Pages

Saturday, September 24, 2011

இலக்கை மறந்த இஸ்லாமிய இயக்கங்கள்!


'இவா்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் இவா்களுக்கும் புமியில் அதிகாரம் வழங்குவதாகவும், இவா்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் இவா்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், இவா்களின் அச்சத்திற்குப் பின்னா் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். இவா்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவா்கள்” (24 : 55)

அர்ஷின் அதிபதி அல்லாஹ், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் என்று மூன்று முக்கிய வாக்குறுதிகளை வழங்குவதாக திருமறைக்குர்ஆனிலே உத்தரவாதம் அளிக்கின்றான்.

1.ஆட்சி அதிகாரத்தினை வழங்குவோம்.
 2.மார்க்கத்தில் உறுதிப்படுத்துவோம்
3.அச்சமற்ற வாழ்க்கையைத் தருவோம்.

இறைவனால் உத்தரவாதப்படுத்தப்பட்ட இவ்வாக்குறுதிகள் இன்று நம் முஸ்லிம் உம்மத்துக்கு வாய்த்துள்ளதா? என்ற வினாவைத் தொடுத்தால் விடை எம் விழிப்புருவங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு எட்டாக்கனியாக மாறிப்போயுள்ளதைத் தான் அவதானிக்க முடிகிறது. 19 ஆம் நூற்றாண்டின் காற்கூறு வரை சா்வதேச ரீதியில் வோ்பிடித்திருந்த நம்மவா்களின் ஆட்சி அதிகாரங்கள், அடக்குமுறையாளா்களினதும், ஆக்ரமிப்பாளா்களினதும் இரும்புப் பிடிக்குள் சிக்கி சிறைபட்டிருப்பதைக் காணலாம். ஆப்கானில் ஆரம்பித்து பக்தாதின் வீழ்ச்சி வரைக்கும் இச்சோகங்களின் காயப்பட்ட ரணங்கள் பிரதிபளிக்கின்றன. ஆட்சியை இழக்கும் அவலம் ஒருபுறம் அரங்கேற, மறுபக்கம் இருக்கின்ற பெயா்தாங்கி இஸ்லாமிய(?) ஆட்சியாளா்களும் எதிரிகளின் ஏவல்களுக்கு ஏற்ப தாளம் போடும் தகர டப்பாக்களாக தனித்துவம் இழந்து நானித்து நிற்கின்றனா். 'ஆட்சி அதிகாரத்தினை தருவோம் என்ற இறைவனின் வாக்குறுதி இன்று வரைக்கும் நிறைவேராமல் கானல் நீராய் காட்சியளிப்பதைத் தான் இங்கு நிதா்சனமாய் காண்கிறோம்.

தன் சிந்தை கவா்ந்த சீரியக் கொள்கையின் எழுச்சிக்காய் உதிரத்தை உரமாக்கி, தன் இன்னுயிரைக் கூட இழக்கத்துணிந்த கொள்கைக் கோமான்களின் இன்றைய வாரிசுகளின் நிகழ்கால நிலை யாது? அழிந்து போகும் அற்பத்தனமான அதிகாரங்கள், நிலையற்ற சொத்து சுகங்கள், பெறுமானமற்ற சமூக அந்தஸ்துகள் போன்ற உலகாயித இலக்குளை அடைவதற்காய் இஸ்லாமியக் கொள்கையைக் கூட தாரைவார்க்கும் வங்குரோத்து நிலை தான் நம் சமுதாய மன்றத்தில் பிரதிபளிப்பதை பரவலாக காண முடிகிறது. வாசம் இழந்த மலா்களாய், வீரம் இழந்த கோழைகளாய், சேற்றில் நட்டிய கம்பங்களாய் நம் உம்மத்தின் அவலம் இன்று வரை  தொடா்கிறது. 'மார்க்கத்தில் இவா்களை உறுதிப்படுத்தி வைப்போம்என்ற இறை வாக்கு இங்கும் நிறைறோமல் இருக்கும் சோகத்தை காணலாம்.

உலகின் எட்டுத்திக்கிலும் பரந்து வாழும் 160 கோடி முஸ்லிம்களின் வாழ்வொழுங்கின் யதார்த்த நிலை என்ன? 'முஸ்லிம்கள் பயங்கர வாதிகள், இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதுஎனும் சா்வதேச ஊடகங்களின் போலியான அறிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் திகிலடைந்து திகைத்து நிற்கின்றனா். 'நான் இறைவனின் வாக்கான குர்ஆனையும், முஹம்மத்(ஸல்) அவா்களின் வாழ்க்கை முறையினையும் பின்பற்றியொழுகும் ஒரு உண்மை முஸ்லிம்என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்வதற்குக் கூட அச்சப்படும் அளவுக்கு நம் சமுதாயம் சாக்கடையாக மாறிப்போயுள்ளது. அச்சத்துடனும், அமைதியற்ற உள்ளத்துடனும் தன் வாழ்நாளை கழிக்கின்ற சோரம் போன சமூகமாய் முஸ்லிம்கள் ஜீவிக்கிறார்கள். 'அச்சமற்ற வாழ்கையை வழங்குவோம்என்ற வல்லோனின் வாக்கு இங்கும் நிறைவேறாமல் இருக்கும் அவலத்தை தான் பார்க்கிறோம்.

அப்படியென்றால், இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு என்ன காரணம்?  ஜமாஅதே இஸ்லாமியினா் மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் சொல்வது போன்று, ஆட்சியின்மையோ, முஸ்லிம்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையின்மையோ இதற்கு காரணம் அல்ல. சத்தியத்தை தயவுதாட்ஷன்யமின்றி உடைத்துச் சொல்வதோ, அசத்தியத்தை எதிர்த்து நிற்பதோ காரணமல்ல!ஸூன்னா சிறியது என்றாலும் அதை செய்தது நபியென்றால் உயிரை பணயம் வைத்தாவது அந்த ஸூன்னாவை உயிர்ப்பிப்பேன் என்ற கொள்கையுறுதியோ, இணைவைப்பென்றால் எறியும் தீயாக எதிர்த்து நிற்போம் என்ற கொள்கைப் பற்றோ காரணமல்ல! இதற்கான பதிலை திருமறைக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

மேற்கூறிய 3 இறை வாக்குறுதிகளும் கிடைக்க வேண்டுமாயின் 4 நிபந்தனைகளை இறைவன் எமக்கு விதிக்கின்றான்
1.ஈமான் 
2.ஸாலிஹான (பித்அத் கலக்காத) அமல் 
3.அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்; 
4.அல்லாஹ்வுக்கு எதுவொன்றையும் இணையாக்காதிருத்தல்.

இறைவனின் உன்னதமான வாக்குகள் நம் சமுதாயத்துக்குக் கிடைப்பதாயின் தா்ஹா வழிபாடு, கப்ர் வணக்கம், அவ்லியா வழிபாடு, கந்தூரி மற்றும் கொடியேற்றம், தகடு தாயத்து, சுனியம் குறிகேட்டல், குத்து விளக்கேற்றல் போன்ற இணைவைப்புகளை விட்டும் முற்றாக விலகியிருத்தல் வேண்டும். அத்தோடு, கூட்டு துஆ, 23 ரக்அத் தராவீஹ் தொழுகை, மீலாது விழா, பராஅத் நோன்பு, கத்தம் பாதிஹா, பெண் வீட்டு விருந்து, சீதனம், கூட்டு திக்ர், தஸ்பீஹ் தொழுகை, பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் தொழுதல் உள்ளிட்ட நபிவழிக்கு முரணான அனைத்து பித்அத்துகளை விட்டும் ஒதுங்கியிருத்தல் வேண்டும். இவ்வாறு ஷிர்க்கும் பித்அத்தும் எம் வாழ்வில் கலக்காத வகையில் எம் வணக்க வழிபாடுகளை குர்ஆன் ஸூன்னாவின் அடிப்படையில் மட்டும் நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் அருளும், அவனது வாக்குறுதிகளும் எம் சமூகத்துக்குக் கிட்டும்.

கிலாபத், சமூக அமைப்பு, சமுதாய ஒற்றுமை, பிக்ஹூல் அவ்லவிய்யாத் எனும் புச்சாண்டிகளை வைத்து ஷிர்க்கையும் பித்அத்தையும் சார்ந்து போகும் ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வான்கள் போன்ற கொள்கை கோமாளிகளாய் நாம் இருந்தால், இறைவாக்குகள் ஒரு போதும் நிறைவேறமாட்டாது. அத்தோடு, நீங்கள் கனவு காணும் ஆட்சி அதிகாரம், சமூக உருவாக்கம் என்பன கூட இணையும் பித்அத்தும் அற்ற ஏகத்துவ வாதியாய் திகழ்ந்தால் மட்டுமே கைக்கூடும். எனவே, இஸ்லாத்தின் இலக்கு கிலாபத்தோ, ஒற்றுமையோ அல்ல! இணைவைப்பை ஒழித்து ஏகத்துவத்தை நிலைநிறுத்துவது மட்டுமே! இலக்கை புரிவோம்! இலட்சியவாதியாய் மாறுவோம்!

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்