Pages

Friday, July 22, 2011

இரகசிய சமுதாயம் - தொடர்-4

இரகசிய சமுதாயம் - தொடர்-4
பராக் ஒபாமா - புதைந்து கிடக்கும் மர்மங்கள்.
பராக் ஹூஸைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961) 2008 ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராவார்.தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
Obama Praises Islam as 'Great Religion' : "The contribution of Muslims to the United States are too long to catalog because Muslims are so interwoven into the fabric of our communities and our country," 

ஒரு கட்டத்தில் இவர் இஸ்லாம் ஒரு மாபெரும் மார்க்கம். அமெரிக்காவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு மிகவும் அபரிமிதமானது. அமெரிக்க சமூகத்தில் முஸ்லிம்கள் பின்னிப் பிணைந்தவர்கள் என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புகழ்ந்து தள்ளினார். 

வந்ததே வினை! கென்யா சமூகத்தைச் சார்ந்த இவரது தந்தை இஸ்லாமிய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதால் ஒபாமாவும் முஸ்லிம்தான், ஒரு முஸ்லிம் அமெரிக்காவை எவ்வாறு ஆளமுடியும்? ஓபாமாவின் பெயரிலேயே ஹூஸைன் என்ற முஸ்லிம் பெயர் இல்லையா என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. உடனே யூதர்கள் பிடியிலுள்ள மீடியாக்கள் ஒபாமாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ததோ என்று எண்ணி விடாதீர்கள். ஒபாமா ஆட்சி கட்டிலில் அமரும் முன்னர் அவரது பெயரை செய்தி ஊடகங்களில் முழுவீச்சில் பிரபலமடையச் செய்யும் ஒரு ஜியோனிஸத் தந்திரமே அது.

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே பல சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிகளின் முடிவுகளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான். மேலும், மறுமையில் எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள். (13:42)


காரணம் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவோ, மெக்கெய்னோ, யார் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவை ஆளவிருப்பது
illuminati என்று அழைக்கபடுகிற லூசிஃபரை வணங்கும் ஷைத்தானிய கூட்டத்தைச் சார்தவர்தானே! என்ற நிலைதான் இருந்தது. மெக்கெய்னை பற்றி தெரியும், என்ன ஒபாமாவுமா அப்படி என்று அச்சரியப்படுகிறீர்களா? இன்னும் தெளிவாக சொல்வதென்றால்ஒபாமாவும் ஜார்ஜ் புஷ்ஸூம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே!.  இந்த இரகசியத்தை கீழுள்ள வீடியோ பதிவு மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

ஆம் கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஸூடைய குடியரசு கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான சிந்தனையும், கொள்கையும் உடையவர் என்ற மாயையை இல்லுமினாட்டிகள் ஏற்படுத்தினர். அதன் பின்னனியில் சில சூழ்ச்சிகள் இருந்தன.
  1) இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிம்களின் மீது ஜார்ஜ் புஷ் அடுத்தடுத்து நடத்திய கொலை வெறித் தாக்குதல்களால் இஸ்லாமிய சமூகம் மற்றும் அரபுநாடுகள் உட்பட நடுநிலையான பெருங்கொண்ட கிருஸ்தவ மக்களும், பெரும்பாலான அமெரிக்கர்களும் ஜார்ஜ் புஷ்ஸின் மீது பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை சற்று அமைதி படுத்துவதற்கும்,

  2) ஈராக் மற்றும் ஆப்கானில் முஸ்லிம்கள் தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவத்தின் மீது நடத்திய சில தற்காப்பு நடவடிக்கையில் அமெரிக்கா பல திறமைமிக்க இராணுவ வீரர்களை இழந்தது. அவர்களின் குடும்பத்தினரோடு, அமெரிக்காவின் அமைதியை விரும்பும் பெரும்பாலான மக்கள் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிராக வீதியில் இறங்கினர். ஜார்ஜ் புஷ்ஸை விடுங்கள் இதோ ஒபாமா என்ற சமாதானப் புறா வந்துவிட்டார் என்று அறிவித்து அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடிக்கச் செய்யவும்,

  3) ஜார்ஜ் புஷ்ஸின் தவரான பொருளாதாரக் கொள்கையினால் அதளபாதாளத்திற்கு சென்ற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை பற்றிய உண்மை நிலையை உலகம் அறிவதைவிட்டும் திசைதிருப்பவும் ஒரு பிரச்சாரம் தேவைப்பட்டது. அதை கனகச்சிதமாக செய்து முடித்தனர் மிரோவிஞ்சியன் இலுமினாட்டிகள்.

