Pages

Monday, June 20, 2011

இதுதான் இவர்களின் தவ்ஹீத்.

அப்துல் வதூத் ஜிப்ரியின் பல வேஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
M.I.Sc

நாங்கள் மூத்த உலமாக்கள், தவ்ஹீத் கொள்கையை அந்தக் காலத்தில் இருந்தே பரப்புபவர்கள், தவ்ஹீத் எங்கள் மூச்சு என்றெல்லாம் அடிக்கு ஆயிரம் தடவை சொல்லிக் கொள்ளும் பல தவ்ஹீத் வாதிகளை இலங்கை தஃவாக் களம் நாளும் நாளும் கண்டு வருகிறது.

தங்களை மூத்த உலமாக்கள், மூத்த கொள்கை வாதிகள் என்று சொல்லிக் கொள்வதில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர்களில் பலரின் நிலை இன்று அந்தோ பரிதாபம் என்றாகிவிட்டது.

ஆரம்பத்தில் கொள்கையை உடைத்து சொல்ல வேண்டும் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் செயல்பட்ட மூத்த உலமாக்களில் (?) பலரின் நிலை இன்று தலைகீழாய் போயுள்ளதை கண்கூடாகக் காண முடியும்.

அதில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தில் இருந்தவர் தான் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி ஆரம்ப காலத்தில் இவரின் கொள்கை பிடிப்பு காரணமாக பல இடங்களில் தாக்கப்பட்டவர், மிரட்டப்பட்டவர், என்பதில் எல்லாம் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவரின் தற்போதைய நிலையைத் தான் நாம் கவணிக்க வேண்டும்.

ஆரம்ப கால கட்டத்தில் தவ்ஹீதுக்காக அடிபட்டார் என்பதற்காக இப்போதும் அவர் செய்யும் செயல்களை ஆதரிக்க முடியுமா என்ன?

பேருவலைப் படுகொலையும், அப்துல் வதூத் ஜிப்ரியின் பச்சோந்தித் தனமும்.

கடந்த 23.07.2009 அன்று பேருவலை மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாயலில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள் தர்கா வழிபாடு மற்றும் கந்தூரிக்கு எதிராக ஜும்மா உரை நிகழ்த்தினார் அந்த உரையின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்ட சத்தியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஊரைச் சேர்ந்த புகாரி தைக்காவைச் சேர்ந்த கப்ரு வணங்கிகள் இரவோடு இரவாக மஸ்ஜிதுர் ரஹ்மானைத் தாக்கினார்கள் அந்த களோபரத்தில் 2 கொள்கைச் சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டு பலர் படுகாயமடைந்தார்கள்.

இலங்கை தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் பதிந்த இந்த நிகழ்வு என்றும் மறவாத வடுவாக ஏகத்தவவாதிகளின் மனதில் இடம்பிடித்தது.

இந்தக் கொடூரம் தொடர்பாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேலை ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையான “எங்கள் தேசம்” பத்திரிக்கை அப்துல் வதூத் அவர்களை இது தொடர்பாக ஒரு பேட்டி கண்டது.

அந்தப் பேட்டியில் ஜும்மா உரையில் பேசப்பட்ட செய்தி தொடர்பாக கருத்துச் சொன்ன அப்துல் வதூத் அவர்கள் “ இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யக் கூடாது” இது பிரச்சாரத்திற்கான வழி முறை அல்ல என்று குறிப்பிட்டார்.

அவருடைய இந்தக் கருத்து அன்றைய நாட்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இன்றும் சிலர் அவரை நம்புவதாலும் அவருக்கு சிகப்புக் கம்பலம் விரிப்பதினாலும் இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறோம்.

கப்ரு வணக்கம் கூடாது, புகாரி கந்தூரி கூடாது, குா்ஆனும், சுன்னாவும் மாத்திரம் தான் நம் வழி அது தவிரவுள்ளவைகள் எதனையும் நாம் பின்பற்றக் கூடாது. பித்அத்துகள் செய்யக்கூடாது மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது பிரச்சாரத்தின் முறை கிடையாது என்கிறார் இந்தக் கொள்கை (?) கோபுரம்.

இவர் இப்பயெல்லாம் கூறியும் கொள்கையை உடைத்துச் சொல்லக் கூடாது என்று எந்த இயக்கம் சமரசம் பேசுகிறதோ அந்த ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையிலேயே இதை இவர் சொன்னார்.

ஆனால் அன்று அவரின் கருத்தை விமர்சித்தவர்கள் இன்று அவரை ஏற்றுக் கொண்டு அவருடன் மேடையேறுவதும் அவருக்கும் தவ்ஹீத் பிரச்சாரகர் என்ற பெயர் வழங்கப்பட்டு பிரச்சாரத்திற்காக இடங்கள் ஒதுக்கப்படுவதும் என்ன நியாயம்?

இவர் என்றோ தவ்ஹீதை விட்டும் தடம் புரண்டு விட்டார் என்பது தெரிந்தாலும் ஆறிய கஞ்சி பலங்கஞ்சி என்ற பழமொழியைப் போல் தவ்ஹீ்த் பிரச்சாரக் களமும் அரசியலாக்கப்பட்டு மேடை பங்கு போடப்படுகிறது.

உள்நாட்டில் கொள்கைவாதி, வெளிநாட்டில் கொள்கை வியாபாரி.

இலங்கை மக்கள் மத்தியில் தன்னை ஒரு தவ்ஹீத் வாதியாக காட்டிக் கொள்ளும் இவர் வெளிநாடுகளில் போடும் வேஷங்கள் பல சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கிறது.

பச்சோந்தியைப் போல் இடத்திற்கு ஏற்ற வேஷம் போடும் இவர் வெளிநாடுகளில் கொள்கை வியாபாரம் செய்பவர் என்பது அந்த நாடுகளில் வாழும் இலங்கை சகோதரர்களினாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.   `

ஆம் கீழே நாம் கொடுத்துள்ள வீடியோவின் லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள் இவர் ஆஸ்த்திரேலியா சென்ற நேரத்தில் அங்கு யாரோடு சேர்ந்து நிகழ்சி செய்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.


ஜமாத்தே இஸ்லாமியினர் இலங்கை தஃவாக்களத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது தெரிந்தும் இப்படிப்பட்டவர்களுடன் இவர் கூட்டனி சேர்கிறார் என்றால் இவரை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

ஏகத்துவத்தைப் பேசுபவர்களை கொள்கையை உடைத்துப் பேசுவது தஃவாவின் அனுகு முறை இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கிறார்.

வெளிநாடுகளில் ஜமாத்தே இஸ்லாமியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துகிறார். இப்போதாவது புரிகிறதா இவரின் கொள்கை வியாபாரம்?

இவர் எந்தளவுக்கு இரட்டை வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்றால் ஜமாத்தே இஸ்லாமியுடன் மட்டுமல்ல லண்டனில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் இவர் கலந்து கொண்டார் இவருடன் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பதை கீழே உள்ள படத்தைப் பார்ப்பவர்கள் தெளிவாக அறிய முடியும்.


அப்துல் வதூத் ஜிப்ரியுடன் கலந்து கொண்டவர்கள் யாரென்று பாருங்கள்.

ஹஜ்ஜுல் அக்பர் (ஜமாத்தே இஸ்லாமியின்)

அப்துல்லாஹ் பெரியார் தாசன் (அனைத்துக் கொள்கைக் காரர்களோடும் கை கோர்ப்பவர்)

ரிஸ்வி முப்தி (தப்லீக் ஜமாத்தின் முக்கியஸ்தர், இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர்.)

அகார் முஹம்மத் (ஜமாத்தே இஸ்லாமி)

அப்துல் வதூத் அவர்கள் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியின் நிலையைப் பாருங்கள்.

இலங்கை தஃவாக் களத்தில் தவ்ஹீதுக்கு எதிராக ஷீயா ஊடுருவலை தெளிவாக ஆதரிக்கும் ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்தவர்கள், தவ்ஹீத் வாதிகளையும் அவர்களின் பள்ளிகளை இல்லாமலாக்கத் துடிக்கும் தப்லீக் வாதிகள், சுன்னத் ஜமாத் காரர்கள் என்று அனைவரும் கலந்து கொள்கிறார்கள் அதில் இவரும் கலந்து கொள்கிறார்.

இதுதான் கொள்கை உறுதியோ ? 

இதுதான் ஏகத்துவப் பிரச்சாரமோ ?

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவா் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)உண்மை வந்து வட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குா்ஆன் 17-81)

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்