Pages

Monday, July 4, 2011

பாவியாக்கும் பராஅத் இரவு

பாவியாக்கும் பராஅத் இரவு
சூரியன் பொழுதை அடைந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.
தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக? முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்பட்டு ரொட்டி சுட்டு உணவும் பாpமாறப்படும்.
அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!
பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)
ஏன் இந்த சிறப்பு?
அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப் போனால், ‘பராஅத் இரவுஎன்ற சொல் கூட அல்குh;ஆனிலோ, அல்ஹதீஸிலோ குறிப்பிடப்பட வில்லை. அரபு மொழியிலே இரவுஎன்பதற்கு லைலாஎன்பர். ‘கத்ருடைய இரவுஎன்பதை அரபியில் லைலதுல் கத்ர்என்பர். இதே போன்று பராஅத் இரவுஎன்று சொல்வதானால் லைலதுல் பராஅத்என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பக்திப்பரவசத்தோடு, ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளதாக நம்பி, மிம்பர் மேடைகளில் கூட இதற்காக வக்காலத்து வாங்கி கொண்டாடப்படும் பராஅத் இரவு பற்றி மார்க்கத்தின் சொந்தக் காரனான அல்லாஹ்வோ, மார்க்கத்தை போதிக்க வந்த இறை தூதர் (ஸல்) அவர்களோ எதுவும் கூறவில்லை என்பது தான்.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
அல்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)     நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,
ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.
ஐந்தாவது ஆதாரம்
ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார். அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)        நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.              நூல்: முஸ்லிம் 3243
எனவே, இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்

சகோதரர் ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJயின் விவாத அழைப்பு.

சகோதரர் ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJயின் விவாத அழைப்பு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் கடந்த காலங்களில் நமது ஜமாத்தை விமர்சித்தவர்களை பகிரங்க விவாத மேடையில் சந்திப்பதற்கு ஜமாத் அழைப்பு விடுத்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்
அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதம் செய்யத் தயார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள்.
விவாதம் செய்ய வேண்டுமானால் ஜமாத்திற்கு எழுத்து மூலம் தரும்படி நாம்மிடம் கேட்ட சகோதரர்களுக்கு நாம் அறிவித்தோம். அந்த அடிப்படையில் பல நாட்களுக்குப் பின் சகோதரர் ஸஹ்ரான் அவர்கள் நமது ஜமாத்தின் தலைமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.
குறிப்பிட்ட கடிதத்தில் தான் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய கடிதம் கிடைத்தவுடன் நமது ஜமாத் சார்பாக அதற்குறிய பதில் பதிவுத் தபாலில் அவருக்கு அனுப்பப்பட்டது.
சகோதரர் ஸஹ்ரான் அவர்கள் நமக்கு அனுப்பிய கடிதத்தையும், அதற்கு நாம் அனுப்பிய பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.
சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள் நமது கடிதத்திற்கு பதில் தந்து விவாதிப்பதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் அவருடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு இன்ஷா அல்லாஹ் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு அனுப்பிய கடிதம்.










ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்களுக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதம்.

சிலாபம் SLTJகிளை சார்பாக மாணவர் அணி ஆரம்பம்.

சிலாபம் SLTJகிளை சார்பாக மாணவர் அணி ஆரம்பம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சிலபாம் கிளையின் ‘மாணவர் அணி’ துவக்க நிகழ்ச்சி.
ஏகத்துவப் பிரச்சாரத்தை பாடசாலைகள், கல்லூரிகள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத் சார்பாக கிளைகள் வாரியாக மாணவர் அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
சிலாபம் கிளையில் 23 .06 .2011 அன்று மாணவர் அணி ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா’அத்தின் பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.

இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் புதிய பிரிவு ஆரம்பம்.

