Pages

Saturday, April 16, 2011

ஈமானுக்கு வேட்டு வைக்கும் தஃலீம் தொகுப்பு

தப்லீக் தஃலீம் தொகுப்பு

தப்லீக் ஜமாஅத்தின் செல்வாக்குள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் ர்களிலும் பக்திப் பரவசத்துடன் ஈமானிய உணர்வை வழர்ப்பதற்காக வேண்டி தவறாது வாசிக்கப்படும் நூலே மவ்லானா ஸகரிய்யா ஸாஹிப் என்பவரால் எழுதப்பட்ட அமல்களின் சிறப்பு என்ற பெயரில் பிரபல்யம் பெற்றுள்ள தஃலீம் தொகுப்பாகும். ஈமானிய உணர்வை உயிர்ப்பிப்பதனை நோக்காகக் கொண்டு வாசிக்கப்படும் இந்நூல் உண்மையில் ஈமானை இழக்கச் செய்யும் பல நச்சுக் கருத்துக்களை தன்னகத்தே கொண்ட ஒரு புத்தகமாகும். குர்ஆன் ஹதீஸ் விளக்கம் என்ற போர்வையில் வழிகெட்ட ஸூபியாக்களினதும் யஹூதிகளினதும் சிந்தனைகளை பாமர மக்களுக்கு மத்தியில் விதைக்கும் விஷத்துளிகளே இதன் கருவாக அமைந்துள்ளது. அல்லாஹ் - றஸூல் என்று ஆரம்பித்து பெரியார்களையும் மகான்களையும் நபியை விட உயர்த்தி வர்களை அல்லாஹ்வாக்கி அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் ஆபத்தான அபத்தங்களே இந்நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது. இலங்கை வாழ் முஸ்லிம்களால் குறிப்பாக தப்லீக் ஜமாஅத் அன்பர்களால் பெரிதும் மதிக்கப்படும் இத்தப்லீக் தஃலீம் தொகுப்பில் நம்பிக்கை வைத்து செயற்படும் பொது மக்களை விழிப்படையச் செய்து வர்களின் ஈமானை பாதுகாக்கும் நன்நோக்கில் தப்லீக் தஃலீம் தொகுப்பு குறித்த இத்தொடரை அழைப்பு இதழ் தொடராக வெளியிட தீர்மானித்துள்ளது. நடுநிலைக் கண்ணோடு இதனை அணுகி தங்கள் நிலைப்பாடுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு அன்பர்களை பண்பாய் வேண்டி எம் முதல் தொடரை ஆரம்பிக்கின்றோம்.

தஃலீம் தொகுப்பில் சுஃபியாக்கள் என்ற கும்பலைப் புகழ்ந்து புனைவதிலேயே பக்கங்களை விரயம் செய்துள்ளனர். திருக்குh;ஆனில் உண்மையாளர்கள் என்று கூறப்படுவது சுபியாக்களைத் தான் குறிக்கின்றதாம். அவர்களின் வழிகள் ஞான வழிகளாம். நிலைகள் ஞான நிலைகளாம். படித்தரங்கள் ஞானப்படித்தரங்களாம். அவர்களின் பார்வை ஞான திருஷ்டி கொண்டதாம். பயிற்சி ஆத்மார்த்தப் பயிற்சியாம். அவர்கள் ஞான மேதைகளாம். அவர்களுக்கென இஸ்லாத்தில் தனிப்பட்ட தியான (திக்ர்) முறைகள் உள்ளனவாம்.

ஆனால் வர்களின் இஸ்லாமியச் சாயம் புசிய துர்ப்போதனைகளை மாற்றார்கள் படித்தால் எள்ளி நகையாடுவார்கள். இஸ்லாத்தில் சிறிதளவு பிடிப்புள்ளவனும் கூட இந்த நூலை நம்ப மாட்டான். இவர்கள் ஞான மேதைகளுமல்லர். வர்களை ஏற்றிப் போற்றியவர் ஹதீஸ் கலை மேதையுமில்லை என்பதற்கு அத்தாட்சிகளாக அமைந்த ஒரு சில அபத்தங்களை அறியுங்கள்.

