Pages

Wednesday, April 18, 2012

மேற்குலகின் பலிகடாவாகும் பங்களாதேஷ் விபச்சார விளைநிலமாய் விஷ்பரூபம்


18 வயதைத் தாண்டிய பெண்கள் யாரும் விபசாரத்தில் ஈடுபட்டால், அவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது. வயதுச் சான்றிதழ் காட்டினால் போதும்; காவல்துறை அவர்களைக் கைது செய்யாது. அப்படியே சிறையில் அடைக்கப்படும் இளம் பெண்கள் காவலர்களால் களவாடப்படுகிறார்களாம்.

பங்களாதேஷில் விபசாரிகள் மட்டுமே இருக்கும் டோலாதேத்தாஎன்ற கிராமம்தான், உலகிலேயே மிகப் பெரிய விபசார விடுதிகயாகக் கருதப்படுகிறது. அங்கு 1600 பெண்கள் தினமும் 3 ஆயிரம் ஆண்களுக்குத் தங்கள் உடலை விற்கிறார்கள்.

திருமண வாழ்க்கை முறையையும் குடும்ப அமைப்பையும் சிதைப்பதில் விபசாரம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம் நாடுகள்கூட, தம் தீனை மறந்து அமெரிக்காவைப் பின்பற்றி விநோதமான சட்டங்களை இயற்றிவைத்துள்ளன.

18 வயது ஆகாமல் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி சில நாடுகளில் உண்டு. அதே நாடுகள், 18 வயதுக்குட்பட்டவர்கள் விபசாரம் செய்வதைக் குற்றமாக்க் கருதுவதில்லை. அதாவது திருமணம்மட்டும் செய்துகொள்ளாதே. தவறான வழியில் எப்படி வேண்டுமானாலும் காமத்தைத் தீர்த்துக்கொள் என்கின்றன அந்த நாடுகள்.

ஆணும் பெண்ணும் சம்மதித்து சட்டப்படி திருணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்; ஆணும் பெண்ணும் சம்மதித்து தவறான உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது. பிறகு எதற்காகத் திருமணம்? பிறகு ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? குடும்பம், அதற்குள் கட்டுப்பாடு, குடும்பச் சுமை... இப்படி மனித நாகரிகம் கண்ட அமைப்புகளெல்லாம் அழிந்து ஒழிந்துகொண்டிருக்கின்றன, இந்த காட்டுமிராண்டிகளால். வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பே பாதி இளைஞர்கள் பாலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.]

தென் மத்திய ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடே பங்களாதேஷ், அல்லது வங்காளம், சுமார் ஒன்றரை லட்சம் சதுர கி.மீ. சுற்றளவுள்ள வங்களாத்தில் சுமார் 15 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

1947
ல் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது கிழக்கு வங்களாம்என்ற பெயரில் பங்களாதேஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்த்து. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, கிழக்கு பாகிஸ்தானாக பங்களாதேஷ் இருந்த்து. பின்னர் இந்தியாவின் தலையீட்டால் 1971ல் பங்களாதேஷ் தனிநாடாக உருவானது.

பங்களாதேஷில் 90 விழுக்காடு முஸ்லிம்களே வசிக்கின்றனர். 10 விழுக்காடு இந்துக்கள் உள்ளனர். கங்கை பிரம்மபுத்திரா நதிகள் இணைந்து பத்மா ஆறாக வங்களாத்தில் ஓடுகின்றன. பல பகுதிகள் வண்டல் நிலங்கள். ஆண்டில் மே முதல் அக்டோபர்வரை கடுமையான மழைப்பொழிவு இருக்கும். எனவே, அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வங்காளத்தில் வாடிக்கை.

விவசாயத்தையே நம்பியிருக்கும் வங்காளிகளுக்கு இக்கனமழை பேரிடராகவே கருதப்படுகிறது. சணல், அரிசி, கோதுமை, கரும்பு, மீன் முதலிய பொருட்கள் உற்பத்தியாகின்றனவாம்! சணல், தேயிலை, தோல், மீன் ஏற்றுமதியாகின்றன. இயற்கை எரிவாயும் கிடைக்கிறது.