June 29, 2011
இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைப்பதற்காகவும், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வை வழப்படுத்தவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக தனிப் பிரிவு ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை தங்கள் வாழ்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் பல சகோதரர்கள் அதன் தாத்பரியம் புரியாமல் பலவிதமான கொள்கைகளுக்கும் ஆட்படுவதினாலும், பொருளாதார ரீதியிலும், கல்வி, மற்றும் இன்னும் பல விஷயங்களிலும் அவர்கள் பாதிக்கப் படுவதினாலும். அவர்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்டவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஜமாத் செய்ய உத்தேசித்துள்ள செயல்பாடுகள்.
குர்ஆனை சரியான முறையில் கற்றுக் கொடுத்தல்.
நபியவர்களின் போதனைப் படி வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
அவரவர் தாய் மொழிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் சி.டிக்கள் போன்றவற்றை வழங்குதல்.
இஸ்லாம் கட்டளையிட்டுள்ள காரியங்களை செய்வதற்கான முறைகளை பயிற்றுவிப்பதற்காக ஆண், பெண்களுக்கான தவனை முறையிலான வகுப்புகள் ஆரம்பித்தல்.
கல்வி வழிகாட்டல் மற்றும் கல்வி கற்பதற்கான உதவி வழங்கள்.
சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சிகள்.
இது போன்ற இன்னும் பல செயல்பாடுகளையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் சகோதரர்களுக்காக இலவசமாக செய்வதற்கு ஜமாத் திட்டமிட்டுள்ளது.
இந்த செயல்பாடுகளுக்கு அதிகமான செலவீனங்கள் இருப்பதினால் நல்லெண்ணம் கொண்ட சகோதர, சகோதரிகள் இந்த முயற்சிக்காக உங்கள் தான தருமங்களை அள்ளி வழங்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
வங்கிக் கணக்கு இலக்கம்.
SRI LANK THAWHEED JAMA’ATH (S.L.T.J)
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010105916

Sunday, July 3, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை யார் இந்த இஹ்வானுல் முஸ்லிமீன் ?.................................

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை
யார் இந்த இஹ்வானுல் முஸ்லிமீன் ?.................................

அன்பர்களின் கவனத்திற்கு:

இக்கட்டுரை யூத நஸாறாக்களின் நூற்களைத் தழுவியோ அல்லது இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் வழிகேடு எனக் கூறும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றும் உலமாக்களின் நூற்களை மேற்கோள் காட்டியோ அல்லது நடுநிலையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாககொண்டோ எழுதப்படவில்லை. மாறாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா அவர்களால் எழுதப்பட்ட அவரது சுயச‌ரிதையான  முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா ‘ (பிரச்சாரத்தினதும் பிரச்சாரகனினதும் நாட்குறிப்பு) எனும் நூலை ஆதாரமாகக்கொண்டே எழுதப்பட்டது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.!!!

அறிந்தவை…….

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் உலகளாவிய இயக்கம். முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஜனரஞ்சகமான இயக்கம். முஸ்லிம் சமூகத்தில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தி அதனூடாக இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க பாடுபடும் ஓர் இயக்கம்.  இவ்வியக்கம் எகிப்தில் ஹஸனுல் பன்னா என்பவரால் உருவாக்கப்பட்டதுஎன்பன போன்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் பற்றிய மேலோட்டமான விடயங்களையே எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.

அறியவேண்டியவை……..

எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பவர் யார்அவருடைய வாழ்க்கைப் பின்புலம் என்னஎத்தகைய சூழலில் அவர் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார்? இவ்வியக்கத்தை உருவாக்க வழிநடாத்த  அவர் கையாண்ட வழிமுறைகள் (தந்திரோபாயங்கள்) என்ன? ‘ என்பன போண்ற விடயங்களை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க உலமாக்கள் ஆய்வாளர்கள் அபிமானிகள் உட்பட பலரும் அலட்டிக் கொள்வதுமில்லை; அறிந்துகொள்ள ஆர்வங்காட்டுவதுமில்லை; பக்கசார்பற்ற நடுநிலையான ஆய்வுக்குட்படுத்த முன்வருவதுமில்லை.???

