Pages

Friday, July 22, 2011

இரகசிய சமுதாயம் - தொடர்-8

இரகசிய சமுதாயம் - தொடர்-8
மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றி
இளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (15:99)

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது. இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பைவிட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த இலுமனாட்டி ஷைத்தான்கள் சிந்தித்தனர். இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.



யோகாசனக் கலை மற்றும் உடற்கூறியல் தத்துவங்கள் படி மனித உடலமைப்பை 7 முக்கியப் பகுதிகளாக (சக்கரங்களாக)ப் பிரிக்கலாம். பௌதீகம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட இச்சக்கரங்களில் ஒன்று கெட்டுவிட்டாலும் மற்றொன்று தானாவே கெட்டுவிடும். சக்கரங்கள், மற்றும் யோகாசனக் கலைகள் இந்து புராணங்களோடும், இந்துமத மரபோடும் கலந்துவிட்டபடியால் இவைகளை பற்றிய செய்திகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இம்முக்கிய பகுதிகள் ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் வண்ணம் இஸ்லாமியக் கோட்பாடுகளும் அதன் சட்டதிட்டங்களும் அரண்போல அமைந்திருப்பதை அறியமுடிகிறது. முஸ்லிம்களின் இறைவணக்கக் கடமைகளில் ஒன்றான தினம் 5-வேளை தொழுகையானது மிகப்பெரிய யோகாசனப் பயிற்சி் என்பதை நினைவில் கொள்க. மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் ஷைத்தானின் பிடியில் சிக்கிவிடாமல் தூய்மையான நிலையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வழிவகை செய்யும் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாம் எத்தகைய முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து உண்மையிலேயே வியப்படைகிறோம் - அல்லாஹூஅக்பர். 
இச்சக்கரங்களில் மிக முக்கியமாக 1.புனிதச் சக்கரம் (Sacral Chakra) (மொழிபெயர்ப்பு மாற்றப்பட்டுள்ளது),2.தொப்புள் சக்கரம் (Navel Chakra),  3.இதயச் சக்கரம் (Heart Chakra),  4.தொண்டைச் சக்கரம் (Throat Chakra),  5.கீரிடச் சக்கரம் (Crown Chakra) என 5 சக்கரங்களைச் சொல்லலாம். இதனுடைய விளக்கங்கள் பின்வருமாறு.

புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்பது மனிதனின் மர்மப்பகுதிக்கு சற்று மேல்பகுதியில் அமைந்துள்ளது. இச்சக்கரம் மனிதனின் பாலியல் ஆற்றல் சம்பந்தப்பட்டது. Sacral என்ற ஆங்கிலச்சொல் Sacrum என்ற சொல்லிலிருந்து மறுவியது. Sacrum என்பதற்கு இடுப்பும் முள்ளந்தண்டும் இணையும் (Pelvic) பகுதியைக் குறிக்கும். இச்சக்கரத்தை முறைதவறி பயன்படுத்தினால் சக்திக்குப்பதிலாக அழிவு ஏற்படும். இஸ்லாமிய கோட்பாடு ஹலால், ஹாராம் என்று அனைத்தையும் பிரித்துவிடுகிறது. உதாரணமாக உடலுறவு என்பது திருமணத்திற்குப்பின்னர் கணவன் மனைவியருக்கு இடையே மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது. இது அல்லாத மற்ற வழிகள் அனைத்தும் ஹராம் என்று தடைபோடுகிறது. மேலும் விபச்சாரத்தின் பக்கம்கூட நெருங்காதீர்கள் என்று திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாம் அறிவுருத்தியுள்ள இந்த சட்டங்களை எவர் மீறுகிறாரோ அவரின் புனிதச்சக்கரம் கெட்டு அழிவின்பால் இட்டுச்செல்லும், பின்னர் எயிட்ஸ் நோய் வந்து அவனையே கொல்லும்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்திற்கு  நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்பது உங்கள் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. அதாவது நீங்கள் நல்ல தூய்மையான, ஆரோக்கியமான, இயற்கை உணவுகளை உட்கொள்ளும் போது அவற்றை ஆற்றலாக, சக்தியாக மாற்றும் கட்டமைப்பு கொண்டது இந்த தொப்புள் சக்கரப்பகுதி. அளவிற்கு அதிமான உணவுகள், அசுத்தமான உணவுகள், கேடுவிளைவிக்கும் உணவுகள் மற்றும் தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளும் போது இந்த தொப்புள் சக்கரம் கெட்டுவிடும். இதை பாதுகாக்கும் வகையில்தான் உடலுக்கு கேடுவிளைவிக்கும் உணவுகளை இஸ்லாம் ஹராம் - தடுக்கப்பட்டது என்கிறது. ஹாலான உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் தெளிவாக கட்டளையிட்டு விட்டார்கள். ஹாராமான உணவால் வளர்ந்த உடம்பை உடையவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் ஒவ்வொருவரும் தானாக உழைத்துச் சாப்பிடவேண்டும், பிறர் உழைப்பிலிருந்து அனுமதியின்றி உண்ணாதீர்கள் என்றெல்லாம் இஸ்லாம் உணவு உட்கொள்ளும் விஷயத்தில் மிகத்தீவிரம் காட்டியுள்ளதைக் காணலாம்.

தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து, முறைப்படி அறுத்தீர்களோ அதைத்தவிர (அதை உண்ணலாம்). அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன - இவையாவும் பெரும் பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை அழித்து விடலாம் என்பதைப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே இசைவானதாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து விட்டால் அது குற்றமாகாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
 (5:3)

"தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1686

இதயச்சக்கரம் (Heart Chakra) என்பது நமது உள்ளத்தைக் குறிக்கும். மனிதனுக்கு எண்ணங்கள் மூளைப்பகுதியிலிருந்து தூண்டப்பட்டாலும் உள்ளம் என்ற உடனேயே நாம் அனைவரும் இதயத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இரக்கம், பணிவு, அமைதி, கருணை, உணர்ச்சி, போன்ற மனிதப் பண்புகளின் உறைவிடமாய் விளங்குவதே இந்த இதயச்சக்கரம். ஒரு மனிதனின் இதயச்சக்கரம் சரியாக இருக்கும் போது அவர் மற்றவர்களிடம் மேற்கூறிய நல்ல பண்புகளோடு நடந்துகொள்வார். இதுவே வளர்ச்சியடைந்து சமூக அமைப்பில் மக்களிடையே நல்லிணக்க சூழலாக மலர்கிறது. இந்த இதயச்சக்கரம் கெட்டுவிடும் போது மக்களிடையே பரஸ்பர உணர்வு கெட்டு சண்டை சச்சரவுகள் மேலோங்கி இறுதியில் அந்த சமூகச்சூழலில் நிம்மதி அழிந்துவிடும். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் மேற்கண்ட நற்பண்புகளை மிகமிக வழியுருத்துவதை திருமறை குர்ஆனில் பரவலாகப் பார்க்கலாம். இஸ்லாம் என்ற சொல்லுக்கே சாந்தி, கட்டுப்படுதல் என்றுதானே பொருள். மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களின் தாயகமாக வாழ்ந்து காட்டி அதையே அனைத்து  முஸ்லிம்களுக்கும் அறிவுருத்தியுள்ளதை கவனத்தில் கொள்க.

”நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது” ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார்கள். எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார். எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுவதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். (புகாரீ, முஸ்லிம்)

தொண்டைச் சக்கரம் (Throat Chakra) என்பது கருத்தாற்றல், மொழி மற்றும் மனிதனை மனிதன் தொடர்பு கொள்வது சம்பந்தமான பகுதி ஆகும். நாம் பேசும் நாக்கு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாக்கினால் வருகின்ற பிரச்சனைகளை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. நாம் பொறுமையை இழக்கும் போது நாவு ஏதேதே பேசிவிடுகிறது. அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பேசினால் நல்லவற்றை பேசுங்கள் அல்லது மௌனமாக இருந்துவிடுங்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். மேலும் திருமறை குர்ஆன் தொண்டைச் சக்கரத்தை பயன்படுத்தும் முறையை கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறது.

காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர அவர்கள் நஷ்டத்திலில்லை.
 (103:1-3)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(நூல்-புகாரி)

அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
 (நூல்-புகாரி)

ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி)

கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்பது மனிதனின் ஞானம் மற்றும் சிந்தனைத் திறனைக் குறிப்பதாகும். மதிநுட்பம், உள்ளளுணர்வு, விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு போன்றவற்றை இந்த கீரீடச்சக்கரம் கட்டுப்படுத்தும். மனிதனின் மூளைதான் இந்த கீரீடச்சக்கரத்தின் இயக்கத்திற்கு முக்கியப் பங்களிக்கிறது. இச்சக்கரத்தை மனிதன் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அவன் 5 அறிவு மிருகமாக மாறிவிடுவான்.

மேற்கூறிய 5 சக்கரங்களின் புனிதத்தை உணர்ந்து அவைகளை நல்ல வகையில் பயன்படுத்தி உங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் முழுமையான மனிதனாக ஆகலாம். இதை திருமூலர் போன்ற பழங்கால தமிழ் சித்தர்கள்கூட கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.   நன்றே நினைமின் நமன் இல்லை
    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.   திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே.   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்.   ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்.   ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

புனிதச் சக்கரம் முதல் கீரீடச்சக்கரம் வரை உள்ள பயன்பாடுகள் அதன் இயக்கம் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த ஷைத்தானிய இலுமனாட்டிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். படைத்த இறைவனால் பாதுகாக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டு இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறிமூலம் அவைகளைக் கையாளும் முறைகளையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள மேற்கூறிய சக்கரங்களின் செயல்பாடுகளை கெடுத்தால் மட்டுமே ஒரு மனிதனை ஷைத்தானிய வழிக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதை ஆராய்ந்து அவைகளின் சக்திகளை ஒவ்வொன்றான திட்டமிட்டு அழிக்கின்றனர். 

முதலாவதாக, புனிதச்சக்கரம் (Sacral Chakra) என்ற உங்கள் மர்ம உருப்புக்களின் இயக்கத்தைக் கெடுத்து உங்களை அழிவின் பக்கம் அழைத்து செல்ல பெண்களை அரைநிர்வானமாக, முழுநிர்வானமாக படமெடுத்து இவ்வுலகம்முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதைக் காணலாம். ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் இதே ரீதியில் வீழ்த்துவதற்கு பலான பாலியல் காட்சிகளில் ஈடுபடும் பெண்களை வெற்றிவாகை சூடிய பெண்ணாகக் காண்பித்து, பல பரிசுகளையும் வழங்கி கௌரவித்து இம்மானங்கெட்ட செயலை மற்ற பெண்களும் செய்யுமாறு தூண்டப்படுவதைப் பார்க்கிறோம். விபச்சாரத்தின் பக்கம் இழுத்துச் செல்லும் இத்தரங்கெட்ட செயலை பரப்புவதற்காக வேண்டி ஆயிரக்கணக்கான இணையதளங்கள், 24 மணிநேரத் தொலைக்காட்சிகள், இணைய தொலைபேசிகள் என்று அனைத்துவித ஊடகமும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதையும் கண்கூடாகக் காண்கிறோம். இத்தீய செயல்களால் உலக அளவில் ஏற்பட்டுள்ள அசிங்கங்களையும், கொடுமைகளையும், பல குடும்பங்களுக்குள் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களையும் சொல்லி மாளாது, அவைகளை எழுதவே கூசுகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் இலுமனாட்டிகள் என்று சொல்லப்படும் ஷைத்தானை வணங்கும் கூட்டத்தின் சூழ்ச்சி இருப்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும்?

எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே!  பாலியல், செக்ஸ், பாப்இசைகள், டிஸ்கோ நடனங்கள் என்று உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை வீழ்த்தி நாசப்படுகுழியில் தள்ளும் இலுமனாட்டிகளின் மேற்கண்ட சூழ்ச்சிகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். சிற்றின்பத்திற்காக வீழ்ந்து பேரின்பத்தை இழந்துவிடாதீர்கள் என்று கனத்த உள்ளத்தோடு அறிவுருத்துகிறோம்.

தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை சேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? (16:45)

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் இவ்வாறே சூழ்ச்சிகள் செய்தார்கள் அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான். ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
 (16:26)

இரண்டாவதாக, தொப்புள் சக்கரம் (Navel Chakra) என்ற நமது வயிற்றுப் பதியை கெடுப்பதற்காக நாம் உண்ணும் உணவில் இயற்கைத்தன்மையை அழித்து சுவைபோல தோன்றும் மெக்டொனால்ட்ஸ், KFC போன்ற செயற்கை உணவுகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றனர். இவ்வகை உணவுகளில் இஸ்லாம் தடைசெய்தவைகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் ஒருவர் பருமந்தனம் (Obesity) நோய்களால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மெக்டொனால்ட்ஸ், KFC முதல் பெப்ஸி, கொக்காகோலா வரையுள்ள இத்தகைய உணவுகளுக்கு அரபு முஸ்லிம் உலகமே அடியாகிவிட்ட நிலையை அங்குள்ளவர்கள் அறிந்தேயிருப்பர். மேற்கண்ட உணவு வகைகள் அமெரிக்க பிரிட்டானிய தயாரிப்புகளாக இருப்பினும் அரபுநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கின்ற விற்பனையில்தான் அந்நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்து கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை.

எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! பாஸ்புட், பேஸன்புட் என்ற பெயரால் உங்கள் உடலுக்கு சேரவேண்டிய சக்தியை இழந்துவிடாதீர்கள். உங்கள் தாய்மார்கள், உங்கள் மனைவியர், வீட்டில் தாயாரிக்கும் உணவு இத்தகைய கலப்பின உணவுகளை விட பலமடங்கு தரமானது, சக்திமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகைகளுக்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள். ஒரு பலம்குன்றிய முஃமினைவிட பலமாக முஃமின் சிறந்தவனாவான் என்ற நபிமொழிக்கொப்ப இந்த தஜ்ஜாலிய, ஷைத்தானியக் கூட்டத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆரோக்கியமும் சக்தியும் உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதயச் சக்கரம் (Heart Chakra) மற்றும் தொண்டைச் சக்கரங்களை (Throat Chakra) செயலிழக்கச்செய்வதற்கு உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி இரக்கம், பணிவு, அமைதி, கருணை போன்ற நற்குணங்களுக்குப் பதிலாக உங்களிடம் வெறுப்பு, ஆத்திரம், அமைதியின்மை, கோபம் போன்ற தீய குணங்களை வெளிப்படுத்துவதற்கு இந்த இலுமனாட்டிகள் தூண்டுவார்கள். உங்களை நிதானம் இழக்கச்செய்து பின்னர் உங்கள் செயல்களின் மூலமாகவே இஸ்லாத்திற்கு கலங்கத்தை கற்பிக்கத் தூண்டுவார்கள். இதற்கு சிறந்த உதாரணங்களாக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சமீபத்தில் கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டது, ஈராக் அபூகிரைப் சிறையில் முஸ்லிம்களை நிர்வானமாக விட்டு கொடுமைபடுத்தி அப்படங்களை வெளியிட்டு முஸ்லிம் உலகை புண்படுத்தியது, மேலும் ஈராக், ஆப்கான், பாலஸ்தீன குழந்தைகளின் பிஞ்சு உடல்களை துப்பாக்கித் தோட்டாக்களால் துளையிட்டு கொடூரமாகக் கொலை செய்து காட்டியது, இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று தொடர்ந்து மீடியாக்களில் மீண்டும் மீண்டும் பொய்யுரைப்பது என்று இந்த இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.

எனவே முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே! உங்கள் மனதை பாதிப்படையச் செய்யும் இத்தகைய சூழ்ச்சிகளின் போது நீங்கள் மிகவும் கனவமாகவும், அறிவுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டுமே அல்லாமல் உணர்ச்சிகளுக்கு ஆளாகி உணர்ச்சிப்பூர்வமாக நடந்துவிடக் கூடாது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம். ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! முடிவு அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம். ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அதோ அழந்து போன அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன் நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. (27 : 50,51,52)

இறுதியாக உங்கள் கீரிடச் சக்கரம் (Crown Chakra) என்னும் உங்கள் சிந்தனைத்திறனையும், மதிநுட்பத்தையும் திசை திருப்பி இலுமனாட்டிகளின் சதித்திட்டங்களை நீங்கள் உணர்ந்துவிடாமல் இருக்க வேற்றுகிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் (Aliens) என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை வைத்து சொல்ல வைப்பார்கள். மேலும் ஹார்ப் தொழிநுட்பம் (HAARP), ஸ்டார் வார்(Star War), பறக்கும் மர்மத்தட்டு என்றெல்லாம் கூறி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். பின்னர் அவர்கள் அறிவியல் ஆய்வு என்று எதையெல்லாம் கூறுகிறார்களோ அவைகள் அனைத்தையும் உண்மை என்று உங்களை நம்பவைப்பார்கள். இறுதியில் மனித உயிரின் மூலத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதுபோன்ற அல்லாஹ்விற்கு இணைவைத்தலை மறைமுகமாக திணித்து அவைகளையும் நம்பச் செய்வார்கள்.

எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே! இப்பூமியைத்தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானே தவிர வேற்றுகிரகங்களில் எந்தமனிதனும் சுயமாக வாழ இயலாது என்பதையும், அல்லாஹ்வைத்தவிர வேறு எவனாலும் உயிரை படைக்க இயலாது என்ற குர்ஆன் கூறும் உண்மையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இலுமனாட்டிகளின் பொய்ப் பிரச்சாரங்களையும், சூழ்ச்சிகளையும் தெளிவாக அடையாளம் காணவேண்டுமென்றால் அவர்களின் மாயாஜால உலகமாயைகளை விட்டும் விடுபட்ட முழுமனிதனாக நீங்கள் மாறவேண்டும். அவ்வாறு மாறுவதற்கு மேற்கூறிய சக்கரங்களான புனிதச் சக்கரம் (Sacral Chakra), தொப்புள் சக்கரம் (Navel Chakra) இதயச் சக்கரம் (Heart Chakra), தொண்டைச் சக்கரம் (Throat Chakra), கீரிடச் சக்கரம் (Crown Chakra) ஆகிய அனைத்தையும் இஸ்லாம் கூறுகின்ற அடைப்படையில் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகமிக 
அவசியமாகும்.
முஸ்லிம்களே! கிபி 1600 வரை ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தபோது இவ்வுலகிற்கே அறிவொளியைப் பாய்ச்சி ஆரோக்கியமான அறிவியில் ஆராய்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் நமது அப்பன் பாட்டன்களான முஸ்லிம் அறிஞர்களே என்பதை நினைவில் வையுங்கள். அத்தகைய எழுச்சிமிகு காலத்தை இவ்வுலகில் மீண்டும் ஏற்படுத்திட இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இலுமனாட்டிகளின் ஜாஹிலிய்யாக்களை தகர்த்தெரியும் இஸ்லாமிய அறிஞராக, முஸ்லிம் விஞ்ஞானியாக மாறவேண்டும். இறைமார்க்கமாம் இஸ்லாத்தை எட்டுத்திக்கும் பரவச்செய்ய இஸ்லாமிய இளைஞர்கள் முன்வரவேண்டும். அத்தகைய இஸ்லாமிய பேரெழுச்சி இவ்வுலகில் விரைவில் ஏற்படஇருகரமேந்தி இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். (25:73).

