Pages

Friday, November 4, 2011

இணையற்ற இறைவனின் ஹஜ்ஜூப் பிரகடனம்!

நுழைவாயில்
இணையற்ற இறைவனின் ஹஜ்ஜூப் பிரகடனம்!
இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது, இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம். நீங்கள் திருந்திக் கொண்டால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் அல்லாஹ்வை வெல்ல முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். துன்புறுத்தும் வேதனை பற்றி (ஏக இறைவனை) மறுப்போரை எச்சரிப்பீராக!(9 : 3)
உலக முஸ்லிம்கள் அனைவரும் உளப்புலகாங்கிதம் அடையக் கூடிய உன்னதத் தினங்களில் ஒன்றே ஹஜ்ஜூடைய திரு நாட்கள் என்றால் மிகையாக மாட்டாது. தியாகம், ர்ப்பணம், கொள்கைப்பற்று உள்ளிட்ட உத்தமப் பண்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் எம் வாழ்வியல் ஒழுங்கில் பிரதிபலிக்கச் செய்யும் மகத்தானக் கடமைகளில் ஒன்றாகவே ஹஜ் திகழ்கிறது.
ஈமானிய உணர்வை ஊட்டி, உணர்ச்சிப் பிழம்பாக எம்மை மாற்றும் இந்த 'ஹஜ்உண்மையில் எம்மிடம் எதிர்ப்பார்ப்பது என்ன? இம்மகத்தான நாளில் நாம் எம் மனங்களில் பசுமரத்தாணி போல் பதிந்து, வாழ்வில் பற்றுருதியோடு ஏற்றுப்பின்பற்ற வேண்டிய அடிப்படை அம்சம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டிய தருணத்திலே இருக்கின்றோம்.
திருமறைக் குர்ஆனிலே, வல்லோன் அல்லாஹ் வனப்பான இத்தினத்தில் நம் உணர்வோடு இரண்டரக் கலக்க வேண்டிய கொள்கைப்பிடிப்பினை பின்வருமாறு பிரகடனப்படுத்துகின்றான். இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொண்டனர். இது, இம்மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரகடனம்.(9:3)
'ஹஜ்எனும் ஈகைத்திருநாளில் அல்லாஹ்வை இலாஹாஹ ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் வாழ்விலும், வாக்கிலும், சிந்தனையிலும் வெளிப்பட வேண்டிய ஓர் உணர்வே 'இணையை எதிர்ப்பதே இஸ்லாத்தின் இலக்கு! இணையிருப்பின் உறவில்லை!என்பதாகும். ஏகத்துவ நாதத்தை வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் ஓங்கி எதிரொலிக்கச் செய்யும் இவ்வுண்ணத தினத்தில், ஏகன் அல்லாஹ்வும், அவனது தூதரும் உலக மாந்தர் யாவருக்கும் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனம் 'இணைவைப்பை விட்டும் அல்லாஹ்வும் அவன் தூதரும் விலகிக் கொள்கின்றனர்என்பதாகும்.
மிகப்பெரும் அநியாயம் (31:13) என்றும், நிரந்தர நரகம்(9:17) என்றும், நன்மைகளை அழித்து விடும்(6:88) என்றும், சுவர்க்கத்தை ஹராமாக்கும்(5:72) என்றும், இறைவனால் மன்னிக்கப்படாத குற்றம்(4:48) என்றும் இறைவனால் வன்மையாக கண்டிக்கப்பட்ட மா பாதகச் செயலே 'இணைகற்பித்தல்ஆகும். இப்பாதகத்தைச் செய்யும் பாவிகளை விட்டும் ஒட்டும் உறவும் இன்றி விலகிக் கொள்வதே ஈமானிய நிலைப்பாடும், இறைவனின் வேண்டுகோளுமாகும்.
இந்த நிலைப்பாட்டை நாம் எடுப்பதாயின் 'இணைவைப்போர் யார்என்பதை முதலில் துள்ளியமாக அறிவது அவசியம். இதனை நாம் விளங்குவதாயின் நபியவர்களின் மக்கா காலத்துக்கு சற்று மீள வேண்டியிருக்கும். நபியவர்கள் சந்தித்த மக்கா சமுதாயத்திடம் காணப்பட்ட நம்பிக்கைகளை குர்ஆன் எமக்கு விபரிக்கிறது.
