Pages

Saturday, September 24, 2011

ஜமாஅதுல் முஸ்லிமீன் இயக்கத்தில் இருக்கும் மவ்லவி ஹிபதுர்ரஹ்மான் அவர்களுடன் அன்று தொலைபேசியில் உரையாடிய அனுபவத்தை இங்கு சகோதரர்களின் பார்வைக்கு பதிவு செய்கிறேன் 

அஹ்மத் ஜம்சாத்:
அஸ்ஸலாமுஅழைக்கும்
மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
வஅலைகுமுஸ்ஸலாம் 

அஹ்மத் ஜம்சாத்:
மவ்லவி நீங்கள் ஜமாதுல் முஸ்லிமீன் இயக்கத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்,,,,,,இது உண்மையா?

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
இல்லை விலகவில்லை. ஆனால் அமீருடன் சில கருத்து வேறுபாடு எனக்குள்ளது 
அஹமத் ஜம்சாத்:
அவற்றில் ஒருசிலவற்றை சொல்ல முடியுமா? 

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
ஆம்,,ஒன்று: சில லஈபான ஹதீஸ்களை பாகிஸ்தான் அமீர் கூடும் என்கிறார் அதை நான் மறுக்கின்றேன்,,உதாரணம் மரணித்தவர்களுக்கு யாசீன் ஓதும் ஹதீஸ்,,,,,,,,,மரணித்தவர்களுக்கு யாசின் ஓதுவது பித்அத் என்று நாம் கூறுகிறோம்,,,,பாகிஸ்தான் அமீர் அது சுன்னத் என்கிறார்,,, இரண்டு பெண்கள் கண்களையும் மூட வேண்டும் என்பது எமது கொள்கை. ஆனால் பாகிஸ்தான் அமீர் அதை கூடாது என்கிறார். இன்னும் கிட்டத்தட்ட 25 விடயங்களில் எமக்கு அமீருடன் கருத்து வேறுபாடு உள்ளது 

அஹ்மத் ஜம்சாத்:
இப்போது எனக்கு ஒரு விடயம் சொல்ல முடியுமா?

ஒருவர் ஒரு பாவத்தை கண்டும் மனதாலும் தடுக்கவில்லை வில்லை என்றால் அவர் காபிரா? 

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
ஆம்! மனதால் செய்வதுதான் ஈமானின் கடைசி நிலை. எனவே அதை செய்யாதவர் காபிர்,, 

அஹமத் ஜம்சாத்:
அப்படி என்றால் ஒருவர் ஒருவரை அடிக்க அதை பார்த்த ஒருவர் அதை தடுக்காமல் அவரும் சேர்ந்து அடித்தால் அவர் காபிரா?அதே போன்று ஒருவர் மீது எச்சி துப்பி அதை அவர் தடுக்காமல் அவரும் சேர்ந்து எச்சில் துப்பினால் அவர் காபிர்தானே?

இந்த ஹதீஸை நீங்கள் விளங்வதுபோன்று விளங்கினால் அப்படி முடிவு எடுக்க முகாந்திரம் உள்ளதே? உங்களின் பதில் என்ன? 

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான் :
பாவமான விடயங்களுக்கு இப்படி முடிவு எடுக்க முடியாது. பித்அத் போன்ற விடயங்களுக்கு குப்ர் என்று சொல்ல முடியும் 

அஹ்மத் ஜம்சாத் :
அப்படி என்றால் ஜமாத்தே இஸ்லாமி கூட்டு துஆ என்ற பித்அதை தப்லீக் பள்ளிகளில் ஓதுகின்றனர். அவர்கள் காபிரா? 
மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
சந்தேகமே இல்லை அவர்கள் காபிர்கள் தான் .

அஹ்மத் ஜம்சாத்:
அவர்கள் அந்த பாவத்தை மனதாலும் தடுக்கவில்லை என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? மனதால் வெறுக்கும் விடயங்கள் மனிதர்களால் அறிய முடியாது. அல்லாஹ்வே அதை அறிவான் என்ற கருத்தைகொண்ட ஒரு ஜமாஅத்துல் முஸ்லிமீன் சகோதரர் நான் ஜமாஅதே இஸ்லாமி கூட்டு துஆவை மனதாலும் வெறுக்கவில்லை என்று சொன்னதை நீங்கள் அவர்கள் மனதாலும் வெறுக்கவில்லை என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்? அல்லாஹ் மட்டும் அறியும் விடயம் அல்லவா? இந்தவிடயம் என்று என்னை குற்றம் சாட்டுகின்றார். ,,,,இது சரியா? 

இது பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான் :
அவர் அப்படி சொல்லி இருப்பார் என்று நினைக்கவில்லை 

அஹ்மத் ஜம்சாத் :
நான் அவருக்கு அகம் சம்பந்தப்பட்ட சிலவிடயங்களை சில வெளிப்பாடுமூலம் அறிந்துகொள்ள முடியும் என்று சில உதாரணங்களை கூறி உள்ளேன்

உதாரணம் :
வெட்கம் ,கோபம்,விருப்பு ,வெறுப்பு,,இந்த அடிப்படையில்தான் ஜமாஅதே இஸ்லாமி கூட்டு துஆவை தடுக்காமல் தப்லீக் பள்ளிகளில் ஓதிவருகின்றனர். எனவே அவர்கள் வெளிரங்கமாக நிர்பந்தம் இன்றி ஓதுவதனால் அவர்கள் அந்த பாவத்தை மனதாலும் வெறுக்கவில்லை என்று நான் முடிவெடுத்தது சரி என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன? 

மவ்லவி ஹிபதுர்ரஹ்மான்:
நீங்கள் விளங்கியவாறு அவர்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை விளங்கி கொள்ள முடியும்,,,,,,,,,,, சரிதான் ,, 
இதுதான் உரையாடல் இப்போது இப்ஹாம் அவர்கள் என்ன பதில் சொல்கிறார் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம்,,,தனது தவறுகளை ஒப்புகொல்வாரா? இல்லை தனது ஜமாதேயே வழிகேடு என்பாரா? அவரின் பதிலுக்காக வழிமேல் விழி வைத்து காத்துகொண்டிருகின்றோம்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்