Pages

Tuesday, July 19, 2011

வந்த வழியில் திரும்பிச் சென்ற ஹாமித் பக்ரி


நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர்வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர்வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.


ஆனால் நேர்வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (28:56)

நபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்: நபி நினைத்தவர்களுக்குக் கூட நேர் வழியைக் கொடுத்துவிட முடியாது. அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர்வழியில் வைப்பான். அவன் நினைத்தால் அவரையே வழிகேட்டிலும் தள்ளி விடுவான்.

அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக்காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.

ஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கம் அணைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.

தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காக தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அணைவருக்கும் தலைவர்  இவர்தான்.

பல இடங்களில் மத்ஹபுவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்து, தர்கா கந்தூரி உரூஸ் போன்றவற்றை தடுப்பதற்காக பல கஷ்டங்களைப்பட்டு, மத்ஹபுவாதிகளுடன் மத்ஹபுகளில் உள்ள கருத்துக்கள் மார்க்கத்திற்கு முரணானவை என்பதை விவாதங்களின் மூலம் நிரூபித்து இந்த ஏகத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில அயராது உழைத்தார் இந்த ஹாமித் பக்ரி.

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போதும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்பும் போதும் திருமறை வசனங்களும் நபியவர்களின் பொன் மொழிகளும் அவருடைய நாவில் அணைகடந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் (இன்று இதே நாவில் மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன). 

திருமறைக் குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை  ஆரம்ப காலத்தில் உடைத்து பேசியவர்களில் இவரும் ஒருவர்.

நடந்தது என்ன?

இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தவ்ஹீத் ஜமாத் அவருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக அறிவித்தது.

வந்த வழியில் திரும்பியதன் காரணம் என்ன?

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட விருப்பு வெருப்பு தான் அவரின் இந்த நிலைக்குக் காரணம்.

இதை நாமாக சொல்லவில்லை. அவரே வாக்கு மூலம் கொடுத்த வீடியோக்கள் உள்ளன.

அதாவது சகோதரர் பி.ஜெ அவர்களைப் பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம்.

இது பக்ரியின் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம்.

அதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை. பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.

ஆனால் இவர் சொல்லும் செய்தி உண்மையானதா? பி.ஜெயின் பிரச்சாரம் தன்னை பின்பற்றச் சொல்வதா அல்லது தவ்ஹீதை எடுத்துச் சொல்வதா?

சகோதரர் பி.ஜெயின் பிரச்சாரக் களத்தில் ஓர் இடத்தில் கூட தான் பிழையே செய்ய மாட்டேன் என்னைப் பின்பற்றுங்கள் என்று சொன்னதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. மாறாக நான் சொல்வது அல்குர்ஆனுக்கும் அவனுடைய தூதரின் கருத்துக்கும் ஒத்ததாக இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றமாக நான் எதை சொன்னாலும் தூக்கியெரிந்து விடுங்கள் என்பது தான் சகோதரர் பி.ஜெ அவர்களின் இவ்வளவு கால பிரச்சாரத்தின் சுருக்கமாகும்.

உதாரணத்திற்கு சகோதரர் முஜீபுர் ரஹ்மானுக்கும் பி.ஜெக்கும் மத்தியில் கடந்த வருடம் தொண்டியில் வைத்து பி.ஜெ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளா? என்ற தலைப்பில் விவாதம் நடை பெற்றது.

அந்த விவாதத்தின் இறுதியில் தொகுப்புரை வழங்கிய சகோதரர் பி.ஜெ அவர்கள் அந்த தொகுப்புரையில் தான் செய்யும் தவ்ஹீத் பிரச்சாரத்தில் நான் ஏதாவது தவறாக பேசினால் அதனை யார் எனக்கு சுட்டிக்காட்டினாலும் பாகுபாடு காட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று அதற்கு பல உதாரணங்களையும் காட்டியதுடன். தனது தர்ஜமாவில் தவறே இல்லை என்று ஒரு காலத்திலும் தான் வாதிடவில்லை, வாதிடவும் மாட்டேன், வாதிடவும் முடியாது ஏன் எனில் தவறுகளுக்கு அப்பாட்பட்டவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்று ஏகத்துவத்தின் அடிப்படையை தான் நினைவூட்டினார் என்பது குறிப்பிடப்த்தக்கது.


தொண்டி விவாதத்தின் தொகுப்புரை வீடியோவின் ஒரு பகுதி.

ஹாமித் பக்ரி அவர்களே! 

அவர் கருப்பு என்றால் நானும் கருப்பு என்றேன் அவர் வெள்ளை என்றால் நானும் வெள்ளை என்றேன் என்று கூறினீர்களே!

அப்படி தான் சொல்வதுதான் சரி என்று பி.ஜெ எங்காவது சொன்னார் என்று ஒரு ஆதாரத்தை காட்டி பேச வேண்டியதுதானே.

நீங்கள் சொன்னதற்கு மாற்றமாக பி.ஜெ சொல்லியுள்ளதை கீழே உள்ள வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது இலங்கையில் ஒரு கூட்டம் நீங்கள் எப்படி இருந்ததாக சொல்கிறீர்களொ அப்படி  தற்போதும் இருப்பதாக   பி.ஜெயிடம் கூறப்பட்டதற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் இதை கேட்டால் எனக்கே அருவருப்பாக உள்ளது. இப்படியெல்லாம் யாரும் நடக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூறுகிறார்.  இப்படிப் பட்ட ஒருவர் தன்னை எப்படி தக்லீத் செய்யச் சொல்ல முடியும்?


பக்ரியின் இன்றைய நிலை என்ன?

தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட வெறுப்பு இவரை கொள்கையை விட்டே வெளியேற்றி விட்டது.

இது இவருக்கு மட்டும் உரியது அல்ல. யாராக இருந்தாலும் கண்டிப்பாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.  இவைகளைத் தாண்டி யாரைப் பின்பற்றினாலும் எதைப் பின்பற்றினாலும் அவரின் நிலை ஹாமித் பக்ரியின் நிலைதான்.

ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்.

அன்று : குர்ஆனும் ஹதீஸும் மாத்திரமே நேர்வழி

இன்று : குர் ஆன் ஹதீஸ் அல்லாதவைகளிலும் நேர் வழி உண்டு.

அன்று : மத்ஹபுகளில் குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் மாற்றமான கருத்துக்கள் உள்ளன.

இன்று : மத்ஹபுகள் தான் நேர்வழி அவை புனிதமானவையே!

அன்று : மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது கூடாது.

இன்று : மரணித்வர்களுக்கு கத்தம் கொடுப்பதே நேர்வழி.

அன்று : கூட்டு துஆ கூடாது.

இன்று : கண்டிப்பாக கூட்டு துஆ ஓத வேண்டும்.

அன்று : கந்தூரிகள் மார்க்கத்தில் கிடையாது.

இன்று : கண்டிப்பாக கந்தூரிகள் ஓதப்பட வேண்டும்.

அன்று : மவ்லிதுகள் கூடாது.

இன்று : மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளவையே!

அன்று : தர்காக்களில் நடப்பது அணைத்தும் வழிகேடு.

இன்று : அவையணைத்தும் நேர்வழி.

அன்பின் சகோதரர்களே, அணைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம். மேலதிக விபரத்திற்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.


ஹாமித் பக்ரியின் அவர்களின் இனிமையான குரலில் மௌலுது மற்றும் கூட்டு துவாவை கேட்க கீழே விடியோவை பார்க்கவும் (ஹாமித் பக்ரியின் ஆடியோ கீழே விடியோவில் இணைக்கப்பட்டுள்ளது).


நன்றிrasminmisc.tk

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்