Pages

Wednesday, July 6, 2011

பொலன்னறுவை மண்ணில் ஏகத்துவத்திற்கு இறைவன் தந்த வெற்றி.


கடந்த ஒரு வருட காலமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் மிகவும் வீரியமாக நடைபெற்று வருகிறது. “அல்ஹம்து லில்லாஹ்”. இதன் விளைவாக தற்போதைக்கு அம்மாவட்டத்தில் ஜமாஅத்தின் மூன்று கிளைகளும் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் மார்க்க விளக்க கூட்டங்கள், ஜும்மா பயான், சமூக சேவைகள் என்று பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அந்த ஊரிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபை மற்றும் மாவட்ட ஜம்மியதுல் உலமா போன்றோரிடமிருந்து பாரிய எதிர்ப்புகளும் சவால்களும் கொள்கைவாதிகளின் பால் வந்த வண்ணமே இருந்தன.


ஏகத்துவத்திற்கு கி்டைத்த வெற்றி
கடந்த சில வாரங்களாக மாணி்க்கம்பிடிய என்ற ஊரில் நபி வழியில் நம் மார்க்க காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கோடு கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் “ஜும்ஆ தொழுகையை“ ஆரம்பித்தனர். இத்தகவல் ஊரில் பரவ அச்சகோதரரின் வீட்டில் இடமில்லா அளவுக்கு கொள்கை சகோதரர்கள் தொழுவற்காக ஒன்று திரண்டனர். வாரத்துக்கு வாரம் தொழுகைக்கு வருவோரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. 

இவற்றைப் பார்த்து சகிக்க முடியாத பள்ளி நிர்வாகமும் ஊர் மவ்லவிகளும் ஜும்ஆவை இடைநிருத்துவதற்காக பல வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தனர். அப்பாவி ஊர் மக்களை தூண்டியும் விட்டனர். “கோட்“ வரைக்கும் இப்பிரச்சினை இழுபட்டதென்றால் அவரகளின் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இவர்களின் எந்த முயற்சியுமே பயன் தறவில்லை.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )

இருதியாக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் “சமாதானம்“.
இதனை எந்த நோக்கத்தில் அவர்கள் மேற்கொண்டார்களோ! (இறைவன் ஒருவனே அறிவான்) இது ஏகத்துவத்திற்கு வெற்றியாகவும் மற்வர்களுக்கு சாவுமணியாகவும் அமைந்தது.அப்பகுதி பள்ளிவாசல் நிர்வாகம்,ஜம்மியத்துல் உலமா மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்ட சமாதான உடன்படிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை பின் வரும் ஜம்மியதுல் உலமாவின் “லெட்டர் பேடில்“ கண்டு கொள்ளுங்கள்.

(படத்தில் க்லிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

குறிப்பு:-
ஜனநாயக நாடாம் நம் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் இது போன்று நடு நிலமையாக தீர்ப்புகள் வழங்க ஜம்மியதுல் உலமாவின் இந்த முன்மாதிரியை இலங்கை அரசு கையிலெடுக்க வேண்டும்.

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக 
அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன் 17:81)

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்