யார் இந்த யஹ்யா சில்மி
இலங்கை யஹ்யா சில்மி என்பவர் குறித்து பலரும் அடிக்கடி கேள்வி கேட்டு வருகின்றனர்.
அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த சகோதரர் அல்தாஃப் இது குறித்து எழுதியதை பதிலாகத்
தருகிறோம் :
அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கையில் ஒரே ஜமாஅத் ஆக இருந்த தவ்ஹீத் குரான் மற்றும் சுன்னாஹ் இதுவே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இலங்கையில் உள்ள ஆரம்ப தவ்ஹீத் வாதிகளைக் குறைவாக மதிப்பிட்டு எழுதும் நோக்கம் எனக்கில்லை. சில உண்மைகளை மக்ககளுக்கு முன் வைக்க வேண்டும் என்பதற்காக உண்மையாய் உள்ளதை உள்ளப்படி சொல்ல வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கிறேன்.
சகோதரர் P.J பற்றி புகழ்ந்து எழுதும் போது அதை அவர் வெளிடுவதில்லை .அதை நான் நன்றாக அறிய முடிகிறது .என்னுடைய அந்த வகையில் எழுதிய எதுவும் உங்கள் கருத்து பகுதியில் வெளிடப்படவில்லை. அது மாதுரி இங்கயும் உங்களை புகழ்வதாக நினைத்துக் கொண்டு இதனை வெளி இடுவதில் எந்த தடங்களும் வந்து விடக் கூடாது என்பதற்காக எத்தனையோ செய்திகளை நான் தவிர்த்தே எழுதுகிறேன்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இங்கே நான் குறிப்பிட இருப்பது இலங்கை தவ்ஹீத் வரலாற்றில் ஏற்பட்ட இன்னுமொரு குழப்பம் . குரான் மற்றும் சுன்னாஹ் என்ற இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்று உறுதியான கொள்கையில் இருந்த இலங்கை தவ்ஹீத் மக்களை குழப்பியடித்தது 1998 மற்றும் 1999 ம ஆண்டுகள் இந்த காலப்பகுதியில் தான் மன்ஹஜுஸ் ஸளஃப் என்ற புதிய கொள்கை ஏற்கனவே மறைந்து இருந்தாலும் விஸ்வரூபம் எடுத்தது அந்தக் காலப்பகுதில் தான் .மன்ஹஜுஸ் ஸளஃப் என்ற ஜமாத்தே உருவாகியது p.j குரான் சுன்னாவுக்கு எந்த அளவுக்குப் பிரச்சாரம் செய்தாரோ அதே வேகத்தில் இந்த மன்ஹஜை பிரச்சாரம் செய்ய புறப்பட்டார் இதன் தலைவர். இவருக்கு நல்ல அறிவு மற்றும் திறமை இருந்தது.
இளையர்களை இலகுவாகக் கவர்ந்தெடுத்தார் .எல்லாத்திற்கும் மேலாக தன்னை ஷேக் அல்பானி அவர்களின் மாணவன் என்று இலங்கையில் அறிமுகப்படுத்தினார். போகுமிடமெல்லாம் இவருக்கு அல்பானியின் மாணவன் என்பதனால் மிகுந்த அந்தஸ்து இலங்கையில் உள்ள உலமாக்களில் சிலர் அல்ல பலர் இவரை மாபெரும் இளம் அறிஞராகவே பார்த்தார்கள் .ஒரு சிலர் இவரிடம் ஹதீஸ் கலையை படிக்கவும் புறப்பட்டனர்.
ஏன் இவரது இலங்கையில் நடந்த ஆரம்ப பயான் கூட அரபியில் தான் நடந்தது .இன்னுமொருவர் தமிழில் மொழிபெயர்த்து தான் சொன்னார்.
இப்படி இவரை இந்த இலங்கை மண்ணில் வளர்த்து விட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த தவ்ஹீத் ஆலிம்கள் தான்.
