இரகசிய சமுதாயம் - தொடர்-8
மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றி |
இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! |
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)
அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது. இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பைவிட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த இலுமனாட்டி ஷைத்தான்கள் சிந்தித்தனர். இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.
யோகாசனக் கலை மற்றும் உடற்கூறியல் தத்துவங்கள் படி மனித உடலமைப்பை 7 முக்கியப் பகுதிகளாக (சக்கரங்களாக)ப் பிரிக்கலாம். பௌதீகம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட இச்சக்கரங்களில் ஒன்று கெட்டுவிட்டாலும் மற்றொன்று தானாவே கெட்டுவிடும். சக்கரங்கள், மற்றும் யோகாசனக் கலைகள் இந்து புராணங்களோடும், இந்துமத மரபோடும் கலந்துவிட்டபடியால் இவைகளை பற்றிய செய்திகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இம்முக்கிய பகுதிகள் ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் வண்ணம் இஸ்லாமியக் கோட்பாடுகளும் அதன் சட்டதிட்டங்களும் அரண்போல அமைந்திருப்பதை அறியமுடிகிறது. முஸ்லிம்களின் இறைவணக்கக் கடமைகளில் ஒன்றான தினம் 5-வேளை தொழுகையானது மிகப்பெரிய யோகாசனப் பயிற்சி் என்பதை நினைவில் கொள்க. மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் ஷைத்தானின் பிடியில் சிக்கிவிடாமல் தூய்மையான நிலையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வழிவகை செய்யும் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாம் எத்தகைய முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து உண்மையிலேயே வியப்படைகிறோம் - அல்லாஹூஅக்பர்.
இச்சக்கரங்களில் மிக முக்கியமாக 1.புனிதச் சக்கரம் (Sacral Chakra) (மொழிபெயர்ப்பு மாற்றப்பட்டுள்ளது),2.தொப்புள் சக்கரம் (Navel Chakra), 3.இதயச் சக்கரம் (Heart Chakra), 4.தொண்டைச் சக்கரம் (Throat Chakra), 5.கீரிடச் சக்கரம் (Crown Chakra) என 5 சக்கரங்களைச் சொல்லலாம். இதனுடைய விளக்கங்கள் பின்வருமாறு.
புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்பது மனிதனின் மர்மப்பகுதிக்கு சற்று மேல்பகுதியில் அமைந்துள்ளது. இச்சக்கரம் மனிதனின் பாலியல் ஆற்றல் சம்பந்தப்பட்டது. Sacral என்ற ஆங்கிலச்சொல் Sacrum என்ற சொல்லிலிருந்து மறுவியது. Sacrum என்பதற்கு இடுப்பும் முள்ளந்தண்டும் இணையும் (Pelvic) பகுதியைக் குறிக்கும். இச்சக்கரத்தை முறைதவறி பயன்படுத்தினால் சக்திக்குப்பதிலாக அழிவு ஏற்படும். இஸ்லாமிய கோட்பாடு ஹலால், ஹாராம் என்று அனைத்தையும் பிரித்துவிடுகிறது. உதாரணமாக உடலுறவு என்பது திருமணத்திற்குப்பின்னர் கணவன் மனைவியருக்கு இடையே மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது. இது அல்லாத மற்ற வழிகள் அனைத்தும் ஹராம் என்று தடைபோடுகிறது. மேலும் விபச்சாரத்தின் பக்கம்கூட நெருங்காதீர்கள் என்று திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாம் அறிவுருத்தியுள்ள இந்த சட்டங்களை எவர் மீறுகிறாரோ அவரின் புனிதச்சக்கரம் கெட்டு அழிவின்பால் இட்டுச்செல்லும், பின்னர் எயிட்ஸ் நோய் வந்து அவனையே கொல்லும்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்பது உங்கள் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. அதாவது நீங்கள் நல்ல தூய்மையான, ஆரோக்கியமான, இயற்கை உணவுகளை உட்கொள்ளும் போது அவற்றை ஆற்றலாக, சக்தியாக மாற்றும் கட்டமைப்பு கொண்டது இந்த தொப்புள் சக்கரப்பகுதி. அளவிற்கு அதிமான உணவுகள், அசுத்தமான உணவுகள், கேடுவிளைவிக்கும் உணவுகள் மற்றும் தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளும் போது இந்த தொப்புள் சக்கரம் கெட்டுவிடும். இதை பாதுகாக்கும் வகையில்தான் உடலுக்கு கேடுவிளைவிக்கும் உணவுகளை இஸ்லாம் ஹராம் - தடுக்கப்பட்டது என்கிறது. ஹாலான உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் தெளிவாக கட்டளையிட்டு விட்டார்கள். ஹாராமான உணவால் வளர்ந்த உடம்பை உடையவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் ஒவ்வொருவரும் தானாக உழைத்துச் சாப்பிடவேண்டும், பிறர் உழைப்பிலிருந்து அனுமதியின்றி உண்ணாதீர்கள் என்றெல்லாம் இஸ்லாம் உணவு உட்கொள்ளும் விஷயத்தில் மிகத்தீவிரம் காட்டியுள்ளதைக் காணலாம்.
தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து, முறைப்படி அறுத்தீர்களோ அதைத்தவிர (அதை உண்ணலாம்). அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன - இவையாவும் பெரும் பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை அழித்து விடலாம் என்பதைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே இசைவானதாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து விட்டால் அது குற்றமாகாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (5:3)
"தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686
இதயச்சக்கரம் (Heart Chakra) என்பது நமது உள்ளத்தைக் குறிக்கும். மனிதனுக்கு எண்ணங்கள் மூளைப்பகுதியிலிருந்து தூண்டப்பட்டாலும் உள்ளம் என்ற உடனேயே நாம் அனைவரும் இதயத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இரக்கம், பணிவு, அமைதி, கருணை, உணர்ச்சி, போன்ற மனிதப் பண்புகளின் உறைவிடமாய் விளங்குவதே இந்த இதயச்சக்கரம். ஒரு மனிதனின் இதயச்சக்கரம் சரியாக இருக்கும் போது அவர் மற்றவர்களிடம் மேற்கூறிய நல்ல பண்புகளோடு நடந்துகொள்வார். இதுவே வளர்ச்சியடைந்து சமூக அமைப்பில் மக்களிடையே நல்லிணக்க சூழலாக மலர்கிறது. இந்த இதயச்சக்கரம் கெட்டுவிடும் போது மக்களிடையே பரஸ்பர உணர்வு கெட்டு சண்டை சச்சரவுகள் மேலோங்கி இறுதியில் அந்த சமூகச்சூழலில் நிம்மதி அழிந்துவிடும். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் மேற்கண்ட நற்பண்புகளை மிகமிக வழியுருத்துவதை திருமறை குர்ஆனில் பரவலாகப் பார்க்கலாம். இஸ்லாம் என்ற சொல்லுக்கே சாந்தி, கட்டுப்படுதல் என்றுதானே பொருள். மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களின் தாயகமாக வாழ்ந்து காட்டி அதையே அனைத்து முஸ்லிம்களுக்கும் அறிவுருத்தியுள்ளதை கவனத்தில் கொள்க.
”நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது” ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார்கள். எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார். எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுவதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். (புகாரீ, முஸ்லிம்)
தொண்டைச் சக்கரம் (Throat Chakra) என்பது கருத்தாற்றல், மொழி மற்றும் மனிதனை மனிதன் தொடர்பு கொள்வது சம்பந்தமான பகுதி ஆகும். நாம் பேசும் நாக்கு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாக்கினால் வருகின்ற பிரச்சனைகளை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. நாம் பொறுமையை இழக்கும் போது நாவு ஏதேதே பேசிவிடுகிறது. அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பேசினால் நல்லவற்றை பேசுங்கள் அல்லது மௌனமாக இருந்துவிடுங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். மேலும் திருமறை குர்ஆன் தொண்டைச் சக்கரத்தை பயன்படுத்தும் முறையை கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறது.
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர அவர்கள் நஷ்டத்திலில்லை. (103:1-3)
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(நூல்-புகாரி)
அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்-புகாரி)
ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி)
கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்பது மனிதனின் ஞானம் மற்றும் சிந்தனைத் திறனைக் குறிப்பதாகும். மதிநுட்பம், உள்ளளுணர்வு, விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு போன்றவற்றை இந்த கீரீடச்சக்கரம் கட்டுப்படுத்தும். மனிதனின் மூளைதான் இந்த கீரீடச்சக்கரத்தின் இயக்கத்திற்கு முக்கியப் பங்களிக்கிறது. இச்சக்கரத்தை மனிதன் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அவன் 5 அறிவு மிருகமாக மாறிவிடுவான்.
மேற்கூறிய 5 சக்கரங்களின் புனிதத்தை உணர்ந்து அவைகளை நல்ல வகையில் பயன்படுத்தி உங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் முழுமையான மனிதனாக ஆகலாம். இதை திருமூலர் போன்ற பழங்கால தமிழ் சித்தர்கள்கூட கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும். நன்றே நினைமின் நமன் இல்லை
உடம்பார் அழியின் உயிரார் அழிவர். திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள். ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள். ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!
புனிதச் சக்கரம் முதல் கீரீடச்சக்கரம் வரை உள்ள பயன்பாடுகள் அதன் இயக்கம் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த ஷைத்தானிய இலுமனாட்டிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். படைத்த இறைவனால் பாதுகாக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டு இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறிமூலம் அவைகளைக் கையாளும் முறைகளையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள மேற்கூறிய சக்கரங்களின் செயல்பாடுகளை கெடுத்தால் மட்டுமே ஒரு மனிதனை ஷைத்தானிய வழிக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதை ஆராய்ந்து அவைகளின் சக்திகளை ஒவ்வொன்றான திட்டமிட்டு அழிக்கின்றனர்.
முதலாவதாக, புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்ற உங்கள் மர்ம உருப்புக்களின் இயக்கத்தைக் கெடுத்து உங்களை அழிவின் பக்கம் அழைத்து செல்ல பெண்களை அரைநிர்வானமாக, முழுநிர்வானமாக படமெடுத்து இவ்வுலகம்முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் இதே ரீதியில் வீழ்த்துவதற்கு பலான பாலியல் காட்சிகளில் ஈடுபடும் பெண்களை வெற்றிவாகை சூடிய பெண்ணாகக் காண்பித்து, பல பரிசுகளையும் வழங்கி கௌரவித்து இம்மானங்கெட்ட செயலை மற்ற பெண்களும் செய்யுமாறு தூண்டப்படுவதைப் பார்க்கிறோம். விபச்சாரத்தின் பக்கம் இழுத்துச் செல்லும் இத்தரங்கெட்ட செயலை பரப்புவதற்காக வேண்டி ஆயிரக்கணக்கான இணையதளங்கள், 24 மணிநேரத் தொலைக்காட்சிகள், இணைய தொலைபேசிகள் என்று அனைத்துவித ஊடகமும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதையும் கண்கூடாகக் காண்கிறோம். இத்தீய செயல்களால் உலக அளவில் ஏற்பட்டுள்ள அசிங்கங்களையும், கொடுமைகளையும், பல குடும்பங்களுக்குள் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களையும் சொல்லி மாளாது, அவைகளை எழுதவே கூசுகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் இலுமனாட்டிகள் என்று சொல்லப்படும் ஷைத்தானை வணங்கும் கூட்டத்தின் சூழ்ச்சி இருப்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும்?
எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே! பாலியல், செக்ஸ், பாப்இசைகள், டிஸ்கோ நடனங்கள் என்று உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை வீழ்த்தி நாசப்படுகுழியில் தள்ளும் இலுமனாட்டிகளின் மேற்கண்ட சூழ்ச்சிகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். சிற்றின்பத்திற்காக வீழ்ந்து பேரின்பத்தை இழந்துவிடாதீர்கள் என்று கனத்த உள்ளத்தோடு அறிவுருத்துகிறோம்.
தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை சேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? (16:45)
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான். ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது. (16:26)
இரண்டாவதாக, தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்ற நமது வயிற்றுப் பதியை கெடுப்பதற்காக நாம் உண்ணும் உணவில் இயற்கைத்தன்மையை அழித்து சுவைபோல தோன்றும் மெக்டொனால்ட்ஸ், KFC போன்ற செயற்கை உணவுகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றனர். இவ்வகை உணவுகளில் இஸ்லாம் தடைசெய்தவைகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் ஒருவர் பருமந்தனம் (Obesity) நோய்களால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மெக்டொனால்ட்ஸ், KFC முதல் பெப்ஸி, கொக்காகோலா வரையுள்ள இத்தகைய உணவுகளுக்கு அரபு முஸ்லிம் உலகமே அடியாகிவிட்ட நிலையை அங்குள்ளவர்கள் அறிந்தேயிருப்பர். மேற்கண்ட உணவு வகைகள் அமெரிக்க பிரிட்டானிய தயாரிப்புகளாக இருப்பினும் அரபுநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கின்ற விற்பனையில்தான் அந்நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்து கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை.
எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! பாஸ்புட், பேஸன்புட் என்ற பெயரால் உங்கள் உடலுக்கு சேரவேண்டிய சக்தியை இழந்துவிடாதீர்கள். உங்கள் தாய்மார்கள், உங்கள் மனைவியர், வீட்டில் தாயாரிக்கும் உணவு இத்தகைய கலப்பின உணவுகளை விட பலமடங்கு தரமானது, சக்திமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகைகளுக்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள். ஒரு பலம்குன்றிய முஃமினைவிட பலமாக முஃமின் சிறந்தவனாவான் என்ற நபிமொழிக்கொப்ப இந்த தஜ்ஜாலிய, ஷைத்தானியக் கூட்டத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆரோக்கியமும் சக்தியும் உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதயச் சக்கரம் (Heart Chakra) மற்றும் தொண்டைச் சக்கரங்களை (Throat Chakra) செயலிழக்கச்செய்வதற்கு உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களுக்குப் பதிலாக உங்களிடம் வெறுப்பு, ஆத்திரம், அமைதியின்மை, கோபம் போன்ற தீய குணங்களை வெளிப்படுத்துவதற்கு இந்த இலுமனாட்டிகள் தூண்டுவார்கள். உங்களை நிதானம் இழக்கச்செய்து பின்னர் உங்கள் செயல்களின் மூலமாகவே இஸ்லாத்திற்கு கலங்கத்தை கற்பிக்கத் தூண்டுவார்கள். இதற்கு சிறந்த உதாரணங்களாக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சமீபத்தில் கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டது, ஈராக் அபூகிரைப் சிறையில் முஸ்லிம்களை நிர்வானமாக விட்டு கொடுமைபடுத்தி அப்படங்களை வெளியிட்டு முஸ்லிம் உலகை புண்படுத்தியது, மேலும் ஈராக், ஆப்கான், பாலஸ்தீன குழந்தைகளின் பிஞ்சு உடல்களை துப்பாக்கித் தோட்டாக்களால் துளையிட்டு கொடூரமாகக் கொலை செய்து காட்டியது, இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று தொடர்ந்து மீடியாக்களில் மீண்டும் மீண்டும் பொய்யுரைப்பது என்று இந்த இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.
எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே! உங்கள் மனதை பாதிப்படையச் செய்யும் இத்தகைய சூழ்ச்சிகளின் போது நீங்கள் மிகவும் கனவமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டுமே அல்லாமல் உணர்ச்சிகளுக்கு ஆளாகி உணர்ச்சிப்பூர்வமாக நடந்துவிடக் கூடாது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம். ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! முடிவு அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம். ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அதோ அழந்து போன அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன் நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. (27 : 50,51,52)
இறுதியாக உங்கள் கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்னும் உங்கள் சிந்தனைத்திறனையும், மதிநுட்பத்தையும் திசை திருப்பி இலுமனாட்டிகளின் சதித்திட்டங்களை நீங்கள் உணர்ந்துவிடாமல் இருக்க வேற்றுகிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் (Aliens) என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை வைத்து சொல்ல வைப்பார்கள். மேலும் ஹார்ப் தொழிநுட்பம் (HAARP), ஸ்டார் வார்(Star War), பறக்கும் மர்மத்தட்டு என்றெல்லாம் கூறி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். பின்னர் அவர்கள் அறிவியல் ஆய்வு என்று எதையெல்லாம் கூறுகிறார்களோ அவைகள் அனைத்தையும் உண்மை என்று உங்களை நம்பவைப்பார்கள். இறுதியில் மனித உயிரின் மூலத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதுபோன்ற அல்லாஹ்விற்கு இணைவைத்தலை மறைமுகமாக திணித்து அவைகளையும் நம்பச் செய்வார்கள்.
எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! இப்பூமியைத்தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானே தவிர வேற்றுகிரகங்களில் எந்தமனிதனும் சுயமாக வாழ இயலாது என்பதையும், அல்லாஹ்வைத்தவிர வேறு எவனாலும் உயிரை படைக்க இயலாது என்ற குர்ஆன் கூறும் உண்மையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இலுமனாட்டிகளின் பொய்ப் பிரச்சாரங்களையும், சூழ்ச்சிகளையும் தெளிவாக அடையாளம் காணவேண்டுமென்றால் அவர்களின் மாயாஜால உலகமாயைகளை விட்டும் விடுபட்ட முழுமனிதனாக நீங்கள் மாறவேண்டும். அவ்வாறு மாறுவதற்கு மேற்கூறிய சக்கரங்களான புனிதச் சக்கரம் (Sacral Chakra), தொப்புள் சக்கரம் (Navel Chakra) இதயச் சக்கரம் (Heart Chakra), தொண்டைச் சக்கரம் (Throat Chakra), கீரிடச் சக்கரம் (Crown Chakra) ஆகிய அனைத்தையும் இஸ்லாம் கூறுகின்ற அடைப்படையில் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகமிக அவசியமாகும்.
முஸ்லிம்களே! கிபி 1600 வரை ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தபோது இவ்வுலகிற்கே அறிவொளியைப் பாய்ச்சி ஆரோக்கியமான அறிவியில் ஆராய்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் நமது அப்பன் பாட்டன்களான முஸ்லிம் அறிஞர்களே என்பதை நினைவில் வையுங்கள். அத்தகைய எழுச்சிமிகு காலத்தை இவ்வுலகில் மீண்டும் ஏற்படுத்திட இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இலுமனாட்டிகளின் ஜாஹிலிய்யாக்களை தகர்த்தெரியும் இஸ்லாமிய அறிஞராக, முஸ்லிம் விஞ்ஞானியாக மாறவேண்டும். இறைமார்க்கமாம் இஸ்லாத்தை எட்டுத்திக்கும் பரவச்செய்ய இஸ்லாமிய இளைஞர்கள் முன்வரவேண்டும். அத்தகைய இஸ்லாமிய பேரெழுச்சி இவ்வுலகில் விரைவில் ஏற்படஇருகரமேந்தி இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். (25:73).
பின்குறிப்பு:- இலுமனாட்டிகள் பற்றிய இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடும் நோக்கத்தை முதல் தொடரிலேயே விளக்கிவிட்டோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி சக்கரங்கள் பற்றிய கருத்துக்கள், ஆய்வுகள் அனைத்தும் இந்து மத போதனைகளை ஒட்டியே போதிக்கப்படுவதால் நாம் மேலோட்டமாக அதைத் தெரிவித்திருக்கிறோம். இக்கட்டுரையிலிருந்து இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை மட்டும் நினைவில் வைக்குமாறு ஒற்றுமை வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்