ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஹெம்மாதகம சட்ட அமுலாக்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த 22.01.2012 (ஞாயிற்றுக் கிழமை) விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்.
சுமார் ஏழரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இவ்விவாத ஒப்பந்தம் போடப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
விவாதத்தின் தலைப்பும், நிலைபாடுகளும்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?
சட்ட அமுலாக்கள் சங்கத்தின் நிலைபாடு.
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு.
“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் வஹியாகும்”. இவ்வஹி குர்ஆனும், ஆதார புர்வமான நபி வழி மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழி. இதுவல்லாத இஜ்மா, கியாஸ், நபித் தோழர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இவை பின்பற்றத் தகுதியற்றவை. இதுவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடாகும்.
விவாத நாள்.
ஏப்ரல் 21, மற்றும் 22 ஆகிய நாட்களில் விவாதம் நடை பெரும். இன்ஷா அல்லாஹ்.
இவ்விவாத ஒப்பந்தத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கலந்து கொண்டோர்.
சகோதரர் ரியால் (தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் கமர்தீன் (துணைத் தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் சாதிக் (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாக உறுப்பினர்)
சகோதரர் பர்ளீன் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் பர்சான் (ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் பஸீஹ் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ஸப்வான் D.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ரஸ்மின் M.I.Sc (துணை ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் ஹிஷாம் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
குறிப்பு:-
விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்