Pages

Sunday, May 29, 2011

அன்பன் இஸ்மத் அலியின் மடலுக்கு அன்பார்ந்த பதில்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
ப்ரிய இஸ்லாமிய தோழா!


உங்கள் உடல் மற்றும் ஈமானிய ஆரோக்கியத்திற்காய் உளமாற வேண்டியவனாய் உங்களுடனான சினேகபுர்வ உரையாடலை இம்மடல் மூலம் ஆரம்பிக்க முனைகிறேன்.


சொந்த விருப்பு வெருப்புகளைத் தாண்டி, மறுமை வெற்றியை மட்டும் இலக்காய்க் கொண்டு எம் கருத்துப் பரிமாற்றங்கள் காத்திரமான பங்களிப்பை நல்குவதற்கு இறைவனை வேண்டுகிறேன்.


”இறைவா! சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் வேறுபிரித்தறியும் ஆற்றலை எமக்கு வழங்குவாயாக!”


தோழா!


ஜாமியா நளீமியா வளாகத்தில் கடந்து போன எம் வாழ்வின் சிலப்பதிவுகளை நினைவு கூர்ந்து, பழையதை நினைவு படுத்தி, புதியவை குறித்து வினா தொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.


உங்கள் ஆதங்கத்தையும், அன்பொழுகும் அரவனைப்பையும் நினைத்து அகமகிழ்கிறேன். என்னைக் குறித்த உங்கள் மடலின் சாராம்சங்களாய் பின்வரும் அம்சங்களை குறிப்பிட முடியும்


1)ஜமாஅதே இஸ்லாமி எனும் தெளிவான கொள்கையிலிருந்து தடம் புரள்வதற்கான காரணம் என்ன?


2) கருத்துக்களை விமர்சிப்பதை விட ஏன் தனிமனித விமர்சனங்களை முடுக்கிவிடுகறீர்கள்?


3)ஜமாஅத்தின் தஃவா அனுகுமுறையில் கண்ட தவறுகள் எவை?


4)ஷிர்க் - பித்அத் ஒழிப்பால் மட்டும் சமூக மாற்றம் சாத்தியமாகாது.


5)ஜமாஅத் கடைபிடிக்கும் ஒற்றுமை, நடுநிலைப் போக்கு என்பன மார்க்கத்துக்கு எவ்வகையில் முரணானது?


6)பிக்ஹூல் அவ்லவியாத் (தஃவாவில் முதன்மைப்படுத்த வேண்டியது எது என்பது பற்றிய தெளிவு தவ்ஹீத் வாதிகளுக்கு பரிச்சயமற்ற ஒன்று)


7)தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அனுகு முறை உள்ளத்திலும் உலகிலும் அமைதியை சீர்குழைக்கிறது.


மேற்குறித்தவை நீங்கள் என்னைக்குறித்து எழுதிய வரிகளின் சுருக்கம்.


முதலில், விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, விமர்சனத்தில் நியாயங்கள் இருப்பின் என் தவறுகளை களைவதற்கான மனதுடனும், நியாயமற்றதாயின் அதற்குண்டான தெளிவுகளை வழங்க வேண்டும் என்ற கடமைப்பாட்டுடனுமே நான் உங்கள் மடலையும் உள்வாங்கிக்கொள்கின்றேன் என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வரும் மடல்களில் என் குறித்த உங்கள் புரிதல்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் குறித்த உங்கள் நிலைப்பாடுகள், ஜமாஅதே இஸ்லாமி தொடர்பான உங்கள் பிடிமானம் சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்து கருத்துப்பரிமாற்றம் செய்ய மிகுந்த ஆவலுடன் உள்ளேன் என்பதை அறியத் தருகிறேன்.


முரண்பாடுகள் உடன்பாடுகளாய் மாற வேண்டுமாயின் முரண்பட்டு நிற்பவர்கள் தம் கௌரவத்தை விட்டு, ஒரு மேசையில் அமர்ந்து வஹியின் ஒளியில் தீர்வுகளை தேட முற்பட வேண்டும். இதுவே, ஆரோக்கியமான பிரச்சாரக் களத்திற்கு ஏற்றமான முறையாகும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.


அத்தகையதோர் திறந்த கலந்துரையாடலை ஆசித்தவனாய் என் முதல் மடளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.


“எம் என்னங்களை இறைவன் தூய்மை படுத்தி எம் பணிகளை பொறுந்திக் கொள்வானாக!”


   

1 comment:

  1. //முரண்பாடுகள் உடன்பாடுகளாய் மாற வேண்டுமாயின் முரண்பட்டு நிற்பவர்கள் தம் கௌரவத்தை விட்டு, ஒரு மேசையில் அமர்ந்து வஹியின் ஒளியில் தீர்வுகளை தேட முற்பட வேண்டும்.//

    நிச்சயமாக, வஹியை விட்டு அப்பால் சென்று முரண்பாடுகள் களைய முற்படுவதும், உள்ளங்களை ஒன்று சேர்க்க நினைப்பதும் எத்தனை சாத்தியம் என்பது இலங்கையில் 50 ஆண்டு கால த'அவா களத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்பவர்களுக்கும், இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் போன்ற துறைகளில் முதுமாணிப்பட்டம் வரை கறை கண்டவர்களுக்கும் ஏன் இன்னும் புரியவில்லை என்று நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் கண்டிப்பாக காலத்தின் தேவை என்பதையும், ஜமா-அதே-இஸ்லாமி இயக்கத்தை சார்ந்தவர்கள் தங்களை சுற்றியுள்ள வேலிகளை உடைத்தெறிந்து விட்டு வஹியின் நிழலில் தீர்வு காண வருவது உளத்திருப்தி அளிக்கிறது என்றும் கூறி விடைபெறுகிறேன்.

    sheloobeen,
    Kahatowita.

    ReplyDelete

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்