ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்
ஆடை தரையில் இழுபடக் கூடாது
عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ رواه مسلم
''மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ்மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப்பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும்மாட்டான். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது'' என்றஇறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள்தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்'' என்று கூறிவிட்டு ''அல்லாஹ்வின்தூதரே அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடையகணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியைசொல்லிக்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளைவிற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (171)
தரையில் இழுப்படுமாறு அணிவதின் தண்டனை
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ لَمْ يَنْظُرْ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَ شِقَّيْ إِزَارِي يَسْتَرْخِي إِلَّا أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسْتَ مِمَّنْ يَصْنَعُهُ خُيَلَاءَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் '' யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.''என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால்எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது'' என்று சொன்னார்கள்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்'' நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்'' என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (5784)
இறுக்கமான ஆடையணிவது கூடாது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ رواه البخاري
கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக்கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாகஇரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள்தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி), நூல் : புகாரி (367)
பெண்களைப் போல் ஒப்பனை செய்யத் தடை
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் , பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (5885)
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்