Pages

Sunday, July 3, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை

யார் இந்த இஹ்வானுல் முஸ்லிமீன் ?.................................

  • அன்பர்களின் கவனத்திற்கு:

இக்கட்டுரை யூத நஸாறாக்களின் நூற்களைத் தழுவியோ அல்லது இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் வழிகேடு எனக் கூறும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் நூற்களை மேற்கோள் காட்டியோ அல்லது நடுநிலையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாககொண்டோ எழுதப்படவில்லை. மாறாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா அவர்களால் எழுதப்பட்ட அவரது சுயச‌ரிதையான  முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா  (பிரச்சாரத்தினதும் பிரச்சாரகனினதும் நாட்குறிப்பு) எனும் நூலை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.!!!

  • அறிந்தவை…….

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் உலகளாவிய இயக்கம். முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஜனரஞ்சகமான இயக்கம். முஸ்லிம் சமூகத்தில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க பாடுபடும் ஓர் இயக்கம்.  இவ்வியக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டதுஎன்பன போன்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய மேலோட்டமான விடயங்களையே எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.

  • அறியவேண்டியவை……..

எனினும்இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பவர் யார்அவருடைய வாழ்க்கைப் பின்புலம் என்னஎத்தகைய சூழலில் அவர் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார்? இவ்வியக்கத்தை உருவாக்க வழிநடாத்த  அவர் கையாண்ட வழிமுறைகள் (தந்திரோபாயங்கள்) என்ன? ‘ என்பன போண்ற விடயங்களை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உலமாக்கள் ஆய்வாளர்கள் அபிமானிகள் உட்பட பலரும் அலட்டிக் கொள்வதுமில்லை; அறிந்துகொள்ள ஆர்வங்காட்டுவதுமில்லை; பக்கசார்பற்ற நடுநிலையான ஆய்வுக்குட்படுத்த முன்வருவதுமில்லை.???

அல்லாஹ்வின் உதவியால் ஒரு சிறு முயற்சி

மேற்படி இடைவெளியை நிரப்பும்  முயற்சியின் ஒரு கட்டமாகவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகரின் வாழ்க்கைப் பின்புலத்தையும் அவர் எவ்வாறு இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.


 இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை 

  • பெயர்:
ஹஸன் அல் பன்னா 

  • பிறப்பு:
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா என்பவர் எகிப்தின் புஹைறாமாகாணத்தில் உள்ள மஹ்மூதிய்யாஎனும் கிராமத்தில் 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.

  • ஹஸனுல் பன்னாவின் தந்தை:

இவரது தந்தை அஹ்மத் அப்துர் றஹ்மான் அல் பன்னா  என்பவர் கடிகாரம் திருத்தும் தொழிலை செய்துவந்ததுடன் ஹதீஸ் கலையை கற்ற ஒரு அறிஞராகவும் திகழ்ந்தார்.
முஸ்னத் அஹ்மத்எனும் மாபெரும் ஹதீஸ் கிரந்த்திற்கு இவர் வழங்கிய அல் பத்ஹுர் ரப்பானிஎனும் ஒழுங்கமைப்பு’  நூலும் புலூகுல் அமானிஎனும் விரிவுரை நூலும் இவரின் மகத்தான பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். (அல்லாஹ் அன்னாரின் பணிகளை அங்கீகரித்து என்றென்றும் அருள் புரிவானாக)

  • ஹஸனுல் பன்னா ஒரு தீவிர ஸூபியாக‌:

சொந்த ஊரான மஹ்மூதியாவில் காணப்பட்ட குர்ஆன் மத்ரஸாவில் இணைந்து அல்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக  அரச பாடசாலையில் இணைந்துகொண்ட ஹஸனுல் பன்னா அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.


