வெள்ளை ஆடையும் காவி ஆடையும்
ஆடைகளில் சிறந்து
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெண்மையானஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள்ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும்வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.''
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதி (915)
ஆடைகளில் தூய்மையானது
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُم رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத்தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.''
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுýன்துப் (ரலி), நூல் : திர்மிதி (2734)
காவி இறைமறுப்பாளனின் ஆடை
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبَرَهُ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது '' இதுஇறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.''
அறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (4218)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ أَأُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ''உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்?'' என்று கேட்டார்கள். நான் ''இதைதுவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?'' என்று கேட்டேன். நபியவர்கள் ''இல்லை அதைஎரித்து விடு'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (4219)
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்