அபத்தம்: 01

தொழுகை என்பது மறதியான நிலையில் வேறு எண்ணங்கள் உள்ளத்தில் இருக்கும் நிலையில் நிகழவே முடியாது. மறதியான நிலையில் தொழுவது ஜூரத்தால் பீடிக்கப்பட்டவன் உளறுவது போன்றதாகும் என்று சுஃபியாக்கள் மொழிந்தார்கள்.                                             (தஃலீம் தொகுப்பு தொழுகையின் சிறப்புகள் பக்கம் - 149)

ஞானவான்களின் ஞானக் கருத்தைக் கவனித்தீர்களா? தொழுகையில் மறதியே வரக் கூடாது. அத்தொழுகை செல்லாது. அவ்வாறு தொழுபவன் உளறுவாயன் என்ற வாசகங்களை நாம் ஏற்றால் விளைவு என்னவாகும்? தொழுகை என்பது இறைவனுடன் நாம் புரியும் உரையாடலாகும். அதில் மறதி குறுக்கிடுவது நம் சக்திக்கு மீறியதாகும். நம்மையும் மீறி ஏற்படும் மறதியால் நம் தொழுகை பாழாகும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை. அவன் தூதரும் கூறவில்லை. ஆனால் இந்த ஞானவான்கள் (?) தங்களின் வழிகளையும் நிலைகளையும் படித்தரங்களையும் உன்னதப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தான் இவ்வாறு கூறியுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா? வர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் நபித்தோழர்களை விடவும் பக்தியில் நிறைந்தவர்களா? நபிகளாருக்கும் நபித்தோழர்களுக்கும் பல கட்டங்களில் தொழுகைகளில் மறதி ஏற்பட்டிருக்கின்றது. இறைத் தூதரையும் நபித்தோழர்களையும் ஜூரத்தால் பீடிக்கப்பட்டு உளரிவர்கள் என்று மறைமுகமாகச் சாடுகின்ற இந்த உளரலை நம்பலாமா?

1.   எங்களுக்கு ழுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் நடு இருப்பில் இராமல் மூன்றாம் ரக்அத்திற்கு எழுந்து விட்டார்கள். அவர்களுடன் மக்களும் எழுந்து விட்டார்கள். கடைசியில் ஸலாம் கொடுக்கு முன்னர் அல்லாஹூ அக்பர் என்று கூறி (நிலைக்கு வராமல்) அமர்ந்த நிலையிலேயே (மறதிக்குப் பரிகாரமான) இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) நூல்: புகாரி

2.   நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ழுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்துகளாகத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதரே! ரக்அத்துகளின் எண்ணிக்கை (இறைவனால்) கூடுதலாக ஆக்கப்பட்டு விட்டதா? ஐந்து ரக்அத்துகள் தொழவைத்தீர்களே? என்று தோழர்கள் கேட்டார்கள். உடன் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தனர். பின்னர் தோழர்களிடம் நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களுக்கு மறதி ஏற்படுவது போன்று எனக்கும் ஏற்படலாம். எனவே நான் மறந்து விட்டால் நினைவு படுத்துங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)   நூல்: புகாரி - அஹ்மத்

3.   நபி (ஸல்) அவர்கள் ழுஹர் அல்லது அஸர் தொழுகையைத் தொழவைக்கையில் இரண்டு ரக்அத்துகளோடு நிறுத்திக் கொண்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பின்னர் எழுந்து சென்று ஒரு மரக்கட்டையில் சாய்ந்து கொண்டார்கள். தொழுகை சுருக்கப்பட்டு விட்டது என்று தோழர்கள் பேசிக் கொண்டு சென்றனர். தோழர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் நான் மறக்கவுமில்லை. தொழுகை சுருக்கப்படவுமில்லை என்று பதிலளித்தார்கள். அத்தோழரோ இரண்டில் ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என்று மீண்டும் கூறினார். உடன் நபியவர்கள் அருகிலிருந்த தோழர்களிடம் வர் சொல்வது உண்மையா? என்று விசாரித்ததும் தோழர்கள் உண்மை தான் என்றார்கள். நபியவர்கள் எழுந்து சென்று விடுபட்டவற்றைத் தொழுதார்கள். இறுதியில் (மறதிக்குப் பரிகாரமான) இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி)   நூல்: புகாரழ - முஸ்லிம்