அந்த ஸளஃப் மன்ஹஜுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை; இலங்கையில் பெயரும் புகழும் பெற்ற டாக்டர் நுபார் ஃபாரூக்கின் மகன் அபூ அப்திர்ரஹ்மான் யஹ்யா சில்மி பின் நுபார் அச்சலபி அச்சைலாணி ......................etc இப்படியே இவரின் பெயர் நீண்டுக்கிட்டே போகிறது. எனக்கு இவ்வளவு தான் உச்சரிப்புடன் சொல்ல முடிகிறது அடுத்து வரிகளும் தெரிந்திருந்தாலும் கூட உச்சரிப்பு பிழையாகி விடும் என்பதால் தவிர்த்துள்ளேன்.
இவரின் கொள்கை குரான் சுன்னாஹ்வை சஹாபாக்கள் எப்படி விளங்கி இருந்தார்களோ அதற்குப் பின்னால் வந்த இமாம்கள் எப்படி விளங்கி இருந்தார்களோ அதே தொடரில் தான் நாங்களும் குரான் சுன்னாஹ்வை விளங்க வேண்டும்; அப்படி விளங்கவில்லை என்றால் அவர்கள் வழிகேடர்கள்.
அந்தப் பட்டியலில் அவர் கூறிய முதல் வழிகேடர் P.J இப்படி கூறிய உடன் தவ்ஹீத் மக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. இதைப் பயன்படுத்தி பல நிகழ்ச்சிகளை நடத்தினார். மக்கள் கூட்டத்தையும் சேர்க்கத் தொடங்கினார்.
மக்களும் சார சாரையாக அவரது நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கினர். அவரது எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே முழக்கம் P.J வழிக்கேடர், முஃதஸிலா, கவாரிஜ். என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், இத்தனைக்கும் இவருக்கு அரபு மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் P.J இன் பயான் மற்றும் புத்தகங்கள் எல்லாமே தமிழில் தான் இருக்கின்றது இவருக்கோ தமிழ் தெரியாது அப்படி இருக்க இவர் P.J இன் எந்த புத்தகத்தையும் வாசித்திருக்க முடியாது பயானும் தமிழில் உள்ளது. அதையும் சரியாக அவரால் விளங்கி இருக்க முடியாது.
அப்படி இருக்க இவர் எப்படி P.J கவாரிஜ் , முஃதஸிலா , என்று உறுதியாகச் சொல்கிறார் என்று சிந்தித்த போது தான் இவருக்கு சிலரால் அதாவது இலங்கையிலும் மற்றும் தமிழ் நாட்டு உலமாக்களால் இவைகள் புகுத்தப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரிய வருகிறது.
இதையும் நான் ஆதாரம் இல்லாமல் குறிப்பிடவில்லை. அந்தக் கால பகுதியில் இவர் ஜாக் தலைவர் S. கமாலுதீன் மதனியுடன் தொலைபேசியில் பல தடவைகள் பேசியுள்ளார்.
நான் அவருடன் கூட அமர்ந்து இருக்கும் பொது இவர் S.K உடன் தொலைபேசியில் பேசும் பொது இவருக்கு S.K கூறினாராம்; இன்னும் கொஞ்ச நாள் போனால் P.J தான் ஒரு நபி என்று வாதாடுவார் என்று.
இதை யஹ்யா சில்மி மறுத்தால் நான் அவரை நேரடியாக விவாதத்திற்கு அழைத்து நிரூபிப்பேன் இன்ஷா அல்லாஹ். P.J பற்றி இலங்கையில் பேசுவதற்கு எல்லோரும் தயங்கினர். ஏனென்றால் பேசிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. ஒன்று மக்கள் கேள்வி கேட்டு துவைத்தெடுப்பார்கள். அது மாத்திரமில்லை P.J க்கும் முகம் கொடுக்க நேரிடும். இருக்கும் இமேஜைக் கெடுத்துவிட முடியாது என்பதனால் அவர்களின் ஸளஃப் கொள்கைகளை மறைத்து மக்களோடு விளையாடினார்கள்.
அந்த நேரத்தில் இவர்களுக்குக் கிடைத்த மாபெரும் சக்தி தான் இந்த இளம் அறிஞர் யஹ்யா சில்மி. இவருக்கு இதுவெல்லாம் தெரியாது இவரோ இங்கு வந்த உடன் இவரை பெரிய ஆலிமாக எல்லோரும் கருதி இவரிடம் பத்வா கேட்க சிலர் புறப்பட்டதை பார்த்து P.J யும் இப்படி தான் இருப்பார் என்ற யூகத்தில் இவர் P.J அவர்களை கடுமையாக எதிர்க்கலானார்.
இந்த நேரத்தில் தான் முன்பை விட மக்கள் கூட்டம் இவரின் பயான்களில் அதிகமானார்கள் இவர் சொல்வது உண்மை தானா P.J கவாரிஜா , முஹ்தசிலாவா, என்ற கேள்வி சிலர் மனதைக் கெடுத்தது, இவரின் பயானுக்கு வந்த கூட்டத்தை விட பல நூறு மடங்கு கூட்டம் இவரை எதிர்க்கலானது, இவரின் பயான்களில் மக்கள் எழுந்து கேள்வி கேட்கும் நிலை உருவானது. தடுமாற்றத்தில் திணறினார் இந்த மாமேதை.
இவரின் உளறல்கள் இவரின் அறியாமையை மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்காக இவரைப் பற்றி P.J இடம் கூறினோம். இவருக்கு இலங்கையில் உள்ள பல உலமாக்கள் பெரிய ஆலிம் என்ற நற்சான்றை வழங்கி விட்டனர்.இவரும் தன்னை ஷேக் அல்பானி அவர்களின் மாணவன் என்று பிரச்சாரம் செய்து உங்களை மிகவும் தரக் குறைவாக விமர்சிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக குரான் சுன்னாஹ்வைப் பின்பற்றுகிற தவ்ஹீத் வாதிகளை வழிகேடர்கள் என்கிறார்.
இதைத் தட்டிக் கேட்க யாரும் முன் வரவில்ல்லை இலங்கையில் உள்ள எந்த ஆலிமும் முன் வரவில்லை குரான் சுன்னாஹ்வைப் பின்பற்றுகிறவர்களை வழிகேடர்கள் என்று பகிரங்கப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்ட பின்பும் இலங்கையில் உள்ள எந்த ஆலிமுக்கும் ரோசம் வரவே இல்லை என்று இவரைப் பற்றி P.j இடம் கூறினோம்.
அந்த நேரத்தில் தான் நிலைமையைக் கவனித்த P.J அவர்கள் அவருக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுங்கள் என்று எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். நாங்கள் அவரை அவரது இடத்துக்கே சென்று இந்த விவாத அழைப்பை விடுத்தோம் அவரும் ஒப்புக் கொண்டார்.
இத்தறுவாயில் 2001 ஆண்டு PJ ஹாமித் பக்ரி ஆகியோர் இலங்கைக்கு பறேலவிகளுடன் மாபெரும் விவாதம் ஒன்றிற்காக வந்திருந்தனர். அந்த விவாதம் தவ்ஹீதுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்தது அல்ஹம்து லில்லாஹ்.
அந்த விவாதத்தின் பின் கொழும்பில் நியாஸ் ஹாஜியாரின் வீட்டில் PJ தங்கி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஷேக் யஹ்யா சில்மி அனுமதி இல்லாமல் PJ தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து யார் PJ ? யார் PJ ? என்று கேட்டார்.
அப்போது உடன் இருந்த அப்துல் வதூத் மௌலவி அவர்கள் நட்பு முறையில் சந்திக்கும் வகையில் நீங்கள் நடக்கவில்லை; எனவே PJயை விவாதத்தில் சந்தியுங்கள் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். அப்போது அவர் அரபியில் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு சென்றார் என்று நினைக்கிறேன்.
