Pages

Sunday, July 3, 2011

ஷீஆக்களின் புரட்சியை அங்கீகரித்த மெளலான மெளதூதி!


ஷீஆக்களின் புரட்சியை அங்கீகரித்த மெளலான மெளதூதி!
_______________________________________________________

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு போன வழிகெட்ட கூட்டங்களில் ஷீஆக்கள்என்போரும் ஒரு சாரார் என்பதை நாம் அனைவர்களும் நன்கறிவோம். பெரியார்களுக்கும் இறைசெய்திகள் வரும் என்று நம்பி ஈமானை இழந்த ஒரு கூட்டமே ஷீஆக்கள் ஆவர். ஷீஆயிஸமென்பது மிகவும் பயங்கரமான ஒரு கொள்கையாகும். இக்கொள்கையை முஹத்திஸீன்கள் புகஹாக்கள் அறிஞர் பெருமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கண்டித்து பற்பல நூற்களை இஸ்லாமிய உலகிற்குத்தந்துள்ளனர்.

முஸ்லிம்களின்
ஈமானை அடியோடு தகர்க்கும் பிழையான அடிப்படைகளை உட்பொதிந்த நூலாகியஅல்காபிஎனும் நூலையே ஷீஆக்கள் வேதவாக்காக போற்றி வருகின்றனர். இன்றும் கூட சத்தியப்பிரச்சாரத்தின் போது யாராவது ஷீஆயிஸத்தைக் கண்டித்தால் அவர்களுக்கு கொலை மிரட்டல்களும் அச்சுருத்தல்களும் இந்த ஷீஆக்களால் வழங்கப்படுவது ஊடகங்களுக்குத் தெரியாமலில்லை.

திருமறைக் குர்ஆனையும்
ஸுன்னாவையும் ஓரங்கட்டி விட்டு ஷீஆயிஸத்தைப் பிரச்சாரம் செய்துவந்த இஸ்லாத்தின் ரகசிய விரோதியே ஈரானைச் சேர்ந்த ஆயதுல்லாஹ் கொமைனிஎன்பவர். இவரால் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி ஷீஆக்களுக்கான புரட்சியே அன்றி அது இஸ்லாத்திற்கான அல்லது முஸ்லிம்களுக்கான புரட்சியோ அல்ல.

கொமைனியின்
பிழையான கொள்கைகளை இஸ்லாமிய உலகிற்கு அம்பலமாக்கிய அறிஞர்களின் மிகவும் முக்கியமான ஒரு அறிஞரே முக்பில் பின் ஹாதி(ரஹிமஹுல்லாஹ்)அவர்கள். கொமைனியின் வழிகேடுகள் பற்றி

الإلحاد الخميني في أرض الحرمينஎன்ற பெயரில் தனியான ஒரு நூலையே எழுதியுள்ளார்க‌ள்.

இஸ்லாத்தையே
விட்டு திசைமாறி புதிய‌ம‌த‌ம் க‌ண்ட‌ இக்கொமைனியின் ஈரானிய‌ப் புர‌ட்சியைஇஸ்லாமிய‌ப் புர‌ட்சிஎன‌ மெள‌லானா மெள‌தூதி கூறியதை எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து வெளிவரும் ம‌ஜ‌ல்ல‌துத் த‌ஃவாஎனும் ச‌ஞ்சிகை 1979ம் ஆண்டு ஓக‌ஸ்ட் மாத‌ம் வெளியான‌ த‌ன‌து இருப‌த்தி ஒன்ப‌தாவ‌து இத‌ழில் பின்வ‌ருமாறு பிர‌சுரித்திருந்த‌து.அவ்வித‌ழின் அர‌பு மூல‌த்தை இங்கு காண‌லாம்.

وثورة الخميني ثورة إسلامية والقائمون عليها هم جماعة إسلامية وشباب تلقوا التربية في الحركات الإسلامية وعلى جميع المسلمين عامة والحركات الإسلامية خاصة أن تؤيد هذه الثورة وتتعاون معها في جميع المجالات


கருத்துச்
சுருக்கம்: கொமைனியின் புர‌ட்சி அது இஸ்லாமிய‌ப் புர‌ட்சியே!அப்புர‌ட்சியை மேற்கொண்ட‌வ‌ர்க‌ள் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பும் ப‌ற்ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளிலிருந்து ப‌யிற்சி பெற்ற‌ இளைஞ‌ர்க‌ளுமே!. இது மெளலான மெளதூதியின் கூற்று ஆகும்.

அன்பார்ந்த‌ ச‌கோத‌ர‌ நெஞ்ச‌ங்க‌ளே!


ச‌ற்று
நிதான‌மாக‌ச் சிந்தியுங்க‌ள். ஷீஆக்க‌ள் என்போர் யார்? இஸ்லாத்திற்கும் ஷீஆயிஸ‌த்திற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? ஷீஆக்க‌ளைப் ப‌ற்றி ஒரு முஸ்லிமின் ந‌ம்பிக்கை எப்ப‌டியான‌ வ‌கிப‌ங்கில் இருக்க‌வேண்டும்? ஒரு முஸ்லிம் அல்குர்ஆனைக் குறைகாணும் கொடிய‌ காபிர்க‌ளோடு கைகோர்க்க‌ முடியுமா? முடியாது என்றால் மெள‌லான‌ மெள‌தூதி எப்ப‌டி கொமைனியின் புர‌ட்சியை அங்கீக‌ரிக்கின்றார்? கொமைனி ஒரு இஸ்லாமிய‌க் கொள்கைவாதியில்லை. ஈமானுக்கு த‌ன‌து எழுத்துக்க‌ளாலும் பேச்சுக்க‌ளாலும் வேட்டுவைத்த‌ இக்கொடிய‌வ‌னின் புர‌ட்சியை அங்கீக‌ரிப்ப‌து இஸ்லாத்தின் அடிப்ப‌டைக்கே மாற்ற‌மில்லையா?

என‌வே அன்பார்ந்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளே!


ஜ‌மாஅத்தே
இஸ்லாமியை நாம் விம‌ர்சிப்ப‌து ஏதோ எடுத்தேன் க‌விழ்த்தேன் என்ப‌து போன்ற‌ல்ல‌. இது மாதிரியான‌ இஸ்லாத்திற்கு மாற்ற‌மான‌ போக்குக‌ளே அவ்விய‌க்க‌த்தை நாம் விம‌ர்சிப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம்.

ஷீஆக்க‌ருத்தில்
வாழ்ந்த‌ இக்கொமைனியை ஒரு முஸ்லிம் இஸ்லாமிய‌வாதியாக‌ ஒருக்கால‌மும் ஏற்றுக்கொள்ள‌ மாட்டான். ஏற்றுக்கொள்ள‌வும் முடியாது. ஆனால் மெளலானா மெள‌தூதியோ கொமைனியின் புர‌ட்சியை இஸ்லாமிய‌ப் புர‌ட்சிஎன‌ வ‌ர்ணிக்கிறார்.

ஜ‌மாஅத்தே இஸ்லாமி ச‌கோத‌ர‌ர்க‌ளே! க‌ண்விழியுங்க‌ள்1!


த‌க்லீத் எனும் க‌ண்மூடிப்பின்ப‌ற்ற‌லைக் கைவிடுங்க‌ள்!


நேர்வ‌ழி காட்ட‌ அல்லாஹ் போதுமான‌வ‌ன்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்