Pages

Showing posts with label ஜமாஅத் செய்திகள். Show all posts
Showing posts with label ஜமாஅத் செய்திகள். Show all posts

Thursday, March 21, 2013

பொது பல சேனாவுக்கு எதிராக நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடல் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள்.

தினகரன் பத்திரிகையில்
விடிவெள்ளி பத்திரிகையில்
மவ்பிம பத்திரிகையில்

Tuesday, March 27, 2012

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)



March 27, 2012
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “அழைப்பாளர்களின் அணிகலன்கள்”" எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி வழங்கப்பட்டது. இதில் அழைப்பாளன் என்றால் யார்? அழைப்புப் பணியின் அவசியம், அழைப்பாளர்களிலிடம் இருக்கவேண்டிய மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பண்புகள் போன்ற அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த கிளை அங்கத்தவர்களை மூன்று குழுக்களாக பிரித்து “அழைப்புப் பணியில் ஏற்படும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்” எனும் தலைப்பில் ஜமா’அத்தின் தேசியத் தலைவர் ஆர்.எம்.ரியால் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டன.
இதன் பின் ளுஹர் மற்றும் மதிய உணவிற்காக 12.30 மணியளவில் இடைநிருத்தப்பட்டு மீண்டும் 2.00மணிக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகக் கொள்கைகள் குறித்த அங்கத்தவர் கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் பீ.காம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளை அங்கத்தவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அங்கத்தவர்களே முன்வந்து பதிலளித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். பர்ளீன் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “எதிர்ப்புக்கு மத்தியில் ஏகத்துவ எழுச்சி” எனும் தலைப்பில் உறுக்கமானதோர் உரை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத் தூதர்கள் எதிர்கொண்ட எதிர்ப்புகள் மற்றும் அவர்களை ஈமான் கொண்ட தோழர்கள் முகம் கொடுத்த இன்னல்களையும் வஹியின் ஒளியில் படம்பிடித்துக் காட்டும் வன்னம் இவ்வுரை அமைந்திருந்தது.
அடுத்ததாக எம்.டீ.எம். பர்ஸான் அவர்களினால் “நிர்வாகவியல் ஒர் இஸ்லாமியப் பார்வை” எனும்  தலைப்பில் தெளிவுரை நிகழ்த்தப்பட்து. அதில் நிர்வாகம் என்றால் என்ன? நபிகளார் கடைபிடித்த நிர்வாக ஒழுங்குகள் மற்றும் ஒரு நிர்வாகியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக மாலை 6.00 மணியளவில் சிலாபம் கிளைத் தலைவர் எம்.ஆர்.எம். பவ்ஸாத் அவர்களால் முடிவுரை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம், மாதம்பை, அகுரனை, வட்டதெனிய, மல்வானை, பானந்துரை, சம்மாந்துரை, கல்முனை உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் சுமார் 60 பேரளவில் கலந்துகொண்டனர்.

Sunday, March 18, 2012

சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகள் இணைந்து நடத்து முழு நாள் தர்பியா நிகழ்ச்சி






March 18, 2012

எதிர்வரும் 25.03.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகளின் ஏற்பாட்டில் ஜமாஅத் அங்கத்தவர்களுக்கான முழு நாள் தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இல. 40, கெனல் வீதி, வட்டக்களி, சிலாபம். எனும் விலாசத்தில் அமைந்துள்ள SLTJ சிலாபம் தஃவா நிலையத்தில் அன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.(இன்ஷா அல்லாஹ்)



Monday, February 27, 2012

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்



February 28, 2012

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.

இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை குறித்து குரல் எழுப்புவதற்கோ இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கோ அணுவளவும் அறுகதை கிடையாது என்பதோடு மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மண்ணை கபளீகரம் செய்ய நினைக்கும் மேற்குலக நரித்தனத்தை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச உலகுக்கும் உணர்த்தும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை எமது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று மேற்கொண்டது.

பி.ப.2.00 மணியளவில் மாளிகாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்பாட்டம் கொட்டும் மழையில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடனும் தக்பீர் முழக்கங்களுடனும் மிக நேர்த்தியாக நடை பெற்றது. சாலை நெறிசல்களை ஏற்படுத்தாது பிறருக்கு ஊரு விளைவிக்காது கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற முன்மாதிரி மிகு ஆர்ப்பாட்டமாக இதனை அடையாளப்படுத்த முடியும்.

நட்டின் இறைமையை இமையாய் காக்க ஒரே முஸ்லிம் அமைப்பாக எமது ஜமாஅத் தான் களமிறங்கியது என்பதனை மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டமை அவதானத்துக்குரியது. மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பஞ்சிக்கா வத்தை, மறதானை புகையிரத நிலையம் தாண்டி கண் மருத்துவ மனை வரை ஊர்வலமாய் வந்து அமைதியாய் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 31, 2011

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-12-2011 சனிக்கிழமை அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜமாத்தின் தேசிய நிர்வாகக் குழு உருப்பினரும் “அழைப்பு” மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் தீர்மானங்களை வாசிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் தக்பீர் கூறி அவற்றை ஆமோதித்தார்கள்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.இரண்டு தசாப்த காலம் இலங்கையை ஆற்கொண்டிருந்த யுத்தம் நீங்கி இலங்கை மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சுபீட்சத்துடனும் வாழும் இந்நேரத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை பேச்சு வார்த்தை மூலம் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம்கள் தரப்பில் தனிக் குழுவை பேச்சு வார்த்தையில் அரசு இணைத்து முஸ்லீம்களையும் பேச்சு வார்த்தையில் பங்காளர்களாக ஆக்க வேண்டும் என்று இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை இப் பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
2. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் இவ்வேலையில் அதன் பரிந்துரைகள் அனைத்தும் நடை முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
3. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் பரிந்துரைகளில் முஸ்லீம்கள் சார்பாக குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடை முறைப்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆளும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என இப் பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.
4. இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளை செய்து வரும் தவ்ஹீத் அமைப்புக்களை தீவிர வாத அமைப்புகளாக சித்தரித்துவஹாபிய ஆயுதக் குழுக்கள்இயங்குகின்றன என்று பொய்ப் பிரச்சாரம் செய்து சொற்ப இலாபங்களுக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க முனையும் அரசியல்வாதிகளையும், குறிப்பாக ஆளுனர் அலவி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இப் பொதுக் குழு வண்மையாகக் கண்டிக்கிறது.
5. யுத்தம் நீங்கி சுதந்திரமான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையில் வடகிழக்கில் விடுதலைப் புலிகளினால் வடகிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்குறிய வாழ்வாதார உதவிகளை செய்து கொடுப்பதற்கும் அரசு இன்னும் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்வதுடன், குறிப்பாக யாழ்மண்ணில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்களை மீள் குடியேற்ற வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
6. அனைத்து இன மக்களும் சுபீட்சத்துடன் வாழும் இவ்வேலையில் இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கி சகோதரத்துவத்தை கெடுக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக்கொள்கிறது.
7. முஸ்லீம்கள் தங்கள் சமயக் கடமைகளான தொழுகை, நோன்பு, குர்பான், ஹஜ் போன்றவற்றை நிறை வேற்றுவதற்கு தடையாக இருப்பவர்களை அரசு எச்சரிப்பதுடன், முஸ்லீம்களின் வாழ்வுரிமையை உரிதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கிறது.
8. இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் கொச்சைப் படுத்தும் விதமாகவும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் முகமாகவும் பத்திரிக்கை மற்றும் இணையதளங்கள் வாயிலாக விஷமக் கருத்துக்களைப் பரப்பும் இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளை தடை செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் படியும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது
9.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் வேண்டுமென்று மூக்கை நுழைத்து மோதல்களுக்கு வழிவகுத்து நிலையான உள்நாட்டு யுத்தத்திற்கு வழி வகுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் நேச நாடுகளின் வக்கிரப் புத்தியை இச் செயற்குழு வண்மையான எதிர்கிறது.
10. ஊடகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ள இந்நாட்டில் அடிக்கடி ஊடகவியலாளர்கள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்பில் அரசு ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

Wednesday, July 6, 2011

பொலன்னறுவை மண்ணில் ஏகத்துவத்திற்கு இறைவன் தந்த வெற்றி.


கடந்த ஒரு வருட காலமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் மிகவும் வீரியமாக நடைபெற்று வருகிறது. “அல்ஹம்து லில்லாஹ்”. இதன் விளைவாக தற்போதைக்கு அம்மாவட்டத்தில் ஜமாஅத்தின் மூன்று கிளைகளும் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் மார்க்க விளக்க கூட்டங்கள், ஜும்மா பயான், சமூக சேவைகள் என்று பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அந்த ஊரிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபை மற்றும் மாவட்ட ஜம்மியதுல் உலமா போன்றோரிடமிருந்து பாரிய எதிர்ப்புகளும் சவால்களும் கொள்கைவாதிகளின் பால் வந்த வண்ணமே இருந்தன.


ஏகத்துவத்திற்கு கி்டைத்த வெற்றி
கடந்த சில வாரங்களாக மாணி்க்கம்பிடிய என்ற ஊரில் நபி வழியில் நம் மார்க்க காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கோடு கொள்கை சகோதரர் ஒருவரின் வீட்டில் “ஜும்ஆ தொழுகையை“ ஆரம்பித்தனர். இத்தகவல் ஊரில் பரவ அச்சகோதரரின் வீட்டில் இடமில்லா அளவுக்கு கொள்கை சகோதரர்கள் தொழுவற்காக ஒன்று திரண்டனர். வாரத்துக்கு வாரம் தொழுகைக்கு வருவோரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. 

இவற்றைப் பார்த்து சகிக்க முடியாத பள்ளி நிர்வாகமும் ஊர் மவ்லவிகளும் ஜும்ஆவை இடைநிருத்துவதற்காக பல வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தனர். அப்பாவி ஊர் மக்களை தூண்டியும் விட்டனர். “கோட்“ வரைக்கும் இப்பிரச்சினை இழுபட்டதென்றால் அவரகளின் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இவர்களின் எந்த முயற்சியுமே பயன் தறவில்லை.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )

இருதியாக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் “சமாதானம்“.
இதனை எந்த நோக்கத்தில் அவர்கள் மேற்கொண்டார்களோ! (இறைவன் ஒருவனே அறிவான்) இது ஏகத்துவத்திற்கு வெற்றியாகவும் மற்வர்களுக்கு சாவுமணியாகவும் அமைந்தது.அப்பகுதி பள்ளிவாசல் நிர்வாகம்,ஜம்மியத்துல் உலமா மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்ட சமாதான உடன்படிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை பின் வரும் ஜம்மியதுல் உலமாவின் “லெட்டர் பேடில்“ கண்டு கொள்ளுங்கள்.

(படத்தில் க்லிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

குறிப்பு:-
ஜனநாயக நாடாம் நம் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் இது போன்று நடு நிலமையாக தீர்ப்புகள் வழங்க ஜம்மியதுல் உலமாவின் இந்த முன்மாதிரியை இலங்கை அரசு கையிலெடுக்க வேண்டும்.

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது.நிச்சயமாக 
அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன் 17:81)

Monday, July 4, 2011

சிலாபம் SLTJகிளை சார்பாக மாணவர் அணி ஆரம்பம்.

சிலாபம் SLTJகிளை சார்பாக மாணவர் அணி ஆரம்பம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சிலபாம் கிளையின் ‘மாணவர் அணி’ துவக்க நிகழ்ச்சி.
ஏகத்துவப் பிரச்சாரத்தை பாடசாலைகள், கல்லூரிகள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சார்பாக கிளைகள் வாரியாக மாணவர் அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
சிலாபம் கிளையில் 23 .06 .2011 அன்று மாணவர் அணி ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத்தின் பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.

June 29, 2011
இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைப்பதற்காகவும், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வை வழப்படுத்தவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக தனிப் பிரிவு ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை தங்கள் வாழ்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் பல சகோதரர்கள் அதன் தாத்பரியம் புரியாமல் பலவிதமான கொள்கைகளுக்கும் ஆட்படுவதினாலும், பொருளாதார ரீதியிலும், கல்வி, மற்றும் இன்னும் பல விஷயங்களிலும் அவர்கள் பாதிக்கப் படுவதினாலும். அவர்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்டவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஜமாத் செய்ய உத்தேசித்துள்ள செயல்பாடுகள்.
குர்ஆனை சரியான முறையில் கற்றுக் கொடுத்தல்.
நபியவர்களின் போதனைப் படி வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
அவரவர் தாய் மொழிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் சி.டிக்கள் போன்றவற்றை வழங்குதல்.
இஸ்லாம் கட்டளையிட்டுள்ள காரியங்களை செய்வதற்கான முறைகளை பயிற்றுவிப்பதற்காக ஆண், பெண்களுக்கான தவனை முறையிலான வகுப்புகள் ஆரம்பித்தல்.
கல்வி வழிகாட்டல் மற்றும் கல்வி கற்பதற்கான உதவி வழங்கள்.
சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சிகள்.
இது போன்ற இன்னும் பல செயல்பாடுகளையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் சகோதரர்களுக்காக இலவசமாக செய்வதற்கு ஜமாத் திட்டமிட்டுள்ளது.
இந்த செயல்பாடுகளுக்கு அதிகமான செலவீனங்கள் இருப்பதினால் நல்லெண்ணம் கொண்ட சகோதர, சகோதரிகள் இந்த முயற்சிக்காக உங்கள் தான தருமங்களை அள்ளி வழங்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
வங்கிக் கணக்கு இலக்கம்.
SRI LANK THAWHEED JAMA’ATH (S.L.T.J)
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010105916

Saturday, April 16, 2011

ஹெம்மாதகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி




ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் தான் இலங்கையில் ஷீயா சிந்தனை பரவுவதற்கு துணையாக இருக்கிறார்கள் நாம் சொல்வதும் , அழைப்பு பத்திரிக்கையில் எழுதியுள்ளதும் பொய்யான , தவறான செய்தி என்றால் அதே பத்திரிக்கையில் ஜமாத்தே இஸ்லாமிக்கு பகிரங்க விவாத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதனை அவா்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்ற சவாலும் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About the Author