில் ஒர் உரை கிடைப்பதற்காய் கூட்ட துஆ ஓதும் ஸ_ன்னா விரோதிகளாய் நிறுவனத் தொண்டர்கள் நிறம்மாறியிருக்கிறார்கள். சத்தியத்தை உடைத்துச் சொன்னால் பதவிக்கு ஆபத்து என்பதற்காய் அடக்கி வாசிக்கும் அங்கவீன நிலைக்கு எம் அழைப்பாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

சத்தியத்தை எங்கு சொல்வது? எப்படி உடைத்துச் சொல்வது? தர்காவை எப்படி ஒழிப்பது? கொள்கை பற்றை எப்படி வளர்ப்பது? என்பதை சிந்திப்பதற்கு பதிலாக, கிணறை எங்கு தோண்டுவது? தண்ணீர் குழாய் எங்கு பொறுத்துவது? மஸ்ஜிதை பித்அத் வாதிகளுக்கு எப்படி கட்டிக் கொடுப்பது? என்கிற ரீதியில் சிந்திக்கும் சமூகமாக எம் ஏகத்துவ சமூகம் மாறிவிட்டது. அழைப்புப் பணியை விட வசூலை அள்ளித்தரும் சமுதாயப்பணிகள் முதலிடத்துக்கு வந்துவிட்டன. பணம் கிடைத்தால் மட்டும் மார்க்கம் பேசும் pசநியனை தாஈக்கள் ஏராளம் உருவாகியிருக்கிறார்கள். பணம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் கூட்டம் முன்பை விட பன்மடங்கு பெருகியுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அரபுப் பணத்தின் வருகையால் தஃவா அதன் உண்மையான உயிர்த்துடிப்பை இழந்து கொள்கை உறுதியற்ற கோமாளிகளின் கைகளில் சிக்கித்தவிக்கிறது.

இந்நிலை மாறி மீண்டும் சொந்த தியாகத்துடன் கூடிய ஓர் ஏகத்துவ புரட்சி மலர வேண்டும் என்பதை இலக்காக வைத்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்பட்டு வருகிறது. சத்தியத்தை உடைத்துச் சொல்வதை மட்டும் நோக்காகக் கொண்ட எம்மோடு இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்கின்றோம். தனித்துவ வழியில் தடம் பதித்து, தவ்ஹீதை உரத்துச் சொல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!


ஹெம்மாதகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி




ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் தான் இலங்கையில் ஷீயா சிந்தனை பரவுவதற்கு துணையாக இருக்கிறார்கள் நாம் சொல்வதும் , அழைப்பு பத்திரிக்கையில் எழுதியுள்ளதும் பொய்யான , தவறான செய்தி என்றால் அதே பத்திரிக்கையில் ஜமாத்தே இஸ்லாமிக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதனை அவா்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்ற சவாலும் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About the Author