4.   நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மறதி போன்று நபித்தோழர்கள் ஸூபைர் (ரலி) முஆவியா (ரலி) ஆகியோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நூல்: அஹ்மத்

நல்லோரே! மறதி பற்றிய பல்வேறு நபி வழிக் குறிப்புகள் இருந்தும் இந்த மூடர்களின் கூற்றை போற்றுகின்றவர் ஹதீஸ் கலை நிபுணர் என்று போற்றப்படலாமா? ஸஜ்தா ஸஹ்வு என்று மறதிக்குப் பரிகாரமாக இரண்டு ஸஜ்தாக்கள் - எல்லா மத்ஹபுக்காரர்களும் ஒப்புக் கொண்ட கரிய்யா ஸாஹிபை ஏற்றுக் கொண்ட தப்லீக் அன்பர்களும் செய்கின்ற ஸஜ்தா ஸஹ்வு தொழுகையில் மறதி ஏற்படும் என்பதை தெளிவாக நிரூபிக்க வில்லையா? ஒரு வேளை தப்லீக் கூட்டத்தார் செய்யும் ஸஜ்தா உளறலுக்கோ என்னவோ?

அபத்தம்: 02

குர்ஆன் ஷரீஃபின் கருத்துக்கள் அனைத்தும் சுரதுல் ஃபாதிஹாவிலும் சுரதுல் ஃபாதிஹாவின் கருத்துக்கள் அனைத்தும் பிஸ்மில்லாஹ்விலும் பிஸ்மில்லாஹ்வில் இருப்பவை அனைத்தும் அதன் பே யிலும் பே என்பதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அதன் புள்ளியிலும் இருக்கின்றன என்று சுஃபியாக்கள் கூறினார்கள்.

(தஃலீம் தொகுப்பு அமல்களின் சிறப்புகள் பக்கம்: 257)

முழுக் குர்ஆனின் சிறப்புகளும் ஃபாத்திஹாவின் மாண்புகளும் பிஸ்மில்லாஹ்வின் மேன்மைகளும் இறைத் தூதர் வழியாக எல்லோரும் அறிந்த உண்மைகள் தாம். ஆனால் முழுக் குர்ஆனின் ஒட்டு மொத்தக் கருத்துக்களும் பே என்பதற்குள் அடங்கியுள்ளன என்ற தத்துவம்(?) வர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? பே என்பது ஒரு வார்த்தை கூட அல்லவே! ஒரு எழுத்துத் தானே! அதற்குள் முழுக் குர்ஆனின் ஒட்டு மொத்தக் கருத்துக்களும் அடங்கியுள்ளன என்ற மறைவு  இவர்களுக்கு எப்படி வெளிப்பட்டது? பே என்ற எழுத்தில் முழுக் குர்ஆனும் அடங்கியுள்ளதாகக் கூறும் இவர்கள் குர்ஆனை ஓதாமல் பே! பே! என்று சொன்னாலே போதும் என்கிறார்களா? தொழுகையில் எப்படி ஓதுகிறீர்கள்? வெறும் பே! பே! தானா?

அத்தோடு நின்றார்களா? முழுக் குர்ஆனின் ஒட்டு மொத்தக் கருத்துக்களும் பே என்பதன் புள்ளிக்குள் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளனரே. இந்த மறைவும் இவர்களுக்கு எப்படி வெளிப்பட்டது? அல்லாஹ்வின் தூதர் காலத்தில் குர்ஆனுக்குப் புள்ளியே இருந்ததில்லை. பிற்காலத்தில் ஒரு மன்னர் தான் குர்ஆனின் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இட்டார் என்ற உண்மை கூட இவர்களுக்குத் தெரிய வில்லை. நபிகளார் ஓதிய முழுக்குர்ஆனின் கருத்துகள் அனைத்தும் பிற்காலத்தில் இடம் பெற்ற புள்ளிக்குள் அடங்கியுள்ளன என்ற கருத்து அறியாமையின் வெளிப்பாடா? அல்லது உளறலா? முழுக் குர்ஆனையும் பே! பே! என்று கூறியே ஓதும் இவர்கள் புள்ளியை உச்சரிக்கும் ஞான ரகசியத்தைச் சொல்லித் தருவார்களா?

அபத்தம்: 03

நோன்பு நோற்பவர் ஹர் உணவு உட்கொள்ளல் கூடாது. ஏனெனில் பசித்தும் தாகித்தும் இருக்க வேண்டிய நோன்பாளி ஸஹர் உணவு கொள்வது நோன்பின் நோக்கத்திற்கு எதிரானது என்று சுஃபியாக்கள் கூறினார்கள்.

(தஃலீம் தொகுப்பு ரமழானின் சிறப்புகள் பக்கம்: 354)

நோன்பு வைக்கச் சொன்ன அல்லாஹ்வை விடவும் அவனது தூதரை விடவும் இவர்கள் அதிமேதாவிகளா? நபிகளாருக்குப் புரியாத அரிய தத்துவம் இவர்களின் சிந்தனையில் உதித்து விட்டதா? ஹர் உணவு பரக்கத்தானது என்று கூறி ஸஹர் உணவு உட்கொள்ளத் தூண்டிய நபிகளாருக்கே எதிராக உளரிக் கொட்டிய பேதைகளை ஞான மேதைகள் என்று உயர்த்திப் போற்றும் ஜகரிய்யா ஸாஹிப் ஹதீஸ் கலை நிபுணரா? ஹதீஸ் கொலை நிபுணரா?

அபத்தம்: 04

ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்டார்கள் என்று கூறும் வழக்கம் தமிழில் உண்டு. இது இந்த சுஃபியாக்களுக்கு மிகவும் பொருந்தும். இவர்கள் தங்களுக்கென புதிய பாதை அமைத்துக் கொண்டு அது பல படித்தரங்களைக் கொண்டது என்றெல்லாம் கூறுவார்கள். இந்தப் படித்தரங்களை அடைந்தவன் இறைவனையே உலகில் பார்த்த வண்ணம் இருப்பான் என்றும் பிதற்றுவார்கள்.

(பார்க்க: தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் பக்கம்: 621)

எனவே இந்தப் படித்தரங்களை அடைய விருப்பம் கொள்ளும் ஒரு அறிஞர் மார்க்கச் சேவைகள் புரியாமலும் குர்ஆன் ஓதாமலும் சில காலங்களைக் கழிக்க வேண்டும் என்றெல்லாம் உளறுவார்கள்.

(பார்க்க: தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் பக்கம்: 799)

திருமறை வசனங்கள் திருத்தூதரின் உயர் மொழிகள் ஆகியவற்றுக்கு முரணாகவும் எதிராகவும் வழி காட்டிய இவர்களைப் புகழ்ந்தெழுதித் தான் கெட்டதோடு பள்ளிவாயிலில் அமர்ந்து மூடப் பக்தியோடு இந்நூலைப் படிப்போரையும் கெடுப்பதற்காகவே சுஃபிச விஷக் கருத்துகளுக்கு இந்நூலில் இஸ்லாமிய வர்ணம் புசப்பட்டுள்ளது.

ஷைஹூல் ஹதீஸ் என்று வர்ணிக்கப்படும் ஜகரிய்யா ஸாஹிப் அவர்களின் மார்க்கத் தெளிவின்மைக்கும் இவர் ஹதீஸ்களில் புரிந்த தில்லு முல்லுகளுக்கும் மேலும் சான்று பகரும் மறுக்க முடியாத சில குறிப்புகளையும் படியுங்கள்.

1.லைலதுல் கத்ர் என்ற இரவு எந்த இரவு என்பதில் 50 கருத்துக்கள் உள்ளன. (ரமழானின் சிறப்புகள் பக்கம்: 374)

2.அந்த இரவை ஞானவான்களின் தலைவர் முஹ்யித்தீன் இப்னு அரபீ ஷஃபான் மாதத்திலேயே இரண்டு தடவைகள் கண்டார்.                                                   (ரமழானின் சிறப்புகள் பக்கம்: 395)

3.அந்த இரவில் (புமிக்கு) மலக்குகளும் ரூஹூம் இறங்குகின்றார்கள் என்ற இறை வசனத்தில் ரூஹ் என்பதற்குப் பல விளக்கங்கள் உள்ளன. அவற்றில் ஈஸா (அலை) அவர்கள் மலக்குகளுடன் (அந்த இரவில்) இறங்குகின்றார்கள் என்ற ஒரு கருத்தும் உண்டு.                                         (ரமழானின் சிறப்புகள் பக்கம்: 376)

லைலதுல் கத்ர் என்னும் புனித இரவில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது (97:1). ரமழான் மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது (2:185) என்று குர்ஆனின் இரு வசனங்கள் உணர்த்துகின்றன. அந்த இரவு ரமழான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு இரவாகும் என்று (புகாரியில் உள்ள) நபிமொழி உணர்த்துகின்றது. இறை வசனங்களையும் நபிமொழிகளையும் படிக்கின்ற சாதாரண இறை விசுவாசிக்குத் தெரியும் உண்மையைக் கூட இந்த ஹதீஸ் கலை நிபுணர் (?) புரிந்து கொள்ள வில்லை. குர்ஆன் ஹதீஸின் தெளிவான வழிகாட்டுதலுக்கு எதிராக ஐம்பது கருத்துக்கள் உள்ளன என்று நச்சுக் கருத்தைத் துணிந்து திணித்திருக்கிறார். ரமழானில் வரும் இரவை ஷஃபானில் கண்டாராம் ஒருவர்! அதுவும் இரண்டு தடவைகள் கண்டாராம். இதைப் பெரிய மார்க்க ஆதாரமாக நம்பிப் பள்ளி வாயிலில் அமர்ந்து பயபக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் குர்ஆன் ஹதீஸ் உண்மைக்கு என்ன பதில் கூறுவார்கள்? லைலதுல் கத்ரில் (இரவில்) மலக்குகளுடன் ஒவ்வொரு வருடமும் ஈஸா (அலை) புமிக்கு வருகை தருகிறார்கள் என்று உளறியுள்ளதை நம்பும் இவர்கள் வானத்தின் பால் உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் யுக முடிவு நாளுக்கு நெருக்கமான காலத்தில் தான் புமிக்கு வந்து வாழ்வார்கள் என்ற நபி மொழிகளை என்ன செய்வார்கள்?

வர்கள் கூறுவதை ஏற்றால் நபிகளாரின் காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த இரவில் ஈஸா (அலை) வந்து செல்கின்றார்கள் என்று நம்ப வேண்டி வரும். இவ்வாறு இந்த வசனத்திற்கு இவர் கொடுத்த விளக்கத்திற்கு ஆதாரமுண்டா? இறை வசனத்திற்கு முரணாக மனம் போன போக்கில் இறைத் தூதரின் கூற்றையும் அலட்சியப்படுத்தி மார்க்கத்தின் உண்மைகளோடு விளையாடுகிறார். இந்தத் துணிச்சலுக்குக் காரணம் என்ன? வேறொன்றுமில்லை. சுஃபியாக்கள் என்ற கபோதிகளின் சகவாசம் தான் காரணம். எனவேதான் இந்த சுஃபியாக்களின் பாத அணிகளை நாம் சுமந்து சேவகம் புரிய வேண்டுமென்று எழுதியுள்ளார்.

(பார்க்க: திக்ரின் சிறப்பு பக்கம்: 649)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்