மண் வளமிக்க நாடு; நாட்டின் குறுக்கு நெடுக்காகப் பல ஆறுகள் பாய்கின்றன. இருந்தாலும், சீரான அரசு நிர்வாகம் இல்லாததாலும் நிலையான அரசமைப்பு இல்லாததாலும் மிக வறிய நாடாகவே பங்களாதேஷ் இருந்துவருகிறது. வாட்டும் வறுமை; எழுத்தறிவின்மை; வேலையில்லா திண்டாட்டம்; உற்பத்தியும் தொழிலும் போதிய அளவில் இல்லாமை... என எல்லாமும் சேர்ந்து வங்காளிகளை வதங்கவைக்கின்றன.

இதனால், அண்டை நாடுகளில் குறிப்பாக இந்தியாவில்- சட்டவிரோதமாகப் பலர் குடியேறிவருகின்றனர். மிகப்பெரும் பயங்கரமும் கொடுமையும் என்னவென்றால், பெண்களும் குழந்தைகளும் பாலியல் தொழிலில் (?) ஈடுபடுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதுதான். பங்களாதேஷின் உயர்நீதிமன்றம், விபசாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்துத் தீர்ப்பு வெளியிட்டது அதைவிடப் பெரும் கொடுமை. இத்தீர்ப்பை அடுத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விலைமாதுகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்
பங்களாதேஷில் விலைமாதுக்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியாவிட்டாலும், பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதற்காக விலைக்கு வாங்கும் பாவச்செயலில் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனராம்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்திற்காக விற்கப்பட்டுள்ளனர். விபசாரிகளின் வயது 11ல் தொடங்குகிறது.

தலைநகர் டாக்காவில் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் குழந்தைகள் – 12 வயதைத் தொடுவதற்கு முன்பே விபசாரத்திற்காகச் சாலைகளில் திரிகின்றனராம்.

காவல்துறையின் கணக்கு என்னவென்றால், ஆண்டுதோறும் 15ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடைசி சில ஆண்டுகளில் 2 லட்சம் பெண்கள் 6 லட்சம் குழந்தைகளுடன் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களெல்லாரும் காணாமல் போனவர்கள்என அறிவித்து வழக்கை முடித்திருக்கிறது காவல்துறை.

பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் 2 லட்சம் பெண்களின் பரிதாப நிலையை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது. இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் வியாபாரிகளுக்கு விற்கப்பட்டவர்கள். இவர்களில் 27ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் இந்திய விபசார விடுதிகளில் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.

கடைசி 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களும் குழந்தைகளும் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 50 பெண்களும் குழந்தைகளும் (மற்றொரு தகவலின்படி 200) வங்காளத்தின் எல்லைக்கப்பால் கடத்தப்பட்டுவருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 200 பெண்கள் பங்களாதேஷிலிருந்து பாகிஸ்தானுக்குச் சட்டவிரோதமாகப் பயணிக்கின்றனர்.

மில்களில் வேலை பார்க்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

பங்களாதேஷில் 18 வயதைத் தாண்டிய பெண்கள் யாரும் விபசாரத்தில் ஈடுபட்டால், அவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது. வயதுச் சான்றிதழ் காட்டினால் போதும்; காவல்துறை அவர்களைக் கைது செய்யாது. அப்படியே சிறையில் அடைக்கப்படும் இளம் பெண்கள் காவலர்களால் களவாடப்படுகிறார்களாம்.

மனதைக் கல்லாக்கிக்கொள்ளுங்கள்! பங்களாதேஷில் விபசாரிகள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் சில உள்ளன. டோலாதேத்தாஎன்ற கிராமம்தான், உலகிலேயே மிகப் பெரிய விபசார விடுதிகயாகக் கருதப்படுகிறது. அங்கு 1600 பெண்கள் தினமும் 3 ஆயிரம் ஆண்களுக்குத் தங்கள் உடலை விற்கிறார்கள்.

பயங்கரவிளைவுகள்
விலைமாது, தான் சம்பாதிக்கும் (?) பணத்திற்காகக் கொடுக்கும் விலை மிகப் பெரியது. கற்பை இழக்கிறாள். மறுமையில் தீக்குண்டத்திற்கு இரையாகிறாள். ஹராமையே உண்கிறாள். இத்துடன் முடிவதல்ல ஆபத்து. சமூகரீதியாகவும் உடல் மற்றும் மனரீதியாகவும் அவள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.

