விமர்சனக் கேள்வி.
ஜனவரி அழைப்பு இதழில் பிரசுரிக்கப்பட்ட ‘இலங்கையை இலக்கு வைக்கும் ஷீயாக்கள்’ என்ற ஆக்கம் பொய்களையும் அபாண்டங்களையும் அடிப்படையாக வைத்து காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு கட்டுரையாகவே அமைந்திருந்தது. சில பித்அத்துகளில் மட்டும் முரண்படும் ஷீயாக்களை காபிர்கள் போன்று சித்தரித்து, இஸ்லாமியப் பணியில் மும்முரமாக செயற்படும் நளீமிக்களை ஷீஆக்களோடு தொடர்பு படுத்தி,இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி,இக்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கத்தினரை ஷீஆவாதிகள் போன்று சித்தரித்து அவதூறுகளை அள்ளிவீசியிருக்கும் உங்கள் எழுத்து கண்டிக்கத்தக்கது.மனதில் தோன்றியதையெல்லாம் வாந்தியெடுக்காமல் தன் எழுத்துக்கான சான்றுகளுடன் இதன் பிறகாவது எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
முஹம்மது ஹலீம் - மாவனல்லை.
பதில்.
ஈரானின், அமெரிக்க - இஸ்ரேல் எதிர்ப்புணர்வு, சர்வதேச ஒற்றுமை குறித்த அஹ்மது நஜாதின் கருத்துக்கள், இஸ்லாமிய கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் எழுத்தோவியங்கள், வறிய முஸ்லிம் நாடுகளுக்கான உதவிகள்,ஈரானின் அணு ஆயுத பலம் போன்ற சில புறத்தோற்றங்களை மட்டும் காணும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஈரான் ஓர் இஸ்லாமிய தேசம் என்றும், அதன் ஆட்சியாளர்களும் ஆன்மீகத் தலைவர்களும் மிகப் பெரும் இஸ்லாமிய வாதிகள், அங்கு ஆட்சிபீடத்தில் இருக்கும் ஷீயாயிஸம் இஸ்லாத்தின் ஒரு பகுதி தான் என்றும் கருதுகின்றனர்.
உண்மையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை நாம் புறத்தோற்றங்களையும், வெளிப்பகட்டையும் வைத்து சரிகாணக்கூடாது. அதன் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸ_ன்னா எனும் உரைகற்களின் மூலம் உரசிப்பார்த்தே ஓர் இயக்கத்தை சரிகாணுதல் வேண்டும். ஷீயாக்கள் என்போர் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பதை நன்கு அறிந்த எந்தவொரு முஸ்லிமும் அவர்களை ஆதரிக்க மாட்டான். அப்படித்தான் ஆதரித்திருந்தாளும் தன் நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொள்வான். வினா தொடுத்த வாசகர் ஷீயாக்களின் கொள்கைகளை புரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் குறித்த மிகவும் சுறுக்கமான அறிமுகத்தை இங்கே தருவது பொருத்தமென்று கருதுகிறோம்.
ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளில் சில:
கிலாபத் பற்றிய கோட்பாடு:
ஒவ்வொரு நபிக்கும் ஒரு வாரிசும் பிரதிநிதியும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் வாரிசும் பிரதிநிதியும் அலியாவார்.
நபிக்குப் பின் ஆட்சி அலிக்கே சொந்தம். அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோர் அதனை பறித்துக் கொண்டனர். இவர்கள் மீது அல்லாஹ்,மலக்குமார்கள், அனைத்து மக்களினதும் சாபம் உண்டாவதாக. (நூல்: அல் காபி, பாகம்: 08, பக்கம்: 245)
நபித்துவம் பற்றிய கோட்பாடு:
முஹம்மது (ஸல்) அவர்களைவிட அலியே நபித்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர்: சிறந்தவர்.