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான் ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது. (16:26)

இதில் வேடிக்கை என்ன வென்றால் ஜார்ஜ் புஷ்ஸூக்கு எதிரான கருத்துள்ளவர் ஒபாமா என்ற பிரச்சாரத்தால் ஒரளவு ஒபாமாவின் புகழ் உயரத்துவங்கினாலும், இவர் ஒரு முஸ்லிமோ என்ற சந்தேகம் அமெரிக்கர்களில் பலபேருக்கும் இருந்தது. அதன் உச்ச கட்டமாக செப்டம்பர் 11 தாக்குதல்களில் ஒபாமாவுக்கும் தொடர்பு உண்டு என்றும், ஒபாமாதான் அந்தி கிருஸ்து என்றும் பிரச்சாரம் செய்தனர்.


இந்த பிரச்சாரங்களை ஒபாமா எப்படி முறியடித்தார் தெரியுமா? தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கையில் பைபிளை தூக்கிபிடித்துக் கொண்டு தான் ஒரு கிருஸ்தவன்தான் என்றும் இதை தனது வேதாமான பைபிளின் மீதும், அமரிக்காவின் கொடியின் மீதும் சத்தியம் செய்து கூறிகிறேன் என்று கதறினார்.
"Let's make clear what the facts are: I am a Christian. I have been sworn in with a Bible. I pledge allegiance [to the American flag] and lead the pledge of allegiance sometimes in the United States Senate when I'm presiding." : Barak Obama.
அதிபரான கையுடன் மறக்காமல் ஆப்கான் முஸ்லிம்களை கொல்வதற்காக 30,000 இராணுவ வீரர்களை கூடுதலாக அனுப்பி வைத்தார்.  இதன் மூலம் (சமாதானப் புறாவாது மண்ணாங்கட்டியாவது) முஸ்லிம்களைக் கொல்வதில் புஷ்ஸூக்கு நிகராக தான் சளைத்தவனல்ல என்று நிரூபித்தார். ஜார்ஜ் புஷ் இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்று சொல்லிவிட்டுதான் ஈராக் மற்றும் ஆப்கான் முஸ்லிம்கள் மீது திரள்குண்டுகளை கொத்துகொத்தாக கொட்டினார் என்பதை கவனத்தில் கொள்க.
கடந்த அக்டோபர் 2009 ல் ஒபாமாவின் சர்வதேச இராஜிய உறவுகளுக்காவும், மக்களிடையே அவர் ஏற்படுத்திய பரஸ்பர உறவுகளைப் பாராட்டியும் (?) அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.


மக்களே! அமெரிக்காவை யார் ஆண்டால் என்ன? ஜார்ஜ் புஷ், கிளிண்டன், ஒபாமா,  ஜோ பைடன், மென்கெய்ன் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான், அனைவரும் லூசிஃபரை வணங்கும் ஷைத்தானியக் கூட்டம்தான் என்பது உண்மையிலும் உண்மை.
ஓபாமா எப்படிபட்டவர்? இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இனி என்னவெல்லாம் அவர் செய்ய இருக்கிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்,பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து இறை வசனங்களைப் பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். (3:137)

''பூமியில் நீங்கள் சுற்றி வந்து, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (6:11)
 

தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இரகசிய சமுதாயம் - தொடர்-3

இரகசிய சமுதாயம் - தொடர்-3
ஐக்கிய இரகசிய இராஜ்ஜியம்
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பிப்ப்ரவரி 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன.




 
         



பிரிட்டானிய அரசி எலிசபத்தின் அரசகுடும்பம் தாங்கள்தாம் தாவீது ராஜாவின் வம்சவழியினர் என்பதாக பரைசாற்றுகின்றனர். பிரிட்டனை ஆளும் இந்த (windsor) வின்ட்ஸர் அரச பரம்பரையினரே ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆட்சி புரிகின்றனர்.
இந்த வின்ட்ஸர் பரம்பரையோடு ஸ்காட்லாந்தின் ஸ்பென்ஸர் (ஸ்டிவார்ட்) அரச குடும்பம் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளனர். மறைந்த இளவரசி டயானாவும் இதே ஸ்பென்ஸர் பரம்பரையைச் சார்ந்தவர்தாம். கிபி 1060 பிறந்த பிரென்சு படைவீரன்; காட்ஃபிரே ஆப் ப்ய்லன் (Godfrey of Bouillon) தன்னை மிரோவின்ஜியன் இரத்தபந்தம்என்று அறிவித்துக் கொண்டு ஜெரூசலத்தின் மீது பலமுறை சிலுவையுத்தங்களை நடத்தினான். பின்னர் தன்னை ஜெரூசலத்தின் மன்னனாக கி.பி 1099ல் பிரகடனப் படுத்தினான்.

இது உலகை ஆண்ட பிரிட்டனின் முடியாச்சிக்கு பெரும்  தலையிடியாக அமைந்தது. எனவே வின்ட்ஸர் அரச குடும்பம் பிரிட்டன் முடியாச்சியை சக்திமிக்க பேரரசாக மாற்றி இவ்வுலகை ஆளவேண்டுமெனில் தங்களோடு மிரோவின்ஜியன் இரத்தபந்தமும் கலந்து அதில் பிறக்கும் ஒருவனாலேயே முடியும் என்ற முடிவிற்கு வந்தனர். தங்களின் கொடுங்கோள் பரம்பரைதான் ஐரோப்பாவை ஆள வேண்டும் என்ற தீராதமுடிவிலுள்ள இந்த எலிசபெத் வகையராக்கள் இறுதியில் மிரோவின்ஜியன் இரத்தபந்தத்தில் பிறந்த இளவரசி டயானாவை தெய்வீகம் பொருந்திய புனிதப் பெண்மணி என கண்டுபிடித்தனர். ஏசுவின் பரிசுத்த இரத்தம் இளவரசி டயானா மூலம் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையில் இளவரசர் சார்லஸூக்கு அவளை மணமுடித்தனர்.

வின்ட்ஸரின் அரச பரம்பரையினர் மட்டுமே கலந்து கொண்ட அந்தத் திடீர் திருமணத்தில் பலவிதமான இரகசிய சடங்குகள் செய்யப்பட்டன. திருமண மேடையில் வீற்றிருந்த டயானா அன்று 3 மாத கற்பிணி. திருமணமாகி 6 மாதங்களில் இளவரசன் வில்லியம்ஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதுபோன்ற இரகசியங்கள் 1982 ம் ஆண்டு வாக்கில் வெளியுலகிற்குத் தெரியவந்தது.


இவர்களின் ஷைத்தானிய வேலைகளை தோலுரித்துக் காட்டும் அருள்மறை குர்ஆனின் எச்சரிக்கை வசனங்கள் இதோ...
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையுண்டென்று பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும். இதுவே அவர்களுடைய பகிரங்கமான பாவத்துக்குப் போதுமான சான்றாக இருக்கின்றது. (4:50)

இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் வம்சாவளி உறவை கற்பனையாக ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஜின்களும் மறுமையில் இறைவன் முன் நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். (37:158)

... அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள் அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான் இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். (6:100)

