Pages

Friday, November 4, 2011

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்.


இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXR0tVipAvRRuVGBzC8NY0oIMlCj0f4xEJZC7UW_EyfEL61hqyohLHLX3kldd_ftU-RHjIhfHV9MnVyVNTUhdkhmdVc4OEEECgtFqPcdeBmBCvcVRvtDyXZHgX5raLXUJYKJ3mUaJenmkj/s400/question-mark.jpg
புனிதமிக்க ரமழான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்டநிலையில் இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும்அழ்ஹா (ஹஜ்) பண்டிகை நம்மை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே அதுதொடர்பான விஷயங்களை வெள்ளி மேடைகளில் மக்களுக்குவிளக்கும் முறை நம்மிடையே காணப்படுகிறது. இது ஒரு நல்லவழமை என்றாலும் இத்தருணங்களில் மார்க்கத்தில் இல்லாதகட்டுக்கதைகளும் புருடாக் களும் கட்டவிழ்த்து விடப்படுவது மிகவும்வேதனைக்குரியது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்பை நம் இஸ்லாமியசமுதாயம் நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. திருமறைக் குர்ஆனும்நபி (ஸல்) அவர்களின் வாய்மைக் கருத்துக்களும் அவர்களின்சிறப்பை சிகரத்தின் உச்சிக்கே உயர்த்தி விடுகிறன.

இவ்விரண்டில் சொல்லப்பட்டக் கருத்துக்களே நம் ஈமானிற்குஉகந்ததாகவும் நம் நடவடிக்கைகளைச் சீர்திருத்திக் கொள்வதற்குப்போதுமானதாகவும் உள்ளது. ஆனால் மார்க்கத்தின் அடிப்படையில்கோட்டை விட்ட அறிஞர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்தியாகத்தை மிகைப்படுத்தி குர்ஆன் ஹதீஸில் இல்லாததகவல்களைக் கூறியுள்ளார்கள்.

தனக்குப் பிடித்தமான ஒரு நிகழ்வை மனிதன் வர்ணிக்கும் போதுஅதனுடைய யதார்த்தத்தைக் கூறாமல் இவனுடைய கற்பனையில்உதிப்பவற்றையெல்லாம் கூறுவான். இந்த அடிப்படையில் தான்மகான்கள் அவ்லியாக்களின் கட்டுக் கதைகள் எல்லாம் பரவின.அக்கதைகளால் வழி கெடுத்தவர்களும் வழிகெட்டவர்களும் பலர்.

இந்தப் படுமோசமான செயல் இப்ராஹீம் நபி விஷயத்திலும்அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைச் சாதாரணமானகுற்றமாக எடுக்க இயலாது. இக்கருத்துக்கள் மார்க்கத்தின் பெயரால்பரப்பப் படுவதால் மறுமை நாள் வரை நிலைத்து நிற்கின்றதாகிவிடும். எனவே இந்த புருடாக்களைப் பற்றி நம் சமுதாயம் தெரிந்துகொள்வது மிக மிக அவசியம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களைஅறுப்பதற்காக முகம் குப்புறக் கிடத்தி விட்டு அறுக்க முற்பட்டார்கள்.ஆனால் அவர்கள் கையிலிருந்த கூர்மை வாய்ந்த கத்தி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுக்கவில்லை. இதனால் கோபமடைந்தஇப்ராஹீம் நபியவர்கள் கத்தியைத் தூக்கி பாறையில் எறிந்தார்கள்.உடனே பாறை இரண்டாகப் பிளந்தது.

இவ்வாறு அந்தப் புருடா நீண்டு கொண்டு செல்கிறது. சில செய்திகள்பின்வருமாறும் புனையப்பட்டுள்ளன.

இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்விற்கு அறுத்துப்பலியிடுவதாக இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறிய போதுஇஸ்மாயீல் (அலை) சொன்னார்களாம். "என் தந்தையே! நீங்கள்அறுக்கும் போது நான் குலுங்காமல் இருப்பதற்காக நன்கு என்னைகயிற்றால் கட்டிக் கொள்ளுங்கள். இரத்தம் எதுவும் என் ஆடையில்படாதவாறு அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதைஎன் தாய் சாரா பார்க்கும் போது அது அவர்களுக்குக் கவலையூட்டும்.என்னை நீங்கள் அறுக்கும் போது முகத்தைப் பூமியை நோக்கிவையுங்கள். ஏனென்றால் என் முகத்தைப் பார்த்தால் நீங்கள்இரக்கப்பட்டு என்னை விட்டு விடுவீர்கள். அறுத்த பின்பு என் தாய்சாராவுக்கு நான் சலாம் சொன்னதாகக் கூறி விடுங்கள்'' என்றுஇஸ்மாயீல் (அலை) அவர்கள் சொன்னார்களாம்.