அல்லாஹ்வின் உதவியால் ஒரு சிறு முயற்சி

மேற்படி இடைவெளியை நிரப்பும்  முயற்சியின் ஒரு கட்டமாகவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகரின் வாழ்க்கைப் பின்புலத்தையும் அவர் எவ்வாறு இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஓர் விரைவுப் பார்வை
பெயர்:  ஹஸன் அல் பன்னா
பிறப்பு:
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா என்பவர் எகிப்தின் புஹைறாமாகாணத்தில் உள்ள மஹ்மூதிய்யாஎனும் கிராமத்தில் 1906ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.
ஹஸனுல் பன்னாவின் தந்தை:
இவரது தந்தை அஹ்மத் அப்துர் றஹ்மான் அல் பன்னா  என்பவர் கடிகாரம் திருத்தும் தொழிலை செய்துவந்ததுடன் ஹதீஸ் கலையை கற்ற ஒரு அறிஞராகவும் திகழ்ந்தார்.

முஸ்னத் அஹ்மத்எனும் மாபெரும் ஹதீஸ் கிரந்த்திற்கு இவர் வழங்கிய அல் பத்ஹுர் ரப்பானிஎனும் ஒழுங்கமைப்பு’  நூலும் புலூகுல் அமானிஎனும் விரிவுரை நூலும் இவரின் மகத்தான பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். (அல்லாஹ் அன்னாரின் பணிகளை அங்கீகரித்து என்றென்றும் அருள் புரிவானாக)

ஹஸனுல் பன்னா ஒரு தீவிர ஸூபியாக‌:

சொந்த ஊரான மஹ்மூதியாவில் காணப்பட்ட குர்ஆன் மத்ரஸாவில் இணைந்து அல்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக  அரச பாடசாலையில் இணைந்துகொண்ட ஹஸனுல் பன்னா அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட தரீக்கா அமைப்புகள் சிலவற்றில் சேர்ந்து தன்னை ஒரு ஸூபியாக பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.

இவர்  தனது பாடசாலை நாட்களில் ஸஹ்பான் றஜப் ஆகிய இரு மாதங்கள் நோன்பு நோற்றதையும் தனது நன்பர்கள் சிலருடன் சேர்ந்து வகுப்பறையில் கல்வத்’  (தனிமை) அனுஷ்டித்ததையும்!! அதன் போது மௌனவிரதம்இருந்ததையும் இதனால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்பத்தையும் அவரே தனது சுய சரிதையில் எடுத்தெழுதியிருப்பது வழிகெட்ட ஸூபித்துவத்தினால் ஹஸன் அல் பன்னா அவர்கள் சிறுபிராயத்திலேயே எந்தளவிற்கு தாக்கமடைந்திருந்தார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(பார்க்க முதக்கிறாத்துத் தஹ்வா வ த்தாஇயா 19_ 31)

ஹஸனுல் பன்னா ஓர் ஆசிரியராக‌:

இவ்வாறே தனது ஆரம்பக்கல்வியை பித்அத்துகளிலும் மௌனவிரதம் போண்ற வேற்றுமத வழிபாட்டு முறையிலும் கழித்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது பதி்நான்காம் வயதில் தமன்ஹூர்நகரில் உள்ள முதல் நிலை ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்துகொண்டார்.

மேற்படி பாடசாலையில் சேர்வதற்கு அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும்என்ற தகமை கட்டாயமாக இருந்தபோதும் அல்குர்ஆனின் ஒரு சில பகுதிகளையே (ஜுஸ்உ) மனனம் செய்திருந்த ஹஸன் அல் பன்னாவை அப்பாடசாலை அதிபர் பஸீர் தஸூகி மூஸாஅவர்கள் ஓர் வாய்மொழிப் பரீட்சை மூலமாகவும் மற்றொரு எழுத்துப் ப்ரீட்சை மூலமாகவும் பரிசோதித்து இரு வருட கற்கை நெறிக்காக அப்பாடசாலையில் சேர்த்துக் கொண்டார்.

ஹஸனுல் பன்னா ஓர் தீட்சை பெற்ற முரீதாக:

இக்காலப்பகுதியியே ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்வில் முக்கிய காலகட்டமாகும். இக்காலப்பகுதியலிலேயே வழிகெட்ட ஷாதுலிய்யா தரீக்காவின் உட்பிரிவுகளில் ஒன்றான ஹஸ்ஸாபிய்யா தரீக்காவின் முக்கிய பிரமுகர்களான ஷேக் ஷிப்லி முஹம்மத் அபூ ஷவ்ஷாஇ ஷேக் ஸெய்யித் உஸ்மான் அப்துல் முஹ்தால் போன்றோரின் நட்பும் அத‌னூடாக தரீக்காவின் த‌லைவர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிமுகமும் ஹஸனுல் பன்னாவிற்கு ஏற்பட்டது.

