Pages

Tuesday, September 20, 2011

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?
தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!


தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது! 
பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!


தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்
குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.


மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!


பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.


முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!

தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?
மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!
ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்
நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!

தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?
முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.

தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!

தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி
1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!

தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்
இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!

இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை  பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?

இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன
1. முதல் கலிமா
அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்

2. ஐவேளை தொழுகை
உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!

3. இலம் மற்றும் ஜிக்ரு
அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது

4. இக்ரமே முஸ்லிம் –
தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது

5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –
மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!

6. தாபிர்-ஏ- வக்த்
குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்

புதிய தத்துவம் எண் 7
மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது “வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.

சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான  தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!
தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்

இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு)என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!

அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!

தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்
தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.
தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது
வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!
வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!

சர்வதேச தப்லிக் கூட்டம்
முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA-World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.

இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.

தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?
அரசியல் தலைவர்கள்
  • பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
  • பரூக் லெஹரி,
  • நவாஸ் ஷெரீப்,
  • முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
  • பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்

கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்
  • ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
  • ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
  • இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
  • முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
  • சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
  • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
  • மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
  • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
  • பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
  • குல்ஜார் ஆலம்
  • ஆலம்ஜேப் முஜாஹித்
  • தலைசிறந்த எழுத்தாளரான  டாக்டர் நாதிர் அலிகான்

(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).
தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?

மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!

அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)

அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.(குர்ஆன் 2:86)

“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)

நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?
அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)

தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)

அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)
ஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாகஇருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக்கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமானவர்கள் (23-103)

சிந்திக்க சில தேன் துளிகள்
  • இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?

  • இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது  உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?

நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

அழகிய அழைப்பு
தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.
குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!
குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையைஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)
அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!
குறிப்பு
இந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்!
தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல்  அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா? ஏன் இந்த இருதலைப்பட்சம்!
ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்!

Saturday, September 17, 2011

“KILLING OF OSAMA BIN LADEN" - உலகை முட்டாளாக்கிய அமெரிக்கா

உஸாமா இப்னு லாதின் - இந்த போராளியின் மரணம் தொடர்பாக  நாம் பல தகவல்களை வெளியிட்டுள்ளோம். இதோ மேலும் சில அமெரிக்க பித்தலாட்டங்கள்..

And here is how the fake was made!




The mouth and beard from a photo of the real Bin Laden in the mid 80s was photoshopped onto the head of another dead man.
"If at first you don't succeed, lie, lie again!" -- Motto of the White House










There is an illumination source to the upper right of the camera taking this image. You can see the resulting shadows on the jaw line and cheek of the soldier. More to the point, there is clearly a shadow from the soldier's face extending left from his face and falling on the floor and the side of "Osama's" face. Yet there is no trace of a similar shadow from the face of "Osama" above the beard near the right eye. And didn't the White House say "Osama" was shot above the LEFT eye?
Source image for the second fake is found; a clip from the movie "Blackhawk Down."






Flipped left to right





And merged with another fake bin Laden.




Source image for the second fake is found; a clip from the movie "Blackhawk Down."
The people who want to send your children off to die in wars on Israel's enemies are nothing if not persistent. After the above Blackhawk Down failed, they tried once more.






This is a simple morph, again exposed when the original source image was located by a WRH reader.
The real Osama Bin Laden ...





... died of natural causes in December 2001.







News of Bin Laden's Death and Funeral 10 days ago
Islamabad - A prominent official in the Afghan Taliban movement announced yesterday the death of Osama bin Laden, the chief of Al-Qaeda organization, stating that bin Laden suffered serious complications in the lungs and died a natural and quiet death. The official, who asked to remain anonymous, stated to The Observer of Pakistan that he had himself attended the funeral of bin Laden and saw his face prior to burial in Tora Bora 10 days ago. He mentioned that 30 of Al-Qaeda fighters attended the burial as well as members of his family and some friends from the Taleban. In the farewell ceremony to his final rest guns were fired in the air. The official stated that it is difficult to pinpoint the burial location of bin Laden because according to the Wahhabi tradition no mark is left by the grave. He stressed that it is unlikely that the American forces would ever uncover any traces of bin Laden.





The above is from the last known video of the real Bin Laden, just weeks before his death. Note the indications on his skin of the effects from dialysis.
Every Bin Laden shown on TV since then has been a phony to justify wars, TSA, and the loss of your civil protections.








In one notorious case, the FBI simply took the face from a Spanish politician, photoshopped it, and claimed it was Bin Laden.








Finally, a photo used to support the claim that a 24 (or 29; the story kept changing) year old woman was Bin Laden's wife, the Daily Mailpublished the following photo.






Click for larger image

Take a close look at the fingers in the Daily Mail photo of the passport. This is another photoshop creation and a very clumsy one at that. The face seems to be an overlay as well and not part of the actual image of the passport.
Fool me once ...
Common sense will tell you that if you have real evidence of a real event, you do not need, nor would you risk, using a fake piece of evidence, because of the fake is exposed, doubnt is cast on the real evidence. So, if the US Government is showing phony bin Laden photos to the Senater Armed Services Committee, it means all the evidence must be fake.