Pages

Tuesday, September 27, 2011

செருப்பணிவதின் ஒழுக்கங்கள்.





செருப்பணிதல் 
                                                   (தொடர் 6)
வலது புறமாக ஆரம்பித்தல்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ رواه البخاري
''நபி (ஸல்அவர்கள் உளூச்செய்யும் போதும்தலைவாரிக் கொள்ளும் போதும் ,காலணி அணிந்து கொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்துதொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.'' 
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி ‏(5854)

இடது புறமாகக் கழற்ற வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِيَكُنْ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ رواه البخاري
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் '' நீங்கள் செருப்பணியும் போது முதலில் வலதுகாலில் அணியுங்கள்அதைக் கழற்றும் போது முதலில் இடது காலில் இருந்துகழற்றுங்கள்வலது காலே அணிவதில் முதலாவதாகவும் கழற்றுவதில்இறுதியாகவும் இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி)நூல் : புகாரி (5856)
(ஒற்றைக் கால்) ஒரு செருப்பில் நடப்பதற்குத் தடை
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا رواه البخاري
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் '' நீங்கள் ஒரே ஒரு செருப்பில் நடக்கவேண்டாம்ஒன்றுஇரு செருப்புக்களையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள்.அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் 
அறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி),  நூல் : புகாரி (5856)
காலணியுடன் தொழுவதற்கு அனுமதி
عَنْ سَعِيدٍ أَبِي مَسْلَمَةَ قَالَ سَأَلْتُ أَنَسًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ رواه البخاري
நான் அனஸ் (ரலிஅவர்களிடம் '' நபி(ஸல்அவர்கள் தம் காலணிகளுடன்தொழுது வந்தார்களா?'' என்று கேட்டேன்அவர்கள் '' ஆம் (தொழுது வந்தார்கள்)என்று சொன்னார்கள்
அறிவிப்பாளர் : சயீத் அபூ மஸ்லமா (ரலி)நூல் : புகாரி (5850)

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்