Pages

Friday, July 22, 2011

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.         Download Video (English) : [1]   
ஷைத்தானின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும்.
I L L U M I N A T I     C O N S P I R A C Y    S E C R E T S
முன்னுரை (தொடர்-1)
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4).

இரகசிய சமுதாயம்! இத்தலைப்பு சிலருக்கு அறிமுகமானதாகவும் பலருக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாத புதுமையாகவும் இருக்கலாம். இருப்பினும் இத்தொடர் கட்டுரைகளின் கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதென்றால்,

நபி மூஸா அலை அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறைமார்க்கத்தை நிராகரித்த பிர்அவ்ன், தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப் படுத்தினான். ஷைத்தானுக்கு பட்டுக்கம்பளம் விரித்து, தீயசக்திகளின்தலைவனான ஒற்றைக் கண் தஜ்ஜாலை வரவேற்று தான் அமைத்த பிரமிடுகளுக்குள் பல சின்னங்களையும் அமைத்தான். இறுதியில் இறைவழியை பின்பற்றிய நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றிய நல்லவர்களையும் அழித்திட முயலவே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் சந்ததியினரில் ஒருசிலர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அன்று முதல் இன்று வரை Frankish Merovingian bloodline என்ற அவர்களின் இரத்தவழி பந்தங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது (Priory of Sionஎன்று சிலர் நம்புகின்றனர். அது மட்டுமல்லாமல் உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்ததாக கிருஸ்தவர்கள் நம்பும் ஏசுவிற்கும் மேரிமெக்டலின் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்ததாகவும், சிலுவையில் ஏசு மரணிக்கும் போது மேரிமெக்டலின் கருவுற்றிருந்தாள் என்றும், அவளின் குழந்தைவழியாக ஏசுவின் இரத்தபந்தமும் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது என்றும் நம்புகின்றனர். (இந்த அடிமுட்டாள்தனத்தை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக மறுக்கிறோம் என்பது தனிவிஷயம்).

இவ்விரு இரத்த பந்தங்களின் கலப்பில் பிறக்கும் ஒரு அரசன் இவ்வுலகைக் கட்டி ஆள்வான், அவனுடைய ஆட்சி (ஃபிர்அவ்ன் எந்த சக்தியை முன்னிலைப்பத்தினானோ அந்த தீய சக்தியான) அந்தி கிருஸ்து என்னும் தஜ்ஜாலுக்கு வழிகோலுவதாக அமையும் என்று ஒரு கூட்டம் திடமாக நம்புகிறது.

அவர்கள்தாம் இன்றைய நூற்றாண்டில் உலகை ஆளும் ஐரோப்பிய வல்லரசுகள். உலகப்பொருளாதாரம், ஊடகம், இராணுவம் நீதித்துறை, அறிவியல் ஆய்வு என்று இவ்வுலகையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடத் துடிக்கின்றனர். இவர்கள் யூத கிருஸ்தவர்களாக இருப்பினும், யூத கிருஸ்தவ மதங்களுக்கு மாறுசெய்து லூசிஃபர் என்ற அசத்திய ஆவியை அந்தரங்க கடவுளாக வணங்குகின்றனர். அந்த லூசிஃபரின் ஆட்சியை இவ்வுலகில் அமைப்பதே இவர்களின் முக்கியக் குறிக்கோள். 


இவர்களின் நிலை ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்;. இவர்களைப் போலவே அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர். அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன். 
(8:52)

என்ன ஆச்சரியமாக உள்ளதா? இத்தொடரை முழுவதுமாக படிப்பது மட்டுமல்லாது இத்தொடர் கட்டுரைகள் மூலம் நாம் வெளியிட இருக்கும் வீடியோ பதிவுகளையும் தவறாது பாருங்கள்.

(Note : The cult and preachings of so called Hashshashin movement as given by the below video clip is NOT related to any of the true Islamic principles. Readers are advised to evaluate further.)