இவர்களோடு இணைந்து தமன்ஹூர்நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுவரை கால்நடையாகச் சென்று ஔலியாக்களின் சமாதிகளை!!! தரிசிக்கும் செயல்களிலும் ஹஸனுல் பன்னா அவர்கள் ஈடுபட்டார்கள்.

மேற்படி சூழலில்தான் ஹஸனுல் பன்னா அவர்கள் தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களிடம் பைஅத்’ ( ‘எச்சந்த‌ர்ப்பத்திலும் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என்ற உறுதி மொழி)  பெற்றுக் கொண்டு  தரீக்காவில் இணைந்து அல்ஜம்இய்யதுல் ஹஸ்ஸாபியா லில் பிர்ஹஸ்ஸாபியா நலன்புரிச் சங்கம் எனும் சங்கத்தை ஸ்தாபித்து மிகக் கடுமையாக உழைத்து அச்சங்கத்தின் செயலாளர் பதவியையும் அடைந்து கொண்டார்கள்.

  ‘பைஅத்ஒரு சிறு விளக்கம்:

இவ்விடத்தில் இஸ்லாத்தின் பார்வையில் பைஅத்என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இரு வகையான பைஅத்க‌ளையே அனுமதித்து ஆர்வமூட்டி வலியுறுத்துகின்றன.

1. அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதாக அல்லாஹ்விடம் பைஅத்செய்வது.

2.அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் இஸ்லாமிய ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக அவரிடம் பைஅத்செய்வது.

மேற்படி முதலாவது வகையான அல்லாஹ்விடம் செய்யவேண்டிய பைஅத்தை ‘(நபியே) உம்மிடம் பைஅத்செய்பவர்கள் அல்லாஹ்விடம் பைஅத்செய்கிறார்கள்’ (48:10) எனும் அல்குர் ஆன் வசனத்திற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் செய்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்பு இவ்வகை பைஅத்தை வேறு யாரிடமும் செய்துகொள்ளக்கூடாது.

இரண்டாவது வகையான பைஅத்தை சர்வ அதிகாரங்கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளருக்கு செய்யவேண்டுமே தவிர தரீக்காக்களின் ஷேக்மார்கள் இயக்கத்தலைவர்கள் ஆகியோருக்கு ஒரு போதும் செய்துகொடுக்கக்கூடாது என்பதை மாத்திரம் இவ்விடத்தில் சுருக்கமாக விளங்கிக்கொண்டு எமது கட்டுரையைத் தொடர்வோம்.

ஹஸனுல் பன்னா ஒரு தரீக்காப் பிரச்சாரகராக:

இவ்வாறே ஆரம்ப ஆசிரியர் பயிற்சியை இரு வருடங்களில் பூர்த்தி செய்த ஹஸனுல் பன்னா அவர்கள் பின்பு தாருல் உலூம்கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை தனது இருபத்தியாறாவது வயதில் முழுமையாக முடித்து 1928ம் ஆண்டு வெளியேறினார்கள்.

குறித்த ஆண்டிலேயே எகிப்தின் பிரபலமான இஸ்மாஈலிய்யா’  நகரத்தில் அறபு மொழி ஆசிரியராக நியமனம் பெற்று கடமையாற்ற ஆரம்பித்தார்.

மேற்குறிப்பிட்ட இஸ்மாஈலிய்யாநகரத்திலேயே ஹஸனுல் பன்னாவின் முழுத்திறமையும் வெளிப்பட்டது. அறிவையும் அறிஞர்களையும் மதிக்கும் இஸ்மாஈலியா மக்கள் மத்தியில் அல்குர் ஆனின் சில பகுதிகளையும் தீவானுல் முதனப்பிஹ்உட்பட சில அறபுக் கவித்தொகுப்புகளையும் மனனம் செய்திருந்த ஹஸனுல் பன்னா அவர்கள் தனது உணர்வுபூர்வமான பேச்சினாலும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துக் கொண்டார்கள்.