வானங்களையும், புமியையும் படைத்தவனும், சுரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் கேட்டால் அல்லாஹ்என்று கூறுவார்கள். (29:61)
நபியவர்கள் சந்தித்த மக்கா சமுதாயம் உலகத்தை படைப்பது, காப்பது, அழிப்பது, அனைத்து படைப்பினங்களையும் சிருஷ்டிப்பது, நோயை தருவது, அதனை நீக்குவது இவை அனைத்தும் அல்லாஹ் தான் செய்கிறான் என்று நம்பியிருந்தனர். ஆனாலும், அல்லாஹ் அந்த சமுதாயத்தை விழித்து முஷ்ரிக்குகள்என்கிறான். அல்லாஹ்வை நம்பியவர்களை முஷ்ரிக் என்று ஏன் கூறினான்? அவர்கள் செய்த இணைவைப்பு தான் என்ன? இக்கேள்விக்கு குர்ஆன் பின்வருமாறு பதிலளிக்கின்றது.
அவனையன்றி பாதுகாவலர்களை(அவ்லியாக்களை) ஏற்படுத்திக் கொண்டோர்அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்).(39:3)
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும்,நன்மையும் செய்யாத வற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். (10:18)
மேற்குறித்த வசனத்திலிருந்து அல்லாஹ்வை நம்பிய போதும் மக்கா சமுதாயம் முஷ்ரிக்என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
1)இறந்து போன அவ்லியாக்களிடம் சென்று பிரார்த்தித்தமை. 2)தங்களுக்காக அல்லாஹ்விடம் இந்த அவ்லியாக்கள் பரிந்து பேசுவார்கள் என்று நம்பியமை.
இவ்விரண்டு காரணங்களுக்காகவே அல்லாஹ் அவர்களை முஷ்ரிக்என்கிறான். இந்த இரு காரணங்களும் எந்த சமுதாயத்திடம் எக்காலத்தில் காணப்படினும் அவர்களும் முஷ்ரிக்குகளே! இந்த பண்புகளை எமது சமுதாயத்தில் காணப்படும் தரீகாக்கள், சுபியாக்கள், ர்ஹாக்கள் என்பவற்றோடு பொருத்திப்பாருங்கள்! நூற்றுக்கு நூறு சதவீதம் இவர்களிடம் மக்கா காபிர்களிடம் இருந்த இவ்விரு நம்பிக்கைகளும் ஆழமாக வேர்பிடித்திருப்பதை காணலாம்.
எனவே, இவர்கள் அல்லாஹ்வை நம்பி, ஐந்து நேரம் தொழுது, நோன்பு நோற்று, ஸகாத் வழங்கி, ஹஜ்ஜூ செய்து, முஸ்லிம் நாமங்களை சுட்டி தங்களை முஸ்லிம் என்று அழைத்துக் கொண்ட போதிலும் குர்ஆனின் கண்ணோட்டத்தில் இவர்கள் முஷ்ரிக்குகளே! எவனெல்லாம் கப்ருகளிடம் மண்டியிட்டு, அவ்லியாக்களிடம்(?)பிரார்த்திக்கின்றானோ அத்தகையவர்கள் தங்களது தாய் தந்தையராக இருந்தாலும் சரி, தங்களது இரத்த உறவுகளாக இருந்தாலும் சரி, தோள் கொடுக்கும் தோழனாக இருந்தாலும் சரி அவர்களுடனான உறவுகளை முறித்து முற்றிலும் அவர்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதருமே இணைவைக்கும் இத்தகைய கபோதிகளை விட்டும் விலகும் போது நாம் எப்படி நேசம் பாராட்டி, கைகுலுக்கிக் கொள்ள முடியும்? திருமண உறவு, பாவமன்னிப்பு, ஜனாஸா தொழுவித்தல், பள்ளிவாசல் நிர்வாகம், தொழுகைக்கான இமாமத் ஆகிய அனைத்து அம்சங்களிலிருந்தும் இணைவைப்பாளனை விட்டும் ஓர் ஏகத்துவ வாதி விலகி தனித்துவம் காட்ட வேண்டும். இதுவே ஹஜ் தினத்தின் இறைவனின் பிரகடனம்!
அனைத்து அசத்தியங்களோடும், இணைவைப்போடும் இணைந்து, அனைவருக்கும் நல்லவனாக நடிக்க முயலும் கொள்கைப் பச்சோந்திகள் ரப்பின் பிரகடனம் குறித்து இனியேனும் சிந்திப்பார்களா?

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்