தாவீது ராஜாவின் பரம்பரை, ஏசுவின் இரத்தபந்தம், தெய்வீக பெண்ணின் கருவரை, என்பதெல்லாம் இவர்கள் தேசங்களை ஆள்வதற்கு அமைத்துக் கொண்ட வீன் கற்பனையே அன்றி வேறில்லை. இவர்கள் புனித வேதமாகக் கருதும் பைபிளையும், கடந்த கால நாகரிகத்தின் வரலாறுகளையும் ஆய்வுசெய்து கற்பனையாக வடிவமைத்த இரகசிய அரசியல் கோட்பாடுகள் இறுதியில் அவர்களை சாத்தானை வணங்கும் அளவிற்கு இட்டுச்சென்றுவிட்டதை தெளிவாக அறியமுடிகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக இவர்கள் ஆட்சிபுரியும் பக்கிங்ஹாம் அரண்மனை முதல், அதன் வாயில், கொடி என்று துவங்கி இவர்கள் அணியும் ஆடைகள்வரை சாத்தானிய குறியீடுகளை முன்னிலைப் படுத்துவதைக் காணலாம்.


இந்த படத்தில் காணும் 'சிவப்பு கடல் நாகம்' சாத்தானை குறிப்பதாகும். ஏசுவின் இரத்த பந்தத்திலும், சாத்தானின் வித்திலும் உருவாகும் 13 வது மிரோவின்ஜியன் வாரிசிலிருந்துதான் அந்தி கிருஸ்துவான தஜ்ஜால் வருவான் என்பது இவர்களின் நம்பிக்கை. மேற்காணும் இந்த படத்தின் பின்னனியில் பைபிளின் ஒரு சரித்திரம் உண்டு. பைபிளோடு தொடர்புடையவர்களுக்கு நன்கு புரியும்.அதை அப்படியே கீழே தருகிறோம். (இதன் வீடியோ பதிவை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.)
1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.

2 தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
3 அப்பொழுது வௌ;வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.
7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கொடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7 :1-8)
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (Rev 13:2)
  
அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத்தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைப்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன். (Dan 7:20)
  
அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
  
அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. 
(2 Thess 6-7)
(Note : The cult and preachings of so called Hashshashin movement as given by the below video clip is NOT related to any of the true Islamic principles. Readers are advised to evaluate further.)
இது போன்ற சாத்தானிய சக்த்திகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சித்திரங்களை,  கட்டிடங்கள், சினிமாக்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றில் இவர்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றனர். அதன் உள்நோக்கம் என்ன என்பதை தனி கட்டுரையில் விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். எனவேஇத்தொடர் கட்டுரைகளை நீங்கள் படிப்பதோடு, மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திட வேண்டுகிறோம்.
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள் இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் யாவும் தீர்ப்பு நாளில் இவர்களை விட்டு மறைந்துவிடும். (11:21)

... நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசகிறோம் அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது. பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (21:18)

தொடரும் இன்ஷா அல்லாஹ்

இரகசிய சமுதாயம் - தொடர்-2

இரகசிய சமுதாயம் - தொடர்-2
யார் இந்த லூசிஃபர்?
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - வழி கெடுக்கும் ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர் (2:257).

