Pages

Monday, September 16, 2013

ஜமாத்தே இஸ்லாமி , இக்வான் சகோதரர்களுக்கு மனம் திறந்த மடல் :

________________________________________

உலக முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லும் வழிகெட்ட கொள்கையை கொண்டுவந்ததே வழிகெட்ட இக்வானிய கூட்டம்தான். செய்யித் குதுப் உலக முஸ்லிம்கள் அனைவரும் காபிர்கள் ஆகிவிட்டனர் என்றார் ஆனால் இன்று வந்த வழிகெட்ட கர்ளாவி செய்யித் குதுப் வழிகேடர் என்றார். மேலும் வழிகேட்ட மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுத்துள்ளார், எவருமே மறுக்க முடியாத தஜ்ஜாலின் வருகை பற்றிய "முதவாதிரான" ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் தவறாக சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களை பிழை காண்கிறார் மவ்தூதி.

இக்வாங்களின் தலைவர் உமர் தில்மிசாணி கபுர்வணக்கம் செய்வது சரி என்கிறார். எடுத்த எடுப்பில் யாரையும் நாம் வழிகேடு என்று சொல்லவில்லை உசூல் விதிகளை பேணி ஆய்வு செய்து அதில் பிழை வந்தால் வழிகேடு அல்ல ஆனால் இஸ்லாத்தில் "மா உளிம பி அத்தீனி பிள்ளரூரா " என்ற மிகவும் அறியப்பட்ட விடயங்களில் அத்து மீறி இஜ்திஹாத் செய்து வலிகேடான பத்வா சொல்லும் கூட்டத்தையே நாம் வழிகேடு என்று சொல்கிறோம்.

பன்றிக்கொழுப்பு ஹராம் என்று அறியப்பட்டது அதை ஹலால் என்று கர்ளாவி சொல்கிறார், கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஹராம் இதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார், அல்லாஹ்வுக்கு அர்ஷ் எனும் சிம்மாசனம் உள்ளது என்று கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட விடயத்தை செய்யித் குதுப் இல்லை என்கிறார், இது இது வழிகேடு இல்லையா ? நன்மை தீமை அளக்கும் மீசான் எனும் தராசு பற்றி அல்லாஹ் சொல்லியிருக்க அது இல்லை என்று செய்யித் குதுப் அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறார் இது வழிகேடு இல்லையா ?..............

பெண்களுக்கு கைகொடுப்பது ஹராம் என்று அறியப்பட்ட விடயம் ஆகும் அதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? இந்த வழிகேட்டை சாதாரண மஸாயில் பிரச்சினை என்று வழிகெட்ட மன்சூர் சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? சியோநிசத்துடன் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான பிரச்சினை இல்லை அரசியல் ரீதியான பிரச்சினைதான் உள்ளது என்று யூத சியோனிச கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் கர்ளாவி இது வழிகேடு இல்லையா ?.....

பன்றி கொழுப்பு , இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து , புத்தாண்டு வாழ்த்து, பெண்களுக்கு கை கொடுத்தல், என்பவை ஹலால் என்று சொல்லும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான் அதை எதிர்க்க ஒன்றும் இல்லை என்று இந்த கூட்டம் கருதினால் இவ்வாறான எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாஹிலிய கால காபிர்கள் நிலையை அடைந்த காபிர்கள் என்று செய்யித் குதுப் சொன்னது வழிகேடு இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் கருதினால் இவ்வாறான் எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

கபுர்வணக்கம் சரி என்று சொல்லும் இக்வானின் தலைவர் உமர் தில்மிசாணி வழிகேடர் இல்லை என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது வழிகேடு இல்லை என்றால் இந்த இணைவைப்புக்கு எதிராக எந்த பிரச்சாரமும் செய்யாத இக்வான்கள் இப்படியான ஷிர்க் இல்லாத தவ்ஹீத் வாதிகளுடன் ஏன் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர் ?.......

மேலே சொன்ன வற்றில் பன்றி கொழுப்பு, இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது , புத்தாண்டு கொண்டாடுவது கூடும் கபுர்வனங்குவது சரி என்று சொல்வது தஜ்ஜாலின் வருகை இல்லை என்று சொல்வது, அன்னிய பெண்ணுக்கு கைகொடுப்பது கூடும், அல்லாஹ்வின் அர்ஷ் அல்லாஹ்வின் மீசான் இல்லை என்று சொல்வது பாரதூரமாக எதிர்க்க வேண்டிய விடயங்கள் இல்லை என்றால் மற்ற விடயங்களை விட பாலஸ்தீன விடயத்தில் அதிக தீவிரம் காட்டும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் சியோனிச யூதர்களுடன் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று யூசுப் கர்ளாவி சொன்னதை கூட ஏற்றுகொள்வீர்களா ? அது வழிகேடு இல்லையா ?......

