இரகசிய சமுதாயம் - தொடர்-6
666 - பார்கோடு இரகசியம்
பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர்(Bernard Silver) மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள் முதல் பல்பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா? ஆம் இதையும் விட்டுவைக்கவில்லை இந்த இல்லுமனாட்டி லூசிஃபர்கள். |
பார்கோடுகளில் மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளின் இறுதியில் அதற்கு ஈடான மதிப்பு எழுதப்பட்டிருக்கும். பார்கோடு மொழியில் இரட்டைக்கோடு என்பது 6 என்ற எண்ணைக் குறிக்கும். உலகில் அச்சிடப்பட்டிருக்கும் சர்வதேச பார்கோடுகள் அனைத்திலும் மூன்று முறை இந்த இரட்டைக்கோடுகள் வருவதைக் காணலாம், அதாவது 6- 6- 6. மேலும் இவ்வாறு மூன்றுமுறை அச்சிடப்பட்டிருக்கும் 6 என்ற எண்ணுக்குரிய கோடுகளில் அதன் மதிப்பெண்ணான 6 இடம்பெற்றிருக்காது. இன்னும் அந்த மூன்று இரட்டைக்கோடுகளும் மற்ற கோடுகளின் அளவைவிட சற்று நீளமாக இருப்பதைக் காணலாம். (இதை உங்கள் அருகிலுள்ள பொருட்களின் பார்கோடுகளை பரிசோதித்துப்பாருங்கள் அல்லது கீழுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.)
ஆம் உலகின் அனைத்துப் பொருட்களிலும் அச்சிடப்பட்டிருக்கும் இந்த பார்கோடுகளின் வாயிலாக 666 என்ற எண் மறைமுகமாக பிரபலப்படுத்தப்படுகிறது. அதுசரி இந்த 666 என்றால் என்ன என்கிறீர்களா? அதன் பின்னனியில் பைபிள் வசனம் இருக்கிறது. ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படியுங்கள். அந்த பைபிள் வசனம் இதோ
பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 11-18]
தெளிவாகச் சொல்வதென்றால் பைபிளின் கருத்துப்படி 666 என்ற எண் ஷைத்தானிய மிருகத்தையும், அந்திகிருஸ்துவான தஜ்ஜாலையும் குறிக்கும்.
முஸ்லிம்களே! இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றிவிட்டார்கள். மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, ''நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் அவர்களுள் சிலருடன் தனித்திடும்போது, ''உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த தவ்ராத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, இதை நீங்கள் உணரமாட்டீர்களா? என்று யூதர்கள் சிலர் கூறுகின்றனர். அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்.கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (2 : 75-78)
மேற்கண்ட 666 என்ற எண்ணிற்கு சூரிய இலக்கம் என்றும் கூறுவர். நமதூர் ஹஜ்ரத்மார்கள் சொல்லும் பால்கிதாபு கணக்குபோல சூரியவணங்கிகள் அமைத்த இந்த சதுரக்கணக்கின் விளக்கத்தை கீழேபாருங்கள்.
அதாவது ஒருசதுரத்தை 6 Rows, 6 Columns ஆக பிரித்தால் 36 சிறிய சதுரங்கள் வரும். அதில் 1 முதல் 36 வரையுள்ள எண்களை மேற்காணும் படத்தில் உள்ளதுபோல அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு Row மற்றும் Column வரிசையில் இடம்பெற்றிருக்கும் எண்களின் கூட்டல் மதிப்பு 111. அதை சதுரத்தின் மொத்த Row-Column கட்டமைப்பு எண்ணான 6 ஆல் பெருக்கினால் வருவது 666 .
1 முதல் 36 வரையுள்ள எண்களை வரிசையாகக் கூட்டினால் வருவதும் 666 . (1+2+3…+36=666)
இன்னும் சதுரத்தில் அமைந்துள்ள 3 சிறிய சதுரங்கள் மற்றும் 6 கனசதுரங்களிலுள்ள எண்களின் கூட்டல் மதிப்பு 74 என்று வரும். அதாவது
6 + 1 + 31 + 36 = 74 11 + 8 + 26 + 29 = 74 16 + 15 + 21 + 22 = 74
7 + 3 + 12 + 25 = 74 19 + 24 + 13 + 18 = 74 32 + 35 + 2 + 5 = 74
3 + 34 + 4 + 33 = 74 14 + 23 + 17 + 20 = 74 27 + 28 + 9 + 10 = 74
3 சிறிய சதுரங்கள் மற்றும் 6 செவ்வகங்கள் என்ற இந்த 9 சதுரங்களையும் 74 ல் பெருக்கினால் வருவது 666 (9X74=666)மேலும் 1 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதி அதில் கீழ்க்கண்டவாறு கூட்டலை அமைத்தால் கிடைப்பதும் 666.
1 + 2 + 3 + 4 + 567 + 89 = 666
123 + 456 + 78 + 9 = 666.
9 + 87 + 6 + 543 + 21 = 666
இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 18]ஞானமும் விளங்காது ஒரு மண்ணாங்கட்டியும் விளங்காது, இப்படியே சென்றால் பைத்தியம்தான் பிடிக்கும், இறுதியில் நரகப்படுகுழியே விளங்கும். ஆக 666 என்பது லூசிஃபரை வணங்கும் இல்லுமனாட்டி ஷைத்தானியக் கும்பல் அமைத்த ஒரு கணிதமுறையாகும்.
இந்த 666 என்ற எண்ணை பெரிய மாயாஜால வித்தையாக நம்பி பாப், ராக் மற்று ஜாஸ் இசைக் கச்சேரிகள் மூலம் தற்போது பிரபலப் படுத்தப்படுவதைக் காணலாம்.
பார்கோடுகளின் வாயிலாக உலகம் முழுவதும் பரவச் செய்யப்பட்டிருக்கும் 666 என்ற எண்ணிற்குப்பின்னே மறைக்கப்பட்டிருக்கும் இரகசியங்கள் மேலும் கிழிவதை கீழுள்ள வீடியோ தொகுப்புகளின் மூலம் அவசியம் காணுங்கள்.
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள் அவன் மீதே உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (11:123)
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது. (53:28)
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு இவ்வுலகில் கிடைத்துக்கொண்டே இருக்கும். நம்முடைய வான தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றும் போது (அவ்வானதூதர்கள்) ''அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?'' எனக் கேட்பார்கள், அதற்கு ''அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் மறைந்து போய்விட்டார்கள்'' என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். (7:37)
தொடரும் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்