பின்குறிப்பு:- இலுமனாட்டிகள் பற்றிய இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடும் நோக்கத்தை முதல் தொடரிலேயே விளக்கிவிட்டோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி சக்கரங்கள் பற்றிய கருத்துக்கள், ஆய்வுகள் அனைத்தும் இந்து மத போதனைகளை ஒட்டியே போதிக்கப்படுவதால் நாம் மேலோட்டமாக அதைத் தெரிவித்திருக்கிறோம். இக்கட்டுரையிலிருந்து இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை மட்டும் நினைவில் வைக்குமாறு ஒற்றுமை வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

 



தொடரும் இன்ஷா அல்லாஹ்...

இரகசிய சமுதாயம் - தொடர்-7


இரகசிய சமுதாயம் - தொடர்-7
த டாவின்ஸி கோட் - நொருங்கியக் கனவுகள்
ARAGO   -   BLOOD LINE  -   ROSE LINE
Hides beneath the rose.  The Holy Grail 'neath ancient Rosline waits,
Adorned in the masters' loving art, she lies.  The Blade and Chalice guarding o'er her gates,
S  H  E      R  E  S  T  S     A  T      L  A  S  T      B  E  N  E  A  T  H      S  T  A  R  R  Y      S  K  I  E  S
கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ்ன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் த டாவின்சி கோட். 44மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த புத்தகம் 80மில்லின் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிருஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டும் என்று புனைந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயராலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர்.  கிருஸ்தவக் கோட்பாட்டை தரைமட்டமாக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் சங்கைக்குரிய இறைதூதர் நபி ஈஸா (அலை) அவர்களை த டாவின்சி கோட் திரைப்படம் அவமரியாதை செய்திருப்பதை அறிந்து உலக முஸ்லிம்கள் தங்களின் கண்டனக்குரலை ஆழமாக பதிவுசெய்தனர்.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழக்கம்போல இத்திரைப்படம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் உலகமக்களும் தங்கள் சொந்த வேலைப்பளுவில் டாவின்சி கோடை தற்போது மறந்துவிட்டனர்.
இப்படத்தின் தாயாரிப்பாளர்கள், இயக்குளர்கள் என்று (Ron Howard – Director, Brian Grazer – Producer, John Calley – Producer, Dan Brown - Executive Producer, Book Author, Todd Hallowell - Executive Producer, Second) அனைவரும் இல்லுமனாட்டிகளின் கைப்பாவையாக செயல்பட்டு அவர்களது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றினர். நமது இக்கட்டுரையின் நோக்கம் டாவின்சி கோட் படத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள இலுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் திட்டங்களை வெளிக்கொண்டு வருவதே! ஹாலிவுட் திரைப்படம் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் இந்த இல்லுமனாட்டி கும்பல்கள் எப்படியெல்லாம் தங்கள் சூழ்ச்சிகளை நிரைவேற்றுகின்றனர் என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை படித்தால் புரியும்.

இந்த டாவின்சி கோட் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் 3 முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகள் பின்வருமாறு

1.இயேசுவிற்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமானது. அந்த திருமணத்தின் மூலம் இயேசுவிற்கு குழந்தையும் பிறந்தது. உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியொ நார்டோ டாவின்ஸி, தான் வரைந்த இயேசுவின் இறுதி இராப்போசனம் என்ற ஓவியத்தின் மூலம் இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர்தான்.

2.மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம். மேரிமெக்டலின் மூலம் தொடர்ந்த அந்த இரத்தபந்தத்தில் பிறந்த இறுதி நபர் ஃபிரான்ச் நாட்டில் உள்ளார். எனவே இயேசுவின் சந்ததி என்னும் சங்கிலித்தொடரும், இது சம்பந்தமான உண்மைகளும் கடந்த 2000 வருடங்களாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3.இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் ஷைத்தானை வணங்குபோன்ற காட்சிகள், எகிப்த்திய பரமிடுகளிலுள்ள ஷைத்தானிய சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்தனர்.

... அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் இறை நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

யார் இவ்வேத உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)


இதில் முதல் விஷயத்திற்கு வருவோம். இயேசுவிற்கு திருமணம் முடிந்தது என்ற விபரத்தை இயேசு சொன்னாரா? அல்லது மேரி மெக்டலினாவது சொன்னாரா? இத்தகவலைக் கூறும் இயேசுவின் உண்மையான சுவிசேஷம் எங்கே?அல்லது இயேசுவிற்குப் பிறகு இயற்றப்பட்ட பைபிளிலாவது இச்சம்பவம் பற்றி குறிப்பேதும் உண்டா? என்றெல்லாம் பலர் கேட்டு முடித்துவிட்டனர். இதில் நாம் சொல்வது என்ன வென்றால், அணுவின் திரணை உலகிற்குச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளையே இந்த இலுமனாட்டிகள் தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது, இந்த லியொ நார்டோ டாவின்ஸி என்ற ஓவியர் எம்மாத்திரம்? ஒருவேளை இயேசுவின் இறுதி இராப்போசனப் படத்தில் மேரிமெக்டலின் உருவத்தை மறைமுகமாக வரைந்துவிடு இல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவோம் என்று அவரை இக்கொலைகார இல்லுமனாட்டிகள் மிரட்டியிருப்பார்கள். அல்லது லியொ நார்டோ டாவின்ஸியே இந்த ஷைத்தானை வணங்கும் லூசிஃபர் கூட்டத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். டாவின்சி கோட் மூலம் இந்த உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர் என்ற பொய்யை இவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்களை வெளியிட்டுக் காட்டினாலும் உலகமக்கள் நம்பத் தயாரில்லை என்பதை இவர்களே விளங்கிக் கொண்டார்கள். இயேசுவைக் கடவுளாகக் கருதும் கிருஸ்தவர்களே இக்கூற்றை நிராகரித்துவிட்டபடியால் டாவின்ஸி கோட் திரைப்படம் மூலம் இவர்கள் பரப்பப நினைத்த இவர்களின் முதற்கனவு தவிடுபொடியானது.