லூசிஃபர்! முஸ்லிம்களிடத்தில் இந்த வார்த்தை பிரபலமில்லாதிருப்பினும், யூத கிருஸ்தவ உலகத்திற்கு நன்கு பரிட்சயமான ஒன்று இந்த லூசிஃபர். இலத்தின் மொழியில் லூசிஃபர் என்பதற்கு வெளிச்சத்தை வழங்குபவன்(?)என்று பொருள். சூரிய உதயத்திற்கு முன்னர் பிரகாசிக்கும் அதிகாலை நட்சத்திரமான வீனஸூக்கும் இப்பெயருக்கும் சில தொடர்புண்டு. அதாவது லூசிஃபா என்பது அந்த அதிகாலை நட்சத்திரத்திலிருந்து 'இறங்கும் தேவதை' என்ற மூடநம்பிக்கைதான் அது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, யூத, கிருஸ்தவர்களின் நம்பிக்கைபடி லூசிஃபர் என்பவன் ஆதாம் ஏவாளை சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியை புசிக்கச்செய்து இறை சாபத்தால் பூமிக்கு தூக்கி எறியப்பட்ட சாத்தானியத் தலைவன் என்பதே. இதுதான் சரியான கருத்து. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சொல்வதென்றால் இப்லீஸ் என்ற ஷைத்தானைத்தான் யூத, கிருஸ்தவர்கள் லூசிஃபர் என்று அழைக்கின்றனர்.
இத்தொடர் கட்டுரையின் நோக்கம் வெறுமனே லூசிஃபரை பற்றி அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக லூசிஃபர் என்ற இந்த ஷைத்தானை வணங்கி அவனுடைய ஆட்சியை இவ்வுலகில் நிலை நிறுத்த இரகசியமாக பாடுபடும் மேற்கத்திய அரசகும்பலையும், அவர்களின் ஜாஹிலியாவையும்,  உலகமக்களுக்கு விளக்குவதுமேயாகும். மேலும் தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப்படுத்திய கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் வாரிசுகளாகச் செயல்படும் இந்த யூத-கிருஸ்தவ நெட்வொர்க், ஷைத்தானின் ஒட்டுமொத்த உருவமான தஜ்ஜால் மீது எந்த அளவிற்கு பற்றும்-பாசமும் வைத்து அவனுடைய வருகைக்காக வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர் என்பதையும் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு வெளிப்படுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.  

லூசிஃபரை கடவுள் என்று பிரகடப்படுத்தப்படுவதை கீழுள்ள வீடியோ தொகுப்பில் காண்க

இந்த ஷைத்தானிய லூசிஃபரை பற்றி கிருஸ்தவ உலகில் கீழ்க்காணும் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

  1) லூசிஃபர் என்பவன் ஷைத்தான்தான் என்ற கிருஸ்தவர்களின் கருத்து
ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.
2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.
ஆதமும் ஏவாளும் என்று பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.
அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.

முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.

இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.


கடவுளின் சக்தியோடு லூசிபரின் சாத்தானிய சக்தி சண்டையிடுவதுபோல எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
  2)லூசிஃபர் என்பவன் ஷைத்தான் அல்ல என்பதற்கு சில கிருஸ்தவர்கள் கூறும் காரணம்.

விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2 பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன் வேதாகமத்தில் இவ்விடத்திலும் லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத்4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன.

எது எப்படி இருந்தாலும் லூசிஃபர் என்பவன் இறைவன் இல்லை. இறைவனைத் தவிர வேறெதையும் வணங்கக் கூடாது என்பதை வேதம் வழங்கப்பட்ட எந்த சமூகத்தினரும் மறுக்கமாட்டார்கள். மேலும் வணங்கத்தகுதியான ஒரே இறைவனுக்கு இணையாக மற்றொன்றை சிந்திக்க வைப்பது ஷைத்தானுடைய வேளைதான் என்பதும் திண்ணம்.திருமறைக்குர்ஆன் இத்தகைய ஷைத்தான்களையும், அவற்றை வணங்குபவர்களையும் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் செய்துவிட்டது. அத்தகைய வசனங்களில் ஒரு சில...

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! (58:19).

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுப்பதற்காக பொய்த் தெய்வங்களை அவனுக்கு இணையாக்குகின்றனர். நபியே! அவர்களை நோக்கி, ''இவ்வுலகில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் இறுதியாகச் சேருமிடம் நரகம்தான்'' என்று நீர் கூறிவிடும்.
 (14:30)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!. (39:17)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 
(4:120)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? 
(5:91)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை ஏமாற்றிச் சோதனைக்குள்ளாக்க வேண்டாம் நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
 (7:27)

ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான் இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். 
(7:30)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், செய்ய நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தவ்பா செய்து தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 
(24:21)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான். 
(35:6)
  
தொடரும் இன்ஷா அல்லாஹ்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.         Download Video (English) : [1]   
ஷைத்தானின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும்.
I L L U M I N A T I     C O N S P I R A C Y    S E C R E T S
முன்னுரை (தொடர்-1)
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4).

இரகசிய சமுதாயம்! இத்தலைப்பு சிலருக்கு அறிமுகமானதாகவும் பலருக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாத புதுமையாகவும் இருக்கலாம். இருப்பினும் இத்தொடர் கட்டுரைகளின் கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதென்றால்,

நபி மூஸா அலை அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறைமார்க்கத்தை நிராகரித்த பிர்அவ்ன், தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப் படுத்தினான். ஷைத்தானுக்கு பட்டுக்கம்பளம் விரித்து, தீயசக்திகளின்தலைவனான ஒற்றைக் கண் தஜ்ஜாலை வரவேற்று தான் அமைத்த பிரமிடுகளுக்குள் பல சின்னங்களையும் அமைத்தான். இறுதியில் இறைவழியை பின்பற்றிய நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றிய நல்லவர்களையும் அழித்திட முயலவே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் சந்ததியினரில் ஒருசிலர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அன்று முதல் இன்று வரை Frankish Merovingian bloodline என்ற அவர்களின் இரத்தவழி பந்தங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது (Priory of Sion) என்று சிலர் நம்புகின்றனர். அது மட்டுமல்லாமல் உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்ததாக கிருஸ்தவர்கள் நம்பும் ஏசுவிற்கும் மேரிமெக்டலின் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்ததாகவும், சிலுவையில் ஏசு மரணிக்கும் போது மேரிமெக்டலின் கருவுற்றிருந்தாள் என்றும், அவளின் குழந்தைவழியாக ஏசுவின் இரத்தபந்தமும் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது என்றும் நம்புகின்றனர். (இந்த அடிமுட்டாள்தனத்தை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக மறுக்கிறோம் என்பது தனிவிஷயம்).

இவ்விரு இரத்த பந்தங்களின் கலப்பில் பிறக்கும் ஒரு அரசன் இவ்வுலகைக் கட்டி ஆள்வான், அவனுடைய ஆட்சி (ஃபிர்அவ்ன் எந்த சக்தியை முன்னிலைப்பத்தினானோ அந்த தீய சக்தியான) அந்தி கிருஸ்து என்னும் தஜ்ஜாலுக்கு வழிகோலுவதாக அமையும் என்று ஒரு கூட்டம் திடமாக நம்புகிறது.

அவர்கள்தாம் இன்றைய நூற்றாண்டில் உலகை ஆளும் ஐரோப்பிய வல்லரசுகள். உலகப்பொருளாதாரம், ஊடகம், இராணுவம் நீதித்துறை, அறிவியல் ஆய்வு என்று இவ்வுலகையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடத் துடிக்கின்றனர். இவர்கள் யூத கிருஸ்தவர்களாக இருப்பினும், யூத கிருஸ்தவ மதங்களுக்கு மாறுசெய்து லூசிஃபர் என்ற அசத்திய ஆவியை அந்தரங்க கடவுளாக வணங்குகின்றனர். அந்த லூசிஃபரின் ஆட்சியை இவ்வுலகில் அமைப்பதே இவர்களின் முக்கியக் குறிக்கோள். 


இவர்களின் நிலை ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்;. இவர்களைப் போலவே அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர். அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன். 
(8:52)

என்ன ஆச்சரியமாக உள்ளதா? இத்தொடரை முழுவதுமாக படிப்பது மட்டுமல்லாது இத்தொடர் கட்டுரைகள் மூலம் நாம் வெளியிட இருக்கும் வீடியோ பதிவுகளையும் தவறாது பாருங்கள்.

(Note : The cult and preachings of so called Hashshashin movement as given by the below video clip is NOT related to any of the true Islamic principles. Readers are advised to evaluate further.)


