Pages

Saturday, September 24, 2011

“அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு” - ஒப்புக் கொள்கிறது தப்லீக் தஃலீம் தொகுப்பு -


ஆக்கம் : M.T.M. பா்ஸான் (சிலாபம்)
அல்லாஹ்வுக்கு அவனுக்கே உரியவிதத்தில் அழகிய உருவம் உண்டு. அவ்வுருவம் எப்படைப்புகளுக்கும் ஒப்பானது கிடையாது. அருளாளன் அல்லாஹ்வின் உருவத்தை இம்மையில் நபிமார்கள் உட்பட யாராலும், எப்போ்ப்பட்ட மகானாலும் காண முடியாது. ஆனால், நாளை மறுமையில் சுவனவாசிகள் அவன் உருவத்தை தம் வெற்றுக் கண்களால் காணும் பேரின்பப்பாக்கியத்தைப் பெறுவா். இது ஏகத்துவப் பாதையில் நடைபயிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்லாஹ் பற்றிய அடிப்படை நம்பிக்கை. இதனை பன்னெடுங் காலமாக நாம் பிரச்சாரப்படுத்தி வருகிறோம்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதை நாம் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வழுவான சான்றுகளுடன் முன்வைக்கும் போது, இந்த சமுதாயத்தில் பலரும் எம்மை கடுமையாக எதிர்ப்பதைப் பார்க்கின்றோம். இஸ்லாத்தில் இல்லாத குப்ரியத்தான கருத்தை வழிமொழிந்த வழிகேடா்கள் போன்று எம்மை சித்தரிக்கும் பணியில் பல ஜமாஅத்தினரும் ஈடுபட்டனா். இன்றளவும் இவ்விஷமப் பிரச்சாரத்தை வீரியத்துடன் முன்னெடுத்தும் வருகின்றனா். அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் கப்ரு வணக்கத்தில் கட்டுண்டு போன தரீகாவாதிகள், ஆன்மீகப் போர்வையில் நூதனங்களை அறிமுகப்படுத்தி வரும் தப்லீக்வாதிகள், படித்தவா்கள் என்ற மாயைக்குப் பின் பதுங்கிக் கொண்டு அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் ஜமாஅதே இஸ்லாமியினா், இலக்கை எட்டும் வரை இடத்துக்கு ஏற்ப கொள்கை நிறம் மாறும் பச்சோந்திக் கும்பல் இக்வானுல் முஸ்லிமீன்கள் ஆகிய அசத்தியக் கும்பல்கள் அனைத்தும்அல்லாஹ்வுக்கு உருவம் உண்டுஎனும் எமது குர்ஆனியக் கொள்கையினை எதிர்ப்பதில் ஓரணிப்பட்டு ஒற்றுமையாய் மூலை முடுக்குகளில் எல்லாம் ஓங்கி முழங்கி வருவதனைக் காணலாம்.
அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை! உருவம் உண்டு என்று சொல்பவன் வழிகேடன்!’ என்ற எமக்கெதிரான எதிர்ப் பிரச்சாரத்தை முன்னெடுப்பவா்களில் முதன்மையானவா்கள் தப்லீக் ஜமாஅத்தினா். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதை பிரச்சாரப் படுத்திய நம் சகோதரா்களை அச்சுருத்தி, எமது பிரச்சாரத்தை தடுத்து, எமக்கெதிராக மேடை போற்றுப் பேசி, மக்களை எமக்கெதிராய் கிளா்தெழச் செய்யும் மூன்றாந்தர ரவுடிஸப் பணியில் இந்த தப்லீக் ஜமாஅத்தினரும் அதனைச் சார்ந்த ஆலிம் பெருமக்களும் வெறியுடன் ஈடுபட்டு வருவதனை நாட்டின் பல ஊர்களிலும் காண முடிகிறது.