பள்ளிவாயில்களில் மாத்திரமின்றி மக்கள் மண்றங்கள்இ உணவகங்கள்இ பொது மைதானங்கள்இ தெருமுனைகள் போண்ற இடங்களில் ஹஸனுல் பன்னா அவர்களால் முடுக்கிவிடப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக மக்கள் சாரிசாரியாக ஹஸ்ஸாபிய்யாதரீக்காவில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு மக்கள் ஆதரவு பெருகப்பெருக  வெறுமனே ஒரு தரீக்காவின் நலன்புரிச்சங்கம்என்ற நிலையில் இருந்து சீர்திருத்தம்இ சமூக மாற்றம்இ தீமையை எதிர்த்தல்இ பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுத்தல் போண்ற சமூக நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதன் காரணமாக இஸ்மாஈலிய்யா நகரத்தில் தனது தரீக்காவுக்கென தனியான பள்ளிவாயில் ஒன்றையும் பெண்களுக்கான பிரச்சார நிலையம் (சென்டர்) ஒன்றையும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் அமைத்துக்கொண்டார்.

இவ்வாறே அரசியல் ஆட்சி என்பனவற்றுடன் அனுவளவும் சம்பந்தப்படாமல் முழுக்க முழுக்க ஒரு ஸூபித்துவ அமைப்பாகவே செயற்பட்டு நாடளாவிய ரீதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் பின்புதான்இ ஹஸ்ஸாபிய்யா தரீக்காவுக்குள் தனது கை மேலோங்கியதன் பின்புதான் ஹஸனுல் பன்னா தனது துரோகச் செயலை செயற்படுத்த ஆரம்பித்தார்.

ஹஸனுல் பன்னா குருவை மிஞ்சிய சீடனாக‌:

ஆம் எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என தரீக்காவின் தலைவர் ஷேக் அப்துல் வ‌ஹ்ஹாப் அவர்களுக்கு செய்திருந்த பைஅத்’ (உறுதி மொழி) யை உடைத்துக்கொண்டு தரீக்காவின் பெருமள‌விலான தொண்டர்களை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் தனி இயக்கத்தை 1928ம் ஆண்டில உருவாக்கினார்.!!!‌

மேற்படி பச்சைத்துரோகத்தை ஹஸனுல் பன்னா அவர்களே தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்படும் வரை ஷேக் அப்துல் வஹ்ஹாப் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. எனினும் இஹ்வானுல் முஸ்லிமீன் உருவாக்கப்பட்ட போது அவருக்கு அதில் உடன்பாடு இருக்க‌வில்லை. அது அவரது அபிப்பிராயம்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயம்.!!!?’

பிளவுபட்ட இஹ்வான்கள்:

இவ்வாறு துரோகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் கொல்லப்படும் வரை ஓரணியாக வழிநடாத்திச்செல்ல முடிந்ததா? அல்லது ஒரு கெட்ட செயலுக்கான‌ கூலி அதைப் போண்றதொரு கெட்ட செயலே’ (42:40) எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்பவும் விணை விதைத்தவன் விணை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்எனும் முதுமொழிக்கேற்பவும்   உள்ளிருந்து ஏற்பட்ட துரோகத்தால் தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உள்ளிருந்து ஏற்பட்ட துரோகங்களினாலேயே பல கூறுகளாக பிளவுப்ட்டுப் போனதா? என்பதை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கட்டுரைகளில் தொடந்தும் நோக்குவோம்.

எமது பிரார்த்தனை

எங்கள் இரட்சகனே! எங்களையும் எங்களுக்கு முன்னால் விசுவாசங் கொண்ட சகோதர‌ர்களையும் மன்னிப்பாயாக! இன்னும் விசுவாசங்கொண்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இரட்சகனே! நீயே கிருபை உள்ளவனாகவும் இரக்கம் உள்ளவனாகவும் இருக்கின்றாய்’. அல்குர்ஆன் (59:10)
நன்றி புஆத் அஷ்கர்