Pages

Sunday, May 8, 2011

“தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை”

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
“தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை”
நபிகளாரை பொய்யனாக்கும் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகா் மவ்தூதி

இன்று சா்வதேச  ரீதியாக இஸ்லாத்தையும் அதன் இறுதித் தூதா் நபிகள் நாயகம் (ஸல்) அவா்களையும் இம்சிக்கும் ஈனத்தனமான போக்குகளும், இஸ்லாத்தின் உயா்வுக்கும் நபிகளாரின் மாண்புக்கும் சேறுபுச முனையும் மிலேச்சத்தனமான திரைமறைவு திட்டங்களும் வெகுவாக அதிகரித்து வருவதனை பரவலாக காணமுடிகிறது. இஸ்லாத்தை தீவிரவாதமாக சித்தரிக்க முனைவதும், நபிகளாரை பயங்கரவாதியாக உருமாற்றி கேலிச்சித்திரம் வரைவதும் இக்குள்ள நரித்திட்டத்தின் வெளிப்பாடுகளே!
இஸ்லாத்தின் எதிரிகள் தான் இக்கைங்கரியத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், இஸ்லாமியப் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களும் இத்தீமைக்கு துணைபோவது தான் விசித்திரமாய் இருக்கிறது. இஸ்லாத்தை துவம்சம் செய்வதனையே குறியாய் கொண்டியங்கும் ஓரு வழிகெட்டப் பிரிவினரே ஷீயாக்கள் என்போர். இறுதித் தூதராய் இருப்பதற்கு மிகவும் தகுதிவாய்ந்தவார் அலீ (ரலி) அவர்கள் தான். இந்த முஹம்மது அலிக்குறிய நபித்துவத்தை ஏமாற்றி தன்வசப்படுத்தினார் என்று வீண்பழிகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி அண்ணலாரின் அந்தஸ்தை அசிங்கப்படுத்த எத்தனிக்கும் எட்டப்பர்களே இந்த ஷீயாக்கள்.
நபிகளாரையும் அவரின் அன்புத் துணைவியர்களான ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) உள்ளிட்ட மனைவியர்களையும் அவதூருகளால் அவமானப்படுத்த முனையும் அரக்கர்களே இந்த ஷீயாக்கள். நாணயமிக்க நபிகளாரையும், களங்கமற்ற கற்புக்கரசிகளான நபித் துணைவியர்களையும் தூற்றிவிட்டால் இஸ்லாத்தின் கீர்த்தியை சிதைத்து விடலாம் என்பதே இஷ்ஷீயாக்களின் அந்தரங்க எண்ணம்.
இத்தரங்கெட்ட ஷீயாக்களின் விஷக்கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அடிவருடிகளின் சிந்தனைகளிலும் நபிகளாரை தரக்குறைவாக கருதவைக்கும் நச்சுச் சிந்தனைகள் ஊற்றெடுத்து பிரவாகிப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆம்! இஸ்லாமிய ஆட்சியை  நிறுவப்போகிறோம்! வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இஸ்லாமிய மயப்படுத்தப் போகிறோம்! புத்திஜீவித்துவ சமூகமொன்றை உருவாக்கப்போகிறோம்! மார்க்கத்தை கல்லாமையே முதன்மைப் பாவம்! என்ற கோஷங்களை ஏந்திப் பிடித்து சமூகத்தை வழிநடாத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே  ஜமாஅதே இஸ்லாமி.
இதன் ஸ்தாபகத் தலைவரே மௌலானா ஸெய்யித் அபுல் அஃலா மவ்தூதி என்பவராவார். இஸ்லாமிய ஜமாஅத் எனும் போர்வைக்குள் பதுங்கி, நபிகளாரை கொச்சைப்படுத்தும் ஷீயாயிஸ சிந்தனைகளை இச்சமுதாயத்தில் ஆழமாக விதைத்தவர்களுள் இவருக்கு தனியிடமுண்டு என்றால் மிகையாக மாட்டாது. காதியானிகளை எதிர்த்து தூக்கு மேடை ஏறியவரால் ஷீயாயிஸத்தை கண்டித்து ஓர் ஆக்கம் கூட எழுத திராணியற்றுப் போனமை ஒருபக்கமிருக்க, ஷீயாப் புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக வியாக்கியானப்படுத்தியமையே இவரின் ஷீயாயிஸ முகத்தை புரிந்து கொள்ளப் போதுமான சான்றாகும்.
