Pages

Friday, March 16, 2012

சாலை மறியல் போராட்டங்களும் மங்கிப் போகும் மனித நேயமும்!



சாலையில் அமராதீர்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அங்கு அமர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் கூடிப் பேசும் இடம் அது தான்என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாதையில் கூடுவதை தவிர்க்க முடியாவிட்டால் பாதைக்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். பாதையின் உரிமை எது?” என்று கேட்டர்கள். நபி (ஸல்) அவர்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும்என்று பதிலளித்தார்கள்.         (புகாரி - 2465)

கடந்து வந்த சில நாட்களில் கண்டவர் கண்களில் காட்சியளித்தவை தேசத்தின் பெரு வீதியெங்கும் கரும்புகையை கக்கும் டயர்  எறிப்புக் காட்சிகள்! நட்ட நடு வீதியில் வட்டமாய் பற்றி எறியும் தீச்சுவாலை! நடுச்சாலையெங்கும் கனரக வாகனங்களுக்கு பதில் கால் கடுக்க வீற்றிருக்கும் இளங் காளையர் கூட்டம்! மூன்று தசாப்த கால யுத்த விளைவுகளை விழித்திரையில் நிழலாட வைத்த நிகழ்வுகள் இவை!

ஏன் இந்த எதிர்ப்புப் பேரணி? அலைகடலென ஆர்ப்பரித்து அரசுக்கெதிரான கோஷங்களுடன், பாதைகள் தோரும் பதாதைகள் ஏந்தி, விண்ணதிரும் வார்த்தைகளுடன் வீதியெங்கும் சாலை மறியல் போராட்டங்கள் எதற்கு? மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் மீது அரசு மேற்கொண்ட அதிரடி விலையேற்றத்தின் எதிர்  விளைவே அவ்வெதிர்ப்பு பேரணிகளின் விஷ்பரூப வெளிப்பாடுகள்.

ரிபொருள் விலையேற்ற அறிவிப்புடன் தனியார்  பஸ் கட்டணம், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம், அறுவடை இயந்திர கட்டணம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சடுதியாய் கடுகதி வேகத்தில் இமாலயச் சிகரமாய் உயர்ந்து கொண்டே வருகின்றன. முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை தாண்டி வறுமைக் கோட்டின் விளிம்பு நிலையில் தன் வாழ்க்கை வண்டியை இழுத்துச் செல்லும் ஏழைகள் தான் இவ்விலையேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாடம் தன் உதிரத்தை வியர்வை சொட்டுக்களாய் உரமாக்கி, அரை ஜான் வயிற்றுக்காய் அல்லல் படும் ஓர் அபலையின் நிலையில் இருந்து நோக்கி, நம் அரசின் செவிகளுக்கு சில யதார்த்தங்களை உணர்த்த அவாவுறுகிறோம்.

அதிகார கதிரை என்பது தமது ஆதிக்கத்தை செலுத்தி மக்களை  அடக்கியாளும் துரும்புச் சீட்டு அல்ல! அதிகார வீச்சை பயன்படுத்தி நாட்டை சுரையாடி தன் கஜானாவை வளப்படுத்துவதற்காக கிடைத்த வாய்ப்பும் அல்ல! அதிகாரிகள் என்போர்  மக்களின் நலன்களை கண்ணெனக் காப்பதற்காய் மக்களால் தேர்வு செய்யப்பட்டோர்’. மக்கள் நலன் காப்பதும், சுமை போக்குவதும், துயர் துடைப்பதற்குண்டான ஆக்கப்பணிகளை முன்னெடுப்பதுமே ஆட்சியாளனின் கடமை. பசி, பட்டினி, ஏழ்மை என்பவற்றால் ஏலவே வெந்து நொந்து போய் இருக்கும் மக்களின் உள்ளத்தை பொருளாதாரச் சுமைகள் மூலம் மென்மேலும் வேதனையை இரட்டிப்பாக்கி உணர்வுகளை உஷ்னப்படுத்தி, கொதிநிலையின் விளிம்புக்கு கொண்டு வரும் எத்தனங்கள் தொடர்வதானது எதிர்மறை விளைவுகளையே சமூக தளத்தில் தோற்றுவிக்கும். டியுனிஸியா, எகிப்து, லிபியா, மாலைதீவு உள்ளிட்ட தேசங்களில் ஏற்பட்ட மக்கள் புரட்சிகளின் பின்புலம் பொருளாதார ரீதியில் நாடு சந்தித்த சரிவுகளே என்பதனை நம் நாட்டு அரசு மறந்துவிடலாகாது.