ஏஜெண்டுகளின் அடிக்கும் உதைக்கும் அளவே இல்லை. சித்திரவதை நடக்கிறது. இழிவுபடுத்தப்படுகிறாள். சில வேளைகளில் படுகொலையே செய்யப்படுகிறாள். அல்லது பால்வினை நோய்களுக்கு இலக்காகி நொறுங்கிப்போகிறாள்.

மனரீதியாகப் பார்த்தால், விலைமாதின் நிலை பரிதாபக்குரியது. அந்நிய ஆணின் ஸ்பரிசம் ஏற்பட்டவுடனேயே அவளில் ஏற்படும் முதல் அதிர்ச்சியே பயங்கரமானது. போகப்போக உணர்ச்சியை இழந்து மரக்கட்டையாக மாறிவிடுகிறாள். கெட்ட கனவுகளால் தூக்கத்தைத் துறந்து அவதிப்படுகிறாள். எரிச்சல், கோபம், நடுக்கம், பலவீனம் என எல்லாம் சேர்ந்து அவளை வாட்டி வதைக்கும். பணம் வந்து என்ன பயன்?

விலைமாதுகள் பெரும்பாலும் நீண்டநாள் வாழ்வதில்லை. சாதாரண பெண்களைவிட இவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. சமூகரீதியாகப் பார்த்தால், விபசாரிகள் சமூக மரணத்தையே அனுபவிக்கின்றனர். சமூகத்தைவிட்டு ஒதுங்கி, மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாமல் தனிமையில் கிடந்து குமுற வேண்டியதுதான். குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை ஆகியவை விபசாரிகளைக் கொல்லாமல் கொல்லும் விஷங்களாகும்.

மேற்குலகினசதி
பங்களாதேஷில் பெரும்பாலான மக்களுக்குச் சொந்த நிலம் கிடையாது. வங்காளிகளில் 45 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே அல்லல்படுகின்றனறர். அங்கு பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். பெண்களுக்கெதிரான கொடுமைகள் அங்கு அங்கீகாரம் பெற்றுள்ளன. பெண்ணை மனுசியாகப் பார்ப்பதைவிடக் காசு சம்பாதிக்கும் ஓர் இயந்திரமாகவே பார்க்கிறார்கள்.

இதுவெல்லாம் பெண்களை விபசார உலகிற்குத் தள்ளிவிடும் காரணிகளாகக் கூறப்படுகின்றன.

வங்காள மருத்துவர் ஃபைரோஸ் மஹ்பூப் கமால் ஓர் உண்மையைப் போட்டு உடைக்கிறார்: பங்களாதேஷில் விபசாரம் பரவியிருப்பதற்கு முக்கியக் காரணம் மேற்குலகம்தான். இஸ்லாத்திற்கெதிரான முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக இதை மேற்கத்தியர் கையிலெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய காலணி ஆதிக்கப் பேர்வழிகள், இஸ்லாமிய நாடுகளிடமும் நலிந்த நாடுகளிடமும் அடித்த கொள்ளைகள், சுரண்டல்கள், அவற்றை அடிமைப்படுத்திச் சிறுமைப்படுத்திய கொடுமைகள், உடல்ரீதியான தொல்லைகள் ஆகியவற்றைத் தாண்டி வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் கலாசாரத்தைச் சீரழிக்கத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள்.

கலாசார சீரழிவைச் செயல்படுத்த நிறுவனநடைமுறையை அவர்கள் கையாண்டு வருகின்றனர். விபசாரத்தைப் பரப்பி, அதை ஒரு தொழிலாக ஏற்கும் மனநிலைக்கு மக்களை அடிமைப்படுத்திவிட்டனர். பங்களாதேஷில் பரவியுள்ள விபசாரம், உண்மையில் காலணி ஆதிக்கத்தின் காலடிச்சுவடு என்றே குறிப்பிட வேண்டும்.