நபியே! இன்னும், சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (17:81)
இரண்டாவதாக மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்று இத்திரைப்படம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்த வரையில் மிரோவிஞ்ஜியன் வம்சவழி இயேசுவிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வம்சவழியாகவோ அல்லது இரண்டாம் ரம்ஈஸஸ் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் சந்ததியாகவோ இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மிரோவிஞ்ஜியன் இரத்த பந்தம் என்பது ஏசுவின் வம்சவழியினர் என்றால் மிரோவிஞ்ஜியன் இனம் சம்பந்தப்பட்ட ஆவனங்களில் இயேசுவுடைய கொள்கை கோட்பாடுகள், அவர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றாவது சித்திரங்கள் இருக்கவேண்டும். ஆனால் மிரோவிஞ்சியன் வம்சவழி ஆவனங்களில் பிரமிடுகளும், ஃபிர்ஆவ்ன் காலத்தில் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகளும், அன்றைய இஸ்ரவேலர்களின் பழக்கத்தில் இருந்த நாணயங்களுமே காட்டப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட உண்மை இறைவேதமாம் திருமறை குர்ஆனின் போதனைபடி சங்கைக்குரிய இறைத்தூதர் இயேசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி தந்தை இல்லாமல் பிறந்தார்களே தவிர எந்த ஆணுடைய இரத்தக்கலப்பினாலும் அவர்கள் உருவாகவில்லை. மேலும் அவர்கள் மேரி மெக்டலினைத் திருமணம் செய்தார்கள் என்ற தகவலை திருமறை குர்ஆனோ, அல்லாஹ்வின் இறதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பதால் முஸ்லிம்களாகிய நாம் இவ்விஷயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் பற்றி இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்தால் இதில் பொதிந்துள்ள பல மர்மங்கள் மேலும் வெளிச்சத்திற்கு வரலாம்.

ஒரு விவாதத்திற்காக நாம் த டாவின்சி கோட் திரைப்படம் சொல்வது போன்றே மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்றே வைத்துக்கொள்வோம், நாம் கேட்பது என்னவென்றால் 2000 ஆண்டுகளாக இயேசுவின் இரத்தபந்தத்தையே பாதுகாக்கத் தெரிந்த மிரோவிஞ்ஜியன் குடும்பத்தினருக்கு, இயேசுவிற்கு கடவுள் வழங்கிய உண்மை சுவிசேஷத்தை பாதுகாக்கத் தெரியாமல் போய்விட்டதா? இயேசுவிற்கு பின்னர் தோன்றிய பவுலும் அவரது வகையறாக்களும் எழுதித்தள்ளிய விஷயங்களை புனித வேதமாக உலக கிருஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயேசுவிற்கு கர்த்தர் நேரடியாக வழங்கிய சுவிசேஷமான இன்ஜீல் வேதத்தை பாதுகாத்து அதை இவ்வுலகிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்?இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது நன்மையைத்தருமா? அல்லது இயேசுவிற்கு பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டதை பின்பற்றுவது நன்மையைத் தருமா? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா?, அல்லது இரத்தபந்தம் புண்ணாக்குபந்தம் என்று கதையளந்து இயேசுவின் கட்டளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவர் எச்சரித்த லூசிஃபர் சாத்தானையே கடவுளாக வணங்குவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா? என்பதை இந்த இல்லுமனாட்டி போலி மிரோவிஞ்ஜியன்கள் சற்று சிந்திப்பார்களாக. இவர்கள் எங்கே இயேசுவின் சுவிசேஷத்தை பாதுகாத்திருப்பார்கள், இயேசுவிற்கு வழங்கப்பட்ட சுவிசேஷத்தில் கலப்படம் செய்து அதை ஒழித்துக்கட்டும் வேளையில் வேண்டுமென்றால் இவர்களின் முன்னோர்கள் இறங்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுவும் சரிதான்.

மக்களே! இயேசு, இரத்தபந்தம், மிரோவிஞ்ஜியன் வம்சம் என்பதெல்லாம் இவர்களின் குறிக்கோளில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். இல்லுமனாட்டிகளைப் பொருத்தவரையில் லூசிஃபர்தான் மம்மி மற்றவைகள் அனைத்தும் டம்மிகளே!. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இல்லுமனாட்டிகளின் அடிவருடிகள் கோடைகால ஆன்மீகச் சடங்கு என்ற பெயரால் லூசிஃபர் ஷைத்தானை வெளிப்படையாகவே வணங்கியதையும், ஷைத்தானுடைய பெயரால் மந்திரங்கள் புரிவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல திரைப்படங்களில் காட்டப்படுவதையும் கீழுள்ள வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்.


இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாப்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பென்சர் ராஜபரம்பரையில் பிறந்த இளவரசி டயானாவை இயேசுவின் இரத்த பந்தத்தில் இறுதியாக தோன்றியவள், மிரோவிஞ்ஜியன் இனத்தில் இயோசுவின் புனித இரத்தத்தை பாதுகாக்கும் புனிதக்கிண்ணம் என்றுதானே டயானாவை இளவரசர் சார்லஸூக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு ஏன் இவர்களாகவே டயானாவின் கதையை முடித்தார்கள்? (பார்க்க). இயேசுவின் இரத்தபந்தம் உலகமுடிவு நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்றல்லவா இவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும். மிரோவிஞ்ஜியன் வம்சம் பல்கிப் பொருக வேண்டுமெனில் இளவரசி டயானா பல குழந்தைகளைப் பெற்று அவளின் வம்சம் இவ்வுலமுழுவதும் பரவவேண்டும் என்று நினைப்பார்களா அல்லது அவளையே கொலை செய்வார்களா? சற்று யோசித்துப்பாருங்கள். எனவே இளவரசி டயானாவை படுகொலை செய்ததற்குப் பின்னர் இவர்களின் சுயரூபம் மேற்கத்திய சமூகத்திற்கே தெரிந்துவிட்டது. இந்நிலையில 2000வருடங்களாக இயேசுவின் இரத்த வழியை பாதுகாத்து வருகிறோம் என்ற இவர்களின் பொய்யையும் எத்தனை ஹாலிவுட் திரைப்படம் எடுத்து வெளியிட்டாலும் உலகம் நம்புவதற்குத் தயாரில்லை என்பதை உலகமக்கள் இத்திரைப்படத்திற்கெதிரான தங்கள் எதிர்ப்புகளை பிரதிபலித்ததின் மூலம் டாவின்ஸி கோட் திரைப்படத்தால் இவர்கள் நிறைவேற்ற நினைத்த இரண்டாவது திட்டமும் நொருங்கிப்போனது.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்துவிடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
 (21:18)

இவர்களின் மூன்றாவது திட்டமான மீடியாக்களில் தங்கள் லூசிஃபர் கடவுளை அறிமுகப்படுத்தி, ஷைத்தானிய, ஃபிர்அவ்னிய சித்திரங்களை பிரபலப்படுத்துவதாகும்.