எந்தக் கருத்தை காரணமாக வைத்து எம்மை கொடூரமாக எதிர்க்கும் கைங்கரியத்தில் தப்லீக் ஜமாஅத் களமிறங்கியுள்ளதோ, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டுஎன்று நாம் பிரச்சாரப்படுத்தும் அதே கருத்து அவா்கள் தங்கள் வேத வழிகாட்டியாக ஏற்று, பள்ளிகள் தோரும் பக்திப் பரவசம் பொங்க வாசித்து வரும் தஃலீம் தொகுப்பு எனும் சாக்கடை நூலில் அழுத்தமாய் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் பேராச்சரியம்!
ஓரிடம் ஈரிடம் அல்ல பல்வேறு இடங்களில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும், அல்லாஹ்வை ஆன்மீகத்தின் உச்சத்தை எய்திய பல பெரியார்கள் கண்டுள்ளனா் எனவும் இத்தஃலீம் தொகுப்பில் எழுதப்பட்டுள்ளது. சான்றுக்காக சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகின்றோம். அறிவுள்ளவா்களுக்கு ஒற்றை ஆதாரம் போதுமானது.
மூஸா இப்னு முஹம்மத் (ரஹ்) கூறுகிறார்கள் : ஒரு முறை அரபியல்லாத ஒருவா் தவாப் செய்து கொண்டிருந்தார். இவா் பேணுதல் உள்ள மிக நல்ல மனிதராகத் தோன்றினார். தவாப் செய்யும் போது ஓர் அழகிய பெண்ணின் கால் சிலம்பொலியைக் கேட்டு அவா் அவளை உற்று நோக்கலானார். உடனே ருக்னுல் யமானியிலிருந்து ஒரு கை வெளிப்பட்டு அம்மனிதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. அதனால் அவருடைய கண்கள் வெளிவந்து விட்டன. பைதுல்லாஹ்விலிருந்துஎன் வீட்டை தவாப் செய்து கொண்டே நானல்லாத பிறவற்றையா பார்க்கிறாய்? இந்த அறைதல், உன்னுடைய இந்தக் கெட்ட பார்வைக்குரிய தண்டனையாகும்! இனியும் அவ்வாறு குற்றம் புரிந்தால், இதனைக் காட்டிலும் கடுமையான தண்டனை அளிப்போம்என்ற சப்தம் முழங்கிற்று.
நூல்  : ஹஜ்ஜின் சிறப்பு (6-ம் பதிப்பு 1993)            பக்கம்         : 135
தஃலீம் தொகுப்பு எடுத்துச் சொல்லும் மேற்படி சம்பவத்தை சற்று கருத்தூண்டி இன்னுமொரு தரம் படித்துப் பாருங்கள். இதில் என்ன சொல்லப்படுகிறது? ஹஜ் எனும் கடமையை நாம் நிறைவேற்றும் போது அல்லாஹ்வுடைய சிந்தனை மட்டும் தான் எமது உள்ளத்தில் பிரவாகிக்க வேண்டும். அதற்கு மாற்றமாக படைப்புகளின் மீதான ஆசைகள் எம் என்னத்தை திசைதிருப்பிவிடக் கூடாது. இந்தக் கருத்தை மக்கள் மனங்களில் பதிப்பதற்காகவே மேற்படி சம்பவம் இங்கு ஆதாரமாக மவ்லானா ஜகரிய்யா சாஹிபினால் குறிப்பிடப்படுகிறது. உளத்தூய்மையை உணா்த்துவதற்காக மேற்கோள் காட்டப்பட்ட இச்சம்பவத்தில் மலிந்து கிடக்கும் அபத்தங்கள் படிப்போர் ஈமானை பரித்திடும் அளவுக்கு பாரதூரமானவை என்பதை புத்தியுள்ள எவராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டுஒத்துக் கொள்கிறார்  ஜகரிய்யா சாஹிப்
தவாபில் ஈடுபட்ட ஒருவா் அழகிய பெண்ணொருத்தியை பார்த்த போது கஃபாவிலிருந்து அல்லாஹ்வின் கை வெளிப்பட்டு பெண்ணைப் பார்த்தவரை ஓங்கி அறைந்ததாக தஃலீம் தொகுப்பின் ஆசிரியா் ஜகரிய்யா சாஹிப் இங்கு கதையளக்கிறார். என் வீட்டை தவாப் செய்து கொண்டே நானல்லாத பிறவற்றையா பார்க்கிறாய்?’ எனும் வாசகம், வெளிப்பட்டது அல்லாஹ்வின் கை என்பதையும், அறைந்தது அல்லாஹ் தான் என்பதையும் பட்டவா்த்தணமாய் தெளிவு படுத்துகிறது.
