Pages

Sunday, April 17, 2011

பெயா் குறிப்பிட்டு விமா்சிப்பது தவறா?


குறுக்கு விசாரணை
பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?…உங்கள் சஞ்சிகையில் இடம் பெறும் அதிகமான ஆக்கங்கள் இன்னொருவரை அல்லது இயக்கத்தை குத்திக்காட்டும் விதமாகவும்காயப்படுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. பல பிரபலமான தாஈக்களை தரம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அவர்களால் செய்யப்படும் சேவைகளை மறைத்து சில கருத்து முரண்பாடுகளுக்காய் அவர்களை மிக மோசமாக வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. அதிலும் பெயர் குறிப்பிட்டு விமர்சனங்களை எழுதியிருப்பது ஒரு தரக்குறைவான செயலல்லவாகருத்து முரண்பாடுகள் இருக்கிறது என்பதற்காக யாரையும் காரசாரமாக விமர்சித்து எழுதுவதோ,வழிகேடர்கள் போல் சித்தரிப்பதோ நல்லதோர் விடயமல்லவேபின்த் அப்தில் காதர் – மள்வானை
தர்கா வழிபாடு என்றும்சந்தனக்கூடு என்றும்கொடி மரம் என்றும்தட்டு – தகடு என்றும் ஷிர்க்கில் மூழ்கிப்போயுள்ளவர்களையும்பாங்குக்கு முன் ஸலவாத்துமிஃராஜ் – பராஅத் நோன்புதஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில் சங்கமித்தவர்களையும்வரதட்சணைவட்டிமது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும்ஜின் வசிய்யத்துமந்திரம்தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும்மத்ஹபு மாயையில் சிக்குண்டு சமூகத்தையும்சன்மார்க்கத்தையும் துண்டாடும் போலி உலமாக்களையும்ஆட்சி – அதிகாரம்,சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப் பின் மறைந்து கொண்டு குர்ஆன் – ஸ_ன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்துகுராபிகளுக்கு கூஜா தூக்கும் ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போதுஇப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது கேட்போர் மனதை புண்படுத்துவதோடுதொடர்ந்தும் சத்தியத்தை கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறிமேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும்அதன் தாஈக்களையும்,அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும் தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இதன் ஓர் வெளிப்பாடாகவே மேற்குறித்த விமர்சனமும் அமைந்துள்ளது.இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும்எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஸல்மான் ருஷ்திதஸ்லீமா நஸ்ரின்ஜோர்ஜ் புஸ்டோனி பிளேயர்_ஸ்னி முபாரக்முஅம்மர் கடாபிஅப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள் கடுமையாகவும்காரமாகவும் விமர்சிப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால்யாரை இவர்கள் இலக்கு வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் Pது யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில் இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டதுஎது தடை செய்யப்பட்டதுஎன்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்:
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும் தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும் தவறுகள் சம்பந்தப்பட்டவை.இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காததவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட தவறுகள்பாவங்களைப் பொறுத்த மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டுஎழுத்து மூலமோபேச்சு மூலமோ விமர்சிப்பது கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.
ஆனால்ஒரு தனிமனிதன் விடக்கூடிய தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின்அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும்சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமை.
கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.சகோதரி ஆதங்கப் படும் அளவுக்கு நாம் எதை விமர்சித்தோம்எதற்காக விமர்சித்தோம்உங்கள் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் கருத்து முரண்பாடுகளுக்காகவாஅல்லது அகீதாவுக்கே ஆப்பு வைக்கும் அபத்தங்களுக்காகவா?ஹதீஸை புரியும் இஜ்திஹாதில் ஏற்பட்ட தவறுக்காகவாஹதீஸையே மறுதலிக்கும் மடைமைக்காகவா?
நமது இதழில் யூஸ_புல் கர்ளாவிஅஷ்ஷெய்க் அகார் முஹம்மது(நளீமி)அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்(நளீமி)மவ்லானா மவ்தூதிமவ்லானா ஜகரிய்யா ஸாஹிப்… இவர்கள் போன்ற பலரை நாம் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ்இனிமேலும் விமர்சிப்போம். இவர்கள் குறித்த எமது விமர்சனம் எந்த அடிப்படையில் அமைந்திருந்தது?உதாரணத்திற்குயூஸ_ப் அல் கர்ளாவி கஞ்சா அடித்தார்;, வட்டி வாங்கினார்தனிமையில் சினிமா பார்த்தார் என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தோமாஅல்லது அல்கஹோலை குறைந்தளவில் பருகினால் அது குற்றமல்ல’, ‘சிறிய வட்டி ஹலால்’, ‘பெண்கள் சினிமாவில் நடிப்பது கூடும்’, ‘மீலாது விழா கொண்டாடலாம்’ போன்ற அல்குர்ஆனுக்கும் ஸ_ன்னாவுக்கும் முரணாக இவரால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை அல்குர்ஆன் ஸ_ன்னா அடிப்படையில் தவறு என்று விமர்சித்தோமா?
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால்அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்துதங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போதுஅப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டுஅதற்கு முன் பின் வசனங்களை படித்தார். கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டுஇது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79)என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு,அவர்கள் மக்களுக்குப் போதித்த தாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறிமக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,தவ்ராத்தைக் கொண்டு வந்துஅதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறிஅவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள்யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போதுஇப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறிஅவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறாஒரு தவறை சுட்டிக் காட்டும் போது,தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும்இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும்உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோமறைத்தலோசுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸ_லுல்லாஹ் (80:1-10, 3:128, 66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
இது போல்இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்துஅவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களாஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார்முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறிஅனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணாநாம் எமது பேச்சுகளிலும்எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட,காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனைஅதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போதுதவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
.அல் குர்ஆன்அஸ் ஸ_ன்னா ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்துஅதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள் விமர்சித்தது தவறு என்றால்எங்கள் வார்த்தை கடுமையானது என்றால்இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால்இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும்அதனை அப்படியே ஏற்றுஅவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
உங்கள் வாதப்படி அல்லாஹ் நாய்’ என்றும், கழுதை என்றும், மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸ_க்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால்அதனால் அவர்;கள் புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளைகல்லறை வணக்கத்தைதரீக்காக்களைபித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடுஅல்லாஹ்வும் ரஸ_லும் நளினம் தெரியாமல்மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்