Pages

Tuesday, September 27, 2011

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்
 
ஆவி இருக்கு என நம்பினால் சிர்க்-ல் விழுந்து விடுவீர்கள்(எச்சரிக்கையாக இருக்கவும்)

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும்

ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்!

ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்!

தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!

இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

இயற்கை மரணமும் – மூட நம்பிக்கையும்
உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆவி கொள்கையில் ஒருமித்த கருத்தை முன்மொழிகின்றன அதாவது ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம் இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்! அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்! நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!

தற்கொலையும் – மூட நம்பிக்கையும்
ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம் ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன்  வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்! அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!

ஆவி எப்படி இருக்கும்? – இதோ சில குருட்டு நம்பிக்கைகள்
ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!
ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!
நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!
தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்! இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!
கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!
ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்
ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்!
ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம் பசி தீர பிரியாணி,முட்டைசாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்!
மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!
ஆவி எப்போதும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தில்தான் அதிகம் தங்குமாம்!

ஆவி யாருக்கு பிடிக்கிறது!
சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்! அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது! இதற்கான காரணம் என்ன?

அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும்
குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்! இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள் எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.

சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள் 
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!

திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்! குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை! தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!

வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற  நாடகம் ஆடுவார்கள்!

பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்
ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்!  பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு

ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்! இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)

குறிப்பிட்ட நசாராக்களின் தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!

பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.

வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?
ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?

1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்? தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?

2வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து  ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின.ஹிரோசிமா நகரில் இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74ஆயிரம் பேரும் பலியானார்கள். இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?

ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?

திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?
அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி
சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி
விமான பைலட் ஆவி
மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்? சிந்தித்துப்பாருங்கள் இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும் எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!

இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?
நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்குஎன்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!

கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?

தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!

தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?

1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடு களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!

வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை? தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

பிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள் ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை? குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?

ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???
மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான்.  நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!

இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!

ஆவிகாத்து கருப்பு அடிக்குமா?
இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும் இது அறிவியல் உண்மை ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள். இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா? மூளை குழம்பிப் போகாதா? அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை! இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!


ஆவி பயம் உருவாக்கப்படுகிறது!
பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட்இல்லாத பேய் சினிமா வருகிறதா? படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்! இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது! குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?

அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள் இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறதுசுய பரிசோதனை செய்து பார்ப்போமா!

இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள் அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள் கேமிராவின் அசைவும்,பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒருசில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!

திடீர் மரண புள்ளிவிபரங்களும் ஆவிகளும்

முடிவுரை
ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள் இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது! ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா? ஆவி என்பது இல்லை? ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!

ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக! 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்