Pages

Sunday, June 28, 2015

ஷீயாக்களின் வேதம் திருக்குர்ஆன் இல்லை - ஸூன்னிகளை ஏமாற்றும் தகிய்யா கோட்பாடு தகர்கிறது...



ஷீஆ மதத்தவர்களே நபியவர்களுக்கு கொடுக்கப் பட்ட வேதமான " அல் - குர்ஆன் " தவிர்ந்த அலி ரழிக்கு என்றே பிரத்தியேகமான வேறு வேதங்கள் இறக்கப் பட்டனவா? என்று நாம் கேட்கிறோம்.

இல்லையென்று நீங்கள் பதில் கூறினால் பின்வருபவைக்கு நீங்கள் என்ன பதில் கூறப் போகிறீர்கள்?


அல் - ஜாமிஃ வேதம் :

அபூ அப்தில்லாஹ் அலை வாயிலாக அபூ பஸீர் கூறுவதாவது : 

எம்மிடம் ஜாமிஃ எனும் வேதமுள்ளது. ஜாமிஃ வேதம் என்றால் என்னவென்று தெரியுமா? எனக் கேட்க, நான் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அது என்னவென்று கேட்டேன். அதற்கவர்கள் அது (நபியவர்களின் கை முழத்தின் அளவில்) 70 முழம் அளவுள்ள ஒரு வேதமாகும். அதை அலி ரழி தனது வலது கையால் எழுதினார்கள். அதிலே ஹலால் ஹராம் பற்றிய அனைத்து சட்டதிட்டங்களும் உண்டு. மேலும் மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் அதில் உண்டு எனக் கூறினார்கள்.
ஆதாரம் : அல் - காபி ( 239/1)



சிந்தியுங்கள் ஏன் அது ஒழித்து, மறைத்து வைக்கப் பட்டுள்ளது?
ஏன் அதை விட்டும் அதில் உள்ளவைகளை விட்டும் நாம் தடுக்கப் பட்டோம்?

இது அறிவை மறைக்கும் குற்றத்தில் உள்ளடங்காதா?


நாமூஸ் வேதம் :


ரிழா அலை கூறுவதாவது : 
(ஷீஆ மத இமாமுடைய அடையாளங்களப் பற்றி வரும் ஹதீஸில்) அந்த இமாமிடம் மறுமை நாள் வரும் வரையுள்ள வரையுள்ள ஷீஆ மதத்தவர்களின் பெயர்கள் அனைத்தும் உள்ளடங்கிய வேதமிருக்கும். 
மேலும் அவரிடம் மறுமை நாள் வரும் வரையுள்ள ஷீஆ மதத்தவர்களின் எதிரிகளின் பெயர்கள் அனைத்தும் உள்ளடங்கிய வேதமிருக்கும்.
ஆதாரம் : பிஹாருல் அன்வார் ( 117/25)

நாம் கேற்கிறோம் :
  • அது எங்கே? காட்டுங்கள்.
உதாரணத்துக்கு ஈரானில் வாழும் தற்போதைய ஷீஆ மதத்தவர்களின் பெயர்களை மட்டும் பதிவு செய்தாலே - ஆகக் குறைந்தது - 100 பாகங்கள் கொண்ட புத்தகங்கள் தேவைப் படுமே?


உபைதிய்யா வேதம் :


அமீருல் முஃமினீன் அலை கூறுவதாவது : 
அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னிடம் பல வேதங்கள் உள்ளன. அவைகள் நபியவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கூறியவையே. அவைகளிலே உபைதியா எனப் படும் ஒரு வேதமுண்டு. அதிலே அறபிகள் பற்றி மிக காரசாரமாகப் பேசி, கடுமையாக ஏசி நிறைய ஆயத்துக்கள் உள்ளன. இன்னும் அதிலே மிகத் தெளிவாக அறபிகளின் 60 " கபீலாக்கள் " ( கோத்திரங்கள்) பற்றிக் கூறப் பட்டுள்ளது. அவர்களில் எவருக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எந்த விதப் பங்கும், உரிமையும், தொடர்பும் கிடையாது.

ஆதாரம் : பிஹாருல் அன்வார் ( 37/26)

நாம் கூறுகிறோம் : 
  • இந்தப் பொய்யான செய்தியை எம்மால் ஏற்கவும் முடியாது. அது எமது புத்திக்குப் படுவதும் கிடையாது. 
  • அறபிகளின் விடயத்தில் உங்களுடைய பொறாமை நிறைந்த இவ் வாதத்தின் அருத்தம் யாதெனில் : பூமியில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஒரு முஸ்லிமுக்குக் கூட உரிமை கிடையாது என்பது தான்!!! 
🔥 முஸ்லிம்களே! முஃமின்களே! சிந்தியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். 
( ஈரானிய, பாரசீக) பிரதேச வாதத்தின் வாடை வீசும், கல்நெஞ்சம் பிடித்த இக்கீழ்த்தாரமான நம்பிக்கை மூலம் எவ்வாறு கோத்திரங்களைக் குறி வைக்கிறார்கள் என்று!!!