மேற்காணும் இத்தகைய படங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வணிகப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடைகள் போன்றவற்றில் பார்வையிடலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு சாதனங்களிலும், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்களில் வரும் கதாபாத்திரங்களிலும் இப்படங்களைக் காணலாம். மேலும் பிரமிடுகளைப் பிரதிபலிப்பது போன்று அடுக்கமாடி கட்டிடங்கள் பல கட்டப்படுவதையும், பல கட்டிடங்களின் உள்ளரங்கு அலங்காரங்களில் இத்தகைய படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் பரவலாகக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சித்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளில் ஒருசிலவற்றை இங்கு தந்துள்ளோம், பதிவிறக்கம் செய்து பார்த்து விழிப்படையுங்கள்.



மேற்காணும் மூன்றாவது திட்டத்தில் இலுமனாட்டிகள் தற்போதைக்கு வெற்றி பெற்றிருப்பது போல தோன்றினாலும் உலக மக்கள் விரைவில் விழிப்படைந்து இதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவ இருக்கிறார்கள் - இன்ஷா அல்லாஹ். இதை எப்படி சொல்கிறோமென்றால் இந்த இல்லுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் சதித்திட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகளை நமது இணையதளத்தின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். சில நாட்களாக வெளிவரும் இந்த கட்டுரைகளுக்கு ஐம்பதாயிரத்திற்கும் (50,000) மேற்பட்ட ஹிட்ஸூகள் பதிவாகியுள்ளது. நாம் எதிர்பார்த்த அளவைவிட பல ஆயிரக்கணக்கானோர் இப்பதிவுளை பார்த்து படித்து பயனடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களின் மனநிறைவான கருத்துக்களை நமக்கு எழுதிய வண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!. மிகக் குறைந்தளவு ஆற்றல் கொண்ட ஒற்றுமை இணையக் குழுவினராலேயே இந்த இலுமனாட்டி ஷைத்தான்களை இவ்வளவு தூரம் அடையாளம் காட்டமுடிகிறது என்றால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைந்து இவர்களின் சூழ்ச்சிக்கெதிராக கிளம்பினால் என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறோம், அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவர்களின் மூன்றாவது திட்டத்தின் மற்றொரு பகுதியான மதங்கள் அனைத்தும் மனிதனால்  இயற்றப்பட்டவையே என்ற கற்பனையை நிலை நாட்டுவதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள். இத்திரைப்படம்வெளியிடப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும், இஸ்லாத்திற் கெதிரான இந்த இலுமனாட்டி ஷைத்தான்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் வெற்றிகொண்டு இவ்வுலகில் இன்றும் வேகமாகப் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற உண்மை மேற்கண்ட இவர்களின் கனவுகளை  தவிடுபொடியாக்குகிறது. இவர்களின் ஆதிக்கம் முழுஅளவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் அசுர வேகத்தில் பரவிவருவதை வைத்து இஸ்லாம் உண்மையான இறைமார்க்கம்தான் என்பதை இவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக இதற்கு மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய கணக்கைத் துரிதமாக முடிப்பான். (3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மரணத்தற்குப் பின்னும் மீள வைக்கிறான். அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். அவனே அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். (85 :12-16)
 


தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இரகசிய சமுதாயம் - தொடர்-6

இரகசிய சமுதாயம் - தொடர்-6
666 - பார்கோடு இரகசியம்
பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர்(Bernard Silver) மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள் முதல் பல்பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா? ஆம் இதையும் விட்டுவைக்கவில்லை இந்த இல்லுமனாட்டி லூசிஃபர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன் இருதயங்களில் மறைத்து இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.(35:38)

பார்கோடுகளில் மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளின் இறுதியில் அதற்கு ஈடான மதிப்பு எழுதப்பட்டிருக்கும். பார்கோடு மொழியில் இரட்டைக்கோடு என்பது 
6 என்ற எண்ணைக் குறிக்கும். உலகில் அச்சிடப்பட்டிருக்கும் சர்வதேச பார்கோடுகள் அனைத்திலும் மூன்று முறை இந்த இரட்டைக்கோடுகள் வருவதைக் காணலாம், அதாவது 6- 6- 6. மேலும் இவ்வாறு மூன்றுமுறை அச்சிடப்பட்டிருக்கும் 6 என்ற எண்ணுக்குரிய கோடுகளில் அதன் மதிப்பெண்ணான 6 இடம்பெற்றிருக்காது. இன்னும் அந்த மூன்று இரட்டைக்கோடுகளும் மற்ற கோடுகளின் அளவைவிட சற்று நீளமாக இருப்பதைக் காணலாம். (இதை உங்கள் அருகிலுள்ள பொருட்களின் பார்கோடுகளை பரிசோதித்துப்பாருங்கள் அல்லது கீழுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.)

ஆம் உலகின் அனைத்துப் பொருட்களிலும் அச்சிடப்பட்டிருக்கும் இந்த பார்கோடுகளின் வாயிலாக 
666 என்ற எண் மறைமுகமாக பிரபலப்படுத்தப்படுகிறது. அதுசரி இந்த 666 என்றால் என்ன என்கிறீர்களா? அதன் பின்னனியில் பைபிள் வசனம் இருக்கிறது. ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படியுங்கள். அந்த பைபிள் வசனம் இதோ

பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 11-18]

தெளிவாகச் சொல்வதென்றால் பைபிளின் கருத்துப்படி 666 என்ற எண் ஷைத்தானிய மிருகத்தையும், அந்திகிருஸ்துவான தஜ்ஜாலையும் குறிக்கும்.



முஸ்லிம்களே! இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றிவிட்டார்கள். மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, ''நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் அவர்களுள் சிலருடன் தனித்திடும்போது, ''உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த தவ்ராத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, இதை நீங்கள் உணரமாட்டீர்களா? என்று யூதர்கள் சிலர் கூறுகின்றனர். அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்.கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (2 : 75-78)

மேற்கண்ட 
666 என்ற எண்ணிற்கு சூரிய இலக்கம் என்றும் கூறுவர். நமதூர் ஹஜ்ரத்மார்கள் சொல்லும் பால்கிதாபு கணக்குபோல சூரியவணங்கிகள் அமைத்த இந்த சதுரக்கணக்கின் விளக்கத்தை கீழேபாருங்கள்.

அதாவது ஒருசதுரத்தை 
6 Rows, 6 Columns ஆக பிரித்தால் 36 சிறிய சதுரங்கள் வரும். அதில் 1 முதல் 36 வரையுள்ள எண்களை மேற்காணும் படத்தில் உள்ளதுபோல அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு Row மற்றும் Column வரிசையில் இடம்பெற்றிருக்கும் எண்களின் கூட்டல் மதிப்பு 111. அதை சதுரத்தின் மொத்த Row-Column கட்டமைப்பு எண்ணான 6 ஆல் பெருக்கினால் வருவது 666 .

1 முதல் 36 வரையுள்ள எண்களை வரிசையாகக் கூட்டினால் வருவதும் 
666 .  (1+2+3…+36=666)
இன்னும் சதுரத்தில் அமைந்துள்ள 3 சிறிய சதுரங்கள் மற்றும் 6 கனசதுரங்களிலுள்ள எண்களின் கூட்டல் மதிப்பு 74 என்று வரும். அதாவது
      6 + 1 + 31 + 36 = 74         11 + 8 + 26 + 29 = 74          16 + 15 + 21 + 22 = 74
      7 + 3 + 12 + 25 = 74         19 + 24 + 13 + 18 = 74         32 + 35 + 2 + 5 = 74
      3 + 34 + 4 + 33 = 74         14 + 23 + 17 + 20 = 74         27 + 28 + 9 + 10 = 74
3  சிறிய சதுரங்கள் மற்றும் 6   செவ்வகங்கள் என்ற இந்த 9 சதுரங்களையும் 74 ல் பெருக்கினால் வருவது 666 (9X74=666)
மேலும் 1 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதி அதில் கீழ்க்கண்டவாறு கூட்டலை அமைத்தால் கிடைப்பதும் 666.
        1 + 2 + 3 + 4 + 567 + 89 = 666
        123 + 456 + 78 + 9 = 666.
        9 + 87 + 6 + 543 + 21 = 666
இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 18]
ஞானமும் விளங்காது ஒரு மண்ணாங்கட்டியும் விளங்காது, இப்படியே சென்றால் பைத்தியம்தான் பிடிக்கும், இறுதியில் நரகப்படுகுழியே விளங்கும். ஆக 666 என்பது லூசிஃபரை வணங்கும் இல்லுமனாட்டி ஷைத்தானியக் கும்பல் அமைத்த ஒரு கணிதமுறையாகும்.
இந்த 666 என்ற எண்ணை பெரிய மாயாஜால வித்தையாக நம்பி பாப், ராக் மற்று ஜாஸ் இசைக் கச்சேரிகள் மூலம் தற்போது பிரபலப் படுத்தப்படுவதைக் காணலாம்.
பார்கோடுகளின் வாயிலாக உலகம் முழுவதும் பரவச் செய்யப்பட்டிருக்கும் 666 என்ற எண்ணிற்குப்பின்னே மறைக்கப்பட்டிருக்கும் இரகசியங்கள் மேலும் கிழிவதை கீழுள்ள வீடியோ தொகுப்புகளின் மூலம் அவசியம் காணுங்கள்.

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள் அவன் மீதே உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (11:123)

எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது
. (53:28)

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு இவ்வுலகில் கிடைத்துக்கொண்டே இருக்கும். நம்முடைய வான தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றும் போது (அவ்வானதூதர்கள்) ''அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?'' எனக் கேட்பார்கள், அதற்கு ''அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் மறைந்து போய்விட்டார்கள்'' என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
 (7:37)


 

தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இரகசிய சமுதாயம் - தொடர்-5

இரகசிய சமுதாயம் - தொடர்-5
டயானா படுகொலை - புதைக்கப்பட்ட உண்மைகள்
டயானாவின் வீழ்ச்சி வில்லியமுக்கு எழுச்சி
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், பிறப்பு : ஜூலை 1, 1961). இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாக்கும் புனிதக்கிண்ணமாக வர்ணிக்கப்பட்ட டயானாவிற்கும், இளவரசர் சார்லஸூக்கும் 1981 ஜூலை 29 ம் நாள் திருமணம் நடந்தது. வில்லியம் (1982) ஹாரி (1984) என்ற இருபுதல்வர்களைக் கண்ட இத்தம்பதியினர் தங்களின் 15வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் 1996 ம்ஆண்டு ஆகஸ்டு 28 ம் நாள் இவ்விருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது.
இளவரசர் சார்லஸூடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். உலகளாவிய அளவில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.
அந்த 15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கையால் மீடியாக்களில் படாதுபாடுபட்டார் டயானா. இவரது அசிங்கங்கள் நிறைந்த கவர்ச்சி வாழ்க்கையை நாம் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்றில்லை. அந்த அளவிற்கு அறைகுறை ஆடை காட்சிகள், குடிபோதையில் அரைநிர்வான ஆட்டங்கள் என்று மேற்கத்திய கலாச்சார அனாச்சாரங்கள் இவரை கவ்விக்கொண்டுதான் இருந்தன என்பதே உண்மையிலும் உண்மை.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)


இந்த விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலைசெய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவனமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்டவாறு எழுதியும் வைத்தார்.

I am sitting here at my desk today in October, longing for someone to help me & encourage me to keep strong & hold my head high. This particular phase in my life is the most dangerous. My Husband is planning 'an accident' in my car. brake failure & serious head injury in order to make the path...Princess Diana, Oct. 1996.
''இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்...''

இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார். 
 

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள். (24:26)
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது.
 (17:32)

டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எயிட்ஸ் நோயாளிகளுக்கு  சேவைகள், தர்ம அரக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத்துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
I think like any marriage, especially when you've had divorced parents like myself; you want to try even harder to make it work. So many people supported me through my public life and I will never forget them. The biggest disease this day and age is that of people feeling unloved. The greatest problem in the world today is intolerance. Everyone is so intolerant of each other. The kindness and affection from the public have carried me through some of the most difficult periods, and always your love and affection have eased the journey. Nothing brings me more happiness than trying to help the most vulnerable people in society. It is a goal and an essential part of my life - a kind of destiny. Whoever is in distress can call on me. I will come running wherever they are. - Princess Diana
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்த படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நல்லிரவு. உலகிலேயே அதிகவிலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒற்றாகக் கூறப்பட்ட அந்தக்கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர், மற்றும் ஓட்டுனர் என்று நாள்வரை சுமந்து சென்றது. டயானாவின் கவிர்ச்சியான தோற்றத்தை புகைப்படமெடுத்து பரபரப்பு செய்திகளை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிக்கை புகைப்படக்குழுவினர் டயானாவின் காரைபின்தொடர்ந்ததாக தகவல். பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சிலவினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்காப்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்த புகைப்படக் குழுவினரை நோக்கி பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்தி நடத்திய புலன் விசாரனையில் ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிக்கைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின அவள் அரசகுடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாளேயே பலிவாங்கப்பட்டார். [She was "one of them" (the royal family) and yet was also victim of them]
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6 ம்நாள் நடைபெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னால் கணவர் சார்லஸ், அவரது அரசகுடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் துவங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.
அவர்கள் தேடிய அனுதாப அலையில் மண்ணை அள்ளிப்போடும் முகமாக டோடியின் தந்தை முஹம்மது அல் ஃபாயித் பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சி பேட்டியளித்தார். அதாவது தன் மகன் டோடி மற்றும் டயானாவின் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பிரிட்டனின் அரசகுடும்பத்தின் நேரடி ஈடுபாட்டுடனேயே இப்படுகொலை நடந்துள்ளது என்றும், அமெரிக்காவின் சிஐஏ வும், பிரிட்டனின் உளவுத்துறையுமே இப்படுகொடுலையைச் செய்தனர் என்றும் உண்மைகளை போட்டு உடைத்தார்.

இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் பரவலாக கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித்துள்ளார்.  டயானா - டோடி அல் ஃபாயித ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து
முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
The Princess of Wales was assassinated by MI6 and the CIA not merely because she was about to marry a Muslim but also because she was being "courted" by supporters of the Merovingian Bloodline - of which she herself was a member...[she] posed such a threat to the future of the British Royal Family.  The Sion Revelation p. 288
The maiden with the title of Princess of Wales died on August 31, 1997 at 4:05 AM. No one seems to have taken notice, but the moment she died, her zenith was aligned precisely with the birth zenith of the Prince of Wales. The death of the Princess of Wales meant a rebirth of the Prince of Wales. She had came to prepare him to become a King. Saturn sat upon the passageway to the bottom of the sea. Like the Phoenix, Diana was the Holy Grail who came to carry the sword Excalibur for the distance of one lifetime. When her spirits had passed the bottomless pits of self despair, she pulled on the handle of the Excalibur ancient sword. Thereafter, she became a Queen of a Princess to all England. In the end she was taken to a lake just like Excalibur, the Lady of the Lake...her soul was cast upon the sacred waters. Is this a sad ending to a legend, or was something else at work in the Heavens? Secrets of the Code p. 298
டயானா படுகொலையின் பின்னனி பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
நாம் இங்கு சொல்ல வருவது டயானாவின் படுகொலைப் பற்றியது அல்ல. அதன் பின்னனியில் உள்ள ஷைத்தானிய இல்லுமினாட்டிகளின் திட்டம் பற்றிதான்.
1) ஆம் விவாகரத்திற்குப் பின்னர் டோடியிடம் தஞ்சம் புகுந்த டயானா கர்ப்பம் தறித்திருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக அடிபட்டது. வருங்கால லூசிஃபர் மன்னன் வில்லியமின் தாய் ஒரு (பெயர்தாங்கி) முஸ்லிமுக்கு மனைவியா? அதன் மூலம் ஒரு முஸ்லிம் குழந்தையையும் பெற்றெடுக்க இருக்கிறாளா? என்ற செய்தி வின்ட்ஸர் அரசவைக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தங்கள் மிரோவிஞ்ஸியன் வம்சவழிக்கு பெரும் அவமானமாகக் கருதினர்.

2) டயானா உயிரோடு இருந்தால் வில்லியம் என்ற மிரோவிஞ்சியன் லூசிஃபர் இளைஞரை பிரிட்டனின் மன்னராக்க இயலாது. அந்த வாய்ப்பு சார்லஸூக்கோ அல்லது டயானாவுக்கோ போகும் நிலைதான் இருந்தது. இவர்களின் ஷைத்தானிய நம்பிக்கைபடி இவ்வுலகை இக்கூட்டம் ஆண்டு அந்தி கிருஸ்துவை வரவழைக்க வேண்டுமெனில், இளவரசன் வில்லியமுக்கே முடிசூட்டவேண்டும்.

3) எலிசபெத்தின் மறைவிற்குப் பின்னர் சார்லஸ் தன் மகனுக்காக பட்டத்தை விட்டுக்கொடுத்தாலும், தன் மாமியார் எலிசபெத்தைவிட, கணவர் சார்லஸை விட உலகில் அதிக பிரபலமடைந்துவிட்ட இளவரசி டயானா பிரிட்டனின் ஆட்சி பீடத்திற்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணம் வின்ட்ஸர் குடும்பத்திற்கு இருந்தது.
4) டயானாவின் வேலை தன் இரத்தத்திலிருந்து வின்ட்ஸர் பரம்பரையில் ஒரு குழந்தையை ஈன்றெடுத்துக் கொடுப்பதே. அந்த வேளை முடிந்துவிட்டபடியால் அவளுக்கு விடைகொடுத்துவிட்டு வில்லியமை பட்டத்திற்காக முழுவீச்சில் தயார்படுத்துகிறார்கள். 

டயானாவின் மரணத்திற்குப் பின்னர் வில்லியமுக்கு அவசர அவசரமாக முடிசூட்டும் வேலையும் படுஜோராக நடக்கிறது. அவர் பள்ளிக்குச் செல்வது முதல் தனது காதலியோடு ஊர்சுற்றித் திரிவதுவரை படமெடுக்கப்பட்டு வில்லியம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல மீடியாக்களில் பரப்பப்படுகிறது. ஒருநாள் வில்லியம் நமதூர் அரசியல்வாதிகளை கூட மிஞ்சும் அளவிற்கு ரோட்டில் படுத்துறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகவல்கள் அனைத்தையும் கீழ்க்காணும் வீடியோக்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு துதிசெய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். (64:1)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107)

மனிதர்களே! உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்களிடம் அவர்களுடைய இறைத்தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம். (10:13)

         
தொடரும் இன்ஷா அல்லாஹ்.