Pages

Tuesday, January 24, 2012

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை 
நாஷித் அஹமத்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் குறித்து சகோதரர் நாஷித் அஹமத் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதை நன்றியுடன் இங்கு இடுகையிடுகின்றோம்.
 

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.

 மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். 

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.
சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார். 
இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர். 
கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.
 

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.

விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் - இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை  கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?
தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே,  நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர்ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர்ஆன் இறைவேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தல் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு  ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார். 
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில்,  சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள்  எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட்  எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால், 

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்து கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி  வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை  பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன  பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.
பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !!
நன்றி http://adhirwugal.tk/


Wednesday, January 18, 2012

** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.

** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.


எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “



மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.

அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?.



மனிதர்கள் மட்டுமா?

அல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ


55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)


Muslims pray in every place


Images of Muslims praying everywhere


Muslims pray in the streets of France. 


Muslims praying in the streets of France 


Muslims pray in the street in Rome 


வின்வெளியில் வின்கலத்தினுள் தொழுகை.
Dr. Sheikh Muszaphar Shukor Praying in outer space 


MASHA'ALLAH !! Muslim Guy Praying in Public - New York [HQ] 


If You Are Muslim Then Must Watch You'll Cry 


Muslims pray in a Church, USA. 


This is what happened to a Muslim to pray in America .


World's most Beautiful View In Germany 

**********


ஒன்றே குலம். ஒருவனே தேவன்.

பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்–ஓர் அபாய எச்சரிக்கை!.

பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்–ஓர் அபாய எச்சரிக்கை!.


பெண்களின்  மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.

 இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில், மறுபுறம் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன் படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும்.ஆனால் இன்றைய உலகின் எதார்த்தம் அப்படியே தலைகீழாக இருக்கிறது. தன் சக மனிதனுக்கு கேடு விளைப்பதையே தன் தினத் தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தொலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு தெரியாமல் உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஒருவன் கண்காணிக்கிறான் என்றால் உங்களால் சாதாரணமாக இருக்க முடியுமா.. ? .. ம்ம முடியும்.. என்னென்றால் அவன் கண்காணிப்பது உங்களுக்கே தெரியாதே…!!. ஒரு அதிர்ச்சியான உண்மை நீங்கள் பெண்களாய் இருந்தால் இந்த கட்டுரை உங்களை பற்றியது தான் கவனமாக படியுங்கள்.
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. இதை எத்தனை பேர் நல்லவிஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியே மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும் ,தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் இன்ஷாஅல்லாஹ் விரிவாக காண்போம்.

ரகசிய கேமராக்கள் : 
ரகசிய கேமராக்களில் பலவிதங்கள் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எந்த பொருளை நினைகிரீர்களோ அதை எடுத்துகொல்லுங்கள் அதில் கேமராவை பொருத்தி கண்காணிக்க முடியும் ! என்றால் பார்த்துகொல்லுங்களேன்.
பொது இடங்களில் கேமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் பெரும் அளவில் பெருகிவிட்டனர்.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவிகளே தன் சக மாணவிகளின் அந்தரங்க விஷயங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. எனவே விடுதியில் தங்கும் மாணவிகள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும். சமீபத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தன் காதலனுக்கு காண்பிப்பதற்காக விடுதி கழிவறையில் கேமரா பொருத்தி ஒரு பெண் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
அதுமட்டுமின்றி தேன்நிலவு செல்லும் ஜோடிகளை குறிவைத்து ஹோட்டல் ரூம்களில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தும்  கும்பலும் அதிகரித்துள்ளது.ஆதலால் முதலில் வெளி இடங்களில் எங்கு தங்கினாலும் ,நம்மை யாரும் திருட்டுத்தனமாக கண்காணிகிறார்களா என்பதை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும்விடுதியா என்று முடிந்தவரை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மேலும் அதை போல் குற்றால சீசனுக்கு குளிக்க செல்லும் குடும்ப பெண்களை செல்போன், கேமரா மூலமாக படமெடுக்கும் சம்பவங்களுக்கும் நடைபெற்றுவருகிறது.குற்றாலத்தை பொருத்தவரை அது பெண்கள் குளிக்க பாதுகாப்பான இடமல்ல என்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பாதுகாப்பு காரணம் என்று கூறிக்கொண்டு உயர்ந்த இடத்தில் உட்காந்து கொண்டு போலீசாரே குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் கொடுமையும் குற்றாலத்தில் நடக்கிறது. நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப்படுகின்றன அல்லவா?. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப் பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.
கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள். இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர். அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.
பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர். கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம். இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.
இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச்செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால், திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.
இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இத்தகைய ஒரு கொடுஞ்செயல் வெளியில் தெரியவந்து உள்ளது. இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.
நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போல கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?. இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?. எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?. இந்தப் படுபாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ? தெரியவில்லை.
இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?. அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம்.
மருத்துவமனைகள் கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடைமாற்றும் அறைகளும் அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கேமிராவும் ,கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
1) TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை :
TRAIL ROOMல் இருந்துகொண்டு  செல்போன் மூலமாக யாருகாகவாவது CALL செய்து பார்க்கவேண்டும்.உங்கள் அழைப்பு நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த ரூமில் ரகசிய கேமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும்  CALL செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கேமரா இருப்பது உறுதி என்று ELECTRONIC பொறியாளர்கள் கூறுகிறார்கள்.
2) TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை ….
இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.
இவைகளை சுலபமாக கண்டறியும் முறை : 
உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, ஒரு வேலை இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.
                                           வேவுபார்க்கும் கண்ணாடி..!
FACEBOOK புகைப்படங்களும் PHOTOSHOP உக்தியும் :
இது போதாது என்று FACEBOOK-TWITTER-ORKUT போன்ற தளங்களில் பல  பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து இருகிறார்கள் அதை தேடி டவுன்லோட் செய்துகொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போஸ்டரோடு இணைத்து ,அதை இன்டர்நெட்டில் விற்று காசு பார்கிறது மற்றொரு வக்கிர சைகோ கூட்டம்…
பெண்களிடம் facebook போன்ற பொதுத்தளங்களில் PHOTOக்களை UPLOAD செய்ய வேண்டாம் என்றால்.. அதற்க்கு பல பெண்கள் இது எங்கள் உரிமை அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு நாம் சொல்வதை கேட்பதில்லை.. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறிவைத்தே நடந்து வருகிறது.அப்பாவியான பலபெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.
இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப்- பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் 80% இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள் இன்ஷாஅல்லாஹ் இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் படுக்கை அறை,கழிவறை போன்ற இடங்களில் இந்த கயவர்களின் கைவரிசை இருக்கலாம் ஆதலால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…
எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபடமுடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது  என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிக அத்தியாவசிய தேவை, அவசரம் என்றால் மட்டுமே பொது குளியலறை ,கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும்
ரகசிய கேமராக்களை கண்டறியும் கருவி : 

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:
“இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும், உடமையும், மானமும், மரியாதையும் புனிதமானவை என்றார்கள்….”
(புகாரி 67)
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)
புனிதமான நம் மானம், மரியாதையை அல்லாஹ் காப்பாற்றுவானாக..
நன்றி: TIYAWEST