இவை எல்லாம் வழிகேடு இல்லை என்றால் எதற்காக கிளை விடயமான அரசியலில் அதிக தீவிர போக்கு கொண்டு மாற்று கட்சிகளை தீவிரமாக விமர்சிக்கின்ரீர்? அதற்காக சண்டை பிடிகின்ரீர், கிளை விடயமான அரசியலில் பேதம் கொண்ட சகோதரர்களை கொலை செய்கின்றீர் ?.....

இதுதான் உங்கள் கொள்கை என்றால் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் வழிகேடர்கள் என்று சொல்வதில் கடுகளவு சந்தேகம் கூட எமக்கு கிடையாது, நீங்கள் இந்த கொள்கை சரி என்று வாதிக்கும்வரை உங்கள் கொள்கை வழிகேடே ......!

எப்போது இஸ்லாத்தின் அடிப்படையை சாதாரண மஸாயில் என்றும் இஸ்லாத்தின் கிளை விடயமான அரசியலை அடிப்படை போன்ற எண்ணத்துடனும் ஏற்று அதன்படி உங்கள் வழிகெட்ட தாவாவை செய்துவருகிண்றீர்களோ அப்போதே நீங்கள் வழிகேடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ....!

அல்லாஹ் இவர்களுக்கும், இவர்களை நம்பியவர்களுக்கும் நேர்வழியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன் 

உங்கள் சகோதரன் : அஹ்மத் ஜம்ஷாத்

Friday, March 29, 2013

Burmese refugees to receive job training


Burmese refugees to receive job training

   | ���� PDF Send to Friend Print News |  A A

JEDDAH: P.K. ABDUL GHAFOUR
Sunday 24 March 2013
Last Update 27 March 2013 5:00 pm
Makkah Gov. Prince Khaled Al-Faisal yesterday distributed free residency permits (iqamas) to the first applicants of the Burmese community in a historic move to legalize the status of nearly 500,000 refugees in the Kingdom.
“This is one of the beautiful moments in my life,” said Prince Khaled while addressing a ceremony at Kudai near Makkah. He thanked Custodian of the Two Holy Mosques King Abdullah for issuing his instructions to correct the residency status of a huge group of expatriates who have been living in the Kingdom for several years.
“It was one of the first proposals I presented to King Abdullah after becoming the governor of Makkah,” Prince Khaled said to the applause of the large gathering including OIC Secretary-General Ekmeleddin Ihsanoglu and Burmese community leaders. “King Abdullah ordered the formation of a ministerial committee for the development of disorganized residential districts in Makkah to improve the situation of Burmese Muslims living in those districts,” he said.
“This is one of the unique experiments in the world,” the governor said, adding that the Kingdom has taken drastic measures to tackle the problem. “We are not just building new homes to develop these districts. We also rehabilitate some 400,000 to 500,000 people living there,” he pointed out.
Prince Khaled said the government would provide Burmese community members with health care, social services, education and develop their residential areas as part of a comprehensive program. “We’ll also train them to get jobs,” he pointed out.
Under the Labor Ministry’s Nitaqat (naturalization) program, the employment of four Burmese is equal to one foreigner. This incentive was given to encourage private companies to employ more Burmese to meet their labor requirements. “You cannot see such a comprehensive rehabilitation program anywhere in the world,” the governor said.
“This is an unprecedented incident in the world,” said Mohammed Tayeb, director general of the Foreign Ministry’s office in the Makkah region, while commending the government’s efforts to issue four-year iqamas to Burmese citizens free of charge and provide them with educational, health and social services.
Mohammed Rauf Rafi, secretary-general of European Rohingya Council in the Kingdom, said there are about 350,000 Burmese Muslims in Makkah, Jeddah and Madinah. Saudi authorities intend to issue iqamas to all Burmese within four to six months. He disclosed plans to open a media center for the Rohingyas at the Organization of Islamic Cooperation.

பெஷன்பக் மீதான தாக்குதலுக்கு உற்சாகமூட்டிய இனவாத பௌத்த தேரர் (வீடியோ + தாக்குதல் வீடியோ


பெஷன்பக் மீதான தாக்குதலுக்கு உற்சாகமூட்டிய இனவாத பௌத்த தேரர் (வீடியோ + தாக்குதல் வீடியோ


வீடியோவை பார்வையிட கீழே கிளிக் செய்க



கண்டியில் 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டத்தில் அதன் செயலாளர் ஞானசே தேரர் ஆற்றிய உரையே இது. இந்தவுரையில் பெஷன்பக் மீதான தாக்குதலுக்கு உற்சாகமூட்டப்படுவதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களும் கூறப்படுகின்றன.


Thursday, March 21, 2013



கை கொடுத்த முஸ்லிம் தேசங்களும், காலை வாரிய புத்த நாடுகளும்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

இதேவேளை ஜேர்மன் அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று பிற்பகல் விவாதம் ஆரம்பமாகி நடைபெற்றதோடு இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஜெனீவாவில், கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு நாளை 22 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.
அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக, எதிராக மற்றும் வாக்களிக்காத நாடுகளின் விபரம்
 
இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2ஆவது தீர்மானத்தை கொண்டுவந்தது.