( இது மறக்கவே முடியாத மாபெரும் குற்றமாகும்.)


வாள் பிடியில் உள்ள வேதம் :


அபூ அப்தில்லாஹ் ( அலை) வாயிலாக அபூ பஷீர் கூறுவதாவது :
நபியவர்களின் வாளின் பிடியில் சிறிய வேதம் ஒன்று இருந்தது. அதிலே பல அத்தியாயங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஆயிரம் வசனங்கள் இருந்தன. அவைகளில் மறுமை நாள் வரை இரு அத்தியாயங்கள் மாத்திரமே ( ஷீஆ மதத்தினருக்கு) வெளியிடப் படும்.


ஆதாரம் : பிஹாருல் அன்வார் ( 56/26)

கேள்விகள் :
1- மீதமான சூராக்கள் எங்கே?
2-அவைகளையும் வெளிக் கொணரும் போது ஷீஆ காபிர்கள் பிரையோசனம் அடைவார்கள் அல்லவா?!!!
3- அல்லது அவை பதுங்கிக் கிடக்கும் உங்கள் மஹ்தி ( காயிம்) பதுங்கு குழியை உடைத்துக் கொண்டு வெளியே வரும் வரை மறைக்கப் பட்டதாகவே இருக்கப் போகிறதா?!!!
4- ஷீஆ மதத்தின் சந்ததிகள் வாழையடி வாழையாக அழிந்து செல்ல மார்க்கம் பதுங்கு குழிக்குள் பதுக்கி வைக்கப் படப் போகிறதா???!!!


அலி ( அலை) உடைய வேதம் :

இதுவும் ஒரு வேதம்.
ஜப்ர் வேதம் :

இது இரு வகைப் படும் : 
1- ஜப்ர் அப்யழ். 2- ஜப்ர் அஹ்மர்.

அபுல் அலா கூறுகிறார் : அபூ அப்தில்லாஹ் அலை சொன்னதை நான் கேட்டேன் : அவர்களிடம் ஜப்ர் அப்யழ் உள்ளது என்றார்கள். அதில் என்ன உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நபிமார்களான தாவூத் அலை அவர்களுக்கு கொடுக்கப் பட்ட ஸபூர் வேதமும், மூஸா அலையுடைய தௌராத் வேதமும், ஈசா அலையுடைய இன்ஜீல் வேதமும், இப்றாஹீம் அலைக்கு கொடுக்கப் பட்ட சுஹுபுகளும், ஹலால் ஹராம் பற்றிய முழு விபரங்களும் அடங்கிய வேதமே இதுவாகும் என்றார்கள். ( இதில் மறைமுகமாக உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களையும், வேதங்கள் அனைத்தையும் விட இவர்கள் உயர்ந்து செல்வதாக காட்ட முனைகின்றனர்)

பிறகு ஜப்ர் அஹ்மர் வேதத்தில் எது உள்ளது? என வினவினேன். அதிலே யுத்தம் ( நாடுகளுக்கிடையில் ஏற்படும் மாற்றங்கள், பிற்காலத்தில் நடைபெறப் போகின்ற ஷீஆ மத யுத்தங்கள் போன்றவை பற்றிய தகவல்கள், எதிர்காலத்தில் நிகழக் கூடிய மறைவான விடயங்கள்) பற்றிய செய்திகள் அதில் உள்ளன. யுத்தங்களின் போது அது திறக்கப் படும் என்றார்கள்.

ஆதாரம் : உஸுல் அல் -காபி (24/1)
நாம் கேட்கிறோம் : 
  • உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களினதும் அனைத்து வேதங்களின் மொத்த அறிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இவ் வேதத்தை ஏன் மறைக்கிறீர்கள்?!

சிந்திக்க மாட்டீர்களா?!
ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது.....

Saturday, June 27, 2015

வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் - தொடர் உரை


இலங்கையில் அண்மைக்காலமாய் ஷீயாக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருவதனை கருத்திற் கொண்டு “வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பிலே புனித ரமழானின் முதல் வாரம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் தொடர் உரை ஆற்றப்பட்டது.

ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளையும், இலங்கையில் அவர்களின் ஊடுறுவல்களையும் அறிந்து கொள்ள ஆர்வப்படும் அன்பர்கள் மேற்கண்ட உரையினை கீழ் காணும் இணைப்பை சொடுக்குவதன் மூலம் பார்க்க முடியும்.




ஷீயாக்கள் அன்றும் இன்றும் - முதல் நாள் தலைப்பு: வழிகேடுகள் உருவாகுவதற்கான காரணங்கள்

இரண்டாம் நாள் தலைப்பு: ஷீயாக்களின் தோற்றமும் பின்னணியும்

மூன்றாம் நாள் தலைப்பு: அஹ்லுல் பைத் என்போர் யார்?

நான்காம் நாள் தலைப்பு: தகிய்யாவும் தவறான கொள்கைகளும்

ஐந்தாம் நாள் தலைப்பு: அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினரின் கொள்கை என்ன?

ஆறாம் நாள் தலைப்பு: இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல்