சிரியாவில் மோதல்கள் உக்கிரமடைந்துவரும் சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 300 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கப் படையினராலேயே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சிரியப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களின் படி கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் ஆவர்.
மேலும் சிறுவர்கள் பலர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அசாத் அரசாங்கத்தின் இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கு உலகநாடுகள் பல தங்களது கண்டனத்தினை வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அரச ஆதரவுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் இதுவரை 21 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் உலக நாடுகள் தோல்வியைத் தழுவியுள்ளன.