இந்த யஹ்யா சில்மி யை PJ அன்று தான் நேரடியாக பார்க்கிறார் அந்த நாள் பகல் நேரம் நான் PJ அவர்களை நியாஸ் ஹாஜியார் வீட்டில் சந்தித்து இந்த யஹ்யா சில்மி யார் ? இவரின் கொள்கை பற்றி எல்லாம் நேரடியாகச் சந்தித்து விளக்கினேன்.
அந்த தினம் PJ அவர்கள் விடியக்காலையிலேயே சென்னைக்கு புறப்படவிருந்தார். ஆனால் அன்று காலை விடுதலைப் புலிகள் கொழும்பு விமான நிலையத்தில் புகுந்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினர். அதனால் PJயின் பயணம் நின்றுச் விட்டது. சுமார் இரு மனித்தியலத்திட்கு மேல் யஹ்யா சில்மி செய்த அத்துணை குழப்பங்களையும் விவரித்தேன்.
PJ அவருக்கு விவாதத்திற்கு அழுத்தம் கொடுக்க சொன்னார். அதன் பின் நாங்கள் PJ சார்பாக அவரைக் காணும் இடமெல்லாம் விவாதத்திற்கு அழைத்தோம். அவருக்கு PJ கைப்பட எழுதிய விவாத அழைப்பை ஈமெயில் மூலம் மற்றும் நேரடியாகவும் கொடுத்தோம். இப்படி பல கடித தொடர்புகள் விவாதம் சம்மந்தமாக PJ க்கும் யஹ்யா ஸில்மிக்குமிடைஇல் நடந்தது என்ன செய்வது தெரியாமல் யஹ்யா சில்மி தடுமாறினார்.
விவாதத்தை விட்டு விலகி ஓட்டமெடுத்தார். அண்ணன் விடவில்லை மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பி அவரை நிழலுடன் யுத்தம் புரியும் யஹ்யா சில்மியை நிஜத்துடன் யுத்தம் புரிய வரும்படி அழைத்துக் கொண்டே இருந்தார்.
தப்பிக்க முடியாத மாமேதை யஹ்யா சில்மி புதிய யுக்தியைக் கையாண்டார் விவாதம் என்பது இஸ்லாத்தில் கிடையாது அது வழிகேடு பித்அத் என்று கூறி ஓடி ஒழிய பார்த்தார்.
மக்கள் விடவில்லை. அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் அவரும் ஓடும் ஓட்டத்திலிருந்து நிற்பதாக தெரியவில்லை. இறுதியில் அவர் நடத்திய கூட்டம் PJ இன் தர்ஜுமா விமர்சனம். இது இலங்கையில் நடந்த இரண்டாவதும் இறுதியுமான தர்ஜுமா விமர்சனம். இந்த நேரத்தில் தான் அவருக்கு சாவு மணி அடிக்கப்பட்ட நேரம் பெரும் திரளான மக்கள் கூடி இருந்த அந்த கூட்டத்தில் நாங்கள் எழுந்து நின்று இவரின் முகத்திரையைக் கிழிக்கத்த் தொடங்கினோம் இவருக்கும் PJ க்கும் இடையில் நடந்த அனைத்து விடயங்கள் தொடர்பாக மக்கள் முன் எடுத்து வைத்தேன்.
அவர் மறுத்ததை அவர் வாயால் ஒப்புக் கொள்ள வைத்தோம். அங்கு வந்தவர்களில் பாதிப்பேர் உடனே எழுந்து அவருக்கு சலாம் கூறி வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பின்னால் இவருடைய விவாதம் தொடர்பான கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைத்தோம்.