மதச்சார்பின்மை, சுதந்திரம், ஜனநாயகம், மனிதஉரிமை ஆகிய போர்வைகளில் அநாகரிகங்களையும் அநாசாரங்களையும் சட்ட அனுமதியோடு அவர்கள் அரங்கேற்றிவருகின்றனர். விபசாரம் ஓரினச்சேர்க்கை போன்ற பண்பாட்டுச் சீரழிவுகளை மிக எளிதாகப் பரப்பிவிடும் உத்திகள் அவர்கள் வசம் உள்ளன. இந்த அநாகரிகங்களுக்கெதிராக்க் குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் மனித சுதந்திரத்திற்கும் முற்போக்கு கலாசாரத்திற்கும் எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுவர்.

பாலியல் சுதந்திரம் என்பது, ஐரோப்பிய சமூக அமைப்பில் ஒரு குற்றமாகவே கருதப்படுவதில்லை. பங்களாதேஷ் மக்கள் மத்தியில் கலாசார சீரழிவுகள் வேகமாகப் பரவவில்லை. இதற்குக் காரணம் இஸ்லாம்தான். இஸ்லாம் இக்குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கிறது. இதனால், ‘பாலியல் கிளப்களை ஐரோப்பியர் உருவாக்கினர்.

ஐரோப்பியர் ஆக்கிரமித்திருந்த நாடுகளின் முக்கிய நகரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் கலைத் தீவுகள்என்ற பெயரில் ஆண் பெண்கள் சுதந்திரமாகப் பழகும் இடங்களை உருவாக்கினர். இத்தீவுகள்தான் பாலியல் குற்றங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பான இடங்கள் என அவர்கள் கருதினர். ஆட்டம், பாட்டம், சூதாட்டம், விபசாரம், ஒருபால் சேர்க்கை ஆகிய எல்லா கூத்துகளும் அங்கு சட்ட அனுமதியுடன் நடக்கும்.

இந்தக் கலைத் தீவுகளுக்கு, எல்லா தண்டனைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பியர் மட்டுமன்றி உள்ளூர் மக்களும் சிறிது சிறிதாக இத்தீவுகளுக்கு ஈர்க்கப்பட்டார்கள். விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மார்க்கமற்றவர்கள் எனப் பலரையும் இந்நோய் தொற்றிக்கொண்டது. ஐரோப்பியர் நாட்டைவிட்டு வெளியேறியபின்பும் உள்நாட்டு மக்கள் அந்த அழிவிலிருந்து மீளவில்லை.

குடும்ப அமைப்பு சிதைந்தது
திருமண வாழ்க்கை முறையையும் குடும்ப அமைப்பையும் சிதைப்பதில் இந்த விபசாரம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம் நாடுகள்கூட, தம் தீனை மறந்து அமெரிக்காவைப் பின்பற்றி விநோதமான சட்டங்களை இயற்றிவைத்துள்ளன. 18 வயது ஆகாமல் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி சில நாடுகளில் உண்டு. அதே நாடுகள், 18 வயதுக்குட்பட்டவர்கள் விபசாரம் செய்வதைக் குற்றமாக்க் கருதுவதில்லை. அதாவது திருமணம்மட்டும் செய்துகொள்ளாதே. தவறான வழியில் எப்படி வேண்டுமானாலும் காமத்தைத் தீர்த்துக்கொள் என்கின்றன அந்த நாடுகள்.

ஆணும் பெண்ணும் சம்மதித்து சட்டப்படி திருணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்; ஆணும் பெண்ணும் சம்மதித்து தவறான உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது. பிறகு எதற்காகத் திருமணம்? பிறகு ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? குடும்பம், அதற்குள் கட்டுப்பாடு, குடும்பச் சுமை... இப்படி மனித நாகரிகம் கண்ட அமைப்புகளெல்லாம் அழிந்து ஒழிந்துகொண்டிருக்கின்றன, இந்த காட்டுமிராண்டிகளால். வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பே பாதி இளைஞர்கள் பாலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதனால், பால்வினை நோய்கள் அங்கு வேகமாகப் பரவிவருகின்றன.

அல்லாஹ்வே! நீதான் காப்பாற்ற வேண்டும் 
நன்றி - www.jaffnamuslim.com

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்