அன்பின் சகோதர சகோதரிகளே இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடுவதின் நோக்கம்,
1.நவீன ஷைத்தானிய தாவூத்திய சத்திகளை முஸ்லிம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவதும்,
2.முஸ்லிம்கள் தங்களை சுற்றி பின்னப்பட்டுள்ள ஜாஹிலிய்யா என்னும் மடமையை அறிந்து அதிலிருந்துஅவர்களை விடபட வைப்பதும்,
3. 21ம் நூற்றாண்டின் அசுர வளர்ச்சியாகக் காட்டப்படும் இஸ்லாத்திற்கெதிரான சதிவளைகளைப் பற்றி விழிப்படையச் செய்வதுமாகும்.


இன்டெர்நெட் என்னும் இவ்வுலகலாவிய வளைதளத்தில் வெளியாகும் தகவல்களெல்லாம் உண்மை என்று நம்பும் மக்கள் நம்மிடையே அதிகமதிகம் உள்ளனர். அத்தகைய நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம். அதாவது இணையதளங்களில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் சந்தேகமாக எதை எண்ணுகிறீர்களோ அதை முடிந்த வரை விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் படிக்கும் தகவல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக இருப்பின் அதை நீங்கள் அலட்சியம் செய்வது மட்டுமல்லாது கட்டாயமாக எவரிடத்திலும் அவைகளை அறிமுகப்படுத்தாதீர்கள். உங்களைவிட அதிகம் கற்றறிந்தவர்களிடம் நீங்கள் பெற்ற தகவலின் உண்மை நிலையை பற்றி அவசியம் விளக்கம் கேளுங்கள்.

ஏனெனில் நாம் 
Illuminati conspiracy secrets  என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடவேண்டும் என்று எண்ணிய நேரத்தில், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், வீடியோ பதிவுகளையும் நாம் பார்வையிட நேர்ந்தது – அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய ஆக்கங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாவற்றை முஸ்லிம் அல்லாத நண்பர்களே வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட அத்தகைய வீடியோக்களில் கூட இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. மேலும் அத்தகைய வீடியோ தொகுப்புகளில்

ஏசுவை பின்பற்றுங்கள், அவர் விரைவில் திரும்பி வருகிறார், ஷைத்தானிய சக்தியை பின்பற்றாதீர்கள் என்று கூறிக்கொண்டே ஏசுபிரானின் உண்மையான இறைக் கோட்பாடு திரித்துக் கூறப்பட்டிருந்தது.

மனதை மயக்கும் பாப் இசைகளுடன் பதிவு செய்யப்பட்டிருந்த பல வீடியோ பதிவுகளில் பெண்களின் நிர்வாண ஓவியங்கள், அரைகுறை ஆடை காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன.

ஷைத்தானுக்கு பூஜை செய்தல், செய்வினை, ஜோஸியம் போன்ற இஸ்லாம் தடைசெய்திருக்கும் காரியங்கள்கொஞ்சம் தூக்கலாக காட்டப்பட்டிருந்தது, மேலும் ஷைத்தானை புகழ்ந்து பல சித்திரங்கள்கூட வரையபட்டுள்ளன.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் இரகசிய சமுதாயம் என்றும் நம்முடைய தொடர் கட்டுரைகளின் தலைப்பிற்கு தொடர்புடைய பதிவுகளை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். மேற்கூறிய விஷயங்களில் நம்முடைய சக்திக்கு உட்பட்டு நாம் கவனமாகவே இருந்திருக்கிறோம். பதிப்புரிமை பெற்ற சில வீடியோக்களை நாம் எந்தவிட மாறுதலும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம். மனிதர்கள் என்ற அடிப்படியில் எங்களிடம் கவனக்குறைவுகள் மற்றும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நாம் வெளியிடுபவற்றில் சரியானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் தவறை சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறோம் என்று கூறி இத்தலைப்பிற்குள் நுழைவோம்...


        http://www.ottrumai.net                                         தொடரும் இன்ஷா அல்லாஹ்....

Tuesday, July 19, 2011

அமீருக்கு கட்டுபடுதலும் உமரளியின் உளறலும்

அமீருக்கு கட்டுபடுதலும் உமரளியின் உளறலும்

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

கிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.
இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு  துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )

கப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.

முஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

முடிவுரை
வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்!
நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)


அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது

‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!