ஏற்கனவே இவர் தப்லிக் ஜமாத்துடைய மௌலவிகளுடன் தனி அறையில் விவாதம் நடத்தியுள்ளார் ,ஜமாத்துல் முஸ்லிமினுடன் கலந்துரையாடல் என்கிற பெயரில் காரசாரமான விவாதம் நடத்தியுள்ளார். ஏன் சர்வதேச பிறை தான் சரி அதற்காக யாருடனும் விவாதிக்க தயார் என்று பகிரங்க அழைப்பு விட்டார், இதற்கும் PJ உடன் தொடர்பு கொண்டு விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்கி கேட்டோம் அண்ணனும் ஒருமாதம் முழுவதுமாக நேரம் ஒதுக்கி கொடுத்தார்.
அதற்கான கடிதம் ஃபாக்ஸ் fax மூலம் சகோதரர் காலித் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. இவர் கொழும்பு தெஹிவளையைச் சேர்ந்தவர். அந்த ஃபாக்ஸ் ஐ யஹ்யா சில்மி இடம் நான் நேரடியாக கொடுத்தேன். அதற்கும் அவர் முன் வராமல் பின்வாங்கி ஓட்டமெடுத்தார்.
அது சம்மந்தமாக சுமார் மூன்று மணித் தியாலங்களுக்கு மேல் பேசப்பட்டு பதிவு செய்த ரெகார்டிங்கை அவர் வேன்றுமென்றே அழித்து அந்த கேசட்டை நாசமாக்கினார். அந்த கேசட் வெளி வந்திருந்தால் இந்த யஹ்யா சில்மி யார் என்பதை மக்கள் அறிந்திருப்பர்.
இவருக்கு யார் யாரெல்லாம் PJ எதிர்க்கச் சொன்னது இவரின் உண்மையான முகம் என்ன அத்துனையும் அந்த கேசட்டில் பதிவானது இந்த கேசட் வெளி வந்தால் தன்னுடைய எதிர்கால தஹ்வா முற்றாக இஸ்தம்பித்து விடும் என்பதை அறிந்து அதை அழித்து விட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் என்னோடு கலந்துக்கொண்டவர்களில் என்னுடைய சகோதரர் அஸ்வான் , மற்றும் சகோதரர் அஜீத் இவர் தற்போது லண்டனில் உள்ளார். அவர்கள் சார்பாக யஹ்யா சில்மி மற்றும் பன்னிரண்டு பெயர்கள் கலந்து கொண்டனர் .
இந்த கேசட்டை அவர் அழித்ததை தர்ஜுமா விமர்சன கூட்டத்தில் அவரே ஒப்புக் கொண்டார் இதற்கு அங்கு வந்த அத்துணை பெரும் சாஹீதுகள் . இதன் பின்னால் PJ இன் சஹாபாக்களை பின்பற்றலாமா? என்ற கேசட் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது .
சலபிச மன்ஹஜுகள் ஒடுக்கப்பட்டன. யஹ்யா சில்மிகள் தவ்ஹீத் வாதிகளால் ஒதுக்கப்பட்டனர். இவரின் அறியாமையை PJயின் கடிதங்கள் தோலுரித்து அவரின் முகத்திரையை கிழித்தன. இன்று அவரின் தாவா களம் பத்து ஆண்டுகளைத் தாண்டி நிற்கிறது.
ஐம்பதுக்கும் குறைவானவர்களே இவரின் கோரப்பிடியில் சிக்கினர். அசத்தியத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர். இது வரலாற்றின் சுருக்கமே, இன்று இந்த யஹ்யாசில்மி தூர எறியப்பட்டுள்ளார். இவரை சுற்றி தமிழ் அறவே தெரியாத ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் அவர் சொல்வது மாத்திரம் தான் மார்க்கம் என்று நம்பி இருக்கின்றனர் இலங்கையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் குறிப்பாக கொழும்பில் இவருக்கு கூட்டம் போட்டால் முப்பது பெயரை தாண்டுவதில்லை.
இந்த அளவுக்கு PJ இன் விவாத அழைப்பு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இவரை பின்னால் இருந்து இயக்கியவர்களுக்கு அல்லாஹ் சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதை புரிய வைத்துள்ளான் .எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே