“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை குறித்து குரல் எழுப்புவதற்கோ இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கோ அணுவளவும் அறுகதை கிடையாது என்பதோடு மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மண்ணை கபளீகரம் செய்ய நினைக்கும் மேற்குலக நரித்தனத்தை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச உலகுக்கும் உணர்த்தும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை எமது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று மேற்கொண்டது.
பி.ப.2.00 மணியளவில் மாளிகாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்பாட்டம் கொட்டும் மழையில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடனும் தக்பீர் முழக்கங்களுடனும் மிக நேர்த்தியாக நடை பெற்றது. சாலை நெறிசல்களை ஏற்படுத்தாது பிறருக்கு ஊரு விளைவிக்காது கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற முன்மாதிரி மிகு ஆர்ப்பாட்டமாக இதனை அடையாளப்படுத்த முடியும்.
நட்டின் இறைமையை இமையாய் காக்க ஒரே முஸ்லிம் அமைப்பாக எமது ஜமாஅத் தான் களமிறங்கியது என்பதனை மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டமை அவதானத்துக்குரியது. மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பஞ்சிக்கா வத்தை, மறதானை புகையிரத நிலையம் தாண்டி கண் மருத்துவ மனை வரை ஊர்வலமாய் வந்து அமைதியாய் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.