அதே சமயம், ர் ஆட்சிபீடம் அரங்கேற்றும் அடாவடித்தனங்கள் அல்லது பொது மக்கள் சுமையை அதிகரிக்கும் படியான செயற்பாடுகளின் போது மக்கள் தம் சிந்தையில் கொள்ள வேண்டிய சில அம்சங்களும் உண்டு. 30 ஆண்டு கால யுத்தத்தினால் எரியுண்டு சுடுகாடாய் சுவடிழந்து நிற்கும் ஒரு தேசத்தை, மீண்டும் புத்துயிர்ப்புடன் எழுச்சிப் பாதையில் எழுந்து நிற்க வைப்பதும், பொருளாதார முன்னேற்றத்தின் பால் வழிநடாத்துவதும் இலகுவான காரியமல்ல. உள்நாட்டு உட்புசல்கள், எதிர்க்கட்சிகளின் எள்ளிநகையாடல்கள், வெளிநாட்டுச் சக்திகளின் கருவறுப்பு முயற்சிகள் என்ற அனைத்து தடைகளையும் தாண்டி அபிவிருத்தியை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கு காலதாமதம் எடுப்பதும், அதன் போது சில இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதும் இயல்பானதே!

ஒரு நாட்டின் இத்திரிசங்கு நிலையை கருத்திற் கொண்டு, நாட்டின் எதிர்கால எழுச்சிக்காய் எம் நலன்களை சற்று இழப்பதும், சுமைகளை சுகமாய் தாங்கிக் கொள்வதும் ஒவ்வொரு பிரஜையினதும் தார்மீகக் கடமையுமாகும். தம் மதியிழந்து, மனக்கட்டுப்பாட்டை இழந்து, தம் உரிமையை பெறுவதற்காய் இன்னுமொரு மனிதனின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் மனிதநேயமற்ற செயற்பாடுகளில் ஒருபோதும் களமிறங்கிவிடக்கூடாது. பறிக்கப்படும் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் வீதிக்கு இறங்குவதும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் அரசின் கவனக்குவிப்பை தம் நியாய புர்வமான கோரிக்கைகளின் பால் ஈர்க்கப்படுவதற்கான எத்தனங்கள் செய்வதும் அவசியமானவை. மறுதலிக்க முடியாதவை! ஆனால், ஒரு நலனை பெறுவதற்காக களமிறங்கி வீதிகளை வளைத்து சாலை மறியல் போராட்டங்களை மேற்கொள்ளும் எம் எதிர் நடவடிக்கைகளால் சாதாரண பொது மகனின் பல உரிமைகளை தட்டிப்பறிக்கும் ஈனச்செயலில் நாம் இறங்கிவிடக்கூடாது. நடைபாதையில் தடைவிதித்ததால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், செல்லும் வழி அறியாது கால் கடுக்க காத்து நின்ற வயோதிபர்கள், காலதாமதத்தால் காலாவதியாகிப் போன வேலைவாய்ப்புகள், தவறிப்போன கல்யாண மற்றும் கருமாதி நிகழ்வுகள், ரிய வேளையில் மருத்துவமற்று மாய்ந்து போகும் அப்பாவி ஜீவன்கள் என்று சாலை மறியல் போராட்டங்களால் தொடரும் மனிதநேயம் மழுங்கிப்போகும் தன்மைகள் ஏராளம்!