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்.(நூல்: அல் புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன். பாகம்: 04, பக்கம்: 226)
அல் குர்ஆன் பற்றிய கோட்பாடு:
நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் கொண்டு வந்த குர்ஆன் 17 000 வசனங்களை உடையதாகும். (நூல்: அல் காபி, பாகம்: 02,பக்கம்: 463)
இறக்கப்பட்டது போல் முழுக்குர்ஆனையும் தான் ஒன்று சேர்த்ததாக எவன் வாதிடுவானோ அவன் பொய்யனாவான்.(நூல்: அல்காபி, பாகம்: 01, பக்கம்:228)
அல் ஹதீஸ் பற்றிய நிலைப்பாடு:
அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி என்பவரால் எழுதப்பட்ட ‘உஸ_லுல் காபி’ என்ற நூலை மட்டுமே ஆதார நூலாக கொள்வர். புகாரி, முஸ்லிம் உட்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களையும் ஏற்க மறுப்பர்
ஸஹாபாக்கள் பற்றிய நிலைப்பாடு.
மிக்தார் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மானுல் பாரிஸி ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.(நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபி, பாகம்: 08, பக்கம்: 245
அல் காயிம் வந்து ஆயிஷாவை திரும்ப எழுப்பி அவர்களை சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.(நூல்: தப்ஸீர் ஸாபி, பாகம்: 02, பக்கம்: 108)
12 இமாம்கள் பற்றிய கோட்பாடு:
12 இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது எமது கொள்கையாகும். ஏனெனில் 12 இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷ_க்கு அடியில் இருந்தார்கள்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.(ஆசிரியர்;: இமாம் குமைனி, நூல்: விலாயதே பகீஹ் தர் குஸ_ஸே ஹ_கூமதே இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு. பக்கம்:58)
முத்ஆ எனும் விபச்சாரத் திருமணம் பற்றிய கோட்பாடு:
கூலி கொடுத்து வாடகைப் பெண்ணுடன் எவராவது ஒரு முறை உடலுறவு கொண்டால் நரகத்தை விட்டும் 1ஃ3 பங்கு உரிமை சீட்டைப் பெற்றுக் கொண்டார். இரு முறை உறவு கொண்டால் மும்மடங்கு நரக வேதனை உரிமை சீட்டை பெற்றுக் கொண்டார். மூன்று முறை உறவு கொண்டால் பூரணமாக நரகை விட்டும அவன் விடுதலை பெறுகின்றான். (நூல்: அஷ்ஷீயா வ அஹ்லுல் பைத், பக்கம்: 218)
தர்ஹாக்கள் பற்றிய கோட்பாடு:
ஹ_ஸைன் (ரலி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட 100ஹஜ்ஜூகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்பட்ட 100 உம்ராவுக்கும் சமமானதாகும். (நூல்: அல் இர்ஷாத், பக்கம்: 252)
யார் ஹ_ஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் இர்ஷாத், பக்கம்: 252)
ஸன்னிகள் பற்றிய கோட்பாடு:
ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும்,கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாளும் அவை பதியப்படுவதில்லை என்று 8வது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டார். (நூல்: உயூனு அக்பாரிர் ரிழா, பாகம்: 02, பக்கம்: 236)
இவை ஷீயாக்களின் சீர்கெட்ட சிந்தனைகளிலிருந்து சில நச்சுத் துளிகள் மட்டுமே. இப்போது கூறுங்கள்: அல்லாஹ்வின் பண்பை அலிக்கு வழங்கியவர்கள், அலியை அல்லாஹ்வாக்கியவர்கள், நபிகள் நாயகத்தை குறை கண்டவர்கள், அல்குர்ஆனை நம்ப மறுத்தவர்கள், ஹதீஸ்களை புறக்கணித்தவர்கள், சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர், உமர்,உஸ்மான் (ரழி) ஆகியோரை காபிர்கள் என்று கூறியவர்கள், இறை விசுவாசிகளின் அன்னையரும் அண்ணலாரின் அருமை மனைவியருமான ஆயிஷா, ஹப்ஸா (ரழி) போன்றோரை வேசிகள் என்று முழங்கியவர்கள்,தங்கள் இமாம்களை நபியை விட, மலக்கை விட உயர்வாகக் கருதுபவர்கள், ஒட்டுமொத்த ஸஹாபா சமூகத்தையும் காபிர்கள் என்பவர்கள், நபிகளார் இடிக்கச் சொன்ன கப்ருகளை(தர்ஹாக்களை) வழிபடும் இடமாக எடுத்துக் கொண்டவர்கள், அடுத்தவன் மனைவியை பங்கு வைத்துக் கொள்ளும் விபச்சாரக் கலவியை சுவனச் செயலாக பிரகடணப்படுத்திய காமுகர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
இவ்வளவு ஈனத்தனமான கொள்கைகளை கொண்டவர்களை எந்த அடிப்படையில் நேர்வழியில் சேர்க்க முடியும்? இவர்களை எப்படி ஓர் உண்மை முஸ்லிம் அங்கீகரிக்க முடியும்? அவர்களோடு எப்படி நேசம் கொள்ள முடியும்? இக்கேடுகெட்ட கொள்கை அரசோட்சும் இராச்சியத்தை எப்படி இஸ்லாமிய குடியரசாக நாமம் சூட்ட முடியும்? இத்தகைய வழிகேடர்களை எப்படி எமது மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மேடையேற்ற முடியும்??
இவ்வளவு வழிகேடான ஒரு கொள்கையை ஒருவன் அல்லது ஓர் இயக்கம் ஆதரித்தால், அவர்களுக்கு சார்பாக தம் எழுத்துக்களையும் நாவன்மையையும் பயன் படுத்தினால் அவன் அல்லது அவ்வியக்கம் நேர்வழியில் உள்ளதா? வழிகேட்டில் உள்ளதா?
இன்று இலங்கையில் செயற்பட்டு வரும், இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கத்துடிக்கும் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் (DA, MFCD) போன்ற இயக்கத்தினர் இவ்வழிகெட்ட ஷீயாயிஸத்தை ஆதரிப்பதை பார்க்கிறோம். ஷீயாயிஸத்தை தம் இயக்கப் பெயர்களின் ஊடாக வாந்தியெடுப்பதை பார்க்கிறோம். ஈரானில் ஆயத்துல்லா கொமைனியினால் தோற்றுவிக்கப்பட்ட ஷீயா புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்து,வழிகேடன் கொமைனியை இஸ்லாத்தை காக்க வந்த ஈமானிய புருஷராக உருவகப்படுத்தி இலங்கை நாட்டுக்குள் முதன் முதலாக ஷீயாயிஸத்தை விதைத்து வேரூன்றச் செய்து ஈமானுக்கு வேட்டு வைத்த பெருமை, இலங்கையில் கிலாபத் கனவில் சஞ்சரிக்கும் ஜமாஅதே இஸ்லாமிக்கே உரியது. ஈரானின் ஷீயா புரட்சியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக ‘ஈரான் மக்கள் புரட்சி’ என்ற நூல் காலம் சென்ற S.M.மன்சூர் அவர்களால் 1979ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே ஷீயாயிஸத்தை அறிமுகப்படுத்திய முதல் நூல்.
ஷீயாக்கள் குறித்த ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் கூட அவர்களை ஆதரிப்பதாகவே உள்ளது. ஜமாஅதே இஸ்லாமி மற்றும் இஹ்வான்கள் பெரிதாக போற்றும் நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர் என்று சிலாகிக்கப்படும் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து வெளியிட்ட பேட்டியை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் 2008 ஒக்டோபர் இதழ் ‘ஷீஆக்கள் பற்றி யூசுப் அல் கர்ளாவி என்ன சொல்கிறார்?’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தது.கர்ளாவியின் கருத்தை தமது இதழில் வெளியிட்டதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமியின் தற்போதைய நிலைப்பாடும் இது தான் என்பதை மீண்டும் ஒரு முறை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இப்பேட்டியில் கர்ளாவி ஷீயாக்கள் குறித்து கூறும் போது ‘கடும் போக்காளர்கள் கூறுவது போன்று நான் அவர்களை (ஷீஆக்களை) நிராகரிப்பாளர்கள் என்று கூற மாட்டேன்.அவர்கள் முஸ்லிம்கள்.எனினும், (அஹ்லுஸ்ஸ_ன்னாவின் கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளை உடைய) பித்அத்வாதிகள்’… ‘இவர்கள் பகிரங்க குப்ரில் இருப்பதாகவோ,இஸ்லாத்துக்கு வெளியில் சென்றுவிட்டதாகவோ நாம் கூறுவதில்லை.’
அலியை கடவுளாக்கி, அல்லாஹ்வை இழிவு படுத்தி,நபிகளாரை மறுத்து,புனிதக் குர்ஆனை குறைகண்டு, ஹதீஸ்களை நிராகரித்து, ஸஹாபாக்களை காபிராக்கி, விபச்சாரத்தை ஹலாலாக்கிய வழிகேட்டுக் கும்பலை முஸ்லிம் என்பதா? முஷ்ரிக் என்பதா? அவர்கள் செய்தது பித்அத்தா? ஷிர்க்கா? கர்ளாவி மற்றும் ஜமாஅதே இஸ்லாமியினரின் பார்வையில் ஷீயாக்களும் முஸ்லிம்கள் என்றால் உங்கள் கிலாபத் ஆட்சியில் அலி தான் நபியா?உங்கள் சமூக உருவாக்கத்தில் விபச்சாரம் ஹலாலா? உங்கள் சாம்ராஜ்ஜியத்தில் தர்ஹாக்களுக்கு என்றும் அங்குரார்ப்பண விழாவா?ஈமானை பறிக்கும் இத்துணை வழிகேடுகளும் உங்கள் பார்வையில் சில்லறை என்றால் எதுதான் உங்கள் ஆட்சியில் பெரியது?
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மட்டுமன்றி இந்திய ஜமாஅதே இஸ்லாமியும் ஷீயாக்களின் விசிரிகள் தான் என்பதற்கு இந்திய வெளியீடான சமரசம் 1 – 15 மார்ச் - 1999ம் அன்று பிரசுரிக்கப்பட்ட பின்வரும் புகைப்படம் தக்க சான்றாகும். ஜமாஅதே இஸ்லாமியின் மாநாட்டில் ஷீயாக்களோடு கைகுழுக்கும் இந்திய ஜமாஅதே இஸ்லாமி தலைவர் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைவர்கள் ஒன்றாக நிற்பதையும், அவர்களுக்கிடையிலான உறவுப் பாலத்தையும் இப்படம் சித்தரித்துக் காட்டுகின்றது.
இதுபோக, நளீமிக்கள் என்போர் ஏதோ இஸ்லாமியப் பணியில் கரைகண்டவர்கள் என்றும் அவர்களுக்கும் ஷீயாக்களுக்கும் தொடர்பில்லை என்றும் விமர்சித்திருந்தீர்கள். இலங்கையில் ஷீயாக்களின் வளர்ச்சியில் நளீமீக்களுக்கு பாரிய பங்கு உண்டு என்பதற்கு பின்வரும் புகைப்படங்கள் சான்றாகும். தஃவா களத்தில் பிரகாசிக்கும் பல நளீமீக்களும் வேறு சில குர்ஆன் ஸ_ன்னா போர்வையில் செயற்படும் பிரசாரகர்களும் ஷீயாக்களின் வெளியீடுகளுக்கு அணிந்துரை வழங்கி, அவற்றின் விற்பனைக்கு துணைபோவதனையும், ஷீயாயிஸத்தின் வளர்ச்சிக்கு பசலையாக மாறுவதனையும் இப்புகைப்படங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன:
நூல்: இஸ்லாமிய உலகும் சவால்களும்
ஆசிரியர்: S.H.மவ்லானா
வெளியீடு: மிலேனியம் கல்வி ஸ்தாபனம்
அணிந்துரை: அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி –MA ஆசிரியர் மீள்பார்வை பத்திரிகை)
நூல்: ‘பாலியலும் பருவ வயதும்’
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்(நளீமி,பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நழீமிய்யா கலாபீடம்)
நூல்: ‘மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி?’
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்(கும்மி)
அணிந்துரை: DR.மரீனா தாஹா ரிபாய்
MBBS(Cey), ஸ்தாபகர்: அல்முஸ்லிமாத் மாதர் அமைப்பு.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஓர் உண்மையை புலப்படுத்துகின்றன: இலங்கையில் ஷீயாக்களை திட்டமிட்டு வளர்க்கும் பணியில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று தம்மை பெருமை பாராட்டிக் கொள்ளும் ஜமாஅதே இஸ்லாமி,இஹ்வான்கள் போன்ற ஜமாஅத்துக்கள் பின்புலத்தில் இருப்பதோடு,நளீமிக்களும் ஷீயா வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதுவும் வெள்ளிடை மலை.
நாம் இவர்களை அம்பலப்படுத்துவது காழ்ப்புணர்ச்சியில் அல்ல,சமுதாயத்தை இவர்களின் சதிகளில் இருந்து காப்பதற்காகவே என்ற உண்மையை வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்