Pages

Saturday, October 22, 2011

உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி!

[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 05:19.05 AM GMT ]
லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ‘ நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத்துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.
1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் இழந்தார். தனது 69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்