இப்ராஹீம் நபியும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அழுதார்களாம்.பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்தபோது கழுத்து அறுபடவில்லையாம். ஏனென்றால் அல்லாஹ்இஸ்மாயீல் (அலை) அவர்களின் கழுத்தில் செம்பினால் ஆனதகட்டை ஏற்படுத்தி விட்டான் என்று கதை சொல்கிறார்கள்.
இந்நிகழ்வுகள் எல்லாம் உண்மையாக இருந்தால் அதை அல்லாஹ்திருக்குர்ஆனில் தெளிவு படுத்தியிருப்பான்.

இவ்விருவரின் தியாகத்தைத் தெரிந்து கொண்டுநாம் படிப்பினைபெற வேண்டும் என்பதற்காக அந்த வரலாற்றை நமக்குதிருக்குர்ஆனில் சொல்கிறான்.

அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்திகூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்)அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதுபோல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச்சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.

"என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்''என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக்கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்திவிட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலிவழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.

இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப்பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச்செய்தோம்.

இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்குஇவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமதுஅடியார்களில் ஒருவர்.
(அல்குர்ஆன் 37:101-111)

மேற்கூறப்பட்ட செய்திகள் உண்மை என்றிருந்தால் அதை அல்லாஹ்இந்த இடத்தில் குறிப்பிட்டிருப்பான். ஏனென்றால் இங்குஅவர்களுடைய சிறப்பைப் பற்றிக் கூறுகிறான். அதைக் கூறுவதற்குதகுதியான இடம் கூட இது தான். இதிலிருந்து இந்தச் செய்திகள்உண்மையானவை அல்ல என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்ராஹீம் நபியின் தியாகத்தை எடுத்துக் கூறும் இந்த வசனத்தில், "இருவரும் கீழ்ப்படிந்து மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, 'இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைபடுத்தி விட்டீர். நன்மைசெய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரைஅழைத்துக் கூறினோம்'' எனக் கூறப்படுகிறது.

"கிடத்திய போது கூப்பிட்டோம்என்று இறைவன் கூறுவது இப்ராஹீம்(அலை) அவர்கள் அறுப்பதற்கு ஆயத்தமாகிய போதே இறைவன்வேண்டாம் எனக் கூறி விட்டான் என்பதை தெளிவாக்குகிறது. இந்தவசனத்தை நன்கு கவனித்தாலே இவர்கள் கூறுவது அனைத்தும்கட்டுக் கதைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இதுபோன்று ஏராளமான பொய்கள் இப்ராஹீம் நபியின் சிறப்பையும்இஸ்மாயீல் (அலை) அவர்களின் அருமையையும் உயர்த்தும்நோக்கில் புனையப்பட்டுள்ளன. இவற்றில் சில நம்முடையகவனத்திற்கு வந்துள்ளது. பல இன்னும் நம்மை அடையாமல்இருக்கலாம்.

எனவே பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொண்டால்அதை அளவுகோலாகப் பயன்படுத்தி எளிதில் இக்கதைளைவிரட்டிவிடலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை ஒன்றுஅவர்கள் காலத்தில் வாழ்ந்த ஒருவராவது கூற வேண்டும்.இல்லாவிட்டால் அல்லாஹ் தன்னுடைய நபிக்கு வஹியின் மூலம்இதைத் தெரிவித்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் விடுத்துமூன்றாவது ஒரு வழியில் அவர்கள் பற்றிய செய்திகளை நம்மால்அறிந்து கொள்ள இயலாது.

இப்ராஹீம் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும்தற்போது இல்லை. அல்லாஹ்வோஅவனது தூதரோ இவர்கள்கூறுவது போல விளக்கியுள்ளார்களாஎன்றால் அதுவும் இல்லை.இந்த இரண்டு அளவுகோலும் இல்லாத போது எப்படி இவற்றைஏற்றுக் கொள்ள முடியும்?

இப்ராஹீம் நபியின் இந்த வரலாறு குறித்து அல்லாஹ்வும் அவனதுதூதரும் கூறியிருக்கின்ற செய்திகளே ஒருவர் படிப்பினைபெறுவதற்குப் போதுமானதாகும்.