இவர்  தனது பாடசாலை நாட்களில் ஸஹ்பான் றஜப் ஆகிய இரு மாதங்கள் நோன்பு நோற்றதையும் தனது நன்பர்கள் சிலருடன் சேர்ந்து வகுப்பறையில் கல்வத்’  (தனிமை) அனுஷ்டித்ததையும்!! அதன் போது மௌனவிரதம்இருந்ததையும் இதனால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்பத்தையும் அவரே தனது சுய சரிதையில் எடுத்தெழுதியிருப்பது வழிகெட்ட ஸூபித்துவத்தினால் ஹஸன் அல் பன்னா அவர்கள் சிறுபிராயத்திலேயே எந்தளவிற்கு தாக்கமடைந்திருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(பார்க்க முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா 19_ 31)

  • ஹஸனுல் பன்னா ஓர் ஆசிரியராக‌:

இவ்வாறே தனது ஆரம்பக்கல்வியை பித்அத்துகளிலும் மௌனவிரதம் போண்ற வேற்றுமத வழிபாட்டு முறையிலும் கழித்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது பதி்நான்காம் வயதில்தமன்ஹூர்நகரில் உள்ள முதல் நிலை ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்துகொண்டார்.

மேற்படி பாடசாலையில் சேர்வதற்குஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்என்ற தகமை கட்டாயமாக இருந்தபோதும் அல்குர்ஆனின் ஒரு சில பகுதிகளையே (ஜுஸ்உ) மனனம் செய்திருந்த ஹஸன் அல் பன்னாவை அப்பாடசாலை அதிபர் பஸீர் தஸூகி மூஸாஅவர்கள் ஓர் வாய்மொழிப் பரீட்சை மூலமாகவும் மற்றொரு எழுத்துப் ப்ரீட்சை மூலமாகவும் பரிசோதித்து இரு வருட கற்கை நெறிக்காக அப்பாடசாலையில் சேர்த்துக் கொண்டார்.

  • ஹஸனுல் பன்னா ஓர் தீட்சை பெற்ற முரீதாக:

இக்காலப்பகுதியியே ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்வில் முக்கிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியலிலேயே வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ஹஸ்ஸாபிய்யா தரீக்காவின் முக்கிய பிரமுகர்களான ஷேக் ஷிப்லிஇ முஹம்மத் அபூ ஷவ்ஷாஇ ஷேக் ஸெய்யித் உஸ்மான்இ அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அத‌னூடாக தரீக்காவின் த‌லைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.

இவர்களோடு இணைந்து தமன்ஹூர்நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கால்நடையாகச் சென்று ஔலியாக்களின் சமாதிகளை!!! தரிசிக்கும் செயல்களிலும் ஹஸனுல் பன்னா அவர்கள் ஈடுபட்டார்கள்.

மேற்படி சூழலில்தான் ஹஸனுல் பன்னா அவர்கள் தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் பைஅத்’ ( ‘எச்சந்த‌ர்ப்பத்திலும் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என்ற உறுதி மொழி)  பெற்றுக் கொண்டு  தரீக்காவில் இணைந்து அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்ஹஸ்ஸாபியா நலன்புரிச் சங்கம் எனும் சங்கத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அச்சங்கத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்கள்.

  • பைஅத்ஒரு சிறு விளக்கம்:

இவ்விடத்தில் இஸ்லாத்தின் பார்வையில் பைஅத்என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இரு வகையான பைஅத்க‌ளையே அனுமதித்து ஆர்வமூட்டி வலியுறுத்துகின்றன.

1. அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாக அல்லாஹ்விடம் பைஅத்செய்வது.

2.அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் இஸ்லாமிய ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக அவரிடம் பைஅத்செய்வது.

மேற்படி முதலாவது வகையான அல்லாஹ்விடம் செய்யவேண்டிய பைஅத்தை ‘(நபியே) உம்மிடம்பைஅத்செய்பவர்கள் அல்லாஹ்விடம் பைஅத்செய்கிறார்கள்’ (48:10) எனும் அல்குர் ஆன் வசனத்திற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் செய்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்பு இவ்வகை பைஅத்தை வேறு யாரிடமும் செய்துகொள்ளக்கூடாது.

இரண்டாவது வகையான பைஅத்தை சர்வ அதிகாரங்கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளருக்கு செய்யவேண்டுமே தவிர தரீக்காக்களின் ஷேக்மார்கள் இயக்கத்தலைவர்கள் ஆகியோருக்கு ஒரு போதும் செய்துகொடுக்கக்கூடாது என்பதை மாத்திரம் இவ்விடத்தில் சுருக்கமாக விளங்கிக்கொண்டு எமது கட்டுரையைத் தொடர்வோம்.