இவரிடம் ஏராளமான கொள்கைக் கோமாளித்தனங்களும் மார்க்கமறியா பாமரத்தன்மையும் வெளிப்பட்ட போதிலும், அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைவது நபிகளாரை நையாண்டி பண்ணும் விதமாய் இவரிடம் வெளிப்பட்டதஜ்ஜாலின் வருகையை மறுக்கும் மடைமைத்தனமாகும்.
இஸ்லாத்தின் பாலகன் முதல் படிப்பறிவற்ற பொது மகன் வரை அனைவராலும் அறியப்பட்ட நம்பிக்கை சார்ந்த அடிப்படை அம்சங்களில் ஒன்றேமறுமையின் அடையாளமாய் நபிகளாரால் முன்னறிவிப்புப் செய்யப்பட்ட தஜ்ஜாலின் வருகையும், ஈஸா (அலை) அவர்களின் கரத்தினால் அவன் வெட்டுண்டு மடிவதுமாகும்’. இறைவனால் அனுப்பப்பட்ட அத்துனை இறைதூதர்களினாலும் உறுதியாய் எதிர்பார்க்கப்பட்டு, தம் சமுதாயத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதி பிரதான செய்திகளில் தஜ்ஜாலின் வருகை குறித்த செய்தியும் ஒன்றாகும்.
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப்பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 3057, 3337)
தஜ்ஜாலின் வருகையை அத்துனை நபிமார்களும் எதிர்பார்த்தே இருந்தனர் என்று கூறும் நபியவர்கள், தன் சமுதாயத்துக்கு ஏற்படும் பெரும் ஈமானியச் சோதனையாக தஜ்ஜாலின் வருகையை ஐயம்திரிபற அழுத்தமாய் அடையாளப்படுத்திக் காட்டுகிறார்கள்.
தொழுகையில் அத்தஹியாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்றாக தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறiவா உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதும் ஒன்றாகும். (புகாரி - 833, 1377, 6368, 6375, 6376)
உலக அழிவின் பெரும் பத்து அடையாளங்களுள் ஒன்றாக நபிகளாரால் பெரிதும் அழுத்திச் சொல்லப்பட்ட தஜ்ஜாலின் வருகையை ஜமாஅதே இஸ்லாமியினரால் இமாம் மவ்தூதி என்றும், நவீனகால இஸ்லாமிய சிந்தனையின் முன்னோடி என்றும் ஏற்றிப் போற்றப்படும் அபுல் அஃலா மவ்தூதி தெளிவாக மறுத்துரைப்பதன் மூலம் மார்க்கம் குறித்த தன் அறியாமையை வௌ்ளிடை மலையாய் வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த நபிமார்களும் யாரை தன் உம்மத்துக்கு எச்சரிக்கை செய்தார்களோ அந்த செய்தியையே மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த நபிமார்களின் நம்பிக்கையையும் குறைகாண முற்பட்டுள்ளார் அறிஞர் (?) மவ்தூதி. இஸ்லாத்தை விட இயக்க வெறித்தனம் உள்ளத்தை ஆட்கொண்டதாலும், நபிகள் (ஸல்) அவர்களை பின்பற்றுவதை விட தம் இயக்கத் தலைவர்களை கண்மூடிப்பின்பற்றும் தக்லீது கலாச்சாரம் கண்களை மறைத்ததாலும், நபிகளாரையே பொய்யனாக்க முயலும் மவ்தூதியின் உளரல்கள் ஜமாஅதே இஸ்லாமியினரின் அறிவுக்கண்களுக்கு ஆய்வுக்கட்டுரையாக தென்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடே மவ்தூதியின் விஷக்கருத்துக்களை வேதவாக்காக ஏற்று தங்கள் இயக்கப்பத்திரிகை சமரசத்தில் அப்படியே வாந்தியெடுத்திருப்பதாகும். இதோ! குப்ரியத்தின் வாடை வீசும் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகாரின் தஜ்ஜாலை மறுக்கும் வார்த்தைகள்:
தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரிஅத்தின் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தொடர்பாக நபி மொழிகளில் கூறப்பட்டுள்ள பல்வேறுபட்ட செய்திகள் நபியவர்களின் எண்ணங்கள் ஆகும். அதனைக் குறித்து நபியவர்களே சந்தேகத்தில் இருந்தார்கள். சில போது தஜ்ஜால் குராசானில் தோன்றுவான் என்று கூறுவார்கள், வேறு சமயம் இஸ்பஹானிலிருந்து இன்னொரு சமயம் ஷாம் மற்றும் ஈராக்கின் மத்திய பகுதியில் இருந்து தோன்றுவான் எனக் கூறுவார்கள். ஒரு முறை ஹிஜ்ரி இரண்டு அல்லது மூன்றில் பிறந்த இப்னு ஸியாத் என்ற யுதச் சிறுவன் தான் தஜ்ஜால் என்று எண்ணிக் கொண்டார்கள். இன்னொரு அறிவிப்பில் ஹிஜ்ரி ஒன்பதில் பலஸ்தீனைச் சேர்ந்த தமீமுத் தாரி என்கிற கிறிஸ்தவத் துறவி இஸ்லாமை ஏற்றுக் கொண்டு நபியவர்களிடம் வந்து: ஒரு முறை அவர் கடலில் பயணம் செய்ததாகவும்,(பெரும்பாலும் ரோமக் கடல் அல்லது அரபிக் கடல்) மக்கள் வசிக்காத ஒரு தீவை அடைந்ததாகவும், அங்கு ஒரு விநோதமான மனிதனுடன் சந்திப்பு ஏற்பட்டதாகவும், அம்மனிதர் தன்னை தஜ்ஜால் என்று கூறிக்கொண்டதாகவும் ஒரு சம்பவத்தைக் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் அச்செய்தியை தவறான நம்பிக்கை எனக்கூறுவதற்கு காரணம் எதுவுமில்லை என நினைத்தார்கள். எனினும் அது பற்றி சந்தேகத்தை தெரிவித்து விட்டார்கள். ஆனால், நான் அவன் கிழக்கிலிருந்து தோன்றுவான் என்று கருதுகிறேன் என்றார்கள். நபியவர்கள் வஹியின் இல்ம் காரணமாக இவற்றைக் கூறவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரிலேயே கூறினார்கள் என்பது முதல் கருத்தில் தானாகவே தெரிகிறது.
தமீம் தாரி அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும், பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்பட வில்லை. அவ்வாறிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா?
நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்த வில்லையா?
(தர்ஜூமானுல் குர்ஆன், பெப்ரவரி - 1946) - (சமரசம் : மார்ச், ஏப்ரல் 1 - 15 -2011)
அன்பின் இஸ்லாமிய நண்பர்களே! ஜமாஅதே இஸ்லாமி மீது ஆய்வறிவின்றி ஆழ்ந்த பக்தி வைத்திருக்கும் ஜமாஅத்தின் முஅய்யித், முஸாயித், முன்தஸிப் ஊழியர்களே! நடுநிலைவாதிகளே! எங்கள் இமாமை மதிக்கின்றோம் என்றபெயரில் நபிகளாரை மிதிக்கும் கயமைத் தனத்தை இதன் பிறகும் செய்யலாமா? இஸ்லாம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை எமக்கு எம் ஜமாஅத் தான் முக்கியம் என்று வாழப் போகிறீர்களா? நிதானமாய் சிந்தியுங்கள்! வாழ்வில் சீர் பெறுங்கள்! சத்தியத்தை சான்றுகளுடன் யார் சொல்கிறார்களோ அவர்களோடு கைகோர்ப்போம்! அசத்தியத்திற்கு ஜால்ரா போடும் வேஷதாரிகளை உலகுக்கு அடையாளப்படுத்துவோம்!


No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்