அன்பின் சகோதர சகோதரிகளே இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடுவதின் நோக்கம்,
1.நவீன ஷைத்தானிய தாவூத்திய சத்திகளை முஸ்லிம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவதும்,
2.முஸ்லிம்கள் தங்களை சுற்றி பின்னப்பட்டுள்ள ஜாஹிலிய்யா என்னும் மடமையை அறிந்து அதிலிருந்துஅவர்களை விடபட வைப்பதும்,
3. 21ம் நூற்றாண்டின் அசுர வளர்ச்சியாகக் காட்டப்படும் இஸ்லாத்திற்கெதிரான சதிவளைகளைப் பற்றி விழிப்படையச் செய்வதுமாகும்.


இன்டெர்நெட் என்னும் இவ்வுலகலாவிய வளைதளத்தில் வெளியாகும் தகவல்களெல்லாம் உண்மை என்று நம்பும் மக்கள் நம்மிடையே அதிகமதிகம் உள்ளனர். அத்தகைய நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம். அதாவது இணையதளங்களில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் சந்தேகமாக எதை எண்ணுகிறீர்களோ அதை முடிந்த வரை விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் படிக்கும் தகவல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக இருப்பின் அதை நீங்கள் அலட்சியம் செய்வது மட்டுமல்லாது கட்டாயமாக எவரிடத்திலும் அவைகளை அறிமுகப்படுத்தாதீர்கள். உங்களைவிட அதிகம் கற்றறிந்தவர்களிடம் நீங்கள் பெற்ற தகவலின் உண்மை நிலையை பற்றி அவசியம் விளக்கம் கேளுங்கள்.

ஏனெனில் நாம் 
Illuminati conspiracy secrets  என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடவேண்டும் என்று எண்ணிய நேரத்தில், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், வீடியோ பதிவுகளையும் நாம் பார்வையிட நேர்ந்தது – அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய ஆக்கங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாவற்றை முஸ்லிம் அல்லாத நண்பர்களே வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட அத்தகைய வீடியோக்களில் கூட இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. மேலும் அத்தகைய வீடியோ தொகுப்புகளில்

ஏசுவை பின்பற்றுங்கள், அவர் விரைவில் திரும்பி வருகிறார், ஷைத்தானிய சக்தியை பின்பற்றாதீர்கள் என்று கூறிக்கொண்டே ஏசுபிரானின் உண்மையான இறைக் கோட்பாடு திரித்துக் கூறப்பட்டிருந்தது.

மனதை மயக்கும் பாப் இசைகளுடன் பதிவு செய்யப்பட்டிருந்த பல வீடியோ பதிவுகளில் பெண்களின் நிர்வாண ஓவியங்கள், அரைகுறை ஆடை காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன.

ஷைத்தானுக்கு பூஜை செய்தல், செய்வினை, ஜோஸியம் போன்ற இஸ்லாம் தடைசெய்திருக்கும் காரியங்கள்கொஞ்சம் தூக்கலாக காட்டப்பட்டிருந்தது, மேலும் ஷைத்தானை புகழ்ந்து பல சித்திரங்கள்கூட வரையபட்டுள்ளன.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் இரகசிய சமுதாயம் என்றும் நம்முடைய தொடர் கட்டுரைகளின் தலைப்பிற்கு தொடர்புடைய பதிவுகளை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். மேற்கூறிய விஷயங்களில் நம்முடைய சக்திக்கு உட்பட்டு நாம் கவனமாகவே இருந்திருக்கிறோம். பதிப்புரிமை பெற்ற சில வீடியோக்களை நாம் எந்தவிட மாறுதலும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம். மனிதர்கள் என்ற அடிப்படியில் எங்களிடம் கவனக்குறைவுகள் மற்றும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நாம் வெளியிடுபவற்றில் சரியானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் தவறை சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறோம் என்று கூறி இத்தலைப்பிற்குள் நுழைவோம்...


        http://www.ottrumai.net                                         தொடரும் இன்ஷா அல்லாஹ்....

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்