  • ஹஸனுல் பன்னா ஒரு தரீக்காப் பிரச்சாரகராக:

இவ்வாறே ஆரம்ப ஆசிரியர் பயிற்சியை இரு வருடங்களில் பூர்த்தி செய்த ஹஸனுல் பன்னா அவர்கள் பின்பு தாருல் உலூம்கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை தனது இருபத்தியாறாவது வயதில் முழுமையாக முடித்து 1928ம் ஆண்டு வெளியேறினார்கள்.
குறித்த ஆண்டிலேயே எகிப்தின் பிரபலமான இஸ்மாஈலிய்யா’  நகரத்தில் அறபு மொழி ஆசிரியராக நியமனம் பெற்று கடமையாற்ற ஆரம்பித்தார்.

மேற்குறிப்பிட்டஇஸ்மாஈலிய்யாநகரத்திலேயே ஹஸனுல் பன்னாவின் முழுத்திறமையும் வெளிப்பட்டது. அறிவையும் அறிஞர்களையும் மதிக்கும் இஸ்மாஈலியா மக்கள் மத்தியில் அல்குர் ஆனின் சில பகுதிகளையும் தீவானுல் முதனப்பிஹ்உட்பட சில அறபுக் கவித்தொகுப்புகளையும் மனனம் செய்திருந்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது உணர்வுபூர்வமான பேச்சினாலும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.

பள்ளிவாயில்களில் மாத்திரமின்றி மக்கள் மண்றங்கள்இ உணவகங்கள்இ பொது மைதானங்கள்இ தெருமுனைகள் போண்ற இடங்களில் ஹஸனுல் பன்னா அவர்களால் முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் சாரிசாரியாக ஹஸ்ஸாபிய்யாதரீக்காவில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு மக்கள் ஆதரவு பெருகப்பெருக  வெறுமனே ஒரு தரீக்காவின் நலன்புரிச்சங்கம்என்ற நிலையில் இருந்து சீர்திருத்தம்இ சமூக மாற்றம்இ தீமையை எதிர்த்தல்இ பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தல் போண்ற சமூக நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதன் காரணமாக இஸ்மாஈலிய்யா நகரத்தில் தனது தரீக்காவுக்கென தனியான பள்ளிவாயில் ஒன்றையும் பெண்களுக்கான பிரச்சார நிலையம் (சென்டர்) ஒன்றையும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் அமைத்துக்கொண்டார்.

இவ்வாறே அரசியல் ஆட்சி என்பனவற்றுடன் அனுவளவும் சம்பந்தப்படாமல் முழுக்க முழுக்க ஒரு ஸூபித்துவ அமைப்பாகவே செயற்பட்டு நாடளாவிய ரீதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் பின்புதான்இ ஹஸ்ஸாபிய்யா தரீக்காவுக்குள் தனது கை மேலோங்கியதன் பின்புதான் ஹஸனுல் பன்னா தனது துரோகச் செயலை செயற்படுத்த ஆரம்பித்தார்.

  • ஹஸனுல் பன்னா குருவை மிஞ்சிய சீடனாக‌:

ஆம்எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வ‌ஹ்ஹாப் அவர்களுக்கு செய்திருந்த பைஅத்’ (உறுதி மொழி) யை உடைத்துக்கொண்டு தரீக்காவின் பெருமள‌விலான தொண்டர்களை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் தனி இயக்கத்தை 1928ம் ஆண்டில உருவாக்கினார்.!!!‌

மேற்படி பச்சைத்துரோகத்தை ஹஸனுல் பன்னா அவர்களே தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்படும் வரை ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் உருவாக்கப்பட்ட போது அவருக்கு அதில் உடன்பாடு இருக்க‌வில்லை. அது அவரது அபிப்பிராயம்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.!!!?’

  • பிளவுபட்ட இஹ்வான்கள்:

இவ்வாறு துரோகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் கொல்லப்படும் வரை ஓரணியாக வழிநடாத்திச்செல்ல முடிந்ததா? அல்லது ஒரு கெட்ட செயலுக்கான‌ கூலி அதைப் போண்றதொரு கெட்ட செயலே’ (42:40) எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்பவும் விணை விதைத்தவன் விணை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்எனும் முதுமொழிக்கேற்பவும்   உள்ளிருந்து ஏற்பட்ட துரோகத்தால் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உள்ளிருந்து ஏற்பட்ட துரோகங்களினாலேயே பல கூறுகளாக பிளவுப்ட்டுப் போனதா? என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் தொடந்தும் நோக்குவோம்.

  • எமது பிரார்த்தனை

எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)


Monday, June 20, 2011

பிறை விவாதம் 2.10.2000

2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது.
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7

இதுதான் இவர்களின் தவ்ஹீத்.

அப்துல் வதூத் ஜிப்ரியின் பல வேஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
M.I.Sc

நாங்கள் மூத்த உலமாக்கள், தவ்ஹீத் கொள்கையை அந்தக் காலத்தில் இருந்தே பரப்புபவர்கள், தவ்ஹீத் எங்கள் மூச்சு என்றெல்லாம் அடிக்கு ஆயிரம் தடவை சொல்லிக் கொள்ளும் பல தவ்ஹீத் வாதிகளை இலங்கை தஃவாக் களம் நாளும் நாளும் கண்டு வருகிறது.

தங்களை மூத்த உலமாக்கள், மூத்த கொள்கை வாதிகள் என்று சொல்லிக் கொள்வதில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர்களில் பலரின் நிலை இன்று அந்தோ பரிதாபம் என்றாகிவிட்டது.

ஆரம்பத்தில் கொள்கையை உடைத்து சொல்ல வேண்டும் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் செயல்பட்ட மூத்த உலமாக்களில் (?) பலரின் நிலை இன்று தலைகீழாய் போயுள்ளதை கண்கூடாகக் காண முடியும்.

அதில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தில் இருந்தவர் தான் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி ஆரம்ப காலத்தில் இவரின் கொள்கை பிடிப்பு காரணமாக பல இடங்களில் தாக்கப்பட்டவர், மிரட்டப்பட்டவர், என்பதில் எல்லாம் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவரின் தற்போதைய நிலையைத் தான் நாம் கவணிக்க வேண்டும்.

ஆரம்ப கால கட்டத்தில் தவ்ஹீதுக்காக அடிபட்டார் என்பதற்காக இப்போதும் அவர் செய்யும் செயல்களை ஆதரிக்க முடியுமா என்ன?

பேருவலைப் படுகொலையும், அப்துல் வதூத் ஜிப்ரியின் பச்சோந்தித் தனமும்.

கடந்த 23.07.2009 அன்று பேருவலை மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாயலில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள் தர்கா வழிபாடு மற்றும் கந்தூரிக்கு எதிராக ஜும்மா உரை நிகழ்த்தினார் அந்த உரையின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்ட சத்தியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஊரைச் சேர்ந்த புகாரி தைக்காவைச் சேர்ந்த கப்ரு வணங்கிகள் இரவோடு இரவாக மஸ்ஜிதுர் ரஹ்மானைத் தாக்கினார்கள் அந்த களோபரத்தில் 2 கொள்கைச் சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டு பலர் படுகாயமடைந்தார்கள்.

இலங்கை தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் பதிந்த இந்த நிகழ்வு என்றும் மறவாத வடுவாக ஏகத்தவவாதிகளின் மனதில் இடம்பிடித்தது.

இந்தக் கொடூரம் தொடர்பாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேலை ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையான “எங்கள் தேசம்” பத்திரிக்கை அப்துல் வதூத் அவர்களை இது தொடர்பாக ஒரு பேட்டி கண்டது.

அந்தப் பேட்டியில் ஜும்மா உரையில் பேசப்பட்ட செய்தி தொடர்பாக கருத்துச் சொன்ன அப்துல் வதூத் அவர்கள் “ இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யக் கூடாது” இது பிரச்சாரத்திற்கான வழி முறை அல்ல என்று குறிப்பிட்டார்.

அவருடைய இந்தக் கருத்து அன்றைய நாட்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இன்றும் சிலர் அவரை நம்புவதாலும் அவருக்கு சிகப்புக் கம்பலம் விரிப்பதினாலும் இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறோம்.

கப்ரு வணக்கம் கூடாது, புகாரி கந்தூரி கூடாது, குா்ஆனும், சுன்னாவும் மாத்திரம் தான் நம் வழி அது தவிரவுள்ளவைகள் எதனையும் நாம் பின்பற்றக் கூடாது. பித்அத்துகள் செய்யக்கூடாது மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது பிரச்சாரத்தின் முறை கிடையாது என்கிறார் இந்தக் கொள்கை (?) கோபுரம்.

இவர் இப்பயெல்லாம் கூறியும் கொள்கையை உடைத்துச் சொல்லக் கூடாது என்று எந்த இயக்கம் சமரசம் பேசுகிறதோ அந்த ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையிலேயே இதை இவர் சொன்னார்.

ஆனால் அன்று அவரின் கருத்தை விமர்சித்தவர்கள் இன்று அவரை ஏற்றுக் கொண்டு அவருடன் மேடையேறுவதும் அவருக்கும் தவ்ஹீத் பிரச்சாரகர் என்ற பெயர் வழங்கப்பட்டு பிரச்சாரத்திற்காக இடங்கள் ஒதுக்கப்படுவதும் என்ன நியாயம்?

இவர் என்றோ தவ்ஹீதை விட்டும் தடம் புரண்டு விட்டார் என்பது தெரிந்தாலும் ஆறிய கஞ்சி பலங்கஞ்சி என்ற பழமொழியைப் போல் தவ்ஹீ்த் பிரச்சாரக் களமும் அரசியலாக்கப்பட்டு மேடை பங்கு போடப்படுகிறது.

உள்நாட்டில் கொள்கைவாதி, வெளிநாட்டில் கொள்கை வியாபாரி.

இலங்கை மக்கள் மத்தியில் தன்னை ஒரு தவ்ஹீத் வாதியாக காட்டிக் கொள்ளும் இவர் வெளிநாடுகளில் போடும் வேஷங்கள் பல சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கிறது.

பச்சோந்தியைப் போல் இடத்திற்கு ஏற்ற வேஷம் போடும் இவர் வெளிநாடுகளில் கொள்கை வியாபாரம் செய்பவர் என்பது அந்த நாடுகளில் வாழும் இலங்கை சகோதரர்களினாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.   `

ஆம் கீழே நாம் கொடுத்துள்ள வீடியோவின் லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள் இவர் ஆஸ்த்திரேலியா சென்ற நேரத்தில் அங்கு யாரோடு சேர்ந்து நிகழ்சி செய்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.


ஜமாத்தே இஸ்லாமியினர் இலங்கை தஃவாக்களத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது தெரிந்தும் இப்படிப்பட்டவர்களுடன் இவர் கூட்டனி சேர்கிறார் என்றால் இவரை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

ஏகத்துவத்தைப் பேசுபவர்களை கொள்கையை உடைத்துப் பேசுவது தஃவாவின் அனுகு முறை இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கிறார்.

வெளிநாடுகளில் ஜமாத்தே இஸ்லாமியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துகிறார். இப்போதாவது புரிகிறதா இவரின் கொள்கை வியாபாரம்?

இவர் எந்தளவுக்கு இரட்டை வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்றால் ஜமாத்தே இஸ்லாமியுடன் மட்டுமல்ல லண்டனில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் இவர் கலந்து கொண்டார் இவருடன் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பதை கீழே உள்ள படத்தைப் பார்ப்பவர்கள் தெளிவாக அறிய முடியும்.


அப்துல் வதூத் ஜிப்ரியுடன் கலந்து கொண்டவர்கள் யாரென்று பாருங்கள்.

ஹஜ்ஜுல் அக்பர் (ஜமாத்தே இஸ்லாமியின்)

அப்துல்லாஹ் பெரியார் தாசன் (அனைத்துக் கொள்கைக் காரர்களோடும் கை கோர்ப்பவர்)

ரிஸ்வி முப்தி (தப்லீக் ஜமாத்தின் முக்கியஸ்தர், இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர்.)

அகார் முஹம்மத் (ஜமாத்தே இஸ்லாமி)

அப்துல் வதூத் அவர்கள் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியின் நிலையைப் பாருங்கள்.

இலங்கை தஃவாக் களத்தில் தவ்ஹீதுக்கு எதிராக ஷீயா ஊடுருவலை தெளிவாக ஆதரிக்கும் ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்தவர்கள், தவ்ஹீத் வாதிகளையும் அவர்களின் பள்ளிகளை இல்லாமலாக்கத் துடிக்கும் தப்லீக் வாதிகள், சுன்னத் ஜமாத் காரர்கள் என்று அனைவரும் கலந்து கொள்கிறார்கள் அதில் இவரும் கலந்து கொள்கிறார்.

இதுதான் கொள்கை உறுதியோ ? 

இதுதான் ஏகத்துவப் பிரச்சாரமோ ?

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவா் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)



உண்மை வந்து வட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குா்ஆன் 17-81)