சீரான முறையில் ஓர் ஆட்சி நடைபெற்று அமைதி வழியில் ஒரு தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி இஸ்லாம் இயம்பும் இனிய போதனை மறுமையை மறக்காதீர்!’ எனும் மறுமை கோட்பாட்டை விசுவாசிப்பது மட்டுமே!.மறு உலக வாழ்வு குறித்த நம்பிக்கை ஒன்று மட்டும் தான் உலகில் யாருக்கும் பதில் சொல்லாவிட்டாலும் மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் ஒரு நாள் என் இவ்வுலக செயற்பாடுகளுக்காய் பதில் சொல்லியாக வேண்டும்என்ற உணர்வுப் பிரவாகத்தின் அடிப்படையில் வாழ வழிவகுக்கும். ஆட்சியாளர்கள், குடிமக்கள் எனும் இரு தரப்பும் இணைந்து ஓர் ஆட்சியை சீறிய வழியில் நெறிப்படுத்தி நீதம், நியாயம், மனித நேயம் போன்றன இந்நாட்டில் செழித்தோங்க வழிவகுக்கும்.

ஆதலால், அக்கிரமம், அநீதிக்கு எதிராய் இமயமாய் எழுந்து நிற்போம்! ஆனால், இன்னுமொரு குடிமகனின் உரிமையும் உணர்வுகளும் புண்படாதபடி நடந்து கொள்வோம்! எதிர்ப்புப் போராட்டங்களால் மனிதநேயம் கருகிப்போகாமல் பாதுகாப்போம்! மறுமையை முன்னிறுத்தி இம்மையில் செயற்படுவோம்!

Monday, February 27, 2012

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்



February 28, 2012

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.

இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை குறித்து குரல் எழுப்புவதற்கோ இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கோ அணுவளவும் அறுகதை கிடையாது என்பதோடு மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மண்ணை கபளீகரம் செய்ய நினைக்கும் மேற்குலக நரித்தனத்தை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச உலகுக்கும் உணர்த்தும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை எமது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று மேற்கொண்டது.

பி.ப.2.00 மணியளவில் மாளிகாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்பாட்டம் கொட்டும் மழையில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடனும் தக்பீர் முழக்கங்களுடனும் மிக நேர்த்தியாக நடை பெற்றது. சாலை நெறிசல்களை ஏற்படுத்தாது பிறருக்கு ஊரு விளைவிக்காது கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற முன்மாதிரி மிகு ஆர்ப்பாட்டமாக இதனை அடையாளப்படுத்த முடியும்.

நட்டின் இறைமையை இமையாய் காக்க ஒரே முஸ்லிம் அமைப்பாக எமது ஜமாஅத் தான் களமிறங்கியது என்பதனை மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டமை அவதானத்துக்குரியது. மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பஞ்சிக்கா வத்தை, மறதானை புகையிரத நிலையம் தாண்டி கண் மருத்துவ மனை வரை ஊர்வலமாய் வந்து அமைதியாய் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, February 23, 2012

இரகசிய இலக்கங்கள் களவாடபடுவது எப்படி " hacking passwords "




முதல் பகுதி 

இணையம் பாதுகாப்பானதா பகுதி 2



ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை இதை அதிபடுத்த எதாவது ஆலோசனை உண்டா??
 சரி நண்பர்களே பதிவுக்கு வருகிறேன் ..எங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாட படுகின்றன என்பதை ..

இன்று இணையம் ஒரு அத்தியாவாசிய பாவனைகளில் ஒன்றாக வந்து விட்டது பலரதும் தனிபட்ட இரகசியங்கள் அவற்றில் அடங்கி இருக்கிறது. இப்படியான காலத்தில்  இதன் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது அவசியம்.