இந்த 2ஆவது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12ஆம் திகதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தில் இடம்பெற்ற கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. குறிப்பாக போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்று காலை 10 மணிக்கு அதாவது இலங்கை நேரம் படி பிற்பகல் 2.35 மணிக்கு அமெரிக்க தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது தீர்மானத்தின் மீது பல நாட்டின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதில் இந்திய பிரதிநிதி இலங்கைக்கு ஆதரவான வகையில் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார். மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது.

அந்தவகையில் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. விவாதத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்ததோடு 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.


எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

கை கொடுத்த முஸ்லிம் தேசங்களும், காலை வாரிய புத்த நாடுகளும்
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட மேற்படி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் 6 நாடுகள் முஸ்லிம் தேசங்களாகும். இவை பின்வருமாறு

  1. பாகிஸ்தான்
  2. சவுதி அரேபியா
  3. கடார்
  4. குவைட்
  5. இந்தோனேஷியா
  6. மாலைதீவு
இதே சமயம் ஜப்பான் உள்ளிட்ட புத்த தேசமும், புத்தரின் புர்வீக இடமான இந்தியாவும் இலங்கையை நண்பனாய் நடித்து ஏமாற்றி விட்டனர்.

செய்நன்றி மறந்த பொ(ய்)து பலசேனாவும் அதன் கூட்டணிகளும்

வரலாறு நெடுகிளும் உலக வரைபடத்திலுள்ள அனைத்து முஸ்லிம் தேசங்களும் இலங்கையுடன் சினேக புர்வ உறவினை தொடர்ந்தே வந்துள்ளன. ஆதிக்க வெறிபிடித்து அழைந்து திரியும் அமெரிக்க, இஸ்ரேலிய அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் தாண்டி இது கால வரை தனது உதவியினையும் ஆதரவினையும் இலங்கைக்கு அவசியப்படும் அனைத்து தருணங்களிலும் இனிதே நிறைவேற்றியே வந்துள்ளன. அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக என்று பல்பரிணாமங்களில் அரபு நாட்டு உதவிக்கரங்கள் இலங்கை மண்ணை வந்தடைந்துள்ளன.

விடுதலைப் புலிகளை நிர்மூலம் செய்வதற்கு இராணுவ உதவிகளை வழங்கும் போது முஸ்லிம் தேசங்கள் இனவாதிகளுக்கு இன்பமளித்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டு பசித்த வயிறுடன் நட்டாற்றில் நிலைதடுமாறி நிற்னபோது முஸ்லிம் நாடுகள் உவந்தளித்த உதவிகள் உச்சிகுளிர வைத்தன. ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை உறுதியாய் எதிர்த்து நின்று இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும் போது முஸ்லிம் தேசங்கள் முன்மாதிரிமிகு நாடுகளாய் விளங்கின.

ஆனால், இவ்வளவு உதவிகளுக்குப் பின்பும் ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல் பழையதை மறந்தது மட்டுமன்றி, உதவியவனின் கையை பிடித்து அவன் முதுகிலேயே ஓங்கிக் குத்தும் நயவஞ்சகத்தனத்தினை பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் இந்நாட்டில் அண்மைக்காலமாய் அரங்கேற்றி வருகின்றன.

எந்த முஸ்லிம் தேசங்களை “வஹ்ஹாபிகள்! ஸலபிகள்! அடிப்படைவாதிகள்! இலங்கையில் தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள்! காட்டுமிராண்டி சட்டங்களை நிலைநாட்ட துடிப்பவர்கள்! இலங்கையை இஸ்லாமிய நாடாய் மாற்ற முனைபவர்கள் என்றெல்லாம் விமர்சித்து, இனவாத தீயை மூட்ட முனைந்தார்களோ, அந்த நாடுகள் தான் கடைசி வரைக்கும் களத்தில் நின்று இலங்கைக்காய் வாக்களித்துள்ளன. எந்த நாடுகள் எல்லாம் புத்தரின் சிந்தனைகளால் வாழுகின்றனவோ அவை நட்டாற்றில் விட்டு ஓடிவிட்டன.

பொது பல சேனாவும், அதன் பிக்குமார்களும் இனியாவது யதார்த்தத்தை புரிந்து நடப்பார்களா? அல்லது பழைய குருடி கதவ திறடி என்ற விதத்தில் தரிகெட்டு நடப்பார்களா?


பொது பல சேனாவுக்கு எதிராக நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடல் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள்.

தினகரன் பத்திரிகையில்
விடிவெள்ளி பத்திரிகையில்
மவ்பிம பத்திரிகையில்




  1. ht


விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...

சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......

இலங்கை காத்தான்குடி படுகொலை


இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்



[மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]

விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?


விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1
 


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2