சகோதரர் ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJயின் விவாத அழைப்பு.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் கடந்த காலங்களில் நமது ஜமாத்தை விமர்சித்தவர்களை பகிரங்க விவாத மேடையில் சந்திப்பதற்கு ஜமாத் அழைப்பு விடுத்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்
அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதம் செய்யத் தயார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள்.
விவாதம் செய்ய வேண்டுமானால் ஜமாத்திற்கு எழுத்து மூலம் தரும்படி நாம்மிடம் கேட்ட சகோதரர்களுக்கு நாம் அறிவித்தோம். அந்த அடிப்படையில் பல நாட்களுக்குப் பின் சகோதரர் ஸஹ்ரான் அவர்கள் நமது ஜமாத்தின் தலைமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.
குறிப்பிட்ட கடிதத்தில் தான் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய கடிதம் கிடைத்தவுடன் நமது ஜமாத் சார்பாக அதற்குறிய பதில் பதிவுத் தபாலில் அவருக்கு அனுப்பப்பட்டது.
சகோதரர் ஸஹ்ரான் அவர்கள் நமக்கு அனுப்பிய கடிதத்தையும், அதற்கு நாம் அனுப்பிய பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.
சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள் நமது கடிதத்திற்கு பதில் தந்து விவாதிப்பதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் அவருடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு இன்ஷா அல்லாஹ் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு அனுப்பிய கடிதம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதம்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்