உங்கள் மினஞ்சல் ,முகபுத்தக மற்றும் உங்களின் கணக்குகளை வேறு ஒரு கணனியில் திறக்கும் பொது மிகவும் அவதானாமாக இருக்கவும். இன்று அதிக மென்பொருள்கள் இருக்கிறது இலவசமாக கணனியில் நிறுவி வைத்துவிட்டால் நீங்கள் பயன் படுத்தும் தட்டச்சு சொற்கள், இலக்கங்கள் பதிவு செய்து வைக்கப்படும் அதில் இருந்து உங்கள் இரகசிய இலக்கங்களை கண்டறியலாம்.

"சைபர் கபே" களில் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும் ..

இந்த மென்பொருளை "கூகிள்" தேடலில் இலகுவாக பெறலாம் ............

எனக்கு தெரிந்த ஒரு நபர் "சைபர் கபே" களில் இந்த மென்பொருளை நிறுவி வைப்பார் அதன் உரிமையாளர்களுக்கே  தெரியாமல் சில நாட்களுக்கு ஒரு முறை சென்று அங்கு பதிவாகிய கணக்குகளை எடுத்து அதில் விளையாடுவார் இப்படியான மன நிலையிலும் பலர் இருக்கிறார்கள்....

அடுத்தவர்கள் நாட்குறிப்பு ,இரகசியங்கள் படிப்பது,அறிவது சிலருக்கு அலாதி இன்பம்.........

அடுத்தவர்களை குறை சொல்லுவதில் பயன் இல்லை எனவே நாங்கள் அவதானமாக இருப்போம் ...பாதிப்பு எங்களுக்கே!!!!

உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் உங்களுக்கு இணையம் பற்றி தெரியாத நேரத்தில் கணக்கை ஆரம்பித்து கொடுத்து இருக்கலாம் அதை நான் மேலே கூறியது போன்ற நிகழ்வால் ஒருவர் களவாடி விட்டால் உங்களுக்குள் இருக்கும் அன்பில் விரிசல் ஏற்படலாம் நம்பிக்கை உடையலாம் எனவே அவதானம் நண்பர்களே ............இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.....

இதில் ஒரு மென்பொருள் எப்படி பயன் படுத்துவது என்பதை இந்த கானொளியில் ....


Sunday, February 12, 2012

SLTJ க்கும் ஹெம்மாத்தகம சட்ட அமுலாக்கள் சங்கத்தினரருக்கும் இடையில் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது.






ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஹெம்மாதகம சட்ட அமுலாக்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த 22.01.2012 (ஞாயிற்றுக் கிழமை) விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் ஏழரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இவ்விவாத ஒப்பந்தம் போடப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 


விவாதத்தின் தலைப்பும், நிலைபாடுகளும்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?

சட்ட அமுலாக்கள் சங்கத்தின் நிலைபாடு.
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு.


“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் வஹியாகும்”. இவ்வஹி குர்ஆனும், ஆதார புர்வமான நபி வழி மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழி. இதுவல்லாத இஜ்மா, கியாஸ், நபித் தோழர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இவை பின்பற்றத் தகுதியற்றவை. இதுவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடாகும்.

விவாத நாள்.
ஏப்ரல் 21, மற்றும் 22 ஆகிய நாட்களில் விவாதம் நடை பெரும்.  இன்ஷா அல்லாஹ்.
இவ்விவாத ஒப்பந்தத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கலந்து கொண்டோர்.
சகோதரர் ரியால் (தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் கமர்தீன் (துணைத் தலைவர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் சாதிக் (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாக உறுப்பினர்)
சகோதரர் பர்ளீன் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் பர்சான் (ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் பஸீஹ் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ஸப்வான் D.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)
சகோதரர் ரஸ்மின் M.I.Sc (துணை ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்)
சகோதரர் ஹிஷாம் M.I.Sc (அழைப்பாளர் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்)














  குறிப்பு:-
  விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.