உண்மையைச் சொல்வது முக்கியமல்ல. மாறாக அந்தஉண்மையுடன் பொய்யான எந்தக் கருத்துக்களையும் கலக்காமல்தூய்மையான முறையில்சரியான தகவல்களை மாத்திரம்எடுத்துரைக்க வேண்டும். இதைப் புரிந்து செயலாற்றும் படி பின்வரும்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அறிந்துகொண்டே சரியானதை தவறானதுடன் கலக்காதீர்கள்.உண்மையை மறைக்காதீர்கள். 
(அல்குர்ஆன் 2:42)

இன்றைக்கு இஸ்லாம் மாற்று மதத்தினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு இது போன்ற ஆதாரமில்லாத தகவல்களும்காரணமாக இருக்கின்றன. அடிப்படை இல்லாமல் பரப்பப்படும்கருத்துக்கள் பலரால் அதிக விமர்சனத்திற்கு ஆளாகின்றது. மாற்றுமதத்தார் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் ஆதாரமற்ற இந்தவிஷயங்களைக் குறித்தே பெரும்பாலும் இருக்கின்றது.

மார்க்கத்தில் இல்லாத கருத்தைக் கூறுவதற்கு எவருக்கும்எள்ளளவும் அனுமதி கிடையாது என்பதைப் பின்வரும் செய்தியில்நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்கள்.

"நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச்செய்வது போல் உளூச் செய்து கொள்.  பின்னர் உனது வலது கைபக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.  பின்னர், "யா அல்லாஹ்! நான்எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன்.  என்னுடையகாரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப்பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச்செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிரவேறிடம் இல்லை.  யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தைநான் நம்பினேன்.  நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்'என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீசொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீதூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய்.  இந்தப் பிரார்த்தனையைஉனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்பஓதிக் காண்பித்தேன். அப்போது "நீ அனுப்பிய உனது நபியையும்நம்பினேன்என்று சொல்வதற்குப் பதிலாக "உனது ரசூலையும்நம்பினேன்என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "இல்லை. நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன் என்று கூறுவீராக''என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 247

இந்த ஹதீஸில்நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்றுநபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடியசொல்லாக இருந்தாலும்நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்குமாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

ஒரே அர்த்தத்தைக் கொண்ட வார்த்தையாக இருந்தாலும்பெருமானார் அவர்கள் சொல்லிக் கொடுத்ததை நாம் சொல்லவேண்டுமே தவிர நம் இஷ்டத்திற்குக் கூற இயலாது. மார்க்கம்தொடர்பாக எந்தச் செய்தி நமக்குக் கிடைத்தாலும் அதற்கு ஆதாரம்இருக்கின்றதாஎன்று சோதித்தறிந்து ஏற்க வேண்டும்.

காதில் விழுபவைகண்ணில் படுபவை இவற்றையெல்லாம்பரப்பினால், "என் மீது பொய் சொல்பவர் நரகத்தில் தனது இருப்பிடத்தை ஆக்கிக் கொள்ளட்டும்என்று நபி (ஸல்) அவர்கள்சொன்னார்களே அந்த எச்சரிக்கைக்குத் தகுதியானவர்களாக நாம் ஆகிவிடுவோம். பெருமானாரின் மீது பொய் சொன்ன குற்றத்திற்குப்பொறுப்பேற்க வேண்டி வரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான்கேட்டவற்றையெல்லாம் ஒருவன் சொல்வது அவன் பொய்சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி)
நூல்: முஸ்லிம் 6

இப்ராஹீம் நபி குறித்த இந்தக் கட்டுக் கதைகளை நபி (ஸல்)அவர்கள் சொல்லவில்லை என்பது சில அறிஞர்களுக்குத் தெரியும்.ஆனாலும் கருத்து நன்றாக இருப்பதால் சொல்லி வருவார்கள்.இவ்வாறு தெரிந்த பிறகும் அதை விட்டு விலகாமல் சொல்லிவருபவர்களும் பெருமானாரின் மீது அபாண்டத்தைக் கூறியகுற்றத்திற்குத் தகுதியாவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்யென்றுகருதுவதற்குச் சாத்தியமான ஒரு ஹதீஸை என்னிடமிருந்து யார்அறிவிப்பாரோ அவர் பொய்யராவார்.
அறிவிப்பவர்: முஹீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1

எனவே இறைத்தூதர்கள் மீது இது போன்ற இல்லாத கதைகளையும்கப்ஸாக்களையும் கூறுவதை விட்டு நாம் விலக வேண்டும். மார்க்கச்சொற்பொழிவுகள் என்ற பெயரில் ஆதாரமில்லாத கதைகளைக் கூறும் இந்தச் சபைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

1 comment:

  1. தெரிந்து கொள்ளுங்கள்.

    இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    1.****
    அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
    ****


    2. **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

    3. **** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
    மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
    ****

    .

    ReplyDelete

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்