இச்சம்பவத்தை குறிப்பிடுவதன் மூலம், ஜகரிய்யா சாஹிப் - தப்லீக் ஜமாஅத்தின் பக்தகோடிகள் ஏற்க மறுக்கும் ஓர் உண்மையை பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார். அது அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது தான். அல்லாஹ்வின் கை வெளிப்பட்டது என்பதிலிருந்து அல்லாஹ்வுக்கு கை உண்டுஎனும் எமது கருத்தை வழிமொழிகிறது தஃலீம் தொகுப்பு.
அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு, கால்கள் உண்டு, விரல்கள் உண்டு, முகம் உண்டு, கால் பாதம் உண்டு, கண்கள் உண்டு, ஏன் அழகிய உருவமே உண்டு என்று, கப்ஸாக்களை ஆதாரமாகக் காட்டாது, குர்ஆன் - ஹதீஸ் எனும் ஆதாரத்தின் அடிப்படையில் நாம் பிரச்சாரம் படுத்திய போது, எம்மை வழிகேடா்கள் என்று கொதித்துப் போய் கொக்கரித்தவா்கள், தப்லீக் ஜமாஅத்தின் தஃலீம் தொகுப்பு வழிகேடு என்றும், அதன் ஆசிரியா் ஜகரிய்யா சாஹிப் சுத்த வழிகேடா் என்றும் பள்ளிகள் தோரும் ஓங்கி முழங்கத் தயாரா? நாடளாவிய  ரீதியில் மேடை போற்று விமா்சிக்க முன்வருவீர்களா? அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு எனும் உண்மையை  சொன்னதற்காக பள்ளிகளை விட்டும் எம்மை விரட்டிய தப்லீக் விசிரிகள், எமது கருத்தை பிரதிபலிக்கும் தஃலீம் தொகுப்பை உங்கள் பள்ளிகளை விட்டும் தூக்கி எறிய தயாரா? அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு எனும் கருத்தை கொண்டுள்ள தஃலீமை யாரெல்லாம் பள்ளிகளில் வாசிப்பார்களோ அவா்களை ஓட ஓட விரட்டியடிக்க இயலுமா?
தமக்குத் தெரியாத புதியதோர் கருத்தை செவிமடுத்தவுடன்இவா்கள் புது மார்க்கம் சொல்பவா்கள்என்று எம்மை ஆத்திரத்தோடும் அறியாமையோடும் பார்க்காமல் இதன் பிறகாவது அறிவார்ந்த ரீதியில் எதனையும் பார்ப்பதற்கும் சிந்திப்பதற்கும் பழகிக் கொள்ளுங்கள். மேற்படி சம்பவம் குறிப்பிடும்அல்லாஹ்வுக்கு உருவம் உண்டுஎன்ற கருத்தை நாம் ஏற்றுக் கொண்ட போதிலும், அவ்வுருவத்தை உலகில் வைத்தே ஒருவரால் பார்க்க முடியும் என்ற தஃலீம் தொகுப்பின் தப்பான கருத்தை நாம் அடியோடு மறுக்கின்றோம்.
அபத்தம் 01: அல்லாஹ்வை உலகில் காணமுடியுமா?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொன்ன அல்குர்ஆன் அவ்வுருவத்தை உலகில் வைத்து எப்போ்ப்பட்ட மகானாலும் கூட பார்க்க இயலாது என்றும் அடித்துச் சொல்கிறது.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.’ (6:103)
மேற்படி திருமறை வசனம் எந்தப் படைப்பாலும் அல்லாஹ்வை உலகில் வைத்து காணவே முடியாது என்று அழுத்திச் சொல்வதைப் பார்க்கலாம். அதே போன்று, மனிதா்களிலேயே சிரேஷ்டமானவா்களாகவும், ஆன்மீகத்தின் உச்சத்தை எய்தியவா்களுமான நபிமார்களால் கூட அல்லாஹ்வை காண முடிய வில்லை என்பதை அல்லாஹ் ஈன்று குறிப்பிடுகிறான். மூஸா (அலை) அவா்கள் தூர் ஸினாவிற்கு சென்று அல்லாஹ்வுடன் பேசிய போதும் அவா் அல்லாஹ்வை காண வில்லை (பார்க்க 7:143) என்று திருக்குர்ஆன் பரைசாற்றுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவா்கள் மிஃராஜூக்கு சென்ற போதும் அல்லாஹ்வை நபிகளாரால் காண முடியவில்லை என்று நபிகளாரே ஒத்துக் கொள்கிறார்கள்.
நீங்கள் உங்கள் இறைவனை கண்டதுண்டா?’ என்று நான் இறைதூதா் (ஸல்) அவா்களிடம் வினவினேன். அதற்கு அவா்கள்அவனோ பேராளியாளன். அவனை எங்கனம் காணுவது?’ என்று பதிலளித்தார்கள்.(முஸ்லிம் - 261)
யாரெல்லாம் அல்லாஹ்வை கண்டதாக கதையளக்கின்றனரோ அவா்கள் சொல்வது வடிகட்டிய பொய் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவா்கள் எம்மை எச்சரிக்கின்றார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவா்களிடம்அன்னையே! முஹம்மது (ஸல்) அவா்கள் தம் இறைவனை (மிஃராஜின் போது) பார்த்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவா்கள், ‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவா் பொய்யுரைத்து விட்டார். (அதில் முதலாவது) முஹம்மத் (ஸல்) அவா்கள் தம் இறைவனை பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவா் பொய் சொல்லி விட்டார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்துக்குச் சான்றாக) ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.’ (6:103) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.’ (புகாரி - 4855)
நாம் மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் எமக்கு உணா்த்துவது என்ன? உலகில் வைத்து அல்லாஹ்வை யாராலும் காண முடியாது என்பதைத் தான். இதற்குப் பின்னரும் ஒருவா் தான் அல்லாஹ்வை கண்டதாகவோ, அல்லது இன்ன பெரியார், ஸூபி மகான் அல்லாஹ்வை நேரிலோ கனவிலோ கண்டதாகவோ சொன்னால், அவா் திருமறைக்குர்ஆனை மறுக்கிறார். நபி (ஸல்) அவா்களின் பொன் மொழிகளை நிராகரிக்கிறார். அல்லாஹ்வும் அவன் ரஸூலும் பொய் சொல்கிறார்கள் என்கிறார். (அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக!)
இவ்வாறு, திருக்குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிராக நடப்பவா்  ஒருபோதும் முஸ்லிமாக இருக்க முடியாது. இக்கருத்தை சுமந்து வரும் புத்தகங்கள் நோ்வழியாக ஒருபோதும் இருக்கமாட்டாது. இவற்றை சரிதான் என்று அங்கீகரிக்கும் ஓர் அமைப்பு - ஜமாஅத் - நிச்சயம் வழிகேட்டிலேயே பயணிக்க முடியும். இவை சாதாரணமாக அனைவரும் ஒத்துக் கொண்ட அம்சங்கள்.
ஆனால், எமது ஈமானைப் பறித்து, எம்மை காபிராக்கும் படுபயங்கர நச்சுக் கருத்தானஅல்லாஹ்வை உலகில் காணலாம்என்பதை தஃலீம் தொகுப்பின் மேற்படி சம்பவம் தௌ்ளத் தெளிவாக எடுத்துரைத்த போதிலும் அனேகமானவா்கள் இது குறித்து சிந்திக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. உடனே ருக்னுல் யமானியிலிருந்து ஒரு கை வெளிப்பட்டு அம்மனிதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.’ என்ற வாசகத்தை யாரால் குறிப்பிட முடியும்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததை சம்பந்தப்பட்ட நபருடன் தவாப் செய்த பிரிதொருவா் பக்கத்தில் இருந்து கண்டிருக்க வேண்டும். சம்பவத்தை கண்டவா் அல்லாஹ்வின் கையையும் கண்டிருக்கிறார். இதை மவ்லானா ஜகரிய்யா ஸாஹிப் தன் தஃலீம் தொகுப்பில் எழுதியதன் மூலம் அல்லாஹ்வை உலகில் காண முடியும்என்ற குர்ஆனுக்கு எதிரான கருத்தை அவரும் சரிகண்டுள்ளார். அல்லாஹ்வின் கலாமை மறுக்கும் மா பாதகச் செயலை, ஆன்மீகப் போதனை என்ற பெயரில் லாவகமாக தஃலீம் தொகுப்பு என்ற தன் கைச்சரக்கில் சேர்த்து, பாமரா்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். தஃலீமில் வந்தால் சரியாகத் தான் இருக்கும் என்ற குருட்டு பக்தியுடையவா்கள் ஒன்றுக்கு பல்லாயிரம் தடவை இச்சம்பவத்தை வாசித்த போதிலும் சிந்திக்காது தாடியை உறுவி, தலையை அசைத்து ஸூப்ஹானல்லாஹ் கூறும் முட்டாள்களாகவே இன்றும் உள்ளனா்.
அல்லாஹ்வை உலகில் வைத்து காணவே முடியாது எனும் குர்ஆனின் கூற்றுக்கு எதிராக இன்னும் பல சம்பவங்கள் தஃலீம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அல்லாஹ்வை பல பெரியார்கள் கனவில் கண்டதாக கூறி, ஈமானை தகா்க்கும் பாதகத்தை ஈமானின் உழைப்பு என்ற பெயரில் செயற்படும் தப்லீக் ஜமாஅத்தினரின்  தஃலீம் தொகுப்பு  எப்படியெல்லாம் செய்கிறது என்பதற்கு இதோ இன்னும் சில சான்றுகள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவா்கள் கூறுகிறார்கள்: ‘நான் அல்லாஹூத் தஆலாவை கனவில் தரிசித்துயா அல்லாஹ்! எதைக் கொண்டு உன்னுடைய சந்நிதானத்தை நெருங்க முடியும்?’ என்று கேட்டேன். ‘அஹ்மதே! என்னுடைய வேதத்தை ஓதுவது கொண்டுஎன அல்லாஹ் பதிலளித்தான். ‘விளங்கியா? விளங்காமலா?’ என்று கேட்டேன். ‘விளங்கி ஓதினாலும் விளங்காவிட்டாலும் இரண்டுமே நெருக்கத்திற்குக் காரணமாகும்என்று கூறினான்.
தஃலீம் தொகுப்பு, குர்ஆனின் சிறப்பு, 23வது ஹதீஸின் விளக்கம், பக்கம் - 69
அல்லாஹ்வை உலகில் வைத்து காண முடியாது எனும் போது, நபியால் கூட முடிய வில்லை எனும் போது அஹ்மத் இப்னு ஹம்பலால் எப்படி கனவில் காண முடிந்தது? கனவில் கண்டது மட்டுமின்றி, அல்லாஹ்வுடன் இவா் பேசியும் உள்ளார். நபிகளாருக்குப் பிறகு எவருக்கும் வஹி வரமாட்டாது என்பது தான் அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கை. நபிக்குப் பிறகும் வஹி வரும், அல்லாஹ் செய்திகளை அறிவிப்பான் என்று நம்புவது சுத்த காதியானிகளின் வழிகெட்ட கொள்கை. இதனை சரிகண்டு எடுத்தெழுதியுள்ள ஜகரிய்யா சாஹிப் ஸூன்னத்துவல் ஜமாஅத்தைச் சோ்ந்தவரா? அல்லது ஸூன்னத்துவல் ஜமாஅத் போர்வையில் செயற்பட்ட காதியானியா? இதனை பள்ளிகளில் நாள் தவராது வாசிக்கும் தப்லீக் அன்பா்கள் மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கிறார்களா? அல்லது காதியானிய மதத்தின் பால் அழைக்கின்றனரா?
நம்முடைய ஹஜ்ரத் ஷாஹ் அப்துர் ரஹீம் ஸாஹிப் ராய்ப்புரி (ரஹ்) அவா்களின் சீடா்களில் ஒருவா் தரையில் எல்லா இடங்களிலும் அல்லாஹ்வின் ஒளிமயமான காட்சியைக் கண்டு கொண்டிருந்ததால் பல நாட்களாக சிறுநீர்க் கழிக்காமலேயே இருந்து வந்தார்.’
 தஃலீம் தொகுப்பு, திக்ரின்; சிறப்பு, மூன்றாம் கலிமாவின் சிறப்பு, 12வது ஹதீஸின் விளக்கம், பக்கம் - 267
இது போன்றுஅல்லாஹ்வைக் கண்ட பைத்தியக் காரனின் கதை(திக்ரின் சிறப்பு 18வது ஹதீஸின் விளக்கம், பக்:288), 30 ஆண்டுகளாக சொர்க்கம் தன் கண் முன் காட்சியளித்த போதும் அல்லாஹ்வை விட்டும் பார்வையை திருப்பாத மகானின் கதை(திக்ரின் சிறப்பு, 18வது ஹதீஸின் விளக்கம், பக்: 289) என்று ஈமானைப் பரிக்கும் ஏராளமான அபத்தங்கள் தஃலீம் தொகுப்பு முழுவதும் நிறைந்து வழிவதை காணலாம்.
என் அன்பார்ந்த தப்லீக் அன்பா்களே! அல்லாஹ் சொன்னதற்கு முரணாக பொய்களையும் புரட்டுகளையும் எழுதி வைத்துள்ள தஃலீம் தொகுப்பை வாசிப்பதால் ஈமான் அதிகரிக்குமா? அல்லது இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஈமானும் அடியோடு அழிந்து போகுமா? இதனை நம்பி நடைபயின்றால் சுவனம் செல்லலாமா? அல்லது நரகப்படுகுழியை சந்திக்க வேண்டி வருமா? இவ்வத்தனை கருத்துக்களையும் நம்பி செயற்பட்டு வரும் தப்லீக் ஜமாஅத் நோ்வழியில் உள்ளதா? அல்லது தௌ்ளத் தெளிவான வழிகேட்டில் உள்ளதா?
அன்பா்களே! நிதானித்து நின்று சற்று சிந்தியுங்கள்! முஃமின்களின் பண்பைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு சிலாகிக்கிறான்: அவா்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடா்களாகவும், குருடா்களாகவும் விழ மாட்டார்கள்.” (25 : 73)
இறைவனின் வார்த்தையே ஆனாலும் குருட்டுத்தனமாக ஏற்காது, சிந்தித்துப் பார்த்து ஏற்குமாறு திருக்குர்ஆன் பணிக்கிறது என்றால், கட்டுக்கதைகளையும், கற்பனை காவியங்களையும், கவிதையடிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தஃலீம் தொகுப்பை எந்தளவுக்கு நாம் சிந்தித்துப் பார்த்து ஏற்க வேண்டும்!
சிந்தியுங்கள்! சீர்பெறுங்கள்! சீர்கெட்ட சமுதாயத்தை சீர்படுத்